சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 8 நவம்பர், 2019


பாரதியார் பல்கலைக்கழக உரை 
கதிர்பாரதியின் கவிதைகள் மனதுக்கு நெருக்கமாக.... சுப்ரபாரதிமணியன்

         சமூகம் பற்றிய அக்கறையை கொண்டிருக்கும் கவிதைகளை நல்ல கவிதைகள் என்று நான் எப்போதும் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த அக்கறை வெளிப்படையானதாக இல்லாமல் பூடகமாக,,  உள்ளீடு கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த வகையில் கவிஞனின் சமூக பொறுப்பு மிக்க எண்ணமே தீவிரமான கவிதைக்கு வித்திடும் என்று நம்புகிறவன் நான். சமகால உணர்வுகள் தரும் அனுபவங்களாக ., இன்னும்  எனக்கு நெருக்கமாக... நான் அப்படித்தான் கதிர் பாரதியின் கவிதைகள் எனக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றன

 இடதுசாரி கொள்கை பற்றும் விவசாய வாழ்வும் பின்னணியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்ற அவர் பற்றிய குறிப்புகள் எனக்கு இன்னும் உவப்பானதாக இருந்து. அவர் கவிதைகளை தொடர்ந்து வாசிக்க ஏதுவாகியிருக்கிறது .அதேசமயம் சுருக்கமாகவும் தெளிவாகவும் கவிதைக்கு அதில் இருக்கிற ஒரு வேகத்தையும் தீவிரத்தையும் அவரின் இயல்பான கவிதை மொழியும் அரசியல் பார்வையும் தந்து விடுவது ஒரு நல்ல விஷயம் .ஒரு கவிதை

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு .
அவனிடம் நெடுநாட்களாக சிரிப்பு ஒன்று இருந்து வருகிறது.
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அதை உபயோகித்து என்னவெல்லாமோ செய்துவிடுகிறான்.
முதலில் ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்தான்
அது கைவிடப்பட்ட வீடொன்றுக்கு விளக்கேற்றுவதாக அமைந்தது.
பிறகு புறாவொன்றை கூண்டிலிருந்து திறந்துவிட்டு
அதன் உரிமையாளரோடு சமாதானம் செய்வித்தான்
அது சிறுமியின் சிராய்ப்புக்கு மருந்திடுவதற்கு ஒப்புமை கூறப்பட்டது.
பூர்விகச் சொத்துக்காக ரத்தவெறிகொண்ட பங்காளிகளிடையே
மிதக்கும் இலவம்பஞ்சைப் போல நுழைந்த அவன் சிரிப்பு
வல்லூறுவிடமிருந்து கோழிக்குஞ்சை மீட்பதற்கு உவமையானது.
வலி சுமந்து பாரமிழுக்கும் வண்டிமாட்டின் கழுத்தை
ஆசுவாசப்படுத்தி அவன் சிரித்தது
கயவர்களால் வல்லாங்குக்குள்ளான காதலியைத் தோள் சாய்த்து
ஆறுதல் தரும் காதலனைப் போன்றிருந்தது.
புகை வீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடுவதாக
மூர்ச்சையுற்ற கர்ப்பிணிக்கு விசிறிவிடுவதாக
அவ்வப்போது தோற்றம் கொள்ளும் அந்தச் சிரிப்பில்
திக்கற்ற அகதிக்கு தாய்நாட்டைத் தரும் கரிசனமும்
வறிய யாசகனுக்கு விருந்துண்டு கிறங்கும் பாக்கியமும்
சுடர்ந்தபோது நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன்.
சமீபத்தில்,
இலவச வேட்டி சேலை நெரிசலில் இறந்தவனின்
மரணப் பந்தலில் இடிஇடியென அவன் சிரித்தது மட்டும்
துப்பாக்கிக்கு ரவை நிரப்பியதைப் போலானது.
(பக்கம்: 52)
அவரின் கவிதைகளில் பெரும்பாலும் எதார்த்த வாழ்க்கை சம்பவங்களில் மீது எழுப்பப்பபட்டவையாக இருக்கின்றன.  வெறும் எதார்த்தத்தை சொல்வது வெறுமையை கொண்டு வந்துவிடும். அதில் மொழிசார்ந்த ஒரு கட்டமைப்பும் அணுகுமுறையும் கவிதை வாசிப்புக்கான வசீகரத்தை கதிர்பாரதி கவிதைகள்  தருகின்றன எனச் சொல்லலாம் . புனைவின் வழியாக  கதிர்பாரதி  சமூக நடப்பியல் சொல்கிறபோது  அது பல சமயங்களில் அரசியல் கவிதையாகவும் பல சமயங்களில்  படிமங்கள் ஆகவும்  ஒரு கூடுதல்  விசயம் ஆவது உள்ளது. இசையும்  கவிஞனும் படைப்பாளியும்  ஏதாவதொரு உறவை மையமாகக் கொண்டு இருப்பதாலேயே  அவன் கவிதையிலும் வேறு படைப்பின் முயற்சியிலும்  தன்னை முன்னிறுத்தி கொள்ள முடியும் அப்படித்தான்  கதிர்பாரதி தன் கவிதைகளைக் கட்டமைக்கிறார் . இன்றைய அரசியல் சமூக நிலைமைகளை  கண்டுகொண்டு  அதில் தன்னுடைய கருத்துக்களை வைத்து சொல்கிறபோது பல சமயங்களில்  கிண்டல் வந்துவிடுகிறது . கவிதை எந்த இலக்கை நோக்கி செல்கிறது என்று அவர் தீர்மானித்து விடுவதும் கூட இப்படித்தான்  மதுக்கூடங்கள்  என்று ஒரு கவிதை

மதுக்கூடங்களோடு புழுங்குதல்
சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துணை லகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது.
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது
அங்கு நுரைபூத்துத் ததும்பிக் கொண்டிருக்கும் சொற்களின்மீது
இடித்துக் கொள்ளாமல் நுழைதல் வேண்டும்.
உங்கள் இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன் பின் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதி உன்னத அனுபவமல்லவே.
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே சிறந்த தொடக்கம்.
உயிர்த் திரவமெனப் பூரிக்கும் மதுவில்
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுங்கள்.
ஒவ்வொர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழலும்
எதனோடு ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை.
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பது
அடடா... எவ்வாறு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம்.
மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை குமட்டலெடுக்கத் தொடங்கும்.
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டு விட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல்... இன்றும் ஒரேயொரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிப்பெரும் விசும்பலில்
மதுக்கூடமே திரும்பத் தொடங்கிவிடும்.
..கதிர்பாரதி சொல்லும் விஷயங்களில் ஒரு தனித்துவம் இருக்கிறது அந்த சொல் முறையில்  குறிப்பிடத்தக்க திசை இருக்கிறது.  எதார்த்தமும் புனைவும்  இறுக்கமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது . துயருறும்  வசனங்களுடன்   அவை ஓடிக்கொண்டே இருக்கின்றன , ஆமாம் ஓடிக் கொண்டும் வருகிறார்கள் மனிதர்கள் .  பல கவிதைகள்  சம்பவங்களையும் கதைகளும் கொண்டு இருக்கிறது.  இவையெல்லாம் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறு சிறு இழப்பு வலியை சொல்கின்றன.  அவற்றினூடே சொல்லப்படாத வாழ்வின் பல சம்பவங்களை கதிர்பாரதி நிவைவுபடுத்திக் கொண்டே போகிறார். இந்த நினைவூட்டல் அக்கறைதான் கவிதைக்கு இன்னும் மதிப்பை சேர்க்கிறது சொற்களின் அசைவாக  இல்லாமல்  உலகில் அர்த்தம் மிக்க கணங்களை கொண்டிருப்பது  நெருக்கமான ஒரு உறவை அவருடன் வைத்துக் கொள்ள உதவுகிறது . நகர வாழ்வின் நெருக்கடிகளை ஒருபுறத்தில் காட்டுகிறார் என்றால்  அடுத்த புறம் கிராம வாழ்வின் அசலான அனுபவங்களையும் பதிவு செய்கிறார்  .அவையெல்லாம் அவரை பாதித்த விஷயங்கள்  ..கட்டாயம்   ஒரு படைப்பில் சொல்ல வேண்டும் என்பதில் கூட அவர் தீவிரமாக இருந்திருக்கிறார்.  கவிதைகளின் தலைப்பில் கூட  இந்த உள்ளார்ந்த அர்த்தங்களை  அவை கொண்டிருக்கிறார்.
 கதிர் பாரதியின் கவிதை உலகம் சக மனிதர்களின்  இயல்போடு இயங்க கூடியது என்பதால் சுலபமாக வாசிக்கிறேன் . எந்த கவிதை வாசிப்பு ஆதரவோடு தன்னை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் .அதேசமயம்  கண்ணீர் துளிகள்  வெளிப்படையாக இல்லாமல்  உள்ளடங்கிய ஒரு வழியாகவும் இந்த கவிதைகள்  ஒரு தேர்ந்த கவிஞனின் இலாவகமான மொழியை கைக்கொண்டு  அமைந்திருக்கின்றன இயல்பிலேயே அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால்  அவர் அத்தகைய அனுபவங்களையும்  வயலில் உரத்தை தூவிவிட்டு போவதுபோல தூவியும்   அடுக்கியும் விட்டு செல்கிறார் .நல்லேர் பூட்டி தானியங்களை கவிதை விவசாய மனத்தின்  வேதனையாக வழிகளாக விளைவுகளாக இவை அமைகின்றன . .நிலம்  சார்ந்த அனுபவங்களை மனிதர்களைச் சார்ந்தவர்களாகவும் பழைய சங்க இலக்கியத்தின் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாகவும்  இருப்பது  முக்கியமானது . நிலம் சார்ந்த இயற்கை மட்டுமின்றி அதில் தொடங்குகிற சாதாரண ஆண்களும்பெண்களும் குழந்தைகளும் இந்த கவிதைகளில் விரைவி  பிரபஞ்சத்தின் அங்கங்கள் அங்கங்களாக மட்டுமன்றி கவிதையின் அம்சங்களுடன்  அமைந்துவிடுகின்றன . பல கதைகளை கவிதையாக முயன்றிருக்கிறார்  கவிதைக்கான எல்லைக்கோடு என்று எதுவுமே இல்லாத படி அவை கதைகளுக்குள்ளும் ஓடுகின்றன. ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான் என்ற கவிதை போன்றவற்றை இந்த வகையில் சொல்லலாம் .
" பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி
  கூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா
  பக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி
  அவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை
  அவன் கனவில் பரோட்டா வட்ட வட்டப் பௌர்ணமியாக
  வலம் வந்திருக்க வேண்டும்"
காலங்களைப் பற்றி   உரையாடுகிற இவரின் சொற்களில்  நவீன மொழிக்கான அக்கறை வந்து விடுகிறது . அதில்  சிறு உயிர்களின்  இயக்கத்தையும் அவற்றின் குதூகலத்தையும் கூட நாம் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. என் தாத்தாவிடம் ஒரு கதை இருந்தது என்று ஒரு கவிதை ஆரம்பிக்கிறது அதேபோல இவரிடம் சொல்வதற்கும் பல கதைகள் ஒலிக்கின்றன .அந்தக் கதைகளை உரைநடை கவிதைத் தன்மையில்  விளக்குகிறார் . இந்த நிலம்  வழமையை விலக்கிவிட்டு  பசுமை புரட்சி என்ற பெயரில் மனிதனை இடம்பெயர்ந்து அகதியாய்  மாறிக் கொண்டிருக்கும்  இந்த நூற்றாண்டின் பெரிய அவலத்தை கூட இந்த கவிதைகள் ஒருவகையில் சுட்டிக்காட்டுகின்றனர். மனிதன் மட்டுமில்லாமல் இயற்கை சார்ந்த விவரங்களும் வேறு உயிரினங்களும் இந்தக் கவிதைகளில் ஊடாடி மனித வாழ்க்கையை  அவற்றோடு இருந்தது என்பதைக் காட்டுகிறது  இந்த கவிதை  அரசியல்  விமர்சனங்களாக  சில சமயங்களில் அமைகின்றன  .சமகாலத்தின் கலாச்சார அரசியல் பற்றிய விமர்சனங்கள் ஆகவும்  அவை அமைந்துவிடுகின்றன, கவித்துவ தரிசனங்கள்  என்ற  உரையாடலில்  இந்த கவிதைகளை  அப்பொழுது பார்த்து பொருத்திப் பார்த்து கொள்ளலாம்  கிராமம் சார்ந்த ஒருவருக்கு அது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அமைகிறது  நிலங்கள் மீதான காதலும் பற்றும்  உறவுகளும்  அந்த நிலத்தில் வாழும் பொருட்டு அவற்றை எல்லாம் இழந்து விட்டு நகரும் நகர வாழ்வில் பெருத்த அவமானங்களும்  இந்தக் கவிதைகள் பேசுகின்றன,  பலசமயங்களில் அவற்றிலிருந்து  சமூக வழக்கங்களும்  நிலம் சார்ந்த அனுபவங்களும்  மனதை கண்டு கொள்ளலாம்

      அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு... அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது - கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன்.  ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த அடையாளத் தை மேம்படுத்தும் முயற்சிகள், வேறு அடையாளங்களைச் சிறுமைப்படுத்தும்  முகங்களை அவர் அதில்  தேடினார். எதையும் கண்டடையவில்லை என்பதில் எனக்கும் ஆறுதல்தான்.ஆனால் அந்தப் பேராசிரியர் போன்றோர் அதில் அடையாளம் கண்டு கொண்டதை நிச்சயப்படுத்திக் கொள்வர். ஆனால் அதை மீறி குதர்க்கமாய் எதையும் கண்டு கொள்ள முடியாது. அவையும் சங்கீத வசனங்களாய் கவிதைக்குள் வந்திருக்கும் வழக்கைதான் காண முடியும்..சாதி வேண்டாம் மதம் வேண்டாம்  என்ற உறுதியான மனநிலையில் சாதி இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு போக்கு தீவிரமாகியிருப்பது எவ்வளவு துயரம் கை நிலத்தை வாய்க்கரிசி போடுவது போல்.
கதிர்பாரதியின் தமிழ் சமூக்கதையில் - ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சமூக வழக்கு புதைந்திருப்பதையும் நிலம் சார்ந்த அநுபவங்களின் விஸ்தரிப்பும் ஒரு அழகியலாக அமைந்து வருவதையும் காணலாம்.அது உருவாக அந்நிலத்து சாரமான வாழ்வும் நிலத்தை விட்டுப் இடம் பெயர்தலில் உண்டாகும் சீர்குலைவுகளும் மூலங்களாக இருக்கின்றன. அவரின்            நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் கார்பரேட்டுகளால் சிதைக்கப்படுவதைப் பற்றிய சித்தரிப்புகள் முக்கியமானவை.                     நிலவே../மதுவே/ உனை ஒருவருக்கும் கொடேன் என்ற தீர்மானத்தில் இருப்பவர்தான். ஆனால் எல்லாம் கை நழுவிப் போகின்றன. காலடி நிலம் சரசரவென்று பாம்பு நழுவுவது போல் வேற்றாள் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து வழக்குத்தொடுப்பதிலும் அந்த உணர்வுகளைச் சங்கமிக்க வைத்து வாதாடி மனிதாபிமான சான்றுகளை எடுப்பதுரைப்பதிலும் அவரின் கவிதைகள் முன் நிற்கின்றன எனலாம். அதுவே அவர் கவிதைகளின் பொது அழகியலாவும் மிளிர்கிறது.
                         ஆனந்தியைப் பெண்ணாக நான் நினைத்துக் கொண்டு ( முதிரிளம் பருவத்து முலையுடன் ) தட்டான்கள் பெண் கவர்ச்சி சார்ந்தே தாழப்பறப்பதாக நினைத்தேன். ஆனால் ஆனந்தி நிலமாகிப் போனதில் எனக்கும் இன்னும் மகிழ்ச்சிதான். தானியக்கிடங்குகள் நிறைந்த நிலத்தின் பாடல்கள்,மெட்ரோபாலிட்டன் நிலத்தின் நாற்சந்தி, டம்ளரில் தண்ணீர் எடுத்து காடு வளர்க்கும் சிறுவன், மாநகரப்பூங்காவின் வடமேற்கு மூலை  என்று காட்டி     மெட்ரோபாலிட்டன் நிலத்தில் வேரறுந்து கிடப்பவர்களைக் கவிதைக்குள் கொண்டு வருகிறார்.ஆட்றா ராமா.. .  ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. ஆட்டங்கள் ஆடி சமரசம் செய்து கொள்பவர்களால் காணப்படும் பின் தங்கியவர்களின் உயரம் தட்டுப்பட்டு விடுகிறது. கருவாட்டு ரத்தமூறிய இட்லிகளும் இரு கரு நிற கோலாக்களும், இனும் பிறவும் பொய்யா மெய்யா என நாம் வெடித்து விளையாடு எருக்கம் மொட்டுகளாக மாறி நம்மை அலைக்கழிக்க வைக்கிறது. பகலும் இரவும் மாறி மாறி அலைக்கழிக்கின்றன. ( இத்துணை ஆதூரமானதா உன் விரல்.. இத்துணை ஆதூரமானதா உன் பகல் .,சில்லென விடியப்போகும் இரவால் அழகாகப் போகிற பகல் வெட்கமில்லா இரவு )
                        நுண்ணுயிர்கள் , பறவைகள் விலங்குகள் குறிப்பாய் வெட்டுக்கிளி, சிட்டுக்குருவி போன்றவற்றை உருவகப்படுத்திய   கவிதைகள்  ஆவணக்கொலை போன்ற சமூக நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும் இருக்கிறது. விமர்சனங்களை மீறி மோதி மிதித்து  முகத்தில் உமிழ்ந்து விடும்கோபத்தை எதிர்ப்பின் விதைகளாகவும் இக்கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். முப்பரி பின்னலிட்ட நாக சர்ப்பமாகக் கிடக்கும் ஜடையைப் போல மொழியின் இறுக்கத்திலும் அனுபவங்களின் அடர்த்தியிலும்  இக்கவிதைகள்  வாசிப்பின் போதும் பின்னாலும் யோசிக்கையில் சுழித்தபடி சிலேப்பி மீன்களைப் போல் நீந்திக்கொண்டிருக்கின்றன.இயல்பிலேயே மிகவும் நெருக்கமாகி விடுகின்றன.