சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 அக்டோபர், 2018

சுப்ரபாரதிமணியனின்    கடவுச்சீட்டு “.
மலேசியப்பின்னணி நாவல்:

பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்

          சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக                 கடவுச்சீட்டு “  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.
      ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. அந்தப்பெண் இங்கு வருவதற்கு முன்பே பெண் பார்க்க்கும் படலத்தின் போதே இந்நாட்டைப்பற்றி வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். இங்கு தமிழர்கள் எவ்விதம் இருகிறார்கள். கோவிலகள் உண்டா . முஸ்லீம் நாடென்றால் சட்டதிட்டங்கள் கடுபிடியா. மதுப்பழக்கம் ஆண்களிடம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இங்கு வந்த பின்பு அவள் கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். இந்த நாட்டு நடைமுறையில் இருக்கும் சுகாதாரமும், மருத்துவமனைகளில் இல்லாத லஞ்சம் போன்றவை அவளை மகிழ்விக்கின்றன.ஆனால் அவளின் வாழ்க்கை யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் என்பார்கள் இங்கு இனிப்பு நீர் வியாதி என்கிறோம். இது போன்ற சிறுசிறு விசயங்களையும் கவனமாகக்குறிப்பிட்டிருக்கிறார். லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை இவரின் எழுத்துப் பார்வையில் படாதவர்கள் இல்லை. மஜாஜ் சமாச்சாரம் முதல் மலேசியா பற்றிய பல விபரங்களை இந்நாவலில்  கொட்டி விட வேண்டும்   என்ற ஆவல் இதில் தென்படுகிறது .அவற்றை பலஇடங்களில் விபரங்களாகவும் சில இடங்களில் உரைநடைமூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.தோட்டப்புறத்தில் பங்களாதேஷ்காரர்கள், இந்தோனிசியாக்காரர்கள் அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகியும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை இதில் பதிவாகியிருக்கின்றன.

 தமிழ் இளைஞர்களின் வன்முறைக்கலாச்சாரத்தில்  கட்டை, சரக்கு போன்றவை  ஆக்கிரமித்திருப்பதைச் சொல்கிறார். சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனிசியப்புகையால் பாதிப்பு போன்றவையும் தப்பவில்லை. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் போது மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக  இருக்கும் போது உணவு விடுதிகளை அதிகம் நாடாததையும் சொல்கிறார்.  இலக்கியம் வேதனையை , சோதனையை மட்டுமா சொல்லவேண்டும் என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின் பால் மரக்காட்டினிலே அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும்  முக்கியப் படைப்பு என்ற வகையில்  சிறப்பு பெறுகிறது
- பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்