கதை சொல்லி நிகழ்ச்சி ..
பாண்டியன் நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளியில் ” கதை சொல்லி
நிகழ்ச்சி.. “ சனியன்று நடைபெற்றது. ஆசிரியை கோகுலப்ரியா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட
சிவகாசியைச் சார்ந்த எழுத்தாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி குழந்தைகள் பழைய கதைகளை
மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார். பழைய காக்கா நரி கதை , ஆமை
முயல் கதைகளை மறுவாசிப்பு முறையில் சொன்னார்.
” பொதுப்பாடத்திட்டம்
பலவகைகளில் இன்றைய பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.அதுபோல்
பொதுப் பள்ளி முறை அமுல்படுத்த அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் பொதுப்பள்ளி முறையே
சமத்துவத்தை உருவாக்கும்” என்று
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
” நிகழ்ச்சியை ஆரம்பித்து
வைத்துப் பேசும்போது சொன்னார்.
” கல்வி இன்றைக்கு வியாபாரம் ஆகி விட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்,
சேவைக்காக, கல்விக்கென கூடுதல் வரி ( செஸ்) 3% செலுத்துகிறோம். இதனால் அரசுக்கு
ஆண்டுக்கு வரும் செஸ்வரி சுமார் 20,000 கோடி ரூபாய் அப்படியிருக்க நம்
குழந்தைகளின் கல்விக்காக நாம் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி இன்றைக்கு
பல தளங்களில் இன்றைக்கு எழுப்பப்படுகிறது. கட்டணமில்லாக் கட்டாயக்கல்வி தருவது நம்
அரசின் கடமையாக இருப்பதை தொடர்ந்து நாம் வலியுறுத்த வேண்டும். பாடத்திட்டங்கள்
தொடர்ந்த வன்முறைகளாக மாறி உள்ளன,தொடர்ந்து கற்பித்தலும், கற்றலிலும் ஆசிரியர்கள்
அக்கறை கொண்டு குழதைகளை முன்னேற்ற வேண்டும் ” என்று குறிப்பிட்டார்.
சமூக சேவை ஆர்வலர் சேவ ஆர். பிரான்சிஸ்
குழந்தைகளுக்கான கல்வியும் குழ்ந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பும் பற்றிப்
பேசினார். ராஜேஷ்லால் குழந்தைகளின் கைத்திறனை வளர்த்துக் கொள்ளும் முறைகள் பற்றி
செய்முறை விளக்கங்கள் தந்தார்.