சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

வணக்கம். நண்பர்களே..

பிரவரி 9 முதல் வெளிநாடுகளுக்கானப் பயணம் மேற்கொள்வதால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். முகநூலில் சந்திக்கலாம்.
சந்திக்கிறேன்

சுப்ரபாரதிமணியன்
திருப்பூர் அரிமா விருதுகள் 2017
* ரூ 25,000 பரிசு
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருதுஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி பிப்ரவரி 28, 2017.
முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 601 * 9443559215 * )
செய்தி: சாமக்கோடாங்கி ரவி * samakkodaonkey ravi@gmail.com
வர்த்தகமாகிப் போன சிந்தனையை புத்தகங்களே மீட்கும்!
-----------------------------------------------------------
திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் நம்பிக்கை
14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சனியன்று காலை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் சுமங்கலி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் வெளியிட, பாரதி புத்தகாலயம் நிர்வாகி நாகராஜன், தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் கு.ந.தங்கராசு, அனைத்திந்திய கலை இலக்கிய பெருமன்றம் நிர்வாகி ரத்தினவேல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். உடன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளனர்.

உலகமயச் சூழலில் வர்த்தகமாகிப் போன சிந்தனையை புத்தகங்களே மீட்க முடியும் என்று திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் கூறினார்.14வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமையன்று காலை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் சிறப்புரை ஆற்றுகையில் கூறியதாவது:குழந்தைகளுக்கு இலக்கணம் சார்ந்த மொழியாக தமிழைத் திணித்ததால்தான் அவர்கள் அச்சப்பட்டு விலகி இருக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் உளவியலுடன் இணைந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழில் சிந்திக்கும் திறனைக் குழந்தைகளுக்குத் தர மறுத்துவிட்டோம்.தற்போது தமிழ்ப் படைப்புலகில் 1950க்கு முந்தைய புத்தகங்கள் மறுபதிப்புகளாக வருகின்றன. படைப்பிலக்கியங்கள் வருகின்றன. ஆனால் சிந்தனை இலக்கியங்கள் மிக மிகக் குறைவாக வருகின்றன. தமிழில் சிந்திப்பது, எழுதுவது குறைந்துவிட்டது. அண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது வெளிவந்திருக்கிறது. இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் பற்றி விமர்சனம் உள்ளது. ஆனால் நமக்கு தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை. தலைவர்கள் வியாபாரிகளாக இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கத்தான் அரசியல் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சுயநலமும் இல்லாத தலைவர்கள் அரிதாகவே உள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்பக்கூடிய ஆதாரமாக புத்தகங்கள் திகழ்கின்றன. உலகமயச் சூழலில் எல்லாமே வர்த்தகமாகிப் போனது. சிந்தனையும், செயலுமே வர்த்தகமாகிவிட்டது. சேவையாகத் தர வேண்டிய கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகிப் போனது. அரசுக்கே தவறான பார்வை உள்ளது. கல்வி நிலையங்களில் கட்டிடம், உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்யும் அரசாங்கம், நல்ல ஆசிரியர்கள், தரமான கல்வி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. சிந்தனையே வர்த்தகமாகிப் போன சூழலில் நமக்கு ஆதரவரளிக்கக் கூடியதாக புத்தகங்களே இருக்கின்றன.

சொந்தமாக சிந்திக்கும் பக்குவத்தை புத்தக வாசிப்பே வழங்கும்.தமிழ்ச் சமூகத்தில் திரைப்படத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. வன்முறையையும், காதலையுமே திரைப்படங்கள் இளைஞர்களிடம் திணிக்கின்றன. ஆண்களின் வேலை காதலிப்பது, பெண்களின் வேலை காதலுக்கு இரையாவது என்பதாகவே திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இத்தகைய உளவியல் பாதிப்புகளில் இருந்தும் விடுபட புத்தகங்களே வழிகாட்டும். இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுப்ரபாரதிமணியனின் சுமங்கலி நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பு, களவாடப்பட்ட குழந்தைப் பருவம் உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் நித்திலன், கவிஞர் ஜோதி, மொழிபெயர்ப்பாளர் ராம்கோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர்.


வாசகர்கள் கருத்துக்கள்


நலமா. நன்றி

புதன், 1 பிப்ரவரி, 2017

1. தினமலர் பொள்ளாச்சி :
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகையில்,''எனது 'கோமணம்' என்ற நாவல் பழநிக்குப் பாதயாத்திரை சென்ற அனுபவங்களின் நினைவுகளை மையப்படுத்தி எழுதியதாகும். பழநி மலைக்கு நீண்ட கால வரலாறு உண்டு. அந்தத் தொன்மத்தை வைத்து இதுவரைக்கும் யாரும் இலக்கியம் படைத்ததாகத் தெரியவில்லை. அதைப் பதிவு செய்ய நினைத்ததன் விளைவாகவே இந்த நூலை இயற்றியிருக்கிறேன்,'' என்றார்.,
: பொள்ளாச்சியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில், பல்வேறு இலக்கிய படைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்து ஐந்தாவது இலக்கிய சந்திப்பு நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா தலைமை தாங்கினார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். கவிஞர் அம்சப்ரியா 'இரவுக்காகங்களின் பகல்' கவிதைத்தொகுப்பின் இரண்டாம் பதிப்பினை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வெளியிட நடிப்பு பயிற்சியாளர் சுரேஷ்வரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் அறவொளி தொகுப்பை அறிமுகம் செய்து பேசினார்.கவிஞர் இல்லோடு சிவா எழுதிய 'மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்' என்ற கவிதைத்தொகுப்பை புன்னகை பூ ஜெயக்குமார் அறிமுகம் செய்துவைத்தார்.கவிஞர் பெரியசாமி எழுதிய 'குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்' கவிதைத் தொகுப்பை பூபாலன் அறிமுகம் செய்துதார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய 'கோமணம்' நாவலை எழுத்தாளர் அவைநாயகன் அறிமுகம் செய்து வைத்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகையில்,''எனது 'கோமணம்' என்ற நாவல் பழநிக்குப் பாதயாத்திரை சென்ற அனுபவங்களின் நினைவுகளை மையப்படுத்தி எழுதியதாகும். பழநி மலைக்கு நீண்ட கால வரலாறு உண்டு. அந்தத் தொன்மத்தை வைத்து இதுவரைக்கும் யாரும் இலக்கியம் படைத்ததாகத் தெரியவில்லை. அதைப் பதிவு செய்ய நினைத்ததன் விளைவாகவே இந்த நூலை இயற்றியிருக்கிறேன்,'' என்றார்.நிகழ்வில் இலக்கிய படைப்பாளிகள், வாசகர்கள் பங்கேற்றனர்.

2.இன்னொருபுறம் இவ்வாண்டில் வந்திருக்கும் என் மூன்று நாவல்ள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1. * நைரா  - ( நைரா- நைஜீரிய  ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது.
* 2 .கோமணம் நாவல் பாதயாத்திரை என்பது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி . அந்தப் பயணத்தின் வழியே வர்க்க வேறுபாடு. சாதியம், பண ஆதிக்கம், பக்தியின் போலித்தனம் போன்றவற்றை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்தி பல    சமூக அவலங்களை வெளிக்கொணர்கிறார். குறிப்பாக குடிசார்ந்த விசயங்கள், பெண்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் நிலை என்று பல கோணங்களை இந்நாவல் காட்டுகிறது. பகுத்தறிவுப் பார்வை ஊடாடி நிற்பது ஆசிரியரின் சரியான நிலையைச் சொல்கிறது. புதிய களம், திருப்பூரைத் தாண்டிய சுப்ரபாரதிமணியனின் அனுபவங்கள் 

3.  “  முறிவு நாவல்
நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிலிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது. அல்லது அங்கேயே முடங்கி விட வேண்டியிருக்கிறது. பட்டாம்பூச்சியாக முயலாமல் க்ம்பளீப்பூச்சிகளாக  முடங்குகிற பெண் தொழிலாளிகளில் ஒரு பாத்திரத்தை மையமாகக்  கொண்டு இந்நாவல் பெண் தொழிலாளியின் அவ்வகை  மாதிரி வாழ்க்கையை முன் வைக்கிறது. சுப்ரபாரதிமணியனின் 14 வது நாவல் இது. இவரின் பல நாவல்கள் பல முக்கிய இலக்கியப்பரிசுகளையும், பல மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்ட சிறப்புகளையும் கொண்டவை.பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் 75க்கு மேற்பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளன.  .. இந்நாவலும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இவற்றை முன் வைத்து என் படைப்புத்தன்மை பற்றி யோசித்துப்பார்த்தேன்

            மனிதனின் மனதை  நிரப்புவதற்கு   ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே  கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான்  கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில்   கிடைக்கும் ஆனந்தம் பெரிய  ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது.  கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது .  சகமனிதர்களைப் பற்றிய  அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட.... யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே  வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.
அழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான.  தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன்  அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும்  பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.  
ஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். .   ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறதுஎன்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில்  சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல்  எந்த நப்பாசையுமின்றி   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.இதுவே இந்நகரினை குறித்துப்பேச  ஆசைப்படுகிற ஒருவனின் மனச்சாட்சியின் குரலாக இருக்கிறது.

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003


திருப்பூர் அரிமா விருதுகள் 2017
* ரூ 25,000 பரிசு
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருதுஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி பிப்ரவரி 28, 2017.
முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 601 * 9443559215 * )
செய்தி: சாமக்கோடாங்கி ரவி * samakkodaonkey ravi@gmail.com
முறிவு “ நாவல் முன்னுரையில்..சுப்ரபாரதிமணியன்
------------------------------------------------
டீ சர்ட் போட்ட பொண்ணா இருந்தா கார்மெண்ட்சில வேலை

பாத்த பொண்ணா இருக்கும்   சட்டைப் போட்ட பொண்ணா இருந்தா மில்லில்  வேலை பாத்த பொண்ணா இருக்கும்   . லுங்கி கட்டிய பொண்ணா இருந்தா  
வீட்டு வேலை பாத்த பொண்ணா இருக்கும் . இல்லீன்னா வீட்லே வேலை பாக்கற பொண்ணா இருக்கும்.  நைட் கவுன் போட்டப் பொண்ணா இருந்தா வீட்லே சமைக்கறதுக்குன்னே இருக்கற  பொண்டாட்டிமாரா இருக்கும்       .
                - இப்படி பெண்களுக்கான டிரஸ் கோட் dress code  பொதுப்புத்தியில் வந்து விட்டது ஆச்சர்யமாக இருக்கிறது.
சுமங்கலித்திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களின் டிரஸ்கோர்ட் வீட்டுப் பெண்களிடமிருந்து மாறுபட்ட்தில்லை. சமையலறையிலிருந்து  நேராக பஞ்சாலைக்கு வந்த்து போல் இருப்பார்கள்.


சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மனித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத்தங்கம்தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட  காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அக்காலம் முடிகிற சமயத்தில் பெண்கள்  மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் பாலியல் தொடர்பான அவதூறுகள். அதிலிருந்து தப்பித்து வந்தாலும் அங்கே  அவ சுமங்கலியிலெ இருந்தவ “  என்ற வசவில் தயங்கும் ஆண் மாப்பிள்ளைகள். இந்தத் திட்டம் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அய்ந்து ஆண்டுகள் என வெவ்வேறு பெயர்களில் நடைமுறையில் இருக்கின்றன. குறைந்த பட்ச கூலியாக தற்போது நீதிமன்றத்தாலும், தொழிலாளர் நலத்துறையாலும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ரூ 692.50 என்றால் நம்ப முடிகிறதா. இதில் கால் பங்குதான் இப்பெண்கள்   பெறுகிறார்கள். இந்த வேலைமுறையே சுரண்டலுக்கான அடிப்படையாக இருக்கிறது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழக்கையை சுமங்கலித்திட்ட்த்திற்கு முன், சுமங்கலித்திட்ட்த்திற்குப் பின் என்றே தன்னார்வலர்கள் பிரிக்கிறார்கள். 30000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி பெறும் திருப்பூர் கூட இவ்வகைத்தொழிலாளர்களின் உழைப்பில் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறது.. சுமங்கலித்திட்ட தொழிற்சாலைகளில் கூலிச்சுரண்டல், பாலியல் சுரண்டல், மன அழுத்தம் என்று தமிழகத்தில் இதுவரை 90 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. இதில் ஆணவக்கொலைகள் கூட இருக்கின்றன( தனியாக ஆணவக்கொலைகள்  தமிழகத்தில் 90 ஆகிவிட்டது ) .பத்து சதவீதம்  பயிற்சியாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் பஞ்சாலைகளில் 90 சதவீதம்  அவ்வகையில் இளம்பெண்கள் வேலை செய்கிறார்கள். சுரண்டல், வியாபார லாபம் என்ற இரு மொழிகளே அங்கு பேசப்படுபவை. பீகார், ஒரிசா, வங்காளம் என்று கூட்டமாய் வந்து நகரங்களில் அடைக்கலம் ஆகியிருக்கும் இவர்களுள் பெரும்பான்யானவர்களின்  பொது மொழி சைகையே.சின்னச்சின்ன யூனிட்டுகளில் கூட  இவர்கள் அடைக்கலம் பெறுகிறார்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரிய யூனிட்டுகளை  இன்னும் சவுகரியப்படுத்துகின்றன. சிறிய யூனிட்டுகளில் அதிகபட்ச  விதிமீறல்கள்.
          முதலாளித்துவம்ம் கார்ப்பரேட்டுகள்  ஏகதேசம் தொழிலாளி வர்க்கத்தை அடிமைகளாக மாற்றி விட்டன. நிரந்தர வேலை, சமூகப் பாதுகாப்பு என்று இல்லாமல்  தினசரி கூலி, ஒப்பந்த்த் தொழிலாளி , பீஸ்ரேட் வெர்க்கர் என்று தொழிலாளர்களை மாற்றிவிட்டது. இதில் பாதிகப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்கள். அதிலும் பதின்மபருவத்தினரே.
எல்லா சாலைகளும் பெரும் தொழிற்சாலைகள் இருக்கும் நகரங்களை நோக்கியே திருப்பி விடப்பட்டு விட்டன. அல்லது வழிகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன,
  அந்த வழிகளில் தெனபடும்  அல்லது திரும்பிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட இளம் பெண்கள்தான். பெயரளவில் சுமங்கலிகள் அவர்கள். ( ஆண்கள் வெவ்வேறு வகையான வடிகால்களால் தப்பிக்க முயல்கிறார்கள் அதில் ஒன்று மது. நாற்பது வயதிற்குப்பின் சாக தயாராகிவிடுகிறார்கள் )


பெரும் நகரங்களில் தென்மாவட்ட இளைஞர்கள், இளைஞிகள்  பட்டாளம் இருந்த   கூட்டதில் இப்போது வடநாட்டு இளைஞர் கூட்டமும் சேர்ந்து விட்டது. பீகார், ஒரிசா, வங்காளம் என்று கூட்டமாய் வந்து நகரங்களில் அடைக்கலம் தேடிக்கொண்டிருக்கின்றனர். வடநாட்டினருக்கு ஆட்டா மாவு மூட்டையும் உருளைக்கிழங்கு கொஞ்சம் கிலோ கணக்கில் தந்தால் போதும் சுலபமாக கொத்தடிமை ஆகிவிடுகிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி தமிழ் நாட்டில் சிக்கலாகிக் கொண்டே இருக்கிறது. இணைப்புப்பள்ளி என்ற பெயரில் சில சமூக அமைப்புகளும் தன்னார்வக்குழுக்களும் நடத்தும் பள்ளிகள் அவர்களுக்கு  ஆசுவாசம். இல்லாவிட்டால் குழந்தைத் தொழிலாளர்களாய் சுலபமாய் ஆகும் அவலம். குழந்தைத் தொழிலாளர்கள் வேலை அழுத்தம், சிறு வயதில் குடிக்கும் பழக்கங்களால்  பின்னர் அவர்கள் கலாச்சார ரீதியானக் குற்றப்பரம்பரையினராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
       ஆங்கில காலனி ஆதிக்கம் முத்திரை குத்திய குற்றப்பரம்பரையினரான   தலைமுறை இருந்து கழிந்து விட்டது. வரும் தலைமுறையினர் மேல் குத்தப்படும் அவ்வகை முத்திரைகள் வேறு மாதிரியானவை. அதில் முதலாளித்துவ , கார்ப்ப்ரேட் அரக்கின் நிறம் கூடுதலாக இருக்கிறது.இது இந்த நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி தந்திருக்கும் கரிய நிழலின் அடையாளம்.கரிய நிழல் இளம் மற்றும் சுமங்கலிப் பெண்களின் உழைப்பு  முகங்கள் நோய்வாய்ப்பட்டதை இன்னும் இருட்டாக்குகிறது..

    கல்யாணம் செய்து கொள்ள சட்டப்படி 18 வயது, ஓட்டுப்போட 18 வயது ( ஓட்டன்று  ஊருக்குபோய் வர இரு இரவுகள் ஒரு பகல் வேலையில்லை என்ற சலுகை பிரியாணி , பணம் ஆகியவற்றுடன் )என்று கட்டாயப்படுத்தும் சட்டங்கள் வேலை செய்ய மட்டும் வயதைப்பார்ப்பதில்லை என்ற முணுமுணுப்பு உரத்தக்குரல்களாக மாறிவிட்டன.சமீபத்தில் சுமங்கலித்திட்டத்தில் ஆள் சேர்க்கும் பிரசுரம் ஒன்றில் பார்த்தது :
ஓர் இளம்  பெண்ணை பஞ்சாலையில் சேர்த்து விட்டால் 2 கிராம் தங்கம் பரிசு. 5 பெண்களைச் சேர்த்தால் 6 கிராம் தங்கம்பரிசு . 10 பெண்களைச் சேர்த்தால் 12  கிராம் தங்கம்பரிசு . இதைத்தவிர ஒருவருக்கு 1000 ரூபாய் கமிசன்.. 
சந்தைக் கலாச்சாரம்  எல்லா பிரிவுகளிலும் நீண்டுவிட்டது. அதன் பாதைகள் ரொம்பவும் கரடுமுரடானவை.  அந்த கரடுமுரட்டுப் பாதையில் சந்தித்த ஒரு பெண் பாத்திரம்தான் இந்த நாவலின் கதாநாயகியாகியுள்ளாள்.
--சுப்ரபாரதிமணியன்

subrabharathi@gmail.com  / 8-2635 pandian nagar, tiruppur  641 602 -94861 01003




               


திருப்பூர் புத்தகக் கண்காட்சி
             புத்தகவெளியீடுகள் / அறிமுக விழா
------------------------------------------------------------------------

0 ” சேவ் வெளியிட்ட இரு நூல்கள்
* சுப்ரபாரதிமணியனின்  நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில்              ”  Sumangali “
* களவாடப்பட்ட குழந்தைப்பருவம்               மற்றும்

0 சுப்ரபாரதிமணியனின் நூல்கள்
 * நெசவு ( தொகுப்பு நூல் ),    முறிவு (நாவல் )
 * குழந்தைகளுக்கான நூல்கள்
“ The art of stry telling “,   “ The  baniyan tree “ –    Thought  provoking stories      for children   

 0  இன்னும் பல நூல்கள் வெளியீடாய் / அறிமுகமாய்....

4/2/17 காலை 11 மணி  புத்தகக் கண்காட்சி வளாகம்,
பத்மினி கார்டன் , காங்கயம் சாலை, திருப்பூர்

சிறப்பு விருந்தினர்கள்: திருவாளர்கள்
* ஞான ராஜசேகரன் IAS  ( திரைப்பட இயக்குனர் பெரியார், பாரதி )
* பாரதி கிருஷ்ணகுமார் ( திரைப்பட இயக்குனர் )
நூல் வெளியீட்டில்/பெறுதலில் சிலர்:
* எம்.இரவி ( கலை இலக்கியப் பெருமன்றம் )
* அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன்
* அரிமா தர்மராஜ்
* ” சேவ் அலோசியஸ்
* மருத்துவர்  முத்துசாமி    ( தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர் )
                               வருக..
------------------------------------------------------------------------------------------------------------------------------

             நிகழ்ச்சியை வழங்குபவர் : சேவ் திருப்பூர்