சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 அக்டோபர், 2016

பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல்

  “ ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது       -க சீ சிவகுமார்


குழந்தைகளுக்கென்று திரைப்படம் போல தமிழில் பெரிதாய்  நாவல்களும் இல்லை.  கு.அழகிரிசாமி, ம.காமுத்துரை போன்ற சிலருக்கு ஓரளவும் பேரளவும் வசப்பட்டது. குழந்தைகளை விவரித்த நாவல்கள் பெரும்பாலும் பெரியவர்களுக்கான மையம் கொண்டிருந்தன. குழந்தைகளையே பெரும்பாலும் மையம் கொண்டு உங்களின் இந்த நாவல் தோன்றுகிறது. 
நாவலில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கேட்ட கதைகள்  பகுதி                ( டோட்டோ சான் உட்பட ) சிற்றிதழ்களில் பரிச்சயம் கொண்டவர்களுக்கு கேள்விப்பட்டச் செய்திகளாகத்தான் இருக்கும். என்றாலும் வெகுஜன மரபார்ந்த வாசிப்பாளர்களுக்கு  புதுமையான தேற்றத்தையோ,  தோற்றத்தையோ  உற்பத்தி செய்திருக்கும்.  உங்கள்து கதாபாத்திரங்கள்  மெத்தவும் பாடுகளைக் கொண்டிருப்பவை.

.1.  பொதியைச் சுமக்க முடியாத கழுதை மாதிரி  லாரி உறுமுது பாரேன் . குழந்தைகள் உலகின் உவமைகள்  இப்படி இரட்டையாகக் கழுதை, பொதி சுமக்கும் கழுதை என்கிற அளவில் உருப்பெறாது என்றே நினைக்கிறேன்.  தாராபுரம் பகுதியில் “உறுமுது “ என்பதைப் பயன்படுத்துவதில்லை. “ மொறையுது “  என்பார்கள்.  2. அடர்த்தியானப் புகையைப் பிடித்துக் கொண்டு வானத்தை எட்டி விடலாம் என்று நினைப்பான். நான் மிகவும் சிலாகித்த வரி இது. சிறுமுகைஊர்க் காட்சியில் படுகிற இந்தப் பகுதி முழுதுமே குழந்தை உலகும் அதன் கனவுத்தனங்களும் அபாரமாக வந்துள்ளன . உணர்ந்து வரி வடிவத்தில் காணாத செய்திகளை முதன் முதலாய் எழுத்தில் பார்க்கிற போது நிகழும் மகிழ்வே தனிதான்.கொஞ்சம் பெருந்திணை கலந்திட்ட வேலை செய்யுமிடத்து உள்ள உறவுகளும்( பனியன் தொழில் ) காலகால உணர்ச்சிகளைப் பேசுகின்றன. சுழற்சிக்கு மாற்றான பலவும் நிகழ்ந்தே வருகின்றன உலகில். சம்பளத்தன்று தண்ணி வாங்கித் தருகிற காண்ட்ராக்டர் மாதிரி.
 “ ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது “ என்று தோன்றவே செய்கிறது. ஆனால் இதெல்லாம் இல்லாமல் நம் வாழ்க்கையும் இல்லைதான். ஏதோ ஒரு கட்டும் பிடியுமற்ற நிலையில் குமுகம் மானுடம் எல்லாம் ஒன்றுதான் என்ற உணர்வை அது போன்ற கட்டங்கள் ஏற்படுத்தின.  . செந்தில் சிகரெட் பிடிக்கிற இடமும் அப்படித்தான் அதிர்ச்சியற்ற அதிர்ச்சியாகும். அந்தப் புகையிலை வாசத்தோடும் பிரியத்தோடும்  பிரியங்களால் வென்றெடுத்து விட முடியாத சபிக்கப்பட்ட கசப்போடும், வர இருக்கும் நாட்களின்  இருமலோடும் அது இருந்தது.   செந்தில் சிகரெட் குடிக்க வேண்டாம் என விரும்புகிறேன்.
தொழில் நகரத்திலும் ஆடுகள் இருக்கின்றன. சாக்கடைகளின் உத்திகளில் பசும்புல் தின்று வளர்கின்றன.  ஆட்டினை ரொம்ப ரசித்தேன்.  ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு மீசை முளைக்கிற, மார்பு பெருக்கிற – குழந்தைத் தொழிலாளிகள் - தருணங்களையெல்லாம் கதைப் போக்கோடு உணரும் போது வேதனையன்றி வேறெதுவும் கவிவதில்லை.
சீட்டாட்ட்த்திற்கு இடமாகிவிட்ட காலி மனைபோல்,  கட்டி கைவிடப்பட்ட மனைபோல் அவற்றுள் மண்டியிருப்பவை ஏராளம் ஏராளம்தான்.
இக்கதையின் அல்லது கதைகளின் அல்லது கதைப்  போக்கின் ஊடேயான பேரதிர்ச்சியை பனியன் கம்பனி தொழிலாளி பவானியின் தற்கொலையில் சந்தித்தேன்- ஆண் பனியன் அணிந்து கொண்டு தற்கொலைசெய்து கொள்கிறாள்.  சதைபற்றியும் ஆன்மா பற்றியும் நேசம் பற்றியும் துரோகம் பற்றியும் இன்னும் என்னென்னவோ யோசிக்க ஆனாலும் மங்கலான பதில்களையேப் பெற முடிகிற நிகழ்ச்சி அது. அதைப்படித்த பின்பு வெகு நேரம் புத்தகத்தை மூடி வைத்தேன். அதன் பிறகு கனகுக்கு தொலைக்காட்சி சொன்ன கதை. “ஆசையை அடக்க்க் கூடாது. அனுபவிக்கவும் கூடாது “ என்பதான தர்ம்வரிகள் வேறு.
  போன வாரம்  வரை முன்னுறவு இல்லாத இந்தப் பாத்திரங்க்ளிடையே எவர் மீது “ காயதல் உவத்தல் “ கொள்ள எனக்கு நியாயங்கள் இல்லை என்ற போது பவானி மீது  ஏன் எனக்குக் கரிசனம் என்பது புரியவில்லை. விளிம்பு நிலை வாழ்க்கை உள்ள பிரதேசங்களில்தான் ஏற்றவும் வலிமையான மது வகைகளும் கிட்டுகின்றன. மதுவின் இடம் மதுவுக்கு...ஜான் பாட்சாவின் இடம் சீட்டாட்டத்த்துக்கு... சீட்டாட்டத்துக்குப் பொதுவாய் பெண்டு பிள்ளை காலதேச வர்த்தமானம் பவிஷ்யத் போன்றவைகளை மறக்கடிக்கும் திறலாகிரி உண்டுதான்.
கால்பந்திற்கும் அதெல்லாம் உண்டு என்பதை புத்தத் துறவிகள் உறுதி செய்கிறார்கள்.
   விளையாட்டுகள் குறைந்த வேலைமிகுந்த ஊரிலோ வழக்கத்துக்கு முன்பே பூப்பும் முதுமையும் விகாரமும் எய்துவது வேதனைதான். பொதுவாக அத்தியாயக் கடைசிகளில் ஜீவாலும்வெக்கை நாவலின் பின் பகுதிகளில்தான் அதிகம் இருக்கும்..குறைந்தபட்ச  தாட்சண்யத்திற்கும் இடந்தராது அவர்களது பால்யங்கள் கரைகின்றன. சில நிமிடங்கள் அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் போல் இருக்கிறது
 உத்தரவாதமான பொருக்கைகளும் தரவழியின்றியே தொழில் நசிவு வேறு. எந்த தொழில் நகரின் சூட்சும ரேகைகளின் ஸ்தூலமாக்கப்பட்ட படம் இதன் மீது ஓடுகிறது. கோலார் தங்கச் சுரங்கமெல்லாம்  இப்போது நினைவுக்கு வருவது அதன் ஒரு பகுதிதான். தலைப்புக்கு மிகப் பொருத்தமானப் பிரதியாய் இது இருக்கிறது  இப்படியெல்லாம் இருக்க வேண்டாம் என்பதிலிருந்து அது எழுகிறது இந்த நாவல் .அந்த உணர்வையளித்தது. ( 250 பக்கங்கள் ரூ200 . நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை  – 98..)