சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 4 ஜூன், 2010

வேட்டையாடப்படும் எழுத்தாளர்கள்

2009 கேரளத் திரைப்பட விழாவில் பார்த்த சில படங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
‘லவ் லைஃப் ஆஃப் எ ஜெண்டில் வேர்டு’ என்ற குரோஷிய நாட்டுப் படத்தில் இடம்பெறும் எழுத்தாளன் சகா வெற்றிபெறாத எழுத்தாளன். எழுத்தும், தனிப்பட்ட வாழ்க்கையும் நிறைவுறாத தனிமைத்தீவுகளாய அமைந்திருக்கின்றன. மனைவியைப் பிரிந்துவாழும் சூழல். பையனை அவ்வப்போது பார்ப்பது மட்டும் ஆறுதலாக இருக்கிறது. மனைவி வேறொருவனுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துகிறாள். முதுகு வலிக்கு மஸாஜிற்குப் போகுமிடத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. ஆறுதலாக அமைகிறது. ஆனால் அதுவும் நீண்டநாள் நீடிப்பதில்லை. மீண்டும் தனிமையான வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறான்.


மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு தொழில் சார்ந்தும் குறிப்பாய் இயங்கும் எழுத்தாளர்கள் உண்டு. சகா ஓட்டல்களின் தரம் பற்றியும் அவற்றை முன்வைத்துப் பல்வேறு விஷயங்களையும் எழுதுகிறவன். ஏன், சமையல் குறிப்புப் புத்தகம் எழுதலாமே என்று பதிப்பாளர் ஒருவர் கிண்டல் செய்கிறார். காப்ரியல் மார்க்கியூஸ் போல் தேவையில்லை என்கிறார். பதிப்பாளருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுவது சிரமமாக இருக்கிறது. அவன் கதைகளும் எழுதுகிறான். அவற்றை விளையாட்டுப் பயிற்சியாளர் பெண் படித்து சிலாகிப்பதுதான் அவர்களின் நட்பை சற்றே நீட்டிக்கச் செய்கிறது. ஆனால் மஸாய், நீராவிக் குளியல் என்று அவன் அலைகிறபோது பெரிய மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களின் உலகம் பற்றி எழுதுகிறபோது தொல்லைக்கு உள்ளாகிறான். தாக்கப்படுகிறான். விளையாட்டுப் பயிற்சியாளர் பெண்ணின் நட்பும் அறுபடுகிறபோது சிரமத்திற்குள்ளாகிறான். அவனின் முதுகு வலி ஒருவகைக் குறியீடாய் படம் முழுக்க அமைந்திருக்கிறது. வெற்றி பெறாத குடும்ப வாழ்க்கையும், எழுத்தாளன் பணியும் அவனின் முதுகு வலியால் பாரமாய் அமைந்துவிடுகின்றன.
குரோஷியாவில் ஆண்டுதோறும் பத்துப் படங்கள் வெளிவந்தாலே அதிகம். 1940ல் யூகோஸ்லேவியா படத் தொடர்புகள் காரணமாக குரோஷியப் பட உலகம் எழுச்சி பெற்றதாக இருந்திருக்கிறது. அறுபதுகளில் நவீனத்துவமும், பல்வேறு உத்திகளும் படங்களைச் செழுமையாக்கியிருக்கின்றன. தொண்ணூறுகளில் ஏற்பட்ட போர்கள் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதித்து திரைப்பட உலகத்தையும் பாதித்திருக்கிறது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சுதந்திரமான வெளிப்பாட்டு முறைக்குத் திரைப்பட இயக்குனர்களைக் கொண்டு சென்றிருக்கிறது. குரோஷியத் திரைப்பட உலகத்தின் மூன்றாவது பொற்காலம் என்று குறிப்பிடும் வகையில் அவை அமைந்திருக்கின்றன. நகைச்சுவை, போர் நிகழ்வுகளும், அரசியலும் என்று பல்முகத் தன்மையைக் கொண்டதாக படங்கள் அமைந்து வருகின்றன. சகாவின் நிலைமை அங்கு வாழும் சாதாரண மனிதனின் நிலையாகவே இருக்கிறது.
மலையாள இயக்குனர் ஷ்யாம்பிரசாத்தின் ‘ரிது’ படைப்புத் தன்மை ஒரு குடும்பத்தில் தொடர்ந்து வருவதை, தகவல் புரட்சி தொழில்சார்ந்து இயங்கும் இளைஞனிலும் உள்ளீடாகி இருப்பதைக் காட்டுகிறது. ஷ்யாம் பிரசாத்திற்கு எழுத்துலகம் ஆதர்சமாகவே இருந்திருக்கிறது. அவரின் முதல் படமே லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலை மையமாகக் கொண்ட ‘அக்னி சாட்சி’யாகும். சென்றாண்டில் வெளிவந்து சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற ‘ஒரே கடல்’ வங்காள எழுத்தாளர் தனில்சங்கோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டதாகும்.
‘ரிது’வில் குழந்தைப் பருவத்திலிருந்து நட்பாய் வளர்ந்த மூவரின் இன்றைய கதையாக இருக்கிறது. இருவர் ஆண்கள். ‘சிலிக்கன் வேலி’யிலிருந்து ஊருக்கு வரும் சரத்வர்மா, பெங்களூர் ஐ.டி. தொழிலில் இருக்கும் மற்ற அந்த இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கணினி மென்பொருள் துறை நிறுவனத்தில் சேருகிறார்கள். சிறு கிராமச் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். வாழ்க்கை ஒரே துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் நினைவுகளைக் கிளறிப் பார்க்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது.


வர்சாஜானிக்கும், பெண் தனி இம்மாட்டிக்குமான நட்பு ஒருவகையில் அவர்களை ஒரு இணையாகக் காட்சியளிக்க வைக்கிறது. தனியுடனான நட்பைப் பெரிதும் விரும்பும் சரத்வர்மா அவள் நவீன எண்ணங்களுடனான பெண் என்பதால் அவளின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவனைச் சங்கடப்படுத்துகின்றன. தனக்கானவளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். வர்சாஜானி குடும்பத்திலிருந்து அந்நியப்படுகிறான். இந்த வயதிலும் அவனை அடித்துத் துன்புறுத்தும் அப்பா மென்பொருளை வெளியாளுக்கு விற்கவும் துணிகிறான். பிடிபடுகிறான். மென்பொருள நிறுவனத் தொழில் அனுபவங்கள் சரத்வர்மாவிற்குக் கசப்பானதாக அமைந்து விடவே அதிலிருந்து வெளியேறி எழுதுகிறான். நண்பர்களின் பார்வையிலிருந்து மறைந்து போகிறான். சரத்வர்மாவின் அப்பா ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவன் எழுதி வைத்திருந்த டைரியை அவன் அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் தந்து அவனின் வெளிப்பாடு தனித்துவமானதாகும், மொழி சுயமாகவும் இருப்பதால் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிறார். மென்பொருள் நிறுவனத் தொழில் சூழல், அலைக்கழிக்கும் தனி இம்மாட்டி போன்றோர் அவனை அவனுள் பரிமாறிக் கொள்ள வைக்கத்தக்க கவிதைப் படைப்புகளை உருவாக்குகின்றன. சரத்வர்மாவின் தந்தை சாவதற்கு முன் அவனுடன் காரில் பயணம் செய்யும்போது அவனின் வேலை மீறி அவன் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்கிறார். மென்பொருள் துறையில் அவன் அப்பாவின் எழுத்தாளர் நிலையும், அவன் சகோதரனின் பொதுவுடமை சித்தாந்த ஈடுபாட்டால் தனிப்பட்ட வாழ்க்கைத் தோல்வியும் நகைப்பிற்குள்ளாக்கப்படுகின்றன. அவர்களின் போலி உலகத்திலிருந்து விடுபட எழுத்து ஆசுவாசமாகிறது. ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து அந்த உலகத்திற்குள்ளேயே இயங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். தனி கணினி சார்ந்த ஒரு தொழிலில் குழந்தைகளுக்குப் பயிற்சியாளராக இருந்து ஆசுவாசம் பெறுகிறான். வர்சா ஜானி மென்பொருள் துறை தொழிலில் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறான். சரத்வர்மா எழுதின நாவல் ‘ரிது’ அவர்கள் இருவருக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பழைய நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு வேறு உலகமாகப் படைப்பிலக்கியத்தை அவன் கைக்கொண்டு தொடர்கிறான். மென்பொருள் துறை சார்ந்த அனுபவங்கள், அவர்களின் உலகம், வார இறுதி விடுமுறைக் கொண்டாட்டங்கள், உயர்தர ஆடம்பர வாழ்க்கையாய் முழுக்க இளைஞர்களின் உலகமாய் இப்படம் கொண்டிருக்கிறது. அதில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை முன் வைத்து அத்தொழிலின் இன்னொரு பக்க முகத்தையும் ஷ்யாம் பிரசாத் காட்டுகிறார். தங்களின் நிலம் அத்தொழிற்சாலைக்காய் பிடுங்கப்பட்டு, வேலை வாய்ப்பு உறுதியளிக்கப்பட்டு சாதாரண காவலாளியாக நியமிக்கப்படும் ஒரு இளைஞன் அத்தொழிலில் நடக்கும் ஊழல்கள் காரணமாக உயிரைப் பணயம் வைக்கிற சிக்கலில் மாட்டுகிறான். நிலத்தை இழந்தும், அமைதியற்ற ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் குறியீடாகப் போகிறான். அந்தக் கடைநிலை ஊழியர் இளைஞனும். இன்றைய இளைஞர்கள் உலகம் பற்றிய இளமை ததும்பும் படம் ஷியாமினுடையது.
இயக்குனர் ராஜீவ்நாத் 13 படங்கள் இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இவரின் ‘ஜனனி’ படம் 1999ல் பெற்றது. கேட்பாரற்று விடப்படும் ஒரு குழந்தையை எடுத்துப் பராமரிக்கும் சில கிறிஸ்துவக் கன்னியாஸ்த்ரீகள் பற்றின படம் அது. ஓ.வி.விஜயனின் ‘கடல்தீரத்து’ என்ற கதையையும் எடுத்திருக்கிறார். இவ்வாண்டில் வந்திருக்கும் அவரின் ‘பகல் நட்சத்திரங்கள்’ ஒரு எழுத்தாளனின் மரணம் குறித்தது. சித்தார்த்தன் என்ற எழுத்தாளன் அவனின் மாலைகளையும் இரவுகளையும் நண்பர்களுடன் கழிக்கப் பயன்படுத்தும் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். காவல்துறை அதை ஒரு கொலை என்று கணிக்கிறது. ஆனால் கொலையாளியைக் காவல்துறை கண்டுபிடிக்க முடிவதில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு சித்தார்த்தனின் மர்மமான மரணம் குறித்த அவனின் நண்பர்கள் ஆராயும் பொருட்டு பழைய இடத்திற்குச் செல்கிறார்கள். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தாலும் அவ்விடம் எழுப்பும் நினைவலைகள் எழுத்தாளனைப் பற்றியதாக இருக்கிறது. மோகன்லால், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் வணிகரீதியான வெற்றியை ராஜீவ்நாத்திற்கு இப்படம் தரவில்லை.
சோவியத் யூனியனின் சிதறலுக்குப் பிறகு தன்னுரிமை பெற்ற கஜகிஸ்தானின் படங்கள் பெரும்பாலும் பிரச்சார அம்சங்களைக் கொண்டவையாக இருந்த காலமுண்டு. ஆனால் ஹாலிவுட் பார்வை தற்சமயம் அவர்களின் படங்களை ஆக்கிரமித்திருந்தாலும் நல்ல படங்களின் வருகை ஆறுதல் தருவதாகத்தான் இருக்கிறது. சென்றாண்டில் வெளிவந்த ‘குல்சாரி’யும், இவ்வாண்டின் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான பரிசு பெற்றப் படமும் அவர்களின் முந்தைய அடையாளங்களை அழித்திருக்கின்றன. ஸ்டெப்பிப் புல்வெளியின் நாட்டுப்புறப் பாடகனும் கவிஞனுமான பிர்ஜான் இயல்பான தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபடி அவர்களின் பழங்குடி வாழ்க்கை முட்டுக்கட்டையாகிறது. பிர்ஜான் பற்றிய சரித்திர ஆவணமாக இப்படம் அமைந்திருக்கிறது. அவன் நடுவயது மனைவியை மிகவும் நேசிக்கிறவன்தான். அவனுக்குப் பரிச்சயமாகிற இளம்பெண்ணும் பாடகியுமான வேலிமின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மனைவியும் சாவுப்படுக்கையில் தன் விருப்பத்தையே கூறுகிறாள். ஆனால் அவள் மாமனுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பதைக் கூறி ஊர்ப் பெரியவர்கள் மறுக்கிறார்கள். பிர்ஜானும் மனதை மாறறிக் கொள்ள வேண்டியதாகிறது. திருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் பாடிக் களிக்கும் அவனை ஊர் பெரியதனம் முன்னால் சிலர் பாடச்சொல்லிக் கேட்கிறார்கள். அவன் மறுக்கவே விரோதமாகிறது. அவனின் காதல் ஆசை நிராகரிக்கப்படும்போது தனிமையாக்கப்படுகிறான். தான் விரும்பிய வாழ்க்கையும் நிராகரிப்பும் அவனைச் சோர்வாக்குகிறது. ஆனாலும் பாடல் அவனை இயக்கிக் கொண்டே இருக்கிறது. சிறைப்பிடிக்கப்படுவது போல கட்டி இழுத்தும் செல்லப்படுபவன் தனிமையாளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறான். நிறுவனங்களுக்கும், அதிகாரத்திற்கும் எதிராக அவன் குரல் பாடலாய் விரிந்து கொண்டேயிருக்கிறது. 19ம் நூற்றாண்டின் கலைஞனின் அவலத்தை முன்வைக்கிற இபப்டம் இப்போதைய குரோஷிய நாட்டுப் படத்தின் சகா என்ற எழுத்தாளனின் தனிமை அவலத்தோடு வெகுவாக ஒத்திருக்கிறது. இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் வர்ண உடைகளுடன் வேகமாய் குதிரைகளில் ஓடியோடி பிர்ஜான் ஒரு குரூர நாயை வேட்டையாடும் காட்சி இருக்கிறது. பிர்ஜானும் அவனின் விருப்பங்களுக்கு எதிராக அவனின் சமூகத்தில் வேட்டையாடப்பட்டவன்தான். சகாவின் விருப்பங்கள் எப்போதிலும் நிறைவேறியதில்லைதான்