ஜீன்
12 உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
_______________________________________________
உதவிக்கு நீளும் பிஞ்சுக்கரங்கள்
சுப்ரபாரதிமணியன்
கதிர்
பிடித்தக் கழனியில்
புல்லடர்ந்த பரப்பில் நிற்க வைத்து
என்னைக் குருவி விரட்டப் பணியுங்கள்
ஓடி ஓடிச் செய்வேன்
புல்லடர்ந்த பரப்பில் நிற்க வைத்து
என்னைக் குருவி விரட்டப் பணியுங்கள்
ஓடி ஓடிச் செய்வேன்
ஆட்டு மந்தை காட்டி
குளிப்பாட்டி வரச் சொல்லுங்கள்
குட்டியொன்றைத் தோளில் போட்டு
ஓடைக்கு ஓட்டிச் செல்வேன்
குளிப்பாட்டி வரச் சொல்லுங்கள்
குட்டியொன்றைத் தோளில் போட்டு
ஓடைக்கு ஓட்டிச் செல்வேன்
எருமைகளடைக்கும்
கொட்டடிக்குக் கூட்டிப் போங்கள்
கன்றுகளின் சம்மதத்தோடு
உங்கள் பாற்குடங்களை நிரப்பிவிட்டு
சாணியள்ளக் கூடையெடுப்பேன்
கொட்டடிக்குக் கூட்டிப் போங்கள்
கன்றுகளின் சம்மதத்தோடு
உங்கள் பாற்குடங்களை நிரப்பிவிட்டு
சாணியள்ளக் கூடையெடுப்பேன்
அந்த மரநிழலில்
கிடக்கும் கட்டைகளை
விறகுடைக்க ஏவுங்கள்
பிளந்து கட்டுவேன்
விறகுடைக்க ஏவுங்கள்
பிளந்து கட்டுவேன்
சோடி எருதுகளும்
கலப்பையும்
கொடுங்கள்
அறுவடைக்குச்
சொல்லியனுப்புவேன்
கொடுங்கள்
அறுவடைக்குச்
சொல்லியனுப்புவேன்
அதைவிடுத்தென்னை
கொதிகாற்றலையும் ஆலைக்கு
கூலிக்கு ஓடச் சொல்கிறீர்களே
கொதிகாற்றலையும் ஆலைக்கு
கூலிக்கு ஓடச் சொல்கிறீர்களே
-மகுடேசுவரன் கவிதை
(பூக்கள் பற்றிய தகவல்கள்)
குழந்தைத்
தொழிலாளர் உழைப்பென்பது
தொழில் புரட்சியில் ,தொழிற் சாலைகளில் அசுரவளர்ச்சியின் உடனடி விளைவு என்று சொல்லலாம். விவசாயம். கைவினைப் பொருட்களின்
தயாரிப்பில் பல ஆண்டுகளாக இருந்து வருவது. அதுவும் முறைசாரா தொழில்களில் குழந்தை உழைப்பு கணிசமானது. இத்தொழில்களில்
பெரும்பான்மையானவை எந்தத் தொழிலாளர் சட்டத்திற்கும்
கட்டப்படாதவை என்பதால் பிரதானமாக மலிவாக குழந்தைகளின் உழைப்பை பயன்படுத்துகின்றன.
உலக மக்களில் மூன்று பேருக்கு ஒருவர் குழந்தை. குழந்தைப் பருவத்தை மறந்தவர்களாய்
தொழிலாளி வர்க்கத்தில்
சேர்ந்தவர்களில் இந்தியாவில் 1000 லட்சம் குழந்தைத்
தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில்
குழந்தைத் தொழிலாளர்கள்
அதிகம் உள்ள ஏழாவது மாநிலம் தமிழகம்.
ஒரு வகையில் பெற்றோரின்
வறுமை என்பது காரணமாகிறது. அதன் பலவகைகளில்
குழந்தை உழைப்பே வறுமைக்குக் காரணம். குழந்தைத்
தொழிலாளர்கள் மலிவான கூலிக்கு அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அதனால் பெரிய வளர்ந்த தொழிலாளர்களில்
வேலைவாய்ப்பு மீறிப் போகிறது. வளர்ந்த தொழிலாளர்கள்
சரியான முறையில் குழந்தைகள் செய்யும் தொழிலில் பயன்படுத்தப்படும் பொழுது குடும்பத்தின்
வருமானம் உயர்கிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்தை
நிச்சயப்படுத்தும். நமது கல்வி முறை குழந்தைகளை
ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்
கொள்வதாய் இல்லை. பாட முறை இறுக்கத்தடன்
அவர்களை அணுகுகிறது. தொடர்ந்த பாடச்சுமை, அதிகபட்ச மதிப்பெண்களை
எடுக்க வேண்டிய கட்டாயத்தால் ஏற்படும் மன உளைச்சல், குடும்ப வருமானத்தை குழந்தைகள்
மூலம் பெருக்கிக்
கொள்ளலாம் என்ற பெற்றோர்களின் தவறானக் கருத்து நோக்கம், வேலைக்குச்
செல்லும் குழந்தைகளின்
போலி சுதந்திர இயல்பை பார்த்துவிட்டு
கல்விச் சுமையை உதறத் துடிக்கும்
குழந்தைகள், வேலைவாய்ப்பை உத்தரவாதம்
செய்ய இயலாத சமூக அமைப்பும்
பிரதானக் காரணங்களாக
உள்ளன.. கல்வி
என்பது வன்முறையாகவும் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எட்ட முடியாததாக உள்ளது.
குழந்தைத்
தொழிலாளர்கள் பற்றியும், தொழிலாளர்
முறை பற்றியும்
பல விதமான மாயைகளும், பிரம்மைகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பல விதங்களில்
விவாதங்கள் நடைபெறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம்
குழந்தை உழைப்பை ஊக்குவிப்பதாய் எண்ணுகிறோம். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் உழைக்கும்
குழந்தைகள் நிறைந்த பகுதிகளில்தான் மக்கள் பெருக்கம் அதிகமாவதைத்
தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்கள்
இன்னும் சில குழந்தைகள் இருந்தால்
வருமானத்தைப் பெருக்கலாம்
என்று தவறாக எண்ணி குடும்பக்
கட்டுப்பாட்டில் அக்கறை கொள்ளாதிருக்கின்றனர். குழந்தைகள் பள்ளிப்படிப்பை
இடையில் நிறுத்திவிடுவது குழந்தைத் தொழிலாளர்கள்
உள்ள பகுதிகளில்
அதிகம் உள்ளது. படிக்காமல்
இருப்பது குழந்தைகள்
உழைப்பை ஊக்குவிக்கிறது
என்ற கருத்தாக்கத்தை
உடைத்தெறிந்துவிட்டு குழந்தை உழைப்பு படிப்பார்வத்தை
குறைக்கிறது என்பது உண்மை. குழந்தைகளை வேலையிலிருந்து
நீக்கினால் வேலையின்மை
பெருகிவிடும் என்ற தவறானக் கருத்தும்
உள்ளது, குழந்தைகள் செய்யும் வேலையை வளர்ந்தவர்களுக்கு சில மாற்றங்களுடன்
ஒதுக்குகிறபோது வேலையில்லாத
வளர்ந்தவர்கள் வேலை பெற்றவர்கள் ஆகிறார்கள். முதலாளித்துவ
சமூக அமைப்பை மாற்றுவதே இக்கொடுமைக்கு
நிரந்தரத் தீர்வு என்ற பொதுவுடமைக்
கருத்தாக்கமும் நிலவுகிறது. "முதலாளித்துவ சுரண்டல் பெற்றோர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதால் விளைந்தது
அல்ல. மாறாக முதலாளியின்
சுரண்டல்தனம் பெற்றோர்களின்
அதிகாரத்தில் பொருளாதார
அடிப்படையை பறித்து விட்டதால் குழந்தைகள்
மீது தங்களது உண்மையான அதிகாரத்தை
அவர்கள் விஷமத்தனமான
தவறானத் தேவைக்கு பயன்படுத்த வகை செய்தது" என்றார் காரல் மார்க்ஸ். தொழில் மயமான முதலாளித்துவ நாடுகளில்
படித்தத் தொழிலாளர்களின்
தேவை அதிகம் ஏற்பட்டது என்பதையும்
காண நேர்ந்தது. குழந்தைகள்
ஏழை நாடுகளில்
தான் அதிகம் வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பதும் மாயைதான். வளரும் நாடுகளில் குழந்தை உழைப்பு அபரிமிதமாக
இருக்கிறது. தொழில்வள நாடுகளிலும்
குழந்தை உழைப்பு உள்ளது. அவர்கள் பணிபுரியும்
வேலையின் தன்மை, பணியாற்றும்
சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு அபாயத்தன்மை
கணிக்கப்படுகிறது.
இந்திய
நாட்டுச் சட்டத்தில் 45வது பிரிவு 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதி செய்திருந்தாலும் சட்ட அமுலாக்கம்
என்பது சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை. 24வது பிரிவு தரும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது
என்ற விதியும் அலட்சியமாகக் கைகொள்ளப்படுகிறது. கல்வியை கட்டாயமாக்கிய
நாடுகளில் கல்வி கடமையாக கருதப்படுகிறது. உரிமையாகக்
கருதும் தன்மையை மீறிய எண்ணம் மேலோங்குவது இதற்குக் காரணம். கடமையாகக் கல்வி கருதப்படும் பொழுது பெற்றோர்கள் சட்டப்படி
குழந்தைகளை பள்ளிகளுக்கு
அனுப்புகின்றனர்.
குழந்தைத்
தொழிலாளர் சட்டங்கள்
சரியாக அமுல்படுத்த
வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அக்கறை கொள்வதில்லை. நமது அரசியல் தலைவர்களும், தொழிற்சங்கத்
தலைவர்களும் அவர்களே முதலாளிகளாக இருப்பதோ அல்லது முதலாளிகளுக்கு
இணக்கமாக இருப்பதோ முக்கியமானக் காரணங்களாகும்.
குழந்தைகளை
பொருளாதாரச் சொத்தாகக்
கருதும் எண்ணம் சிதைக்கப்படுவதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கும்
இயந்திரங்கள் என்ற கருத்தும் தகர்கிறது. சட்டப்படி
குழந்தைத் தொழிலாளர்களின்
வயது வரம்பு என்பது 14. இதை 18 அல்லது 20 வயதாக அதிகரித்தல்
என்பது மிகவும் முக்கியமானதாகும். அபாயகரமானத் தொழில்கள்
என்ற பட்டியலில்
அதிகப்படியாகத் தொழில்கள்
அரசாங்கத்தால் சேர்க்கப்படும்
போது குழந்தைகளை
அவற்றில் பயன்படுத்துவது
தவிர்க்கப்படும், சட்டமாக்கலின் போது இந்தப் பட்டியல்கள்
குறித்த அக்கறை சரியான அளவில் இருக்க வேண்டும்.
ஒரு புறம் ஏழைக் குழந்தைகளுக்கு
பணம், புத்தக உதவி, மதிய உணவு, சீருடை தருதல் போன்றவற்றால் கல்வி கற்பதற்கான சூழல் மேம்பாட அடைவதற்கான
முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை குழந்தைத் தொழிலாளர்
ஒழிப்பிற்கு எந்த வகையிலும் உதவாது. பள்ளிச் சேர்க்கை முக்கியமானதல்ல. அவர்கள் தொடர்ந்து பள்ளிப்படிப்பைத் தொடர செய்யும் உதவிகள், செயல்பாடுகள் முக்கியமானவை. கட்டாயமாக்கப்பட்ட கல்வி முறை பற்றி ஏழை பெற்றோர்கள் சட்டத்திற்கு
கீழ்ப்படியத் தேவையான எண்ணத்தை உருவாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து
அவசியம் செய்யப்பட
வேண்டும். சில சமயம் குழந்தைத் தொழிலாளர்
சட்டங்கள் செயலிழந்து
போவதற்கு பெற்றோர்களின்
இரக்கமின்மையும், ஒருவித எதிர்ப்பும்
காரணமாகி விடுகின்றன. குழந்தைகளின்
உரிமை குறித்த அக்கறை பெற்றோர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. கல்விக்காக ஒதுக்கப்படும்
நிதி ஒவ்வொரு ஆண்டிலும் அதிகரிக்கப்பட
வேண்டும். சமூக சேவை அமைப்புகளின் செயல்பாட்டில்
ஆரம்பக் கல்வியின்
சுமையை விலக்கி, சுலபமானதாக்கும் முயற்சிகள் நிறைய செய்யப்பட வேண்டியுள்ளன. இது குறித்த அரசியல் உணர்வுகள் இயக்கங்களாக
வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயங்களை உணர வேண்டிய சூழல் தற்சமயம் உருவாகி உள்ளது.
நான் திருப்பூருக்கு
குடியேறிய 20 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் 60,000 குழ்ந்தைத்தொழிலாளர்கள்
திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில்
இருந்தனர். அரசின் கடுமையானச் சட்டங்கள், ஏற்றுமதி தரத்தில் ஏற்படுத்தப்பட்ட
நிர்பந்தங்கள், கார்ப்ரேட் சமூக்அ செயல்பாட்டின்
செயல்பாடுகள் ஆகியவை இப்போது ஏற்றுமதித்துறையில் குழந்தைத் தொழிலாளர்கள்
உழைப்பை அபூர்வமாக்கி விட்டது.கல்வி உரிமைச் சட்டமும் குழ்ந்தைத் தொழிலாளர்களில்
சிறுபான்மையோரை கல்வி குறித்த அக்கறையைத் தந்துள்ளது ஆறுதலானது..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன் , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641
602 *09486101003 /