தீக்கதிர் செய்தி
திருப்பூர், ஜூலை 7-திருப்பூரில் பதியம் இலக்கிய அமைப்பு சார்பில் மூன்று கவிதை நூல்களின் விமர்சன அறிமுகக்கூட்டம் ஞாயிறன்றுநடைபெற்றது.திருப்பூர் கே.ஆர்.சி.சிட்டி சென்டரில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
பதியம் சார்பில் உமாபாரதி வரவேற்றார். முன்னதாக பல்லடம் நறுந்தேன் கலைக் குழுவினரின், அழிந்துவரும்தமிழ்மொழி குறித்துபறை இசையுடன் கூடிய பாரதிதாசனின்கவிதை நாடகம் நிகழ்த்தப்பட்டது. கவிஞர்கள்சுரேஷ் கருணாகரன், இளஞாயிறு, சிவதாசன்,ஜோதி, ஆசிரியை சிவகாமி, கனல்மதி, அருணாசலம் ஆகியோர் கவிதை வாசித்தனர்.சென்னையைச் சேர்ந்தகவிஞர் தமிழ்நேயனின் சூனியத்தில் துளிர்க்கும் உயிர் கவிதை நூலை கவிஞர் உமர்கயான் அறிமுகப்படுத்தி விமர்சித்துப் பேசினார்.
அரியலூரைச் சார்ந்த கவிஞர் அரங்கன் தமிழின் மனம் காட்டிக்குறிப்பு கவிதைநூலை கவிஞர் சூரியகுமார்அறிமுகப்படுத்தியும், தஞ்சாவூரைச் சார்ந்த கவிஞர் பன். இறையின்பருந்துகளைப் போலானதேன் சிட்டுகள் கவிதைநூலை கவிஞர் இளஞ்சேரல் அறிமுகப்படுத்தியும் உரையாற்றினர். இறுதியாக கவிஞர்கள்பன்.இறை, தமிழ்நேயன்,அரங்கன் தமிழ் ஆகியோர் ஏற்புரையாற்றினர். நிறைவாக நிகழ்வைஒருங்கிணைத்திருந்த பாரதிவாசன் நன்றி கூறினார்.