சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 27 ஜூலை, 2017

இந்திய அரசியலை புரட்டிப்போட்ட மார்க்ஸ் கண்டுபிடிப்பு
-------------------------------------------------------------------------------------------------
.
இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான உண்மைக் காரணத்தை ஐரோப்பாவிலிருந்து காரல் மார்க்ஸ் முதல்முறையாக கண்டறிந்து சொன்னார். அது இந்திய அரசியலையே புரட்டிப்போட்டதுஎன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கூறினார்.தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னையில் 3வது சென்னை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் புதனன்று (ஜூலை 26) ‘மார்க்ஸ் 200’ எனும் தலைப்பில் நடைபெற்ற உரையரங்க நிகழ்வில், ‘மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துஎனும் தலைப்பில்பேசியஎழுத்தாளர் சு.வெங்கடேசன்“30வயதில் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதினார். ஐரோப்பாவின் மேட்டிமையை தனது எழுத்துக்களால் காறி உமிழ்ந்தவர் மார்க்ஸ். இந்தியா பற்றிய ஐரோப்பியர்களின் சிந்தனையை மாற்றி அமைத்தார்என்று கூறினார்.1801 முதல் 1900 வரை இந்தியாவில் கொடூரமான 24 பஞ்சங்கள் ஏற் பட்டன. அது செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம். அதன் உச்சம் தான் 1878ல் நடந்த தாதுவருட பஞ்சம். மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 28 விழுக்காடு ஒரே வருடத்தில் குறைந்தார்கள்.

தனுஷ்கோடியில் இருந்து ஒரேநாளில் 14ஆயிரம் பேர் பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்தார்கள். பஞ்சத்துக்கு காரணம் மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, குறைந்த தண்ணீரில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தெரியவில்லை என்று அனைத்து பிரிட்டிஷ் ஆவணங்களும் கூறின. தாதுவருட பஞ்சம் குறித்த பேமன் குழுவும் அறிக்கையும் இதையே சொன்னது.இதிலிருந்து மாறுபட்டு, பஞ்சம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே மார்க்ஸ் எழுதினார், அனாதி காலம் தொட்டு இந்திய அரசியலில் மூன்று பிரிவுகள் இருந்தன. உள் நாட்டை கொள்ளையடிக்கும் உள்துறை, வெளிநாட்டை கொள்ளையடிக்கும் வெளித்துறை (போர்த் துறை), பொதுமராமத்து துறை என இருந்தது. பிரிட்டிஷார் முதல் இரண்டு துறைகளை எடுத்துக் கொண்டு 3வது துறையை விட்டுவிட்டனர். அதன் கொடூரத்தை இந்திய சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. புறக்காரணிகளும், பிரிட்டிஷாரின் கொள்கையும்தான் பஞ்சத்திற்கு காரணம் என்றார். இது இந்திய அரசியலையே புரட்டிப்போட்டது’’ என்றார் வெங்கடேசன்.1857ல் இந்தியாவில் சிப்பாய் கலகம் செய்கிறார்கள் என்று நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளும் எழுதிக் கொண்டிருக்கையில், அதுஇந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று பிரகடனப்படுத்தியவர் மார்க்ஸ்.

பிரிட்டிஷார் தங்களை அடிமைப்படுத்த உருவாக்கிய சிப்பாய்கள் துப்பாக்கியின் திசையைத் திருப்பி பிடித்தார்கள் என்றெழுதினார். இந்தியாவில் விடுதலைப் போராட் டம் தொடங்கி விட்டது என்று எழுதிய முதல் ஐரோப்பிய சிந்தனையாளன் மார்க்ஸ். இந்தியாவில் கூட இதுபோன்று யாரும் சொல்லவில்லை. இதயமற்ற மக்களின் இதயமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகப் பெருமூச்சாக இருப்பதால் மதம் ஒரு அபின் என்றார் மார்க்ஸ். கீழத்தஞ்சையில் விவசாய கூலித்தொழிலாளர் களை சீனிவாசராவ் திரட்டினார். தொழிலாளர்கள் சிறுகோவில் ஒன்றை உருவாக்கி திருவிழாவின் போது பரிவட்டத்தை சீனிவாசராவிற்கு கட்ட முடிவெடுக்கிறார்கள். காலம் முழுக்க நாத்திகம் பேசிய தான் எப்படி பரிவட்டம் கட்டிக் கொள்வது என்று யோசித்த சீனிவாசராவ், “மதத்தைப் பற்றி மார்க்சின் எழுதிய எழுத்தின் ஆழத்தை உணர்ந்ததால் அதனை ஏற்றேன்என்றார். செங்கொடி இயக்கம் கீழத்தஞ்சையில் விளைந்து செழித்ததற்கு மார்க்சின் எழுத்துக்களை வாழ்க்கைக்குள்ளேயே இருந்து புரிந்து கொண்ட தலைவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.

வர்க்கமாகப் பிரியத்தொடங்கியதன் சான்றுகளாக கீழடி ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உள்ளன. சாதி, மதத்திற்கு முன்பே உடமைச் சமூகம் தொடங்கியதன் ஆதாரமாக கீழடி உள்ளது. அகழாய்வில் இறவாதன் என்ற பெயர் கிடைத்துள்ளது. இறைஞ்சி வாழாதவன் என்பது அதன் பொருள். அப்படியென்றால் என்னை இறஞ்சி வாழ் என்பதற்கு எதிரான குரல் அது. மார்க்சை கற்றதனால் இதை புரிந்து கொள்ள முடிகிறது.வறுமையின் கடைக்கோடியிலும், செல்வத்தின் உச்சியிலும் இருக்கிற இடைவெளி, முரண்தான் உலகத்தின் உண்மையான பிரச்சனை. எனவேதான் இழப்பதற்கு ஏதுமில்லை கைவிலங்குகளை தவிர, பெறுவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்றார். இதற்காகவே மனிதகுலம் மார்க்ஸ்சின் எழுத்துக்களை நினைத்து நினைத்து வாழவைக்கும் என்று உரையை நிறைவு செய்தார் வெங்கடேசன்.

பர்வீன் சுல்தானா

மார்க்சும் ஜென்னியும்எனும் தலைப்பில் பேரா. பர்வீன் சுல்தானா பேசுகையில், “காரல் மார்க்சும் ஜென்னியும் எழுதிக் கொண்ட கடிதங்கள் இல்லறத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு முன்னுதாரணங்கள். எதையும் ஆழமாக படித்து ரசிப்பவள் ஜென்னி. தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் செல்வதற்காக தனது கணவனை இம்சிக்காதவள் ஜென்னி.வறுமையின் உச்சத்தில் கூட எனக்கு இது இல்லையே என்று புலம்பாத ஜென்னிதான் காரல்மார்க்சின் பலம்என்றார்.எவ்வளவு வறுமை, துன்பம் வந்தபோதும் ஒருவரையொருவர் கரம் பற்றி நின்றனர். ஜென்னி தனது முழு ஆற்றலையும் காரல்மார்க்சின் தத்துவத்திற்கு ஒப்படைத்தார்.

இறந்த குழந்தையை புதைக்க பணம் இல்லாத போதும், ஜென்னி இந்த குழந்தை பிறந்தபோது தாலாட்ட தொட்டில் இல்லை. இறந்தபோது புதைக்க சவபெட்டி வாங்க பணம் இல்லைஎன்றெழுதினார். கொள்கை மீதான மாறாத பற்றுக் கொண்டிருந்ததன்காரணமாக இயல்பான வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார சிக்கலை கண்டு முணுமுணுக்கவில்லை ஜென்னி.மூலதனத்தை ஜென்னி எத்தனை முறை படியெடுத்திருப்பார் என்று கணக்கில்லை. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜென்னியும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட காரல் மார்க்சும் சந்தித்துக் கொள்ளக் கூடாது. சில நாட்கள் பொறுத்துப் பார்த்த மார்க்ஸ் ஒருநாள் ஜென்னியை சந்தித்துப் பேசுகிறார். அதனை பார்த்த அவர்களது மகள் எழுதினார், “என் தாய் தந்தையர்தான் சந்தித்துக் கொண்டார்கள்.

என் கண்களுக்கு இளமை காதல் தளும்புகிற ஒரு பேரழகியும், காதலில் உன்னத நிலையடைந்த ஒரு இளைஞனும் பேசிக் கொண்டதாக உணர்ந்தேன்என்றெழுதினார்.ஜென்னி இறக்கும்போது மார்க்சிடம் என் சக்திகளை இழந்து கொண்டிருக்கிறேன் என்றார். ஜென்னி இறந் ததை பார்த்த ஏங்கெல்ஸ் சொன்னார், மார்க்ஸ்சும் இறந்து விட்டார் என்று. அதன்பின் 15 மாதங்களில் மார்க்சும் இறந்தார்.ஆலம் விழுதுகள்போல் உறவுகள் ஆயிரம் இருந்தும்மென்ன, வேரென நீயிருந்தாய், அதில் நான் விழுந்துவிடாமல் இருந்தேன் என்று இப்போது இருக்கும் கவிஞன் எழுதிய பாடலுக்கு முழு உதாரணம் காரல்மார்க்ஸ்-ஜென்னி. ஜென்னியின் மனம் நம் எல்லோருக்கும் வாய்க்க வேண்டும். அதற்கு மதிப்பளிக்கும் காரல் மார்க்ஸ்சுகள் வாய்க்க வேண்டும் என்று தனது உரையை முடித்தார் பர்வீன் சுல்தானா.

சி.மகேந்திரன்

மார்க்ஸ்சும் ஏங்கெல்ஸ்சும்எனும் தலைப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், “1842ல் சந்தித்துக் கொண்ட காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இரண்டு பெயர் களும் பிரிக்க முடியாதவை. 1844ல் ஏங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலை என்ற நூலும், அரசியல் பொருளாதாரம் எனும் கட்டுரையிலிருந்துதான்மூலதனம் தொடங்குகிறது.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ்சை பற்றி குறிப்பிடும் போது என்னுடைய இரண்டாவது நான்என்பார். ஏங்கெல்ஸ்சின் எழுத்துக்களை அடிபற்றியே நான் நடக்கிறேன் என்பார் மார்க்ஸ். ஏங் கெல்ஸ், மார்க்சை பற்றி குறிப்பிடும் போது, அவர் பாடுகிறார் என்றால் நான் பக்கவாத்தியமாக இருக்கிறேன் என்கிறார். மார்க்சியம் என்பது ஏங்கெல்சின் கருத்துக்களோடு இணைந்தது. காவியக்காலத்திலிருந்து தேடிப்பார்க்கிறேன் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தோழமையை போல இன்னொரு உறவை பார்க்கமுடியவில்லை என்கிறார் லெனின்என்று குறிப்பிட்டார்.

27 ஆண்டுகள் ஏங்கெல்ஸ் கட்டுரைகளை மட்டுமே எழுதினார். மான்செஸ்டரில் நெசவாலையில் 25 ஆண்டுகள் எழுத்தராக பணியாற்றி மூலதனம் எழுத காரல் மார்க் சிஸ்சுக்கு பணம் அனுப்பினார். 1869ல் மார்க்ஸ் மூலதனத்தின் முதல் பாகத்தை எழுதி முடித்துவிடுகிறார். மார்க்ஸ் இறந்தவுடன், ஏங்கெல்ஸ் எழுதிக் கொண்டிருந்த இயற்கையின் இயக்கயியல்என்ற நூலை நிறுத்தி வைத்துவிட்டு 2 ஆண்டுகள் கடும் முயற்சி செய்து 1885ம் மூலதனத்தின் இரண்டாம்பாகத்தை கொண்டு வந்தார், 1891ம் ஆண்டு 3ம் பாகத்தை கொண்டு வந்தார். அதன்பிறகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூலையும், பிற நூல்களையும் எழுதினார் ஏங்கெல்ஸ். இதுதான் தத்துவத்தின் ஒற்றுமை. கூட்டுச்செயல்பாடு என்பதற்கு முன்னுதாரணமாக மார்க்சும் ஏங்கெல்சும் இருந்தனர் என்றும் மகேந்திரன் கூறினார்.theekathir 28/7/17

வெள்ளி, 21 ஜூலை, 2017

- சுப்ரபாரதிமணியன் இரு நாவல்கள் இந்தியில் வந்துள்ளன


 .subrabharathi@gmail.com 

சப்பரம் :இந்தியில் Swargrath :       
 Hastaksaran Prakasam
Newdelhi  110 094
ரூ 300

மாலு : இந்தியில் Lekehan :
Radharani Hastaksaran Prakasam
New delhi  110 032

ரூ 300

புதன், 19 ஜூலை, 2017

காவிக் கூட்டம் இன்னும் பயங்கரமானதாக மாறும்
கமல்ஹாசன் எச்சரிக்கை

கமல்ஹாசனை சந்தித்த வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா.


சங் பரிவாரத்தின் நடவடிக்கைகள் இன்னும் பயங்கரமாகவும், தீவிரவாத தன்மையுடையதாகவும் மாறும் என்றும், அதை எதிர்த்த போராட்டங்கள் கட்டாயம் வெற்றி பெறும் என்றும் திரைக்கலைஞர் கமல் ஹசன் கூறியுள்ளார்.பிக் பாஸ்நிகழ்ச்சியால்கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும், அந்நிகழ்ச்சியைத் தடை செய்துவிட்டு அதைத் தொகுத்து வழங்கும் திரைக் கலைஞர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இந்து மக்கள் கட்சி பரபரப்பைத் தூண்டியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக கமல் பேட்டியும் கொடுத்துவிட்டார்.அனைத்து ஊடகங்களிலும் இந்த பிக் பாஸ் கமல்தொடர்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போதைய இந்தியாவின் பிக் பாஸ் ஆக இருக்கும் பிரதமர் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் தன்னைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் களிடம் கமல்ஹாசன் கூறிய கருத்துகளைத் தமிழில் மின்னம் பலம் இணைய ஏடு தவிர எந்த ஊடகமும் சிறிதாகக் கூட வெளியிடவில்லை.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேசிய அளவில் மதவெறிக்கு எதிரான பிரச்சாரம் ஜூலை 5 முதல் 12 வரை நடைபெற்றது.இதன் முடிவில் தேசிய மனிதஉரிமை ஆணையத்தைச் சந்தித்துமோடி அரசின் கீழ் இந்தியாவில் சிறுபான்மையினர், ஒடுக்கப் பட்டோருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுக்க இருக்கிறார்கள்.இந்த முயற்சிக்கு ஆதரவு கேட்டு ஒருபக்கம் மக்களைச் சந்தித்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இன்னொருபக்கம் திரைக் கலைஞர்கள் கமல்ஹாசன், ரோகிணி உள்ளிட்ட ஆளுமைகளையும் சந்தித்தனர்.கடந்த ஜூலை 10ஆம் தேதி கமல்ஹாசனை சென்னையில் அவரது இல்லத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் முகமது ரியாஸ் சந்தித்தார்.

அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க இருக்கும் மனுவைக் கமலிடம் கொடுத்து முறைப்படி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதை கமலும் ஏற்றுக் கொண்டார்.இந்தச் சந்திப்பில் முகமது ரியாஸோடு, ஜனநாயக வாலிபர்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, டி.கதிர், பத்திரிகையாளர் ஜாபர் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்தச் சந்திப்பின் போதுகமல்ஹாசன் மோடி ஆட்சிதொடர்பாக தனது கருத்துக்களையும், மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றிய கருத்துகளையும் முன்வைத்தார்.கமல்ஹாசனைச் சந்தித்தபோது பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினார். மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றி பேச்சு தொடங்கியது. பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் கொடிய தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற் கொண்ட பிரதமர் மோடி ஒருவார்த்தைகூட பேசாதது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாபாலஸ்தீனத்தை கைவிட்டுவிட் டது.

குஜராத்தின் பிஞ்சுக் குழந்தைகளைப் போலத்தான் பாலஸ்தீனத்தின் பிஞ்சுக் குழந்தைகளும் என்பதை மோடியும் அவரது கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாதுஎன்று கவலையோடு கூறினார் கமல்.மேலும், ‘தேசத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் சங் பரிவாரங்களின் போக்கு பலப்பட்டுள் ளது. இதற்காக 100 வருடங்கள் அவர்கள் முயற்சித்து வந்ததுதான் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பலன். மோடியின் ஆட்சியில் இப்போதுள்ளதைவிட மிகப்பெரிய ஆபத்தை இனி எதிர்பார்க்கலாம். சங் பரிவாரங்களின் நடவடிக்கை இனிஇன்னும் தீவிரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும்.ஏகாதிபத்தியத்தை நோக்கிச் செல்லும் ஆட்சியாளர்கள் எப்படி அழிந்து போனார்கள் என்பதை சரித்திரம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. அதனால் நாட்டின் இந்தப் போக்கில் மாற்றம் வராது என்றுகருத வேண்டியதில்லை. போராட்டங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இளைஞர்களே.

இந்தத் தீமைக்கு எதிரான போராட்டத்தில் உயிரே போனாலும் பரவாயில்லை என்று உறுதியோடு போராடுகிற அமைப்புகள் வர வர இந்தப் போராட்டம் வெற்றி பெறத்தான் செய்யும். இதற்கான வழிகாட்டும் அமைப்பாக வரலாற்றில் இந்தியாவேஎதிர்பார்க்கும் அமைப்பாக ஜனநாயக வாலிபர் சங்கம் இருக்கிறது. பெரும்பான்மையாக உள்ள சாதாரண மக்களுக்காக ஆட்சி அதிகாரத்தை எப்படி மாற்றிக் காட்ட முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டிய தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்தான் என்பதை மறந்துவிட வேண் டாம் என்று ஊக்கம் தந்தார் கமல் ஹாசன்’’ என்றார் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் முகமதுரியாஸ்.





Shortstory     ilakiya vel

 பையன்கள்   : சுப்ரபாரதிமணியன்
---------------------------------


" அந்த பீகார்  பையனெ எதுக்குடா அடிச்சே "

" திருட்டுப் பய... கை ..வெச்சுட்டான்.""

" எங்க..

“   சண்முகம்  மாளிகைக் கடையிலே என்னமோ சாமான திக்கித் திணறி கேட்டிருந்தவன் சக்கரை ஒரு கிலோ பாக்கெட்  கட்டி  வெச்சிருந்ததை எடுத்திருக்கான். "

" என்ன ஒத்துட்டானா... இல்ல சாத்தனும்னு சாத்தறீங்களா. "

ஒத்துட்ட மாதிரிதா உளறுனான். அவன் பாஷை யாருக்குத் தெரியும்.

" அவன் பீகார்க்காரன , ஒரிசாக்காரனா , இல்லெ..."

" இப்போ ஒரிசா இல்லே ...ஒடிசாதா ..."

" ஆமாமா ... அவன் பீகார்க்காரனா, ஒடியாக்காரனா , பெங்காலியா, வடகிழக்கு இந்தியா, மேகலயாக்காரன..."

" ஆமாமா...இதிலே ஒருத்தன் அவன் பீகார்க்காரனாக்கூட இருக்கலாம். ஒடிசாக்காரனாகவும் இருக்கலாம்,மெகாலையாக்காரனா கூட இருக்கலாம். எல்லாருந்தா இங்க வேளையில இருக்காங்களே. காலையிலிருந்து கடைகள்மூடிக் கிடந்தது. இப்பத்தா தொறந்த மாதிரி இருந்துச்சு  "
          
       ரத்னவேல் அடிபட்டவனைப் பார்த்தான். உதடுகள் வீங்கிப் போயிருந்தன. சின்னதாய் ரத்தக் கீற்று அவனின்மேலுதட்டில் தென்பட்டது. தலை கச கச வென்று கலைந்து போயிருந்தது. சட்டையைப் பிடித்து உலுக்கிய மாதிரிகசங்கிப் போயிருந்தது. கட்டம் போட்ட சட்டையில் அவனின் கை புஜங்கள் தெரியுமாறு சுருட்டி தைக்கப்பட்டிருந்தசட்டை. அழுக்கடைந்த ஜீன்ஸ் பேண்ட் தரையில் புழுதியுடன் சேர்ந்திருந்தது.

" இங்க வந்தவனா இதுக்குன்னு... இல்லே இங்க எங்காச்சும் வேலை செய்யறவனா..."

" கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யறவன்னு நினைக்கறேன். அடிச்சப்பறமும் ஒரு வார்த்தை கூட தமிழ்ல பேசல.புது ஆளு போல இருக்கு. முந்தி வந்தவன்னா ஏதாச்சும் நாலு வார்த்தை தமிழ்ல  பேசுவானில்லே.பழகிருப்பானே.."

" இருக்கலாம். இல்லே பயத்திலே தமிழ் வரமே இருக்கலாம். "

       சண்முகம் கண்களை விரியத் திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். குண்டு பல்ப் லேசானவிளக்கொளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. குண்டு பல்ப்பை மாற்றச் சொல்லி பல சமயங்களில் ரத்னவேலு கூடசொல்லியிருக்கிறான். அவர் அதைப் பார்த்து சாமாதானம் ஏதாவது சொல்வார்.

 " ஆனா இந்த வெளிச்சம் போதுங்க எதுக்கு மாத்திட்டு... வேற லைட்டுன்னா அதிகம் செலவாகும். "

" இதுலதா கரண்ட் அதிகமா செலவாகும். எல். இடி யெல்லா போட்டுட்டா கம்மி செலவாகும். அப்புறம் சுற்றுச் சூழல்,காரியமிலவாயுன்னு நிறைய..."

" இருக்கட்டுங்க. பல்ப் போயிட்டாலோ, உடைஞ்சுட்டாலோ மாத்தறப்போ யோசிக்கிறன் "

    மாடசாமியின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று விறு விறுவென்று நடந்தான் ரத்னவேல் . தெற்கு முக்கைகடக்கும்போது அதே போல் குண்டு பல்ப் மாட்டப்பட்ட மாடசாமியின் வீட்டைப் பார்த்தான். தூரத்து உறவில்அம்மாவின் உறவாக மாமா ஆகிறார் மாடசாமி. மாடசாமி எப்போதும் சாயங்காலமானால் குடித்துவிட்டு தள்ளாடியபடிதிரிவார். வெத்திலைத்  தோட்டமொன்றில் வேலை செய்பவர். வேலை செய்கிறதிற்குச் சம்மாக ஓய்வெடுப்பார்.

" வெயில்ல அலையறமில்லையா... சாயங்காலம் ஆனா உடம்பெல்லா அடுச்சுப் போட்ட மாதிரி ஆகுது. அதுதாகுடிக்கரன். "

" வெத்தலைத் தோட்டத்தில வேலை செய்யற மத்தவங்க உங்களை மாதிரிதான் சாயங்காலம் ஆனாகுடிக்கறாங்களா..."

" அதெல்லா அவனவன் பிரியம். அவனவன் சவுகரியத்தைப் பொறுத்தது."

" அப்போ நீங்க ரொம்பவும் சவுகரியமா இருக்கறதா சொல்றீங்களா"

" அதுதான் அவனவன் இஷ்ட்டம் ... அவனவன் பிரியம்ன்னு சொல்லியிருக்கேனில்லையா."

அவர்கள் வீட்டில் இஷ்டத்திற்குத் தகுந்த மாதிரி பலரும் குடிப்பார்கள். அத்தை கூட குடிப்பாள். இரு மருமகன்கள் அங்குவரும்பொழுது மாமாவுடன் சேர்ந்து குடிப்பார்கள். ஒரே களேபரமாக இருக்கும். எந்த வகை வசவாக இருந்தாலும்அப்போது சாதாரணமாகப் புழங்கும்.வசவைத் தெளித்துக் கொள்வதற்காக ஒன்றாய் உட்காருவதைப் போலிருக்கும்.

குண்டு பல்ப் வீட்டு முகப்பை கூசி தெளிவற்றதாகிக் கொண்டிருந்தது. யாரோ விட்ட கைபேசி அழைப்பு மாடசாமிக்குவந்து அதை அவர் எரிச்சலுடன் பட்டனை அமுக்கி நிராகரித்தார். அழைப்பு மணி மறுபடியும் வந்தது. மறுபடியும்நிராகரித்தார்.

      திருச்சேரையில் நடந்த பிரச்னையையொட்டி காவல் நிலையத்தில் கூட்டம் கூடி விட்டது. திருச்சேரைக்கும்,பழையனூருக்கும் சேர்ந்து ஒரு காவல் நிலையம் இருந்தது. பழையனூரில் காவல் நிலையத்தில் பொது மக்கள்கூடியதால் போக்குவரத்து தடைபட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. டாஸ்மார்க் பார் மட்டும் காவல் துறையைச்சார்ந்த இருவரின் காவல் துணை கொண்டு திறந்திருந்தது.  அவர்கள் சவுகரியமாய் உட்கார்ந்து கொள்ளநாற்காலிகளும் தரப்பட்டிருந்தன.

மாடசாமியின் முன்னால் சின்ன டீப்பாய் இருந்தது அதில் இரவின் மங்கிய வெளிச்சத்திலும் ஊறுகாய் பாட்டில்தெரிந்தது. மது பாட்டில் ஒன்றில் பாதி சரக்கு தீர்ந்திருந்தது. அதன் மினுங்கல் பாட்டிலை அழகாக்கியிருந்தது.

" ஒயின் ஷாப் போலீஸ் பாதுகாப்போட இன்னிக்குத் தொறந்திருந்தது கண்ணு"
போதை ஏறி விட்டால் மனைவியை மாடசாமி கண்ணு என்றுதான் கூறுவார். " என் கண்ணு இல்லமே நான் இருக்கமுடியுமா " என்பார் மிகவும் நெருக்கமாய் உட்கார்ந்துகொண்டு .

" நேத்து போலீஸ் பாதுகாப்போட பொணம் போச்சாமா "

" பாதுகாப்போட எங்க போச்சு. பொணத்தை போலீஸ்காரங்கதா தூக்கிட்டுப் போனாங்களாம்.
இன்னிக்கு போலீஸ்காரங்க பொணத்தைத் தூக்கிட்டுப் போறதா படமாக் கூட பத்திரிக்கையில்  போட்டிருக்காங்களாம். "

" செரி... செரி... போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலையுன்னு சொன்னது இப்போ பொணத்தைத் தூக்கறதும்போலீஸ்காரன் வேலைன்னு ஆயிப் போச்சு போல..."

மாடசாமியின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று விறு விறுவென்று நடந்தான் ரத்னவேல். பெரும்பாலும்மிதிவண்டியில்தான் உள்ளூரில் இருக்கும் இடங்களுக்குச் செல்வான்.
 " தவணைக்குன்னு ஒரு டி. வி.எஸ்  வாங்கிக்க என்று அவன் அம்மா சொன்னாலும். " சைக்கிள் போதும்மா" என்பான்.
 " நெறைய விஷயம் இருக்கும்மா. ஒடம்புக்கு சைக்கிள் ஓட்டறது ஒரு எக்சசைஸ் போல அப்புறம் எரிபொருள் ,மாசுன்னு..."

" ஸ்கூல்ல கிளாஸ் எடுக்கறமாதிரி என்கிட்டயும் பேசாதடா..."

" உனக்கு வெளங்கற மாதிரி சொல்லனும்னு..."

" செரி.. நானும் புரிஞ்சிக்கறேன்...."

புழுதியைப் பரப்பிச் சென்ற டூரிஸ்ட் வேனின் விரைவு அபரிதமான வேகத்தில் இருந்தது.
மூக்கைச் சுளித்தவாறு பெரிய தும்மலை போட்டான். புழுதி சற்றே அடங்கி எதிரிலிருந்த " டாஸ்மாக் பாரை" க்காட்டியது. " இயற்கை சூழலுடன் இருக்கும் மதுபானக் கடை" என்ற போர்டு பல வருடங்களாய் அங்கிருந்தது. அந்தபோர்டு போட்ட சில நாட்களிலிலேயே அந்தப் பெயருக்கான காரணத்தைப் புலனாய்வு செய்து கண்டறிந்தான். உள்ளேஇரண்டு வேப்ப மரங்களும், ஒரு புன்னை மரமும், சீமைக்கருவேல மர புதரும் இருந்தன. அவையே இயற்கைச் சூழல்என்ற அடைமொழியை அந்த மதுபானக் கடைக்குக் கொண்டு வந்திருந்தது. வண்டியில் இருந்த பாத்திரங்களூடே ஆவிபறந்து இட்லி தயாராகிக் கொண்டிருப்பத்தைச் சொன்னது. பாத்திரத்தின் வெக்கை கொஞ்ச தூரம் பரவியிருந்தது.

மதுபானக் கடையிலிருந்து சாவகாசமாக வெளியேறிய இரு மாணவர்கள் எட்டாம் வகுப்பு " ஈ " பிரிவைச் சார்ந்தவர்கள்என்பதை ரத்னவேலால் சரியாக அடையாளம் காண முடிந்தது.தன்னிடம் பாடம் கற்கிற மாணவர்கள்தான் என்பது ஞாபகம் வந்தது. லாரியொன்று பெருத்த புழுதியால் அவன் முகத்தை கைக்குட்டையால் மூடச் செய்தது..மூச்சு முட்டுவதுபோலிருந்து.

சண்முகம்  மாளிகைக் கடையில் அடிபட்டப் பையன் கண்களில் வீக்கம் தெரிய கால்களை விந்திக் கொண்டு நடந்து  அவனின் மிதிவண்டியைக் கடந்து போனான்.



subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003