எழுத்தாளர்
திருப்பூர் சுப்ரபாரதிமணியனுக்கு தமிழக அரசு விருது
எழுத்தாளர்
திருப்பூர் சுப்ரபாரதிமணியனுக்கு தமிழக அரசின் “ தமிழ்ச்செம்மல் “ விருது 5/4/18. காலை சென்னை தலைமைச்செயலகத்தில் நடக்கும் விழாவில்
தமிழக முதலமைச்சர் வழ்ங்குகிறார் .
Theekathir –Sunday review
சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும்
மரங்கள்
அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய மரங்கள்
அழிந்து வரும் நிலையில் உள்ள தாவரங்கள் விலங்குகளை, அருகிவரும் அல்லது மறைந்து வரும் உயிரினங்கள்
என்கிறோம். அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.மருத்துவ
குணம் உள்ள 400க்கும் மேற்பட்ட
தாவரங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன என உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களைச்
சேர்ந்த 600ஆய்வாளர்கள் ஆய்வு
செய்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் 365 விலங்கினங்களும் 1236 தாவர இனங்களும் அழியும் நிலையில் உள்ளன என இந்நூலின்
முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது தாவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி
அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து, விளக்கும் பொருட்டாக வேண்டிய அவசியம் ‘மறைந்து வரும் மரங்கள்’ என்ற தலைப்பில் இந்நூலைப் படைத்துள்ளார்.இந்நூலில்
தமிழகத்தை சூழிடமாகக் கொண்ட அருகிவரும் 30 வகையான மரங்களின் விவரங்களைத் தொகுத்து வருத்தம் மிகுந்த தொனியில்
வழங்கியுள்ளார்.சந்தன வேங்கை என்றதொரு அற்புதமான மரம். இது அணுக்கதிர் எதிர்ப்பு
சக்தி கொண்ட மரம் என்கிறார்கள். இந்தப் பண்பைக் கொண்ட காரணத்திற்காகவே இம்மரம்
ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெருமளவில் வெட்டி கடத்தப்படுகின்றன. அதன் மறுபெயர்
செம்மரம். அண்டைமாநிலமான ஆந்திராவில் இது அதிகம் காணப்படும் மரம். சிறிய அளவு
மரத்துண்டை தங்களது சட்டைப்பைகளில் வைத்தக் கொண்டு அணுக்கதிர் வீச்சிலிருந்து
பாதுகாத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற அரிய குணம் கொண்ட மரம்
அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.ஆணைப்புளி அல்லது பொந்தன்புளி என்று
அழைக்கப்படும் மரம், ஆப்பிரக்காவில்
இருந்து குதிரை வியாபாரிகள் மூலம் தமிழகத்திற்கு பரவியதாக சொல்லப்படும்
மரம்.அஜீரணம், வாயுத்தொல்லை
போன்றஉள்பிரச்சனைகளுக்கு மருந்தாக்கப்படுகிறது. இதன் அடிப்பாகம் மட்டும் பதினொரு
மீட்டர் விட்டம் கொண்டது என்றும் 5000லிட்டர் தண்ணீரை இம்மரத்தின் பொந்துகளில் சேகரிக்கக்கூடிய தண்ணீர்
தொட்டியாகவும் உள்ளது என வித்தியாசமான பயன்பாடுள்ள மரம்.
கடுக்காய்
“காலை இஞ்சி கடும்பகல் சுக்குமாலை கடுக்காய் மண்டலம் உண்டால்விருத்தனும்
பாலனாமே” என்ற சித்தர் பாடலைக்
கேட்டாலே உடல் ஆரோக்கியத்திற்கு கடுக்காய் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது
என்பதை அறிய முடியும். அதாவது காலையில் இஞ்சியும் பகலில் சுக்கும் இரவில்
கடுக்காயும் 48 நாட்கள் (1 மண்டலம்) உண்டால் கிழவனும் குமரனாகலாம்
என்பதாகும் அப்பாடல்.திரிபலா சூரணம் (கடுக்காய் , நெல்லி, தான்றிக்காய்)
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்). இது போன்ற நல்ல பல மருத்துவ குணங்களைக் கொண்ட
கடுக்காய் நம் அனைவர் வீடுகளிலும் இருக்க வேண்டிய தாவரக் கனியாகும்.
அலையாத்தி:
இதில் கண்டல், வெண்டல்,
நரிக்கண்டை, நல்லமாடா உள்ளிட்ட 18க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளதாக குறிப்பிடுகிறார். இது
ஒரு சூழலியல் மண்டலமாக விளங்குவதால் பல்வேறு உயிரினங்கள், பறவைகள், விலங்குகளின் வாழ்விடமாக விளங்குகின்றன. இக்காடுகள் ஆறும் கடலும் கலக்கும்
சதுப்புநிலப் பகுதியில் வளர்கிறது. தமிழகத்தில் சிதம்பரம், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக்
கவரும் வகையில் அமைந்துள்ளன. கடல்சீற்றத்தைத் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
இக்காடுகள் அழிவை நோக்கி செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.மேலே
சொல்லப்பட்ட மரங்கள் அல்லாது ஏராளமான தாவரங்களும், பறவைகளும், விலங்கினங்களும் இப்பூவுலகின் சொந்தங்கள் என்பதை நினைவில் நிறுத்தி,
உணர்வு பெற்று காக்கும் கரங்களாக இருந்து
காத்திட அரசு, பொதுவில் உள்ள
இயற்கை ஆர்வலர்களும் முன்வருவது உடனடி தேவை என்பதை இந்நூல் பேசுகிறது.