சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 21 ஜூலை, 2016

மத்திய அரிமா சங்கம் * கனவு இலக்கிய வட்டம்
-------------------------------------------------
காலை 10 மணி முதல்
ஒரு நாள் குறும்படம் திரையிடல் விழா மற்றும் கவிதைத் திருவிழா
21/8/16 ஞாயிறு
மத்திய அரிமா சங்கம், காந்திநகர், திருப்பூர்
குறும்படங்கள் ஒருங்கிணைப்பு :
இயக்குனர் அமுதன்
கவிதைநூல்கள் வெளியீடு, அறிமுகம், கவிதை வாசிப்பு ஒருங்கிணைப்பு :
இளஞ்சேரல்
அமுதனின் டாலர்சிட்டி படத்தின் திரையிடல் உட்பட
என் " நைரா  " நாவல் அறிமுகக் கூட்டம்
25/7/16 மாலை 6 மணி : ஈரோடு
இடம்: ஓய்வூதியர் சங்கக் கட்டிடம் , வட்டாச்சியர் அலுவலக வளாகம்
உரையாளர்கள்:
பேரா.மணி
பேரா.சீனிவாசன்
கார்த்திகேயன்
பாரதி இளங்கோ

வியாழன், 14 ஜூலை, 2016

sirukathai 
    ஆண் மரம் : சுப்ரபாரதிமணியன்

           அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான்.
போலீஸ்காரர்  குண்டாந்தடியை மறுபடியும் ஓங்கியபோது வேண்டாங்க .. வுட்டுடங்க “ என்றாள் சுசி. சற்றே வியர்த்திருந்த போலீஸ்காரர் வலது கையை ஒரு வித வலியைத் தாங்குவது போல் கீழே கொண்டு வந்தார். கிரேனிலிருந்து இறங்கும்    பெரிய் பொருள் போல் அசைவிருந்த்து.         “ என்னம்மா பெரிய ரோதனையாப் போச்சு. புருசன் கொடுமைப்படுத்தறான்னு புகார் குடுக்கறே, அடுச்சா இப்பிடி நாயம் பேசறே. நடுங்கறே “
“ இல்லீங்க .. இந்த தரம் வுட்டிருங்க சார்.
நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட .. போலீஸ்காரர் வலது காலைத்தூக்கி  எதிரிலிருந்த பிளாஸ்டிக் நாற்காலியின் மீது வைத்தார். ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல் பெருமூச்சு விட்டார்.
எதுக்கம்மா. இங்க வர்றீங்க “
  இந்த தரம் வுட்டிருங்க சார் . அப்புறம் பாத்துக்கலாம்.மோகன் மெல்ல தன்னை சுதாகரித்துக் கொண்டு சுவரில் சாய்ந்தான். அவனின் முழுக்கை சட்டை தாறுமாறாய் சுருங்கியிருந்தது. கழுத்துப் பகுதி வியர்வையால் நிரம்பி கசகசத்தது.
குடிக்கறான். ஒதைக்கறான்ன்னு பெண் போலீஸ் நிலையத்திலெ போயி சொல்றே.. விசாரிக்க ரெண்டு அடி போட்டா அவன் அலறதெ விட நீ பெரிசா  அலற . இதிலெ கம்ள்ளைண்ட் வேற..
“ என்ன பணறது சார். கொடுமை தாங்காமெ என்னமோ சொல்லிட்டன்அவளின் குரல் சிதைந்து அழுகையில் தோய்ந்திருந்த்து.
“ புருசன் அடிபடறது பாத்து உனக்கும் வலிக்குதோ “
   தேர்தல் முடிவில் எல்லாம் நிவர்த்தியாகும் என்றே நினைத்திருந்தாள். குடித்து குடும்பத்தைச் சீரழிக்கும் மோகனின் சித்திரவதைகளுக்கு  ஒரு முற்றுப்புள்ளி வைக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும் .தேர்தல் முடிந்தால் ஒரு வழி பிறக்கும், தை பிறக்கப்போவதில்லை இப்போது. ஆனால் வழி தெரியப் போகிறது என்று நினைத்தாள்.மதுவிலக்கை மெல்ல மெல்ல அமுலாக்குவார்களா. ஒரே நாளில் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடி விடுவார்களா என்றக் குழப்பத்தில் இருந்தாள். ஒரு மாதங்களுக்கு மேலாக அவளின் கனவில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் வந்து போயின.மோகன் தெளிந்தவனாய் நடமாடிக்கொண்டிருந்தான். மகளை  மிதிவண்டியில் உயர்நிலைப்பள்ளிக்குக் கூட்டிப் போவனாக இருந்தான்.. எல்லாம் சுமுகமாக கனவில் சென்றன.காதல் பருவத்திற்குப் பிறகு சுகமான கனவுகளை அவள் கண்டதாக எண்ணினாள்.
         தேர்தல் முடிவு அவளின் தூக்கத்தை மறுபடியும் கலைத்துப் போட்டது. இனி பழையபடிதான் என்பது தெரிந்து விட்டது. மதுவிலக்கில்லை. முதலில்  மூடப்படும் 500 கடைகளில் அவள் வீட்டருகே இருக்கும் குமார் நகர் கடை இருக்க வேண்டும் என்று முனியப்பனை வேண்டினாள்.
 “ மெயின் பஜார்லே இருக்கற கடை.. இதை மூடுவாங்களா . இதை மூடுனாலும் கரண்ட் ஆபீஸ் கடைக்கு ரொம்ப தூரமா என்ன..ஒண்ணும் விடியப்போறதில்லெ..சித்தி அவளின் எல்லா சிறு கனவுகளையும் தகர்த்துப் பேசினாள். அவள் கணவனை குடிக்கு பலி கொடுத்து விதவையானவள். பனியன் கம்பனி வேலை எட்டாவது, ஆறாவதும் படிக்கும் தன் மக்ன்களுக்கு சோறு போடப்போதும் என்று பெருமூச்சு விட்டபடி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள். அந்த வீதியில் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாவது பற்றி அவளின் கவலை இருந்து கொண்டே இருந்தது.    மோகனை மது மீட்பு இல்லங்களில் இரு தரம் சேர்த்து  வெளிக்கொணர்ந்தாள் சுசி. ஆனால் அதிகபட்சமாய் ஒரு மாதம் குடிக்காமல் இருப்பான். மீண்டும் ஆரம்பித்து விடுவான். ஏதாவது கேட்டால் வீட்டிற்கு வருவதே அபூர்வமாகி விட்டது. பனியன் கம்பனியின் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பது திங்கள், செவ்வாய் வரை நீளும். வாரம் மூன்று நாள் வேலைக்குப் போனால் அதிகம்.. அந்த சம்பளம் போதும் குடிக்க, அவனின் செலவிற்கென்று. மற்றைய நாட்களில் குடித்து  விட்டு  எங்காவது கிடப்பது என்றாகிவிட்டது அவனுக்கு.. சுடுகாட்டில் இருந்த ஆயி மண்டபம் பலருக்கு தூங்கவென்று பயன்படும். மோகனுக்கும் பயன்பட்டது.  
“ பெரிசா காதல் வேற. காதல் பண்ணி கண்ணாலம் கட்டிகிட்டங்க வேறே “ என்று சித்தி குத்திக் காட்டுவாள்.என்னமோ பெரிசா சொர்க்கத்தைக் கொண்டுட்டு வரப்போறான்னு காதல் பண்ணீட்டையாக்கும்
“ அதெல்லா அந்தக்காலம்.. போச்சு. என்னமோ ஒரு மோகம் வந்துச்சு. மோகம் கலஞ்சு போச்சு தெனம் தூக்கத்திலிருந்து எந்திரிக்கறப்போ கலஞ்சு போற கனவு மாதிரி. அதயெல்லா மறந்துட்டுதா இருக்க வேண்டியிருக்குது
  போலீஸ்காரர் சட்டென நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிப்போனவர் கண்களைக் கசக்கிக் கொண்டு அவளைப் பார்த்தார்.        என்னம்மா. இன்னம் நின்னுட்டே இருக்கறையா. நான் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எந்திர்ச்சிசிட்டேன். உங்காளும் தூக்கத்திலெ இருக்கறான் போலிருக்கு. அடிவாங்குன பயம் இல்லாமெ   தூக்கம் வந்திரிச்சு பாரு அந்த குடிகார நாய்க்கு .. செரி என்ன பண்றது... டீ குடிக்கறையா  “
இந்த தரம் வுட்டிருங்கய்யா .. அப்புறம் பாத்துக்கறன்
“ ரெண்டு தபா கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டே.. இதுக்கு மேல என்ன பண்ண . அதுதா நாலு வீசு வீசலாமுன்னு ..
அங்கேரிபாளையத்தில் இருந்த போது அங்கிருந்த காவல்நிலையத்தில் இருமுறை புகார் கொடுத்திருந்தாள். கணவன் குடித்து விட்டு அடிப்பதாக. அங்கும் கூப்பிட்டு விசாரித்து பயமுறுத்தி அனுப்பினார்கள். குமார் நகர் பகுதிக்கு வந்த பின் இரண்டு முறையாகி விட்டது. இந்த முறை அடியும் விழுந்து விட்டது. அவள் குடியிருப்பது லைன்வீடு என்பதால் அவன் வீட்டிற்கு வந்து ஏதாவது கலாட்டா செய்தால் வந்து கேட்க நாலு பேர் இருக்கிறார்கள் என்பதுதான் அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.  அங்கேரி பாளையம் காவல் நிலையத்தில் இருமுறை அவள் புகார் தந்திருக்கிறாள் என்பதை இந்த காவல் நிலையம் அறியுமானால் வேறு மாதிரி அவளை நடத்த்க்கூடும் என்ற பயம் இருந்தது சுசிக்கு.  .
 “ செரி ..போம்மா ..நீ அடிக்க வேண்டாங்கறே. என்னமோ பண்ணீத் தொலை. அங்க போயி கேசை வாபஸ் வாங்கிக்கறன்னு சொல்லிட்டு போ “
“ செரிங்க சார். அடிபட்டு கதறதெப்பாத்து மனசு கேக்கலீங்க “
“ இதிலே வேற காதல் கண்ணாலம் பண்ணிட்ட கேசுங்க .. போம்மா. போயி இருக்கற ஒத்தப் புள்ளையை நல்லா படிக்க வெச்சு கண்ணாலம் பண்னிக்குடு. குடிகார நாய்க எப்ப பொழைக்க வுடும்.
       ரோஹிணி  மடியில் விரித்து வைக்கப்பட்டிருந்த   நோட்டைப்பார்த்துக் கொண்டிருதாள்.அவளைச்சுற்றிலும் நாலைந்து புத்தகங்கள் இறைந்து கிடந்தன. பறந்து செல்ல எத்தனிக்கும் பட்டாம்பூச்சிகள் போல் பக்கங்கள் காற்றில் சிறகடித்தன.
“ என்னம்மா .. வேலைக்குப் போயிட்டு வர்றியா. சீக்கிரமா வந்துட்டே “
“ போலீஸ் ஸ்டேசனுக்கு “
“ எங்கப்பன் மேல கம்ப்ளைண்டா .. செரிதா “
    அவள் உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படிப்பவள். பள்ளி போய்விட்டு வந்தால் இரவு முழுக்க புத்தகங்களுடனும் வீட்டுக் கொசுக்களுடனும் அல்லாடுவாள். அவள் இன்னும் பெரிய மனுசி ஆக வில்லை என்பது சுசிக்குப் பெரிய கவலை.        “ பிராய்லர் கோழி திங்கறதுனாலையே சீக்கிரம் வயசுக்கு வந்திருதுக . இந்தக்காலத்துப் பொண்ணுகன்னு சொல்வாங்களே..இது இப்பிடி நிக்குதே என்று தனக்குள் புலம்பிக் கொள்வாள் . குமாரபாளையம் சித்தி கூட ஆண்மரம் என்ற வார்த்தையை ஒருதரம் எதேச்சையாய் சொன்னபோது வருத்தமாக இருந்த்து சுசிக்கு வூட்டு ஆம்பளெ கூட காஞ்சு போன மரமா கெடக்குது “ என்று பதிலுக்கு அவளும் சொல்லிவைத்தாள்.
  அடுத்த வாரம்  ஸ்டடி லீவ்வுன்னு இருக்கும்மா. பாட்டி வூட்டுக்குப் போலாமா “
“ படிக்கிற லீவுலே எதுக்கு ஊருக்கு. எந்தப்பாட்டி உறவு கொறையுதுன்னு அழுகறாங்க..என் கூட பனியன் கம்பனிக்கு வாயேன்
  அவளுக்கு சிங்கர் மிஷினில்  உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வானத்தின் நீலத்தைப் பார்ப்பது பிடிக்கும்.அவளின் வலது  புறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மாத காலண்டரில் தென்படும் இயறகைக் காட்சிகளை பார்ப்பாள். உன்னெ எங்கெல்லா கூட்டிட்டுப் போவன் தெரியுமா..என்று காதலிக்கிற காலத்தில் சொல்வான்.இங்கு கொண்டு வந்து பனியன் கம்பனியில் உட்கார வைத்து விட்டானே என்று நினைக்கையில் மனம் பதறும்.  
“  அடுத்த வருஷத்துக்கு தயார் பண்றியா என்னெ... முடியாதம்மா. நான் படிக்கணும். ஆமா..வீவுலதா  தனியார் ஸ்காலர்ஷி ஏதாச்சும் கெடைக்குதான்னு பாக்கணும்.. ஆமா அப்பனெ போலிஸ்ஸ்காரங்க என்ன பண்ணுனாங்க .
“ அடிச்சானுங்க. அவர் அலறுன்ன அலறல்லே நான்தா போதுண்ட்டேன்.உனக்கு அப்பன்னு ஒருத்தன் வேணுமில்லையா “
படபடத்துச் செல்லும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து பட்டாம் பூச்சிகள் பறந்தன. ரோஹிணியின் கைகள் அவற்றின் மெல்லிய இறக்கைகளைத் தொட எத்தனித்தது. 

கவிஞர் சிற்பியின் புது நூல் . கவிதா பதிப்பகம், சென்னை வெளியீடு ரூ80.
இம்முறை காடுகள், விலங்குகள், பற்வைகளின் உலகில் சிற்பியின் அனுபவங்கள் விசேசமானவை.


பேட்டி: சுப்ரபாரதிமணியனுடன் ( Pudhu punal July issue)

50 வது நூலும் 30ம் ஆண்டு கனவு இலக்கிய இதழும்
கேள்வி; சமீபத்தில் உங்களின் 50வது நூல் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது குறித்து..
கலைஞன் பதிப்பகம் தன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில் வெளியிட்டது. அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள் . பத்துப்பேர் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்கள்.50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தது. அதில் என் சிறுகதைத் தொகுப்பு ‘ குகைகளின் நிழலில் “ ஒன்று. அது என் 50வது நூல்.
அந்தத் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். 2012ல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்த்து.அதன் பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது “ ஓ.. மலேசியா “ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன் . நூல் இன்னும் வெளியாகவில்லை. மலேசியப்பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் “ மாலு “( உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை ) . அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலை மறைவு வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன். அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய “ பால் மரக்காட்டினிலே “ நாவல்   மலேசியப்பின்னணி நாவல் ஆகும். “ ஓ.. மலேசியா ““ மாலு “ ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை  சில சிறுகதைகளாகவும் எழுதினேன்.அந்தச் சிறுகதைகள் ‘ குகைகளின் நிழலில் “ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால் முழுத்தொகுப்பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன். .
    .கொங்கு நாட்டினரை விருந்தோம்பல் , உபச்சாரத்திற்கு பெருமை கொள்ளும் விதமாய் சொல்வார்கள். மலேசியா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது என்று சொல்லும் அளவு பலமான உபச்சாரம் இருந்தது.   அடுத்தத் தொகுப்பில் மலேசியா அனுபவ  முத்திரையை அழுத்தமாகப் பதிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. “ பால் மரக்காட்டினிலே “ “ மாலு “ நாவல்கள் போல் 50 மலேசியா பின்னணி நாவல்கள் வெளிவரவேண்டும் என்ற விருப்பத்தை அந்த மாநாட்டில் நான் தெரிவித்தேன். அடுத்த குதிரைப்பயணத்திற்கு  கலைஞன் பதிப்பகம் தயாராகி வருகிறது.அதன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 தமிழ்க்கவிஞர்கள் பற்றிய  நூல்களை இவ்வாண்டில்  வெளியிட ஆயத்தம் செய்து வருவதைக்குறிப்பிடலாம்.


கேள்வி: இந்தத் தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்தது என்ன
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எனது அய்ரோப்பிய நாடுகளின் பயணத்தில் பசுமைக் கட்சிகள் பற்றித் தெரிந்து கொண்ட போது ஆச்சர்யமாக இருந்தது. அப்போதே அவற்றின் வயது முப்பதாகியிருந்தது.அப்படி பசுமைக்கட்சிகளின் கூட்டமைப்பு இன்றைக்குத் தேவையாக இருக்கிறது. இந்த முறை அப்படி ஒரு இயக்கம ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன்.
அய்ரோப்பிய நாடுகளில் அப்போதே  கிரீன் பீஸ் இயக்கம் மிகவும் வலிமை வாய்ந்த இயக்கமாக இருந்தது. இவர்கள் ரெயின்போ வாரீயர் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான பரிசோதனைக் கப்பலை வைத்திருந்தனர்..கடற்பகுதிகளில் பல்வேறு பருவங்களில் இக்கப்பல்கள் ஆராய்ச்சிகள் செய்வர். பிரஞ்சு நாடு அணு ஆய சோதனை செய்த பலமுறை இக்கப்பலில் சென்ற இந்த இயக்கத்தினர்  அதை பெரிதும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர். இடதுசாரி இயக்கங்களைப் போல பெரும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகளாகவும் விளங்கினர். கிரீன் பார்ட்டி அப்போதைய தேர்தலில் 15 thசதவீதம் ஓட்டு பெற்றிருந்தனர். பெர்லின் சுவரை இடித்த ஜெர்மானியர்கள் கிரீன் பார்ட்டியில் பெருமளவில் இருந்தனர். இங்கிலாந்தில் இவர்கள் வெளியிடும் பத்திரிக்கையின் பெயர்  ரெட் பெப்பர் “.
   நம் இந்தியக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களின் போது தேர்தல் அறிக்கைகளிலாவது நம் சுற்றுச் சூழல்  பிரச்சினைகள் வெளிப்படுமா என்று பல கட்சிகளை அணுக முடிந்திருக்கிறது. ஓரிரு கட்சிகள் ஒத்துழைத்திருக்.இம்முறையும் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அது தென்பட்ட்து.

அங்கெல்லாம்  சூழலியல் என்பது  அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம்  அவசியம் என்பது உணரப் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன என்று சொல்லாம்.
கேள்வி: எழுத்தாளனுக்கென்று தனியாக சமூகக் கடமை என்றிருக்கிறதா

சமூகக் கடமை என்று தனியே வந்து எதுவும் குறுக்கே நிற்பதில்லை. சமூகத்தில் அவனின் பங்கு என்ன என்பதை அவனே தீர்மானித்தாலும், அறிந்து கொண்டிருந்தாலும் பாமரத்தனமாய் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவன் உள்ளுணர்வாக அதை மனதில் இருத்திக் கொண்டே எழுதுகிறான் எழுத்தின் ஒரு பங்காக சமூகத்திற்கு பயன்படுதல் பற்றி அவன் விரிவாய் சந்திக்க வேண்டியிருப்பதில்லை. ஆனாலும் தன்னைச் சார்ந்த உலகத்தை விரித்துக் கொண்டே போவதில் தொடர்ந்த வாசகன் அவனின் சமூகப் பொறுப்பை அறிந்து கொள்ளவும் ஏதுவாகிறது. கதாபாத்திரங்களும் அவன் பிரயாணிப்பது ஏதுவாகிறது. சமூகத்திற்கும் எழுத்தாளன் என்ற தனி மனிதனுக்குமான உரையாடலாகக் கூட அது தொடர்கிறது. இதைப் பதக்கிற தனிமனித வாசகனும் தனக்கானப் பிரதியை உருவாக்குவதிலும், சமூகம் பற்றின தனது விமர்சனத்தை முன் வைப்பதிலும் கவனமுள்ளவனாகிறான். தன்னை ஒரு வாசகனாக முன் நிறுத்தி அப்படைப்பை மீண்டும் வாசிப்பதில் எழுத்தாளனுக்கு அலுப்பேற்பட்டு விடலாம். ஆனால் வாசகன் எழுத்தாளனின் உலகை அறிந்து கொள்கிறான். எழுத்தாளன் எழுதுவதோடு நின்று விடுகிறானா என்பதும் கேள்வியாகிறது.
            எழுத்தாளனின் சமூகக் கடமை பற்றி வலியுறுத்தப்படும் பொழுது அவனுக்கு திகைப்பேற்பட்டு விடலாம். அந்த திகைப்பு சமூகக் கடமை காரணமாகவே எழுத நேர்ந்தது என்ற அவனின் தீர்மானம் சந்தேகத்திற்கு இடமளிக்கப்படுவதால்தான், எழுதுகிறவன் என்ற காரணத்தினாலேயே செயலாளியாக, போராளியாக தன்னை ஓர் உருவமாக்கிக் கொள்கிறதும் இயல்பாகவே நிகழ்கிறது. சமூகம் சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் அவன் எழுத்தின் மூலம் எதிர்வினையாற்ற வேண்டியிருப்பதால் அது மேலும் உறுதிப்படுகிறது. தன்னை முன்னிருத்தியோ, தனது படைப்பை முன்னிருத்தியோ அவன் செயல்படுகிறவனாக வெளிப்படுகிறான். சமூக நிகழ்வுகளுக்கும், நிறுவனங்களுக்கும் எதிரான செயல்பாடாகவே அவன் படைப்புகள் முன் நிற்கின்றன.
            நவீன எழுத்தைச் சார்ந்து படைப்பாளி இயங்கும் போது சாதாரண வாசகனை சென்றடைய முடிவதில்லை. சென்றடைகிற வாசகனும் படைப்பின் வெறுமை, அவநம்பிக்கை குறித்து பயப்படுகிறான். படைப்போடு எப்படி தன்னைப் பொருத்திக் கொள்வது, எழுத்தாளனின் அனுபவத்தை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பது தேர்ந்த வாசகனுக்குப் பெரிய சிக்கலாய் அமைந்ததில்லை. வெறுமையும், அவநம்பிக்கைத் தொனிப் படைப்புகளை மீறி வாசிப்பனுபவம் ஊடே அவன் பயணம் செய்வது இயல்பான விஷயமாகவே அமைந்து விடும். ஆனால் படைப்பின் பயன்பாடு குறித்து உடனடி விளைவுகளை எதிர்பார்க்கிறவனுக்கு சத்தமிடாத படைப்புகளில் அவநம்பிக்கை வைக்கிறான். அவனுக்கு போஸ்டர், தட்டிகள், பொதுக் கூட்ட மேடைகளின் கோஷங்கள் உணர்ச்சி தருபவையாக இருக்கின்றன. இந்த வகை உணர்ச்சிகளைத் தரும் எழுத்தாளன் அவனை ஆகர்சிக்கலாம்.
            பெரும் சமூக அநீதிகளுக்கு எதிராக உடனடியாகக் கிளர்ந்தெழுபவனல்ல எழுத்தாளன். கண்டனங்கள், ஊர்வலம், சிறு போராட்டம் இவற்றில் கலந்து கொள்ளவே அவனுக்கு வாய்ப்பமையும்..
            ஒற்றைக் குரலாகத்தான் எழுத்தாளனின் படைப்பை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒற்றைக் குரல் இல்லை. பல ஆண்டுகளாக சமூகம் பற்றின அவதானப்பின் ஒட்டு மொத்தமான அனுபவக் குரல். தனிப்பட்ட உணர்ச்சி என்ற வகையில் அது தென்பட்டாலும் வாசகன் தன்னை அதில் உணர்ந்து கொள்வதில் ஒற்றைக் குரலின் வீச்சும், தீவிரமும் தெரிந்து கொள்கிறான். ஆனால் குரல் கொடுக்க குடியாதவர்களின் குரலாக அவள் வெளிப்படுகிறான் என்பது உண்மையானது. இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது.
கேள்வி : இவ்வாண்டில் தங்களின் வெளிநாட்டுப்பயண அனுபவம் எப்படியிருந்தது
   மலேசியாவில் புத்தக வெளியீட்டிற்காக போனபின் அங்கிருந்து சிங்கப்பூர் , இந்தோனிஷியா, தாய்லந்து என்று சென்றிருந்தேன். சிங்கப்பூர் முன்பே சென்றதுதான். இந்தோனிஷியா, தாய்லந்து என்று சென்றபோது நம் ஊரின் பொதுபுத்தியில் இருக்கும் ஆங்கிலம் பற்றிய கற்பிதம் எவ்வளவு தவறு என்று சுலபமாகத் தெரிந்தது. அங்கெல்லாம் ஆங்கிலப்பயன்பாடு என்பது இல்லை. தாய்மொழி பயன்பாடு அதிகம். அது போதும் என்கிறார்கள்.இங்கு தாய்த்தமிழ்ப்பள்ளிகள் நலிந்த நிலையில் உள்ளன. மலேசியாவில் 540 தாய்த்தமிழ்ப்பள்ளிகளை அரசே நடத்துகிறது.குறைபாடுகள் இருந்தாலும் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அங்கே ஆரோக்யமாகத் தெரிகின்றன. முந்தைய அய்ரோப்பிய நாடுகள், இங்கிலாந்து பயணம் போல் விரிவானதில்லை இம்முறை.

கேள்வி: தங்களின் கனவு இலக்கிய இதழ் 30ம் ஆண்டைப்பூர்த்தி செய்கிறது. வாழ்த்துக்கள். அந்த அனுபவம் பற்றி..
 செகந்திராபாத்தில் வேலை நிமித்தமாக 8 ஆண்டுகள் இருந்தேன். அங்கு பிராமண சமூகம்  பெரிய அளவில் கலாச்சார நடவடிக்கைகளில் இருந்தது. அசோக மித்திரனின் படைப்புக்களமாக இருந்த நகரம்... இளைஞர்களின் படைப்பாக்க முயற்சிக்கு இதழ் தேவைப்பட்டது. ஆந்திர மாநில தமிழர் பேரவை என்ற அமைப்பினர்  நடத்தி வந்த ஒரு இதழை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்தோம் அவர்கள் தீவிரமான பெரியார்சீடர்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளாத போது  கனவு என்ற இதழை ஆரம்பித்தேன். இரண்டு இதழ்கள் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்தன. பிறகு தமிழகத்திலிருந்து படைப்புகள் வாங்கி பிரசுரிக்க ஆரம்பித்தேன். 30 ஆண்டுகள் ஓடி விட்டன. முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை காவ்யா பதிப்பகம் 700 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இன்றைய முக்கிய படைப்பாளிகள் பலரும் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஜெயமோகன் தயாரித்த மலையாளக்கவிதைகள் , அசோகமித்திரன், சுந்தரராமசாமி சிறப்பிதழ்கள், திரைப்பட நூற்றாண்டை ஒட்டிய 5 சிறப்பு இதழ்கள் யமுனா ராஜேந்திரனின் தயாரிப்பில், புலம்பெயர்வு இலக்கிய சிறப்பிதழ்கள், இலங்கை, சிங்கப்பூர் சிறப்பிதழ்கள் , பாவண்ணன் தயாரித்த கன்னட சிறப்பிதழ்  , நோபல் பரிசுபெற்றவர்களின் கதைகள் சிறப்பிதழ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்  இளம் படைப்பாளிகளின் மேடையாக அது இருந்து வந்துள்ளது. எனது சொந்த கைக்காசுதான். இழப்புகளைக் கணக்கிட்டால்  மனச்சோர்வுதான் மிஞ்சும். தொடர்ந்து இயங்குவதுதான் ஆறுதல்.

பேட்டி : ஜனனி காயத்ரி , மேட்டுப்பாளையம் photos in google tamil


ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்
கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு
                               சுப்ரபாரதிமணியன்


          அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு... அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது - கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன்.  ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த அடையாளத்தை மேம்படுத்தும் முயற்சிகள், வேறு அடையாளங்களைச் சிறுமைப்படுத்தும்  முகங்களை அவர் அதில்  தேடினார். எதையும் கண்டடையவில்லை என்பதில் எனக்கும் ஆறுதல்தான்.ஆனால் அந்தப் பேராசிரியர் போன்றோர் அதில் அடையாளம் கண்டு கொண்டதை இதில் உள்ள கவிதைகளைக் கொண்டு  ( ஆதியாகமம், மற்றும் இரண்டாவது கல், பத்து நிந்தனைகள், அய்ந்து அப்பங்களும்.....) நிச்சயப்படுத்திக் கொள்வர். ஆனால் அதை மீறி குதர்க்கமாய் எதையும் கண்டு கொள்ள முடியாது. அவையும் சங்கீத வசனங்களாய் கவிதைக்குள் வந்திருக்கும் வழக்கைதான் காண முடியும்..சாதி வேண்டாம் மதம் வேண்டாம்  என்ற உறுதியான மனநிலையில் சாதி இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு போக்கு தீவிரமாகியிருப்பது எவ்வளவு துயரம் கை நிலத்தை வாய்க்கரிசி போடுவது போல்.
கதிர்பாரதியின் தமிழ் சமூக்கதையில் - ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சமூக வழக்கு புதைந்திருப்பதையும் நிலம் சார்ந்த அநுபவங்களின் விஸ்தரிப்பும் ஒரு அழகியலாக அமைந்து வருவதையும் காணலாம்.அது உருவாக அந்நிலத்து சாரமான வாழ்வும் நிலத்தை விட்டுப் இடம் பெயர்தலில் உண்டாகும் சீர்குலைவுகளும் மூலங்களாக இருக்கின்றன. அவரின்            “ நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் “ கார்பரேட்டுகளால் சிதைக்கப்படுவதைப் பற்றிய சித்தரிப்புகள் முக்கியமானவை.                     நிலவே../மதுவே/ உனை ஒருவருக்கும் கொடேன் “ என்ற தீர்மானத்தில் இருப்பவர்தான். ஆனால் எல்லாம் கை நழுவிப் போகின்றன. காலடி நிலம் சரசரவென்று பாம்பு நழுவுவது போல் வேற்றாள் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து வழக்குத்தொடுப்பதிலும் அந்த உணர்வுகளைச் சங்கமிக்க வைத்து வாதாடி மனிதாபிமான சான்றுகளை எடுப்பதுரைப்பதிலும் அவரின் கவிதைகள் முன் நிற்கின்றன எனலாம். அதுவே அவர் கவிதைகளின் பொது அழகியலாவும் மிளிர்கிறது.
                         ஆனந்தியைப் பெண்ணாக நான் நினைத்துக் கொண்டு ( முதிரிளம் பருவத்து முலையுடன் ) தட்டான்கள் பெண் கவர்ச்சி சார்ந்தே தாழப்பறப்பதாக நினைத்தேன். ஆனால் ஆனந்தி நிலமாகிப் போனதில் எனக்கும் இன்னும் மகிழ்ச்சிதான். தானியக்கிடங்குகள் நிறைந்த நிலத்தின் பாடல்கள்,மெட்ரோபாலிட்டன் நிலத்தின் நாற்சந்தி, டம்ளரில் தண்ணீர் எடுத்து காடு வளர்க்கும் சிறுவன், மாநகரப்பூங்காவின் வடமேற்கு மூலை  என்று காட்டி     மெட்ரோபாலிட்டன் நிலத்தில் வேரறுந்து கிடப்பவர்களைக் கவிதைக்குள் கொண்டு வருகிறார்.ஆட்றா ராமா.. .  ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. ஆட்டங்கள் ஆடி சமரசம் செய்து கொள்பவர்களால் காணப்படும் பின் தங்கியவர்களின் உயரம் தட்டுப்பட்டு விடுகிறது. கருவாட்டு ரத்தமூறிய இட்லிகளும் இரு கரு நிற கோலாக்களும், இனும் பிறவும் பொய்யா மெய்யா என நாம் வெடித்து விளையாடு எருக்கம் மொட்டுகளாக மாறி நம்மை அலைக்கழிக்க வைக்கிறது. பகலும் இரவும் மாறி மாறி அலைக்கழிக்கின்றன. ( இத்துணை ஆதூரமானதா உன் விரல்.. இத்துணை ஆதூரமானதா உன் பகல் .,சில்லென விடியப்போகும் இரவால் அழகாகப் போகிற பகல் – வெட்கமில்லா இரவு )
பல ஆங்கிலத் தலைப்புகள் உறுத்துகின்றன. பலரை உறுத்தவென்றே பல பொருட்களின் மேல் அவதானித்து எழுதப்பட்ட இத்தொகுப்பின் கவிதைகள் –கேரட், ரயில், குரங்கு, எறும்பு, முயல்குட்டிகள், புறா , ஆமை , அணில் – ம்னிதர்களின் மேலான அவதானிப்புகள் என்றேயாகிறது.
                          வெட்டுக்கிளி, சிட்டுக்குருவி போன்றவற்றை உருவகப்படுத்திய  ( பக். 65, 69 ) கவிதைகள்  ஆவணக்கொலை போன்ற சமூக நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும் இருக்கிறது. விமர்சனங்களை மீறி மோதி மிதித்து  முகத்தில் உமிழ்ந்து விடும் ( நான் ..பக்க.92 )  கோபத்தை எதிர்ப்பின் விதைகளாகவும் இக்கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். முப்பரி பின்னலிட்ட நாக சர்ப்பமாகக் கிடக்கும் ஜடையைப் போல மொழியின் இறுக்கத்திலும் அனுபவங்களின் அடர்த்தியிலும்  இக்கவிதைகள்  வாசிப்பின் போதும் பின்னாலும் யோசிக்கையில் சுழித்தபடி சிலேப்பி மீன்களைப் போல் நீந்திக்கொண்டிருக்கின்றன.
  (ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்

96 பக்கங்கள் .ரூ 85, உயிர்மை பதிப்பகம். , சென்னை  )


ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள்
 எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
                                 செ. கிருத்திகா

சுப்ரபாரதிமணியன் சுமார் அய்ம்பது  நூல்கள் எழுதியிருப்பவர். அதில் 13 நாவல்கள் அடங்கும். பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.                      மண்புதிது  “என்று ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. மற்றும் நூற்றுக்கணக்கான பயணக்கட்டுரைகள் பிரசுரமாகியிருகின்றன.   அவையெல்லாம் புத்தக வடிவம் கொண்டிருக்கிறதா  என்று தெரியவில்லை. இப்போது  என்சிபிஎச் வெளியீடாக “ எட்டுத் திக்கும்என்ற பயணக்கட்டுரை நூல் வெளிவந்திருக்கிறது. அதில் இங்கிலாந்து , ஜெர்மனி,பிரான்ஸ், வங்காள தேசம், மலேசியா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளில் கண்டது, இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்குச் சென்ற போது அவர் மனதில் எழுந்ததை பிறகு அவற்றைப்பற்றி எழுதியவற்றை தொகுத்ததில் சில கட்டுரைகள் உள்ளன..வெளிநாட்டு அனுபவங்கள் முதல் உள்ளூர் மற்றும் சொந்த கிராம அனுபவங்களை வரை சிலகட்டுரைகளும் இதில் உள்ளன.
வெளிநாட்டுப்பயண அனுபவங்களில் அந்தந்த நாடுகளின் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.அங்கு சந்தித்த எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் இலக்கியப்படைப்புகள் பற்றியும் எழுதியுள்ளார். அரசியல், திரைப்படம் என்று பல விசயங்களை அவை கோடிடுகின்றன.இலக்கிய கூட்டங்களுக்குச்  சென்றதை பதிவு செய்திருப்பதில் அவ்வப்போதையை இலக்கியச்சமாச்சாரங்கள், புத்தகங்கள்  பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. வெளி மாநிலங்களில் நடைபெற்ற சாகிதய அகாதமி, கதா விருது கூட்டங்கள் போல் பல சுவாரஸ்யமானவை அவை. காசியின் கங்கை ஆறு முதல் சென்னை கடற்கரை வரைக்கும் பல  இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.திருப்பதி இலக்கிய கூட்டத்தில் உட்கார்ந்து கவிதைகளை மொழிபெயர்த்த்தைத் தந்துள்ளார். புளியம்பட்டி போன்ற சின்ன ஊர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். கம்பம் போன்ற சிறு ஊர்களில் நடக்கும் இலக்கிய பரிசளிப்பு பற்றி எழுதியிருக்கிறார். கம்பம் பற்றி எழுதும்போது சுருளி அருவி பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, அதைப்பற்றியும் எழுதியிருக்கிறார். பகுத்தறிவுப்பார்வையுடன் பக்தி விசயங்களை பல கட்டுரைகளில் கிண்டல் அடித்திருக்கிறார். உலக அளவிலான பல முக்கிய விசயங்களை முன்னிருத்துகிறார். உதாரணத்திற்கு அகதி நிலை.  கல்வி வணிகமயமாக்கலை எதிர்த்த கல்வி யாத்திரைகளைப் பற்றியும் எழுதி கல்வி பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார். ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் இவை .பல யாத்திரைகள் பற்றிய கூட்டுக்கட்டுரை இந்நூல்..

( எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்          என்சிபிஎச், சென்னை   வெளியீடு ரூ110 )
சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல் நைரா வெளியீடு
சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல் நைரா வெளியீடு கோவை இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சியில்  நடைபெற்றது. நாவலை கோவை மண்டல என்சிபிஎச் மேலாளர் ரங்கராஜன் வெளியிட மலையாள மொழிபெயர்ப்பாளரும் மலையாள நாடகாசிரியருமான ஸ்டான்லி, நாவலாசிரியர்கள் இளஞ்சேரல், க.வை.பழனிச்சாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.சுப்ரபாரதிமணியன் நைரா  நாவல் அனுபவம் பற்றிப் பேசினார். ஸ்ரீபதி பத்மநாபா, அவைநாயகன், கோவை வானொலி நிலையப் பொறுப்பாளர் தாமரைச்சந்திரன், நாவலாசிரியர்கள் சி.ஆர். ரவீந்திரன், மா.நடராசன், விஜயலட்சுமி சுந்தர்ராஜன். சின்ன சாத்தன், பேராசிரியர் ராம்ராஜ், அனாமிகா   உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நைரா  - சுப்ரபாரதிமணியனின் 13வது   நாவல். ( நைரா- நைஜீரிய  ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது. 

13 நாவல்கள் உட்பட 45க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். என்று  பதிப்புரை குறிப்பு தெரிவிக்கிறது. வெளியீடு : என்சிபிஎச், சென்னை பக்கங்கள் 190, ரூ 150


வெள்ளி, 1 ஜூலை, 2016

காட்டின் பயிர்பச்சை, மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ஜீவன்கள் பற்றி
ஆட்டனத்தியின் கதைப்பதிவுகள் 
                                      சுப்ரபாரதிமணியன்
                                                                காட்டின் பயிர்பச்சை, மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ஜீவன்கள் பற்றி இலக்கிய அவதானங்களை பிலோ இருதயநாத், கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன், முதல் ஆர் எஸ் நாராயணன் , பாமயன் வரைக்கும் கண்டு கொண்டு வருகிறோம். ஆட்டனத்தி அவர்களின் படைப்புகள் கவனம் பெறக்காரணமாக இருந்தது அவரின் காட்டிலாக்கா அனுபவங்களின் எழுத்து வடிவம்தான்.அதையே அவரின் பிரத்யேக தன்மை என்றும் வரையறுத்து விடலாம்.அவரின் முந்தைய நூல்களை விட இந்நூல் அந்த கிரீடத்தினாலேயே மின்னுகிறது என்லாம். அதைத்தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவரிடமும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். அவரின் முந்தையப் படைப்புகளின் மீதான கடும் விமர்சங்களின் வழியே இத்தொகுப்பை அவர் வந்தடைந்திருக்கிறார்.
அவரின் முந்தைய “ வனம்நாவலில் காணப்படும் ஒரு தொன்மத்தை பொதுமையாக்கி இன்றைய சூழலியல் பிரச்சைனைகளின் வடிவமாக்க் கொள்ளலாம். இனக்குழுவொன்றின் கதை அது . விவாசயத்திற்கு  துணைபுரியும் இரு பெண்கள், மகள்கள். தண்ணீர் பாய்ச்சலில் ஏரி உடைந்து போக  மூன்றாம் பெண் மதகாகி நின்று நீர் வழிந்து சேதமாகிறதைக் காக்கிறதையும்  ஒரு சம்சாரிக்கும் இருளச்சிக்குமிடையிலான காதல் உணர்வையும் இணைத்து அந்நாவலில் சொல்லிருந்த ஞாபகம். அவர் காடு “ நாவல் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். “யானை டாக்டரில் பத்துக்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பதைச் சொல்லிக்காட்டியிருக்கிறார். அந்த அளவில் காடு சார்ந்த விபரங்கள், வாழ்வியல் உண்மைகளை நல்லத் தரவுகளாக தன்னுள் கொண்டிருப்பவர்.இக்கதைகளின் ஆதாரமாக அந்தத் தரவுகள் , அனுபவங்கள் அமைந்திருப்பது இக்கதைகள பலமுள்ளதாக்குகிறது.அந்த வகையில் கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தை,  கிணற்றில் விழுந்து விட்ட மயில், காட்டுக்குள் விரட்டப்படும் யானை, நல்ல சினேகபாவத்துடன் உறவாடும் நாய்கள் என்று பலவற்றைக்காட்டுகிறார்
     .கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தையை மீட்டெடுக்கும்பணியில் ஈடுபடும் போது வீட்டிற்கு வந்து தங்கி விட்ட மகளுக்கு அவளின் வாழ்வை மீட்டெடுக்க திடீர் மின்னலும் கிளம்புகிறது. கிணற்றில் விழுந்து விட்ட மயிலை  மீட்டெடுக்கும்பணியில் ஈடுபடும் போது ஒருவனுக்கு இரண்டாம் மனைவியாய் ஒருத்தியும் கிடைத்து விடுகிறாள். யானை வேட்டை என்பது வெவ்வேறு விதமாயும் இருக்கிறது. காட்டுக்குள் யானையை விரட்ட வேண்டியிருக்கிறது. அதையே கும்கியாக்கி  குழந்தை போல் ஆக்கிவிடவும் முடிகிறது.அதற்கான தீனி வேண்டி திரிகிற போதுஅது பிறருக்கு எதிரியாகி விடுகிறது தீபந்தங்கள், துப்பாக்கி வேட்டு,மயக்க ஊசி என்று விரட்ட வேண்டியிருக்கிறது. புறாக்களை வேடிக்கையாக்கும் சூதாட்டத்தில் வரும் பணத்தில்உடன் படாமல் கல்லூரியில் சேர பணம் தேவைப்படும் இளைஞன்  அதை மறுத்து விடுகிற லட்சியங்களும் இதில் கதைகளாக உள்ளன. வாழ்க்கையின் இறுக்கங்கள், திசை  மாறிப்போகும்  அனுபவங்கள் இவற்றிலிருந்து த்ன்னை மீட்க ஆசைப்படுபவன் கிளிகளை வாங்கி பறக்க  விட்டு தன் மனதைக்குறியீடாக்கி  வெளிப்படுத்திக் கொள்கிறான் . “ வெச்ச குறி என்ற அந்தக்கதையின் மையம்தான் பல கதைகளில் ஊடாடி நிற்கிறது.. யானையோ, மயிலோ, பெண்ணோ, நாயோ, முதியவர்களோ விரும்புவதெல்லாம் இந்த ஒரு வகை விடுதலை உனர்வைத்தான். ஆனால் அவை அதை  அடைய எடுக்கும் முயற்சிகள் பல விபரீதங்களாகின்றன.             விடுபூக்கள் “ கதையில் கைவிடப்பட்ட முதியவர்கள் தங்களைத் தற்கொலைக்குள்  அமிழ்த்திக்கொள்வது துயரமானது. எந்தையும்.. “ கதையில் கைவிடப்பட்ட முதியோரைக் காக்க நவ இளைஞனுக்கு ஞானோதயம் கிட்டுவது பாக்கியம்தான். இந்த ஞானோதயம் பல கதாபாத்திரங்களுக்கும் ஏற்படுகிறது. மான் வேட்டையில் புலி “யான ஒருவனின் மனைவி அநியாயமாய் குத்தி சாய்க்கப்படுகிறபோது அந்த வேட்டைக்காரனுக்கு வேட்டை குறித்த வேறு பார்வை கிடைக்கிறது.. பரிகாரமாய் காட்டிற்குச் சென்று மான்கள் ருசிக்கும் உப்பை எங்கும் தூவிவிட்டு வருகிறான்.  யானையின் பார்வையிலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அது அன்பில் மூர்க்கத்தை இழந்து  குழந்தையாகி விடுகிறது.12 பேரைக்கொன்றவன் என்ற பார்வை மீறி அது குழந்தையாகும் அனுபவம் மனிதர்களிடமும் ஏற்றிச் சொல்லப்படவேண்டியதுதான்.
  தினசரி அனுபவங்களிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது. யானையைப் பராமரிக்கும் மாவுத்தன் யானையின் பிரசவம் ஊருக்குப்போயிருக்கும் மனைவியின் சிரமங்கள், பிரசவத்தை நினைவுக்குக் கொண்டு வர மனோத்துவ வைத்தியமாகிறது . இரு பிரசவங்கள். பிரசவிப்பவை நல்ல எண்ணங்களை. “ வெங்கடேசா  “கதையில் அவன் எல்லாம் தெரிந்தவன், இறுக்கமானவன். திடமானவன் . ஆனால் மனைவியின் பொருட்டு  கறி தின்னும் பழக்கத்தை ஒரு நிமிட  யோசிப்பில் மாற்றிக்கொள்வது ஒரு நல்ல அனுபவம். பல செய்திகள் பட்டியல்கள் துருத்தி நிற்பது காட்டுச்செடிகளிடையே தென்படும் களைகளாக இருக்கிறது.
 மிகுந்த சிரமங்களுடன் காட்டுக்குள் விரட்டப்படும் யானைகள் . ஆனால் வேறு யானைகள் தொடர்வண்டிகளில் அடிபட்டு இறந்து போவதும் துயரம்தான். இதை விடத்துயரம் பறவைகளே கதியாக இருப்பவனின் மனவி பறவை நோயால் இறந்து போவது நாராய் நாராய் “ என்ற அக்கதையில் இறந்து போனவளின் தங்கை  எடுக்கும் முடிவு எவ்வளவு சரியானது. வெற்று தியாகங்களை அந்த முடிவு கேள்விக்குறியாக்கி விடுகிறது. நாய்கள் வளர்ப்பில்  அக்கறை கொண்ட அதிகாரி தன் குழந்தையை அதன் பொருட்டே  இழப்பதும் கூட  காற்று வீசும் திசை பற்றிய அறிவு முதல் காட்டுத்தொன்மங்கள் வரை அறிந்த பல சம்சாரிகளைக் காட்டுகிறார்.  இந்த வகையிலானதுதான்.மனித அநுபவங்களை காட்டின் பயிர்பச்சை, மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ஜீவன்களோடு இயைந்து காட்டியிருப்பதில் தனித்துவமான கதைக்களன்களைக் கொண்டிருக்கிறது இத்தொகுப்பு. .