“ நைரா “ இறையன்பு –கேள்வி பதில் பகுதியில் ( ராணி )
சுப்ரபாரதிமணியன் எழுதிய “ நைரா “ என்கிற நாவலைப்
படிக்க நேர்ந்த்து. உலகமயமாக்கலின் பக்கவிளைவுகளை பக்காவாகப் பேசுகிறது. அன்னிய
நாட்டில் இருந்து வருபவர்கள் ஏற்படுத்தும் பண்பாட்டுத் தாக்கத்தையும் பணத்தின்
பின்னால் ஓடுபவர்களுடைய பரபரப்பு விதி மீறல்களையும் சொல்லிச் செல்லும் புதினம்.
இடையிடையே பல க்குறியீடுகளைச் சொருகி, புதினத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச்
செல்கிறார். சுற்றுச்சூழல், மானுட விடுதலை குறித்தும் தொடர்து சிந்திக்கும் இவரின்
முக்கியமான படைப்பு இது ( ரூ 180, என்சிபிஎச் வெளியீடு )