மின் நூல்கள் (
e books ) அறிமுகம்
கனவு இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம்
திருப்பூர் பண்ணாரியம்மன் நகர் ,பாண்டியன் நகர் விரிவு பெருமாநல்லூர் சாலை
தனியார் பள்ளியில் வியாழன் மாலை நடைபெற்றது .. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மின்
நூல்களாக வந்துள்ள மாலு,. சப்பரம், நீர்த்துளி ஆகிய நாவல்களும், தாராபுரம்
செல்லமுத்து குப்புசாமியின் மின் நூல்களாக வெளிவந்துள்ள நூல்களும்
அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மின் நூல்களை leemeer.com என்ற நிறுவனம்
வெளியிட்டுள்ளது.
மின் நூல்கள் ( e books ) என்றால் என்ன என்பது அறிமுகம் செய்யப்பட்டது.
இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள், தாளில் அச்சிட்டு, தயாரிக்கப்படுகின்றன. கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில்
இடம் பெறச் செய்து அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்நூல்கள்
உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து இதனைப் தரவிறக்கம் செய்து கணினியில்
சேமித்து வைத்துத் தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின் நூல்கள் உருவாக்கப்படுகின்றன.
மின்நூல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளை கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும்.
எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க
முடியாது. ஏனெனில் அதிக பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களில்
அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடமுடியும்.மின் நூல்களில் உள்ள
பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண நூல்களை
இவ்வாறு பயன்படுத்த முடியாது.உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான
பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த
முடியும்.
தேவையான மின்நூல்களை மின் வணிகம் (e-commerce) வழியாக
வாங்கிப் பயன்படுத்த முடியும்.அச்சிடப்பட்ட நூல்கள் அச்சுப் பிரதிகள் (Out of Print) இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின்
புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.
அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால்
மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியது.
மின்நூல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன், ஜனனி காயத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.