சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 1 பிப்ரவரி, 2017

1. தினமலர் பொள்ளாச்சி :
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகையில்,''எனது 'கோமணம்' என்ற நாவல் பழநிக்குப் பாதயாத்திரை சென்ற அனுபவங்களின் நினைவுகளை மையப்படுத்தி எழுதியதாகும். பழநி மலைக்கு நீண்ட கால வரலாறு உண்டு. அந்தத் தொன்மத்தை வைத்து இதுவரைக்கும் யாரும் இலக்கியம் படைத்ததாகத் தெரியவில்லை. அதைப் பதிவு செய்ய நினைத்ததன் விளைவாகவே இந்த நூலை இயற்றியிருக்கிறேன்,'' என்றார்.,
: பொள்ளாச்சியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில், பல்வேறு இலக்கிய படைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்து ஐந்தாவது இலக்கிய சந்திப்பு நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா தலைமை தாங்கினார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். கவிஞர் அம்சப்ரியா 'இரவுக்காகங்களின் பகல்' கவிதைத்தொகுப்பின் இரண்டாம் பதிப்பினை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வெளியிட நடிப்பு பயிற்சியாளர் சுரேஷ்வரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் அறவொளி தொகுப்பை அறிமுகம் செய்து பேசினார்.கவிஞர் இல்லோடு சிவா எழுதிய 'மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்' என்ற கவிதைத்தொகுப்பை புன்னகை பூ ஜெயக்குமார் அறிமுகம் செய்துவைத்தார்.கவிஞர் பெரியசாமி எழுதிய 'குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்' கவிதைத் தொகுப்பை பூபாலன் அறிமுகம் செய்துதார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய 'கோமணம்' நாவலை எழுத்தாளர் அவைநாயகன் அறிமுகம் செய்து வைத்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகையில்,''எனது 'கோமணம்' என்ற நாவல் பழநிக்குப் பாதயாத்திரை சென்ற அனுபவங்களின் நினைவுகளை மையப்படுத்தி எழுதியதாகும். பழநி மலைக்கு நீண்ட கால வரலாறு உண்டு. அந்தத் தொன்மத்தை வைத்து இதுவரைக்கும் யாரும் இலக்கியம் படைத்ததாகத் தெரியவில்லை. அதைப் பதிவு செய்ய நினைத்ததன் விளைவாகவே இந்த நூலை இயற்றியிருக்கிறேன்,'' என்றார்.நிகழ்வில் இலக்கிய படைப்பாளிகள், வாசகர்கள் பங்கேற்றனர்.

2.இன்னொருபுறம் இவ்வாண்டில் வந்திருக்கும் என் மூன்று நாவல்ள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1. * நைரா  - ( நைரா- நைஜீரிய  ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது.
* 2 .கோமணம் நாவல் பாதயாத்திரை என்பது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி . அந்தப் பயணத்தின் வழியே வர்க்க வேறுபாடு. சாதியம், பண ஆதிக்கம், பக்தியின் போலித்தனம் போன்றவற்றை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்தி பல    சமூக அவலங்களை வெளிக்கொணர்கிறார். குறிப்பாக குடிசார்ந்த விசயங்கள், பெண்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் நிலை என்று பல கோணங்களை இந்நாவல் காட்டுகிறது. பகுத்தறிவுப் பார்வை ஊடாடி நிற்பது ஆசிரியரின் சரியான நிலையைச் சொல்கிறது. புதிய களம், திருப்பூரைத் தாண்டிய சுப்ரபாரதிமணியனின் அனுபவங்கள் 

3.  “  முறிவு நாவல்
நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிலிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது. அல்லது அங்கேயே முடங்கி விட வேண்டியிருக்கிறது. பட்டாம்பூச்சியாக முயலாமல் க்ம்பளீப்பூச்சிகளாக  முடங்குகிற பெண் தொழிலாளிகளில் ஒரு பாத்திரத்தை மையமாகக்  கொண்டு இந்நாவல் பெண் தொழிலாளியின் அவ்வகை  மாதிரி வாழ்க்கையை முன் வைக்கிறது. சுப்ரபாரதிமணியனின் 14 வது நாவல் இது. இவரின் பல நாவல்கள் பல முக்கிய இலக்கியப்பரிசுகளையும், பல மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்ட சிறப்புகளையும் கொண்டவை.பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் 75க்கு மேற்பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளன.  .. இந்நாவலும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இவற்றை முன் வைத்து என் படைப்புத்தன்மை பற்றி யோசித்துப்பார்த்தேன்

            மனிதனின் மனதை  நிரப்புவதற்கு   ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே  கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான்  கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில்   கிடைக்கும் ஆனந்தம் பெரிய  ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது.  கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது .  சகமனிதர்களைப் பற்றிய  அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட.... யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே  வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.
அழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான.  தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன்  அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும்  பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.  
ஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். .   ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறதுஎன்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில்  சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல்  எந்த நப்பாசையுமின்றி   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.இதுவே இந்நகரினை குறித்துப்பேச  ஆசைப்படுகிற ஒருவனின் மனச்சாட்சியின் குரலாக இருக்கிறது.

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003