உலக வன நாள்
---------------------------------------------------------------
பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்
உலக வன நாள் திங்களன்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார்.
சமூக ஆர்வலர் அ.மனோகர்
சிற்ப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து
கொண்டு பேசுகையில் உலகில் காடுகள் 50 சதவீதம் உயிரினங்கள் வாழும் இடமாக உள்ளது. அந்த உயிரினங்களைக் காப்பாற்றவும் மனித குலம் உயிர் வாழ ஆதாரமான குடிநீருக்கும்,
விவசாயத்திற்கும் மழையை தரும் மரங்களின் மூலமானக் காடுகளைப் பேண வேண்டிய
அவசியம் பற்றியும்
எடுத்துரைத்தார்
கீழ்க்கண்ட இரு நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1. சிறுவாணி-
கோவையின் குடிநீர் .சிஆர் இளங்கோவன் எழுதியது.
2. சூழல்- சுப்ரபாரதிமணியனின்
சுற்றுச்சூழல் கட்டுரைகள் . ஆசிரியை
பிரியா நன்றி கூறினார்.