சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 20 ஆகஸ்ட், 2012

NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

மனக்குகை ஓவியங்கள் :சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

இரு சம்பவங்கள்
------------------------------------

1. சகுனி கோபப்பட்டதாக பாரதத்தில் சொல்லப்படவில்லை. பொதுபுத்தியில் சகுனி மோசமானவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளான்…. இன்றைய ஆப்கானிஸ்தான் அன்றைய காந்தாரம்., காந்தாரி என்பவள் அவர்களுக்கு குலதெயவம். பிதா மகன் பீஸ்மர். பீதாம்பரங்களையும் வைர வைடூரியங்களையும் காட்டி குருடனுக்கு காந்தாரியை இல்லத்தரசியாக்கினான்..அவர்கள் குல தெயவ வழிபாட்டில் உறுதியானவர்கள், ஆகவே ஆட்டை நிறுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள். இதை அறிந்த பிதாமகன் தன்னுடைய பெரும் படையை அனுப்பி காந்தார நாட்டு இளவரசர்கள் நூறு பேரையும் கைது செய்து தலை நகரத்துக்கு அழைத்து வரச் சொன்னான் பீஸ்மர் என்கிற பிதாமகன். அவர்கள் நூறு பேருக்கு நூறு சோற்றுப் பருக்கை, நூறு சொட்டுத் தண்ணீர்,மட்டுமே என்று கட்டளை. அவர்கள் நூறு பேரும் சேர்ந்து ஒற்றுமையாக முடிவெடுத்து ஒரு பருக்கைச் சோறில், ஒரு சொட்டுத் தண்ணீரில் நாம் நூறு பேரும் வாழ முடியாது. யாரோ ஒருவனை தயார் செய்ய வேண்டும் இளையவனான சகுனியை வளர்த்து எடுத்தார்கள்.

2. சமீபத்தில் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விழாவில்
“ துச்சாதனன் வதம் “ பார்த்தேன். ஒருமுறை கதகளி பாருங்கள் அதன் தாத்பரியம் புரியும் தோள் கண்டார் தோளே கண்டார் என்பது இதிகாசம். சுயவரம் நடக்கிறது இதில் இராவணன் பங்கு பெறுகிறான். சுயவரம் தொடங்குகிற வேளையில் இலங்கை தலைநகரில் தீப்பற்றி எரிவதாக ஒரு பிராமணன் கதறுகிறான்,இராமன் வில்லை ஒடிக்கிறான். சீதையை மணக்கிறான். கானகம் செல்கிறார்கள். இராவணன் சீதையைச் சிறை எடுக்கிறான். சீதை வரம் வாங்கியவள்.தனக்குப் பிடிக்காத எவனும் தன்னைத் தொட்டால்… இராமனுக்கு சந்தேகம் தீயில் இறங்கு என்று… இந்த இரண்டு சம்பவங்களையும் எழுத்தாளர்கள், உள்ளுறை, படைப்பு என்பதை
வைத்துப் பார்த்தால் இச்சம்பவங்களின் அடிப்படை புரியும்.
இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல. முன்னுரையே புத்தகத்தை விட அதிகமாக இருந்தால் “ கவிதைக்குப் பொய் அழகு ” சில பேரரசுகள் சொல்வர்.. எனவே உள்ளிருப்பதைப்பற்றி அதிகம் எழுதுவது கூடாதுதான்.எழுத்தாளர்கள் பற்றிய அபிப்பிராயங்களை, புத்தக அறிமுகங்களை சுப்ரபாரதிமணியன் மனக்குகை ஓவியங்கள் என்று இதில் தொகுத்துள்ளார். அவருடைய அஸ்திவாரமே விளிம்பு நிலை மக்கள், சுமங்கலித்திட்டம், குழந்தைத் தொழிலாளர் உழைப்பு, நதி மாசுபடல் போன்றவை. அதன் மீதான எழுத்தில் அக்கறை கொண்டவர்.. நிறையப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களை தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நிறைவான எழுத்தாளர்களைப் பற்றி மனக்குகை ஓவியங்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் விரிகின்றன.தியானத்தில் உட்கார்ந்தால் முதலில் வருவது வண்ணங்களே. அது போல் எழுத்தாளன் தனக்கென்று வண்ணங்களை வைத்து ஓவியமா, காவியமா என்பதைப் பற்றிய புத்தகம்.
இதில் தலித் இலக்கிய முன்னோடி சிவராம் கரந்த் முதல் சிவகாமி வரை தலித் படைப்புகளில் மேலோங்கிய தன் வரலாறு பற்றிச் சொல்லப்படுகிறது. பழகிய நினைவுகளின் அடிப்படையில் நகுலன், சுந்தரராமசாமி, சுஜாதா பற்றி உள்ளன. கவிதை சுதந்திரமும் சுய அடையாளமும் என்று இளம் கவிஞர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மூத்த கவிஞர்களின் படிமங்கள் என்று சிற்பியும், வைரமுத்துவும் தென்படுகிறார்கள்..தங்கர்பச்சான் முதற்கொண்டு பலரின் திரைப்பட காமிரா மொழி பேசப்படுகிறது. பசுமை மனிதர்களும் புத்தக மனிதர்களும் காட்டப்படுகிறார்கள். குழந்தை இலக்கியம் கோடிடப்படுகிறது. பாரதியும், புதுமைப்பித்தனும், தகழியும் யதார்த்தப்படிமங்களாக்கப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் நாவலாசிரியர் குழந்தைவேலுவின் படைப்புகள் பற்றி எழுதியுள்ளார்.
இன்று பரபரப்பான உலகில் சில எழுத்தாளர்கள் மட்டுமே சாகாவரம் பெற்றவற்றை எழுத முடிகிறது. அது போல எழுத்தாளர்கள் பற்றின அபிப்பிராயங்கள்.. இதில். எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளனுக்கே புரியும். இதுவே கற்றாரே கற்றாரைக் காமுறுவர் என்று சொலவடை..
கலைஞர்களையும் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்கட்சிகள் இலக்கியவாதிகளை மதிப்பதில்லை.கட்சிகளே உள்ளூர் இலக்கியவாதிகளை மதிக்காது உயிருடன் இருந்த காலத்தில் பாரதியை மதிக்காத உலகம். அவரை வைத்து சில அர்சியல் கட்சிகள் பிழைப்பு நட்த்துகிறார்கள்.
இலக்கியம் என்பது அரசியல், ஆன்மீகம்,, மதம் போன்றவற்றைத் தாண்டியது என்பது பொது புத்தியில் புரிய வேண்டும். இலக்கியம், இலக்கணம், இலட்சணம் என்பது வேறு வேறு. இலட்சணம் என்பதை இலட்சியம் குறிக்கோள் என்று எடுத்து கொள்ள வேண்டும். இலக்கணப்பிழை, இலக்கியப்பிழை இருக்கலாம். ஆனால் இலட்சியப் பிழை இருக்கின்ற எழுத்து அல்லது கலை கால் வெள்ளத்தில் நிற்காது என்பது வரலாறு. காலவெள்ளதில் நிலைக்கிறவர்களை இதில் மனக்குகை ஓவியங்களாக்கியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
( மனக்குகை ஓவியங்கள்: சுப்ரபாரதிமணீயன், என்சிபிஎச்,, சென்னை ரூ50)

-சாமக்கோடாங்கி ரவி