சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 ஜூலை, 2022
தூரிகை சின்னராஜ் / சுப்ரபாதிமணியன் திருப்பூர்
” தமிழ் புகுந்த நெஞ்சில் தளர்வில்லை
உடலுக்கும் முதுமையில்லை”
என்று பாவலரேறு கூறிய வார்த்தைகள் தான் நண்பர் தூரிகை சின்னராஜ் அவர்களை பார்க்கிற போதெல்லாம் தோன்றும். தொடர்ந்து பல்வேறு துறைகளில் பயணப்பட்டு வருபவர் .பன்முகப் பார்வை கொண்ட படைப்பாளி .அடிப்படையில் ஓவியமும் கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் குழந்தை இலக்கியமும் இவரின் அக்கறையாய் இருந்தாலும். பறவைவியல் கல்வியியல், கல்வியாளர்கள் ஓவியர்கள் இவர்களை ஒருங்கிணைத்தல் கண்காட்சிகளை நடத்துதல் என்று பல்வேறு பணிகளில் தொடர்ந்து ஈடுபவர்.
பத்திரிக்கைத்துறையில் சின்ன ராஜ் அவர்கள் பல்வேறு இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். ஆனால் அப்போது எல்லாம் அவர் எழுதிய கட்டுரைகள் புத்தகங்களாகப் படாமல் போய்விட்டன.. அவ்வாறு தொகுக்கப்படாமல் புத்தக வடிவமாக வெளிவராமல் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரிடம் உள்ள.ன அவர் நல்ல பேச்சாளர் கூட. சுவாரஸ்யமாகவும் விரைவாகவும் எல்லா விஷயங்களையும் கொட்டித் தீர்க்கக் கூடியவர். ஆனால் அவ்வளவு விஷயங்களையும் அவர் எழுத்தில் கொண்டு வரவில்லை அல்லது எழுத்தில் கொண்டு வந்தவற்றை புத்தகம் வடிவமாக்கவில்லை என்பது பெரிய குறையாக தான் இருக்கிறது. இந்த குறையை தீர்க்க அவர் முயற்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக அவரைக் கேட்டுக் கொண்டேன் இப்போதுதான் அவர் அதற்கான முயற்சிகளில் எடுத்திருக்கிறார். காரணம் தொடர்ந்த செயல்பாடுகளில் அவருக்கு நேரமின்மை, பிறகு எழுதிய விஷயங்களைத் தாண்டி இன்னும் எழுதப்பட வேண்டிய விஷயங்கள், இன்னும் பேசப்பட வேண்டிய விஷயங்கள் என்று மனதில் தொடர்ந்து வைர சுரங்கம் ஒன்றை கட்டமைத்துக் கொண்டிருக்கிறவர். அவர் பேசுகிற விஷயங்களை எல்லாம் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்றால் நூறு புத்தகங்கள் வெளிவர வேண்டி இருக்கும். இந்த காரணங்களால் அவரிடம் ஏற்பட்ட சுணக்கம் புத்தக வடிவில் அவருடைய படைப்புகளை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. கல்வித்துறை சார்ந்த தொடர்ந்து செயல்படுபவர் என்ற வகையில் கல்வித் துறையில் இருந்து தரப்படும் வேலைப்பளுவும் மன அழுத்தமும் கூட இப்படி புத்தகங்கள் கொண்டு வரும் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தன. அவருக்கு கல்வித்துறையில் இருந்து கொண்டு வேறு முயற்சிகளில் ஈடுபடுவது தான் உவப்பாக இருந்திருக்கிறது காரணம் குழந்தைகளோடு பழகுதல் கல்வித்துறை சார்ந்த சிந்தனைகளோடு தன் மனதை வைத்துக் கொண்டு செயல்படுதல் என்பது தான் அவருக்கு லட்சியமாக இருந்திருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் அவர்களிடமிருந்து சிறந்த ஓவியர்களை, சிறந்த எழுத்தாளர்களை, சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவது தான் அவரின் முதல் நிலை அக்கறையாக இருக்கிறது என்பதால் தான் இந்த புத்தகம் முயற்சிகள் எல்லாம் மிகத் தாமதமாகிவிட்டன. ஆனால் அவரின் முயற்சிகள் காற்றில் கலந்த பேரோசையாக இருந்தாலும் அதை எழுத்து வடிவில், புத்தக நோக்கில்தொகுக்கப்பட வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப நான் வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். அதன் சில முயற்சிகளாக இவ்வாண்டில் சில தொகுப்புகள் வெளி வருகின்றன .அவருடைய ஓவிய உலகம் சம்பந்தமாகவும், உலக ஓவியர்கள் சம்பந்தமாகவும்., புகைப்படக்கலை சம்பந்தமாகவும் ,பறவையில் சம்பந்தமாகவும் என்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த புத்தக வரிசை இப்படி இருக்கப் போகிறது என்ற யோசிப்பில் அப்படித்தான் இந்த “ மண்ணும் மாண்பும் ”என்ற கட்டுரை தோப்பில் தொகுப்பில் பல மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு ஆளுமைகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். வெறும் செய்திகளாக அவர்கள் விரிவதில்லை அந்த ஆளுமைகள் சார்ந்த இடங்களுக்கும் வாழ்ந்த இடத்திற்ம் சென்று அனுபவங்களை திரட்டி தந்திருக்கிறார். அவற்றோடு தன்னுடைய சுயமான சிந்தனைகள் அந்த ஆளுமைகளை விமர்சிக்க நோக்கத்திலும் அறிமுகப்படுத்துகிற நோக்கிலும் வெளிபட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது வெறும் தகவல்கள், தரவுகள் என்பது மூன்றாம் நான்காம் பட்சமாகி அனுபவ ரீதியாக அந்த ஆளுமைகளை பற்றிய, அந்த இடங்களைப் பற்றிய செய்திகளை விரிவாக சொல்வதில் அக்கறை கொண்டிருக்கிறார் தூரிகை சின்ன ராஜ் அவர்களது . இந்த வகை எழுத்து என்பது பத்திரிகைகளுக்காக எழுதப்பட்டதாக இருந்தாலும், எளிமையான வெகுஜன மொழியில் இருந்தாலும் அதைத் தாண்டி இலக்கிய அம்சமான தெறிப்புகள் கட்டுரைகள் முழுவதும் காணக் கிடைக்கின்றன. தொடர்ந்து தமிழோடு இணைந்து இணங்கி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனின் சொல்லாடலிலும் உரையாடலிலும் தெறிக்கும் இலக்கிய அனுபவங்கள் இந்த கட்டுரைகளில் வந்திருக்கின்றன .இந்த கட்டுரைளை வெறுமனே தட்டையாகவும் ஒரு துறை சார்ந்த விஷயமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பன்முகத்தன்மையும் பல துறையில் சார்ந்த தரவுகளின் சேகரிப்பும் அனுபவ ரீதியான மொழியிலும் இந்த கட்டுரைகளுக்குள் இருக்கின்றன பலாப்பழத்தை சுத்தம் செய்து தேனில் முக்கி சாப்பிடுவதைப் போன்ற அருமையான அனுபவம் இது அல்லது நிலத்துக்கடியில் பல அடிகள் தோண்டி நல்ல கனிமவளத்தை கண்டுபிடிப்பது போலவும், வைர தங்க சுரங்குகளில் இருந்து துணுக்குகளை பெறுவது போலவும் சிறந்த முயற்சிகள் இவை, இந்த முயற்சிகளுக்கு ஈடாக அவரையே கூடச் சொல்லலாம், அவரது உரைகளைச் சொல்லலாம். அந்த வகை உரைகள் காற்றில் கலந்த பேரோசையாக கலந்து விட்டன. அவற்றையெல்லாம் கூட இப்படி நூலாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவையெல்லாம் பல சமயங்களில் காற்றில் கலந்து சாதாரணமாகி விடும் அல்லது தொலைந்து போய்விடும். புத்தகங்கள் போன்ற பதிவுகள் மூலமாக அவை கல் மீது எழுதப்படும் அல்லது பொறிக்கப்படும் எழுத்து என்றாகிவிடும் .அந்த வகையில் பல துறைகள் சார்ந்த தன் அனுபவங்களை தூரிகை சின்னராஜ் அவர்கள் இன்னும் தாமதம் செய்யாமல் புத்தக வடிவமாகி பதிவு செய்ய வேண்டும் அப்போதுதான் அவருடைய ஆளுமையின் முழு தன்மை வெளிப்படும். அவருடைய ஆளுமையின் முழு தன்மை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கும் ஓவிய உலகிற்கும் கல்வித்துறைக்கும் அவசியமாகிறது. புதிய தலைமுறைகளுக்கு கலங்கரை விளக்கமாகவும் வழிகாட்டியாகவும் அந்த நூல்கள் அமையும் அந்த வகையில் இதன் முதல் படியாக சில நூல்கள் இந்த ஆண்டில் வருவது மகிழ்ச்சி தருகிறது. நண்பர் தன்னுடைய முயற்சிகளின் வெளிப்பாடாக இந்த நூல்களை தொடர்ந்து கொண்டு வர வேண்டும்
வணிகம் தவிர்த்த மனிதம் நோக்கிப் பயணப்பட்டு தன் வாழ்க்கையை லட்சியப் பாதையென நகர்த்தும் நண்பருக்காக நான் பெருமைப்படுகிறேன்
சுப்ரபாதிமணியன் திருப்பூர்