சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

               நூல்கள்  வெளியீடு :
                      ---------------------------

திருப்பூர் படைப்பாளிகள் சங்கம் .
.மாதக்கூட்டம் .10/9/17 மாலை...மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு ரோடு ., திருப்பூர் நடைபெற்றது
       நூல்கள்  வெளியீடு நடைபெற்றது 

“ ஓடும் நதி “ – சுப்ரபாரதிமணியனின் நாவலை மன நல ஆலோசகர் கீதா சச்சின் வெளியிட கவிஞர் ஜோதி பெற்றுக்  கொண்டார் . மருத்துவர் அருணாசலம் எழுதிய “ மரணமில்லாப் பெருவாழ்வு “ நூலை சுப்ரபாரதிமணியன் வெளியிட சிறுகதை எழுத்தாளர் எஸ். ஏ.காதர் பெற்றுக்கொண்டார்.ஓவியர் கிருஷ்ணசாமி, அருணாசலம், தங்கம், எஸ். ஏ.காதர், மருத்துவர் செல்லம் ரகு, ஜோதி  ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். நடைபெற்றது  “ ஓடும் நதி “ – சுப்ரபாரதிமணியனின் நாவல் பற்றிய அறிமுகக் கட்டுரை படிக்கப்பட்டது.
செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும் திருப்பூர், அடுத்திருக்கும் சிற்றூர்கள் கதைக்களன்கள். மூன்று ஊர்களின் மக்கள், கலாசாரம் மற்றும் மொழி போன்றவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் தூவியபடி கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். செல்லத்தின் கதையைச் சொல்வது நோக்கமா அல்லது மூன்று திணைகளைச் சொல்லும் நோக்கமா என்றே பிரித்தறியமுடியாத மாதிரி கலந்து ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்த்து நிற்கின்றது.

திருமணம் குதிராமல் இருக்கும் செல்லத்தின் வாழ்க்கையைச் சுற்றியே தான் போகிறது கதை. ஓடும் நதியாகவே சொல்லப்பட்டிருக்கும் கதையைப் படித்துக் கொண்டு போகும் போது நமக்கு செல்லம் வாழ்க்கைக்காற்றில் தாறுமாறாக அலைக்கழியும் ஒரு பெண்பட்டமாகிப்போவது போன்றும் தோன்றக்கூடும். புறஅலைக்கழிப்பை மட்டுமின்றி செல்லத்தின் அகஅலைக்கழிப்பையும் சிறப்பாக, வாசகன் தன்னைப் பொருத்திக் கொண்டு உணரக்கூடியதான சிறந்த சித்தரிப்புகள் கதையெங்கும் விரிகின்றன. மாப்பிள்ளை அமையாத செல்லம் உள்ளூரில் எதிர்கொள்ளும் சில சிக்கல்களில் துவங்கி ஜாதி வேறுபாட்டின் காரணமாக அவள் சொக்கனுடன் ஆந்திராவுக்கு ஓடுவதில் வேகம் கொண்டு பின்னர் தனியே ஊருக்குத் திரும்பிய பிறகு அவளின் அப்பா ஒரு ஊனமுற்றவனுக்கு அவளைக்கட்டி வைப்பதில் தொடர்ந்து மேலும் முன்னேறுகிறது கதை. ஒரு பெண்ணின் இடத்தில் இருந்து அவள் கோணத்தில் நூலாசிரியரால் மிக அருமையாகவும் சீராகவும் கதையைக் கொண்டு போக முடிந்துள்ளது.jeyanthi sankar  நியூ சென்சுரி புத்தக நிலையம்,  சென்னை இதை வெளியிட்டுள்ளது.
              சுப்ரபாரதிமணியன் இந்த நாவல் எழுதிய அநுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் சமீபத்திய முக்கியமான மூன்று மலையாள நூல்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கினார் .முடியரசு தலைமை வகித்தார். மருத்துவர்  ஹீலர் மோகன்ராஜ் நன்றியுரை கூறினார் .





.