* சுப்ரபாரதிமணியன்
அன்புடையீர் ..
வணக்கம். நலம் குறித்த விருப்பம்.
”
சிங்கப்பூர் தற்காலப் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் ”
என்றத் தொகுப்பினை 20
சிறுகதைகளைக் கொண்டு வரும் முயற்சிக்கு
உங்களின் சிறுகதை ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள் . நன்றி.
தங்களின் ஒரு சிறந்த வெளிவந்த
சிறுகதையையும், உங்கள் படைப்புப் பணி பற்றிய 10 வரிகளில் ஒரு குறிப்பையும் அனுமதி கடிதத்தையும் கூட அனுப்பி
உதவுங்கள்.இன்னும் சில தோழிகளின்
மின்னஞ்சல்கள் தந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்வேன்.
தற்போதைய சிங்கப்பூர் தமிழ்ச்சூழலை
பிரதிபலிக்கும் வகையிலானக் கதைகளை இத்தொகுப்பில் இடம் பெறச் செய்ய எண்ணம்.கடந்த 5
ஆண்டுகளுக்குள் வந்த கதையாக இருக்கலாம்.
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன், திருப்பூர் தமிழ்நாடு
.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur :
blog:
www.rpsubrabharathimanian.blogspot.com
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian
nagar, Tirupur 641 602 /India -094861
01003, 9442350199, 0421 2350199
( சுப்ரபாரதிமணியனின் மலேசியா பின்னணியிலான
சில நூல்கள் :
1.
மாலு –நாவல் ( உயிர்மை பதிப்பகம், சென்னை )
2.
கடவுச்சீட்டு - நாவல் ( முன்னேற்றப் பதிப்பகம் , சென்னை )
3.ஓ..மலேசியா
–கட்டுரைகள் (பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பகம், சென்னை )
4.
தோட்டக்காடு –மலேசியா பின்னணிச் சிறுகதைகள் (பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், சென்னை )
மற்றும்
1.
ஓ..சிங்கப்பூர் ( கதைகளும் , கட்டுரைகளும் )
2.
பெண்மை -” மலேசியா- தற்காலப் பெண் எழுத்தாளர்களின் சில சிறுகதைகள்
இரண்டும் கவிநிலா பதிப்பகம், திருப்பூர்
சுப்ரபாரதிமணியன்
16 நாவல்கள், 15 சிறுகதைத்
தொகுப்புகள் உட்பட 65 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல்
சார்ந்து இயங்கி வருபவர். ” திருப்பூரில்
வசித்து வருகிறார் .” சாயத்திரை “
என்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய
நாவலுக்கான தமிழக அரசின் பரிசு,, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய
“கதா விருது”
“
உட்பட பல முக்கிய
விருதுகளைப் பெற்றவர்.இவரின்
நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.குறிப்பாக “ சாயத்திரை “ என்ற திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல்
ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது. “ தண்ணீர் யுத்தம் “, “ நீர்ப்பாலை ” போன்ற இவரின் நூல்கள்
சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றிப் பேசுகின்றன.பல நூல்கள் பல முக்கிய
பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இருக்கின்றன. திருப்பூரைச் சார்ந்த இவர் ” கனவு ‘ என்ற இலக்கியச்
சிற்றிதழையும் 31 ஆண்டுகளாக
நடத்தி வருகிறார்.பாண்டியன்
நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியோடும் இணைந்து செயலாற்றி வருகிறார். .