சுப்ரபாரதிமணியன்
சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்:கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
இலக்கியச்சந்திப்பு-49 இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன்
தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி அவர்களின் ‘கருவத்தடி’ கவிதைநூல்
குறித்து செல்வி அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து ஜெயந்தி சங்கர்
படைப்புலகம் குறித்துப் பேசப்பட்டது.
ஜெயந்தி சங்கரின் ‘நெய்தல்’நாவல் குறித்து அவைநாயகன் அவர்களும் ‘வாழ்ந்து பார்க்கலாம் வா’ நாவல் குறித்து இரா.பூபாலனும் மற்றும் அவரின் நான்கு நாவல்கள் குறித்து சுப்ரபாரதிமணியன் அவர்களும் பேசினார்கள் பின் இரவீந்திரபாரதியின் நாவல் ‘காட்டாளி’ குறித்து அன்புசிவா பேசினார் தொடர்ந்து ஏற்புரை வழங்கி சிறப்பித்தார் இரவீந்திரபாரதி.
அடுத்து கவிஞர் வேல்கண்ணனின் ‘இசைக்காத இசைக்குறிப்பு’ கவிதைநூல் குறித்து மதுரை சரவணன் கட்டுரை வாசித்தார் வேல்கண்ணன் ஏற்புரை வழங்கினார்.

சுப்ரபாரதிமணியனின் பேச்சின் ஒரு பகுதி :
தமிழகச்சூழலில் அடையாள அரசியல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் சூழலில் அடையாள அரசியல் என்பது பற்றிய வரையறை முற்றிலும் வேறுபட்டது. சிங்கப்பூரில் பிறந்து வாழ்பவரா இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவரா என்பதே அவ்விவாதம். வந்தேறிகள், அல்லது குடியேறியவர்களின் இலக்கியம் என்ற பிரிவே இதை ஒட்டி கிளப்ப்ப்பட்டிருக்கிறது. ஜெயந்தி சங்கரின் நாவல்களில் மையமாக சிங்க்ப்பூரில் பிறந்து வாழ்பவர்கள், இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவர்கள் பற்றிய அனுபவங்களாகவே அமைத்திருக்கிறார். அவரின் அய்ந்து நாவல்கள் தொகுக்கப்பட்டு 1100 பக்கங்களில் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
“ திரிந்தலையும் திணைகள்”: : வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களி ன் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கீயத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும் சாதாரண சமூகங்களின் படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல் சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கன்வுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.