சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 28 ஜனவரி, 2024
New book . ncbh publications
சுவர்கள் நாவல்- மாற்கு /
சுப்ர பாரதி மணியன்
கிறிஸ்தவத்தில் கல்லறைகளில் தீண்டாமை இருக்கிறது தீண்டாமை சுவர்கள் கல்லறைகளில் இருந்து மக்களை பிரிக்கின்றன. ஆதிக்க சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஓரிடத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு இடத்திலும் கல்லறை இருக்கிறது என்ற நிலைமை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை ஆனால் தீண்டாமை பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது இதை கிறிஸ்தவ தலைவர்களால் தடுக்க முடியவில்லை தீண்டாமை என்பது இந்தியாவை பொறுத்த அளவில் சமயங்களைக் கடந்த சமூக பிரச்சனையாக மாறி உள்ளது என்பது எதார்த்தம். தலித் ஒருவர் கிறிஸ்துவராக மாறினால் அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டார் எனவே அவரை சமமாக மதிக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் நினைப்பதில்லை. மத மாற்றத்திற்கு முன்பு அவரை எப்படி நடத்தியதோ அப்படியே தான் நடத்துகிறது என்ற மாற்கு அவர்களுடைய எண்ணங்கள் நாவல் வடிவங்களாக கிறிஸ்துவ சமுதாயத்தில் தலித் மக்கள் படும் சிரமங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவத்தில் எந்த விதத்தில் தீண்டாமை இருந்தாலும் தவறுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலத்திற்கு காலம் புது வடிவங்களில் அது வெளிப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அவர் சொல்கிறார். இந்த விஷயம் சாவிலும் தொடர்கிறது ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கல்லறைகளில் பக்கத்தில் தலித் கிறிஸ்தவர்கள் புதைக்கப்படக்கூடாது என்பதற்காக சுவரைக்கட்டி பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த தீண்டாமையை பற்றி எழுதப்பட்ட நாவல் தான் சுவர்கள் என்பதாகும். இறந்த பின்பு கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இந்த பாகுபாடு தேவையா கல்லறையில் சமத்துவம் இருக்கிறதா என்பதை பற்றி அவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். மாற்கு அவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தைப் பற்றிய விமர்சனங்களை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவருடைய புலனாய்வு நூல்களும் தன் வரலாற்று நூல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இதில் வருகிற செல்வம் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஆகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அங்க இருக்கிற தீண்டாமையும் பாகுபாடும் அவரை அங்கிருந்து வெளியேறு செய்கிறதும் அவர் மீது காவல்துறையின் வன்முறையும் ஏவப்படுகிறது அவர் தன்னுடைய உயிரையும் இழக்க வேண்டி இருக்கிறது இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் மூலம் அவர் சொல்லும் குரலை நாம் கேட்க வேண்டும் “ செத்த பிறகும் மேரிக்கு பக்கத்தில் வாழ முடியாத இப்ப நிலைதான் சாமி தெரியுது உயர்ந்த சாதிக்கு தனி கல்லறை. அரிசனங்களுக்கு தனி கல்லறை ..என்ன சாமி இது சாமி.. செத்த பிறகு கூட நான் என் மேரிக்கு பக்கத்தில் இருக்கக் கூடாதா ..எதற்கு சாமி இது தனித்தனி கல்லறையா நான் செத்த பிறகு என் மேரிக்கு பக்கத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று அதில் வருகிற கதாபாத்திரங்கள் ஒன்றை கதறுகிறது ஆதிக்க சாதி கல்லறைக்கு பக்கத்தில் புதைக்க முயற்சி செய்தால் கலகம் வரும். சாதி கலவரத்திற்கு வித்திட்டதாக அமையும் என்பதை இதில் வருகின்ற பல சம்பவங்கள் சொல்கின்றன. “ என்னடா இவன் எப்படி இங்கே வந்தான்னு தானே நினைக்கிறீங்க நமது சாதியை மதிப்ப நான் சாமியாரா போயி உயர்த்துவேன்னு நினைச்சீங்க ஆனா நான் அங்கு இருந்தா நமது சாதியின் மதிப்பு அவ்வளவு உயர்த்த முடியாது வெளியே வந்தாத்தான் அதிகம் உயர்த்த முடியும் என்று நினைத்தேன் அதனால் வெளியே வந்துட்டேன் “ என்று செல்வம் என்ற ஒரு மனிதனின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் அந்த குரல் பலவீனம் ஆகிப்போகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கும் சுவற்றை இடிக்கிறார்கள். அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது. சமமான கல்லறையும் வேண்டும் தடுப்பு சுவர்கள் இருக்கக்கூடாது என்று போராடும் விடுதலை குழுக்கள் மதவாதிகளால் மற்றும் காவல்துறையால் அடக்கப்படுகிறார்கள்.” விளைச்சலில் எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சமமாக அறுவடை செய்ய வேண்டும் இருப்பதை பரிந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டு முறை விவசாயம் செய்து அதை அடுத்த தலைமுறைக்குஅறிவிக்க வேண்டும் என்ற கனவை கூட இந்த நாவல் வருகிற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. சாதிக் கொடுமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கிறிஸ்துவத்துக்குள் கருப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பு தினங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த சுவர்கள் நாவல் சொல்லுகிறது
ரூபாய் 200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு 0