சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 ஜூலை, 2022
To, Chief Minister,
Tamilnadu
அய்யா வணக்கம்
என் மின்னஞ்சல் தங்களுக்கு கீழ்க்கண்டவாறு இருந்தது 15/6/22, 16/6/22 தேதிகளில் அனுப்பினேன்.
0
நான் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டு விட்டதாக நண்பர்கள் தெரிவித்தார்கள் நான் சென்ற சிலமுறை நினைவகம் பூட்டிக் கிடந்ததால் பார்க்க இயலவில்லை .
படைப்பிலக்கியவாதிகளையும் தமிழறிஞர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
0
நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
0
பழைய மின்னஞ்சல் கீழே:
திருப்பூர் குமரன் நினைவிடம் மறு சீரமைப்பு செய்து திறப்பு விழா நடத்திய போது அதில் தமிழறிஞர்கள் என்று தலைப்பிட்டு மூத்த தமிழறிஞர்கள் என்று மாத ௨தவி தொகை பெறுபவர்கள் படங்களை திறந்து வைத்திருக்கிறார்கள் . ( இவர்களில் 90 சதவீதம் போலிகள். மாதவருமானம்ரூ 6, 000 என்று போலிச் சான்றிதழ் வாங்கிகொடுத்து உதவித்தொகை பெறும் இவர்களுக்கு வருடத்திற்கு 50,000 வழங்கும் தமிழக அரசு இந்தப் போலிகளை அடையாளம் கண்டு நீக்கினால் கணிசமானத் தொகை அரசு கஜானாவில் மிஞ்சும் )
மாத ௨தவி தொகை பெறுபவர்கள் தமிழறிஞர் கள் என்று முத்திரை குத்தி திருப்பூரில் படத்திறப்பு அரசு சார்பில் நடந்துள்ளது.
படைப்பிலக்கியவாதிகளை அவமானம் செய்யும் தமிழக அரசின் போக்கு வருத்தம் அளிக்கிறது.
படைப்பிலக்கிய வாதிகள் தமிழறிஞர்கள் இல்லையா
தமிழ்ச்செம்மல் உட்பட தமிழக அரசின் பல்வேறு விருதுகள் பெற்றாலும் அவர்கள் தமிழறிஞர்கள் இல்லையா.. தமிழ் வளர்ச்சித்துறை, தகவல் செய்தித் துறை என்று பலரிடம் தொடபு கொண்டு சொன்னேன்.
மாத ௨தவி தொகை பெறுபவர்கள் மட்டுமே தமிழறிஞர்களா. இதை 15, 16/6/22 தேதிகளில் மின்னஞ்சல் மூலமாக உயர்திரு தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்சித்துறை இயக்குனர் சென்னை, மாவட்ட ஆட்சியாளர் என பலருக்கு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை
சிபி சி அய் டி போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் தொலைபேசியில் என்னிடம் பேசினார்: நீங்க யாரு என்ன உங்க கோரிக்கை என்று விபரங்கள் கேட்டார்,.அவ்வளவுதான்
மாத ௨தவி தொகை பெறுபவர்கள் மட்டுமே தமிழறிஞர்கள் என்றால்
எழுத்தாளர்கள் மற்றும் பெரிய விருதாளர்கள் கூட தமிழரிஞர்கள் இல்லையா என்ற வேதனை உள்ளது.
சுப்ரபாரதிமணியன், திருப்பூர் .. subrabharathi@gmial.com/9486101003 8/7/22
Pl see my face book
Kanavu subrabharathimanian tirupur
0
16/6, பிற்பகல் 2:42] subrabharathi: எல்லா மாவட்டங்களிலும் இப்படி அரசு செய்தி விளம்பரம் துறை செய்திருக்கிறார் கள். தமிழறிஞர் கள் என்று போட்டுவிட்டு மாத ௨தவித்தொகை பெறுபவர்கள் படங்கள் வைத்திருப்பது நல்லது அல்லவே அய்யா
[16/6, பிற்பகல் 2:42] subrabharathi: வணக்கம். நலம் தானே. திருப்பூர் குமரன் சீரமைப்பு செய்யப்பட்ட நினைவகத்தில் தமிழறிஞர் கள் புகைப்படங்களுடன் தமிழ் ச் செம்மல் விருது பெற்ற வர்கள் படங்களும் இடம் பெற்றால் நன்றாக இருக்குமமே.கவனியுங்கள் அய்யா சுப்ரபாரதிமணியன்
[16/6, பிற்பகல் 2:42] subrabharathi: வணக்கம். மாத ௨தவி தொகை பெறுபவர்கள் தமிழறிஞர் கள் என்று முத்திரை குத்தி திருப்பூரில் படத்திறப்பு நாளைக்கு அரசு சார்பில் நடக்கின்றது. படைப்பிலக்கிய வாதிகளை அவமானம் செய்யும் தமிழக அரசின் போக்கு வருத்தம் அளிக்கிறது. சுப்ரபாரதிமணியன்
[16/6, பிற்பகல் 2:42] subrabharathi: படைப்பிலக்கிய வாதிகள் தமிழறிஞர்கள் இல்லை யா