கனவு இலக்கிய வட்டம்
” கனவு இலக்கிய வட்டம் “ ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கதை
எழுதும் “ கதை சொல்லி.. “ போட்டியை
நட்த்தி வருகிறது. இவ்வாண்டில் அப்போட்டிக்கு தமிழகம் முழுவதுமிருந்து 140 கதைகள்
வந்திருந்தன. அதில் 20 கதைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ5000 பரிசு
பகிர்ந்தளிக்கப்பட்டு தபாலில் பரிசுகள் அனுப்பட்டன.
திருப்பூர் பகுதி பள்ளிகளில்
பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு ஞாயிறு மாலை அன்று பாண்டியன் நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
மருத்துவர் முத்துசாமி பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.பாண்டியன் நகர்,
கூத்தம்பாளையம் பிரிவு, பெருமாநல்லூர் பகுதிகளைச் சார்ந்த 13 குழந்தைகளுக்கு
பரிசுகளை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ஜோதி, முனைவர் ரங்கசாமி,
அனிதா உட்பட்டோர் கலந்து கொண்டனர். கதைகளை
தேர்வு செய்த மனோகர், செல்வராஜ் கவுரவிக்கப்பட்டனர். கதை சொல்லும் பயிற்சி யைப் போல் கதை எழுதும்
முறைகளை குழந்தைகள் கடைபிடிக்க வேண்டியது பற்றி பலரும் பேசினர் . ” கனவு இலக்கிய வட்டம் “ சார்பில் சுப்ரபாரதிமணியன் நன்றி கூறினார்.
புகைப்படங்கள்: முகநூல் :Kanavu
subrabharathimanian tirupur
செய்தி : சுப்ரபாரதிமணியன்