சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 27 ஜூலை, 2017

இந்திய அரசியலை புரட்டிப்போட்ட மார்க்ஸ் கண்டுபிடிப்பு
-------------------------------------------------------------------------------------------------
.
இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான உண்மைக் காரணத்தை ஐரோப்பாவிலிருந்து காரல் மார்க்ஸ் முதல்முறையாக கண்டறிந்து சொன்னார். அது இந்திய அரசியலையே புரட்டிப்போட்டதுஎன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கூறினார்.தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னையில் 3வது சென்னை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் புதனன்று (ஜூலை 26) ‘மார்க்ஸ் 200’ எனும் தலைப்பில் நடைபெற்ற உரையரங்க நிகழ்வில், ‘மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துஎனும் தலைப்பில்பேசியஎழுத்தாளர் சு.வெங்கடேசன்“30வயதில் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதினார். ஐரோப்பாவின் மேட்டிமையை தனது எழுத்துக்களால் காறி உமிழ்ந்தவர் மார்க்ஸ். இந்தியா பற்றிய ஐரோப்பியர்களின் சிந்தனையை மாற்றி அமைத்தார்என்று கூறினார்.1801 முதல் 1900 வரை இந்தியாவில் கொடூரமான 24 பஞ்சங்கள் ஏற் பட்டன. அது செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம். அதன் உச்சம் தான் 1878ல் நடந்த தாதுவருட பஞ்சம். மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 28 விழுக்காடு ஒரே வருடத்தில் குறைந்தார்கள்.

தனுஷ்கோடியில் இருந்து ஒரேநாளில் 14ஆயிரம் பேர் பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்தார்கள். பஞ்சத்துக்கு காரணம் மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, குறைந்த தண்ணீரில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தெரியவில்லை என்று அனைத்து பிரிட்டிஷ் ஆவணங்களும் கூறின. தாதுவருட பஞ்சம் குறித்த பேமன் குழுவும் அறிக்கையும் இதையே சொன்னது.இதிலிருந்து மாறுபட்டு, பஞ்சம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே மார்க்ஸ் எழுதினார், அனாதி காலம் தொட்டு இந்திய அரசியலில் மூன்று பிரிவுகள் இருந்தன. உள் நாட்டை கொள்ளையடிக்கும் உள்துறை, வெளிநாட்டை கொள்ளையடிக்கும் வெளித்துறை (போர்த் துறை), பொதுமராமத்து துறை என இருந்தது. பிரிட்டிஷார் முதல் இரண்டு துறைகளை எடுத்துக் கொண்டு 3வது துறையை விட்டுவிட்டனர். அதன் கொடூரத்தை இந்திய சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. புறக்காரணிகளும், பிரிட்டிஷாரின் கொள்கையும்தான் பஞ்சத்திற்கு காரணம் என்றார். இது இந்திய அரசியலையே புரட்டிப்போட்டது’’ என்றார் வெங்கடேசன்.1857ல் இந்தியாவில் சிப்பாய் கலகம் செய்கிறார்கள் என்று நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளும் எழுதிக் கொண்டிருக்கையில், அதுஇந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று பிரகடனப்படுத்தியவர் மார்க்ஸ்.

பிரிட்டிஷார் தங்களை அடிமைப்படுத்த உருவாக்கிய சிப்பாய்கள் துப்பாக்கியின் திசையைத் திருப்பி பிடித்தார்கள் என்றெழுதினார். இந்தியாவில் விடுதலைப் போராட் டம் தொடங்கி விட்டது என்று எழுதிய முதல் ஐரோப்பிய சிந்தனையாளன் மார்க்ஸ். இந்தியாவில் கூட இதுபோன்று யாரும் சொல்லவில்லை. இதயமற்ற மக்களின் இதயமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகப் பெருமூச்சாக இருப்பதால் மதம் ஒரு அபின் என்றார் மார்க்ஸ். கீழத்தஞ்சையில் விவசாய கூலித்தொழிலாளர் களை சீனிவாசராவ் திரட்டினார். தொழிலாளர்கள் சிறுகோவில் ஒன்றை உருவாக்கி திருவிழாவின் போது பரிவட்டத்தை சீனிவாசராவிற்கு கட்ட முடிவெடுக்கிறார்கள். காலம் முழுக்க நாத்திகம் பேசிய தான் எப்படி பரிவட்டம் கட்டிக் கொள்வது என்று யோசித்த சீனிவாசராவ், “மதத்தைப் பற்றி மார்க்சின் எழுதிய எழுத்தின் ஆழத்தை உணர்ந்ததால் அதனை ஏற்றேன்என்றார். செங்கொடி இயக்கம் கீழத்தஞ்சையில் விளைந்து செழித்ததற்கு மார்க்சின் எழுத்துக்களை வாழ்க்கைக்குள்ளேயே இருந்து புரிந்து கொண்ட தலைவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.

வர்க்கமாகப் பிரியத்தொடங்கியதன் சான்றுகளாக கீழடி ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உள்ளன. சாதி, மதத்திற்கு முன்பே உடமைச் சமூகம் தொடங்கியதன் ஆதாரமாக கீழடி உள்ளது. அகழாய்வில் இறவாதன் என்ற பெயர் கிடைத்துள்ளது. இறைஞ்சி வாழாதவன் என்பது அதன் பொருள். அப்படியென்றால் என்னை இறஞ்சி வாழ் என்பதற்கு எதிரான குரல் அது. மார்க்சை கற்றதனால் இதை புரிந்து கொள்ள முடிகிறது.வறுமையின் கடைக்கோடியிலும், செல்வத்தின் உச்சியிலும் இருக்கிற இடைவெளி, முரண்தான் உலகத்தின் உண்மையான பிரச்சனை. எனவேதான் இழப்பதற்கு ஏதுமில்லை கைவிலங்குகளை தவிர, பெறுவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்றார். இதற்காகவே மனிதகுலம் மார்க்ஸ்சின் எழுத்துக்களை நினைத்து நினைத்து வாழவைக்கும் என்று உரையை நிறைவு செய்தார் வெங்கடேசன்.

பர்வீன் சுல்தானா

மார்க்சும் ஜென்னியும்எனும் தலைப்பில் பேரா. பர்வீன் சுல்தானா பேசுகையில், “காரல் மார்க்சும் ஜென்னியும் எழுதிக் கொண்ட கடிதங்கள் இல்லறத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு முன்னுதாரணங்கள். எதையும் ஆழமாக படித்து ரசிப்பவள் ஜென்னி. தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் செல்வதற்காக தனது கணவனை இம்சிக்காதவள் ஜென்னி.வறுமையின் உச்சத்தில் கூட எனக்கு இது இல்லையே என்று புலம்பாத ஜென்னிதான் காரல்மார்க்சின் பலம்என்றார்.எவ்வளவு வறுமை, துன்பம் வந்தபோதும் ஒருவரையொருவர் கரம் பற்றி நின்றனர். ஜென்னி தனது முழு ஆற்றலையும் காரல்மார்க்சின் தத்துவத்திற்கு ஒப்படைத்தார்.

இறந்த குழந்தையை புதைக்க பணம் இல்லாத போதும், ஜென்னி இந்த குழந்தை பிறந்தபோது தாலாட்ட தொட்டில் இல்லை. இறந்தபோது புதைக்க சவபெட்டி வாங்க பணம் இல்லைஎன்றெழுதினார். கொள்கை மீதான மாறாத பற்றுக் கொண்டிருந்ததன்காரணமாக இயல்பான வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார சிக்கலை கண்டு முணுமுணுக்கவில்லை ஜென்னி.மூலதனத்தை ஜென்னி எத்தனை முறை படியெடுத்திருப்பார் என்று கணக்கில்லை. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜென்னியும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட காரல் மார்க்சும் சந்தித்துக் கொள்ளக் கூடாது. சில நாட்கள் பொறுத்துப் பார்த்த மார்க்ஸ் ஒருநாள் ஜென்னியை சந்தித்துப் பேசுகிறார். அதனை பார்த்த அவர்களது மகள் எழுதினார், “என் தாய் தந்தையர்தான் சந்தித்துக் கொண்டார்கள்.

என் கண்களுக்கு இளமை காதல் தளும்புகிற ஒரு பேரழகியும், காதலில் உன்னத நிலையடைந்த ஒரு இளைஞனும் பேசிக் கொண்டதாக உணர்ந்தேன்என்றெழுதினார்.ஜென்னி இறக்கும்போது மார்க்சிடம் என் சக்திகளை இழந்து கொண்டிருக்கிறேன் என்றார். ஜென்னி இறந் ததை பார்த்த ஏங்கெல்ஸ் சொன்னார், மார்க்ஸ்சும் இறந்து விட்டார் என்று. அதன்பின் 15 மாதங்களில் மார்க்சும் இறந்தார்.ஆலம் விழுதுகள்போல் உறவுகள் ஆயிரம் இருந்தும்மென்ன, வேரென நீயிருந்தாய், அதில் நான் விழுந்துவிடாமல் இருந்தேன் என்று இப்போது இருக்கும் கவிஞன் எழுதிய பாடலுக்கு முழு உதாரணம் காரல்மார்க்ஸ்-ஜென்னி. ஜென்னியின் மனம் நம் எல்லோருக்கும் வாய்க்க வேண்டும். அதற்கு மதிப்பளிக்கும் காரல் மார்க்ஸ்சுகள் வாய்க்க வேண்டும் என்று தனது உரையை முடித்தார் பர்வீன் சுல்தானா.

சி.மகேந்திரன்

மார்க்ஸ்சும் ஏங்கெல்ஸ்சும்எனும் தலைப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், “1842ல் சந்தித்துக் கொண்ட காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இரண்டு பெயர் களும் பிரிக்க முடியாதவை. 1844ல் ஏங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலை என்ற நூலும், அரசியல் பொருளாதாரம் எனும் கட்டுரையிலிருந்துதான்மூலதனம் தொடங்குகிறது.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ்சை பற்றி குறிப்பிடும் போது என்னுடைய இரண்டாவது நான்என்பார். ஏங்கெல்ஸ்சின் எழுத்துக்களை அடிபற்றியே நான் நடக்கிறேன் என்பார் மார்க்ஸ். ஏங் கெல்ஸ், மார்க்சை பற்றி குறிப்பிடும் போது, அவர் பாடுகிறார் என்றால் நான் பக்கவாத்தியமாக இருக்கிறேன் என்கிறார். மார்க்சியம் என்பது ஏங்கெல்சின் கருத்துக்களோடு இணைந்தது. காவியக்காலத்திலிருந்து தேடிப்பார்க்கிறேன் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தோழமையை போல இன்னொரு உறவை பார்க்கமுடியவில்லை என்கிறார் லெனின்என்று குறிப்பிட்டார்.

27 ஆண்டுகள் ஏங்கெல்ஸ் கட்டுரைகளை மட்டுமே எழுதினார். மான்செஸ்டரில் நெசவாலையில் 25 ஆண்டுகள் எழுத்தராக பணியாற்றி மூலதனம் எழுத காரல் மார்க் சிஸ்சுக்கு பணம் அனுப்பினார். 1869ல் மார்க்ஸ் மூலதனத்தின் முதல் பாகத்தை எழுதி முடித்துவிடுகிறார். மார்க்ஸ் இறந்தவுடன், ஏங்கெல்ஸ் எழுதிக் கொண்டிருந்த இயற்கையின் இயக்கயியல்என்ற நூலை நிறுத்தி வைத்துவிட்டு 2 ஆண்டுகள் கடும் முயற்சி செய்து 1885ம் மூலதனத்தின் இரண்டாம்பாகத்தை கொண்டு வந்தார், 1891ம் ஆண்டு 3ம் பாகத்தை கொண்டு வந்தார். அதன்பிறகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூலையும், பிற நூல்களையும் எழுதினார் ஏங்கெல்ஸ். இதுதான் தத்துவத்தின் ஒற்றுமை. கூட்டுச்செயல்பாடு என்பதற்கு முன்னுதாரணமாக மார்க்சும் ஏங்கெல்சும் இருந்தனர் என்றும் மகேந்திரன் கூறினார்.theekathir 28/7/17