உலக காட்டுயீர் தினம்
----------------------
உலக காட்டுயீர் தினம் ( மார்ச் 3 )
தாய்த்தமிழ்ப் பள்ளி பாண்டியன் நகரில் கொண்டாடப்பட்டது. திருப்பூர் இயற்கைக் கழகம்
அமைப்பின் தலைவர் இரவீந்திரன் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
தலைமை வகித்தார் . மருத்துவர் முத்துச்சாமி ,கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை பங்கு பெற்றனர் .
திருப்பூர் இயற்கைக் கழகம் அமைப்பின்
தலைவர் இரவீந்திரன் சிறப்புரை :
பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு
வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்! பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப்
பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.. நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும்
அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.
நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை
இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப்
பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில்
பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத்
தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை
விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நல்லது..
(
செய்தி: கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை
பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )