இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு இங்கிலாந்தின் கென்லோச் நன்கு அறிமுகமானது அவரது புரட்சிகரப் படங்கள் மூலம்தான். அவற்றைப் பற்றி விரிவாய்;j தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவரிடமிருந்து நகைச்சுவையுடனான ஒரு படம் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யமானதே. இங்கிலாந்து தொழிலாளர் கட்சியில் 1960ல் சேர்ந்தவர். 1990 வரை கட்சி செயல்பாட்டில் ஈடுபடுத்திக் கொண்டவர். பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றவர். பாலஸ்தீன பிரச்சினை குறித்த பல்வேறு எதிர்ப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்றவர். இவரின் ‘தி லேண்ட் அன்ட் பிரிடம்’ மிக முக்கியமான படமாகும். கார் என்ற பொதுவுடைமை இயக்கத் தோழரின் மரணத்தையொட்டி அவரின் பேத்தி அவரின் உடைமைகளைப் பரிசோதிக்கிறாள். டைரிக் குறிப்புகள், ஆவணங்கள் பல செய்திகளைச் சொல்கின்றன. ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பாஸிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட படையில் இருந்தவர் கார். அப்போராட்டத்தை அப்படம் விளக்குகிறது. போராட்டக் குழுக்களுக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள், விவாதங்கள், பொதுவுடைமைத் தத்துவச் சிக்கல்களை அப்படம் விவாதித்தது. கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற ‘தி விண்ட் தட் ஷேக்ஸ் த பார்லி’ அயர்லாந்து விடுதலைப் போராட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது. இவ்விரு படங்களும் இந்திய ரசிகர்களுக்கு வெகுவாகப் பரிச்சயமான படங்கள். இவை இரண்டும் பொதுவுடைமை வட்டங்களில் அதிகம் பேசப்பட்டவை. இவருடைய ‘கேஸ்’ என்ற படம் சிறந்த 100 பிரிட்டிஷ் படங்களில் தலையாயதாக விளங்குவதாகும். இதையொட்டி நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படம் வெளிவந்த 40 ஆண்டுகள் ஆவதையொட்டி சில முக்கிய நிகழ்வுகளும் சென்றாண்டு நடைபெற்றன. பில்லி என்ற பதின்பருவ மாணவன் பள்ளியில் புறக்கணிக்கப்படுபவன். மூத்த சகோதரனால் துன்புறுத்தப்படுபவன். அம்மாவின் கவனிப்பும் போதவில்லை. அவனுக்கு நட்பு கொள்ள இருக்கும் ஒரு பறவையுடனான அவனின் அனுபவங்களைச் சொல்லும் படம் ‘கேஸ்.’ சென்றாண்டு மெல்போர்ன் திரைப்படவிழாவில் இஸ்ரேல் சில நிகழ்ச்சிகளுக்கு ‘ஸ்பான்சர்’ செய்திருந்த காரணத்தால் தனது படங்களைத் திரையிட வேண்டாம் என்று திரும்ப பெற்றுக் கொண்டவகையில் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்குத் தொடர்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தவர். இவர் ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியரஸ் டமியுடன் இணைந்து இயக்கிய ‘டிக்கெட்’ என்ற படம் புகைவண்டிப் பயணத்தில் அகதிகளின் நிலைமையை மையமாகக் கொண்டிருந்தது.
இவரிடமிருந்து இவ்வாண்டின் படம் ‘லுக்கிங் பார் எரிக்’ நகைச்சுவை கலந்த படம் என்ற விபரமே ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. இவர் 15 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய ‘ரெயினிங் ஸ்டேன்ஸ்’ என்ற படம் நகைச்சுவை அம்சங்களைக் கொண்டிருந்தது. மான்செஸ்டரைச் சார்ந்த வேலையில்லாத தகப்பனான பிரதான கதாபாத்திரம் சிறு சிறு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. மகளுக்கு ஒரு சடங்கு, ஆடை வாங்கப் பணமில்லாமல் சிரமப்படுகிறார். பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கம் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதைச் சித்தரிக்கும் படமாகும் அது. அதில் வரும் ஒரு வசனம், ‘நான் பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடவில்லை. நானே பாட்டாளி வர்க்கம்தான்..’
இவரின் நாற்பது வருடத் திரைப்பட இயக்கத்தில் இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்கப் பிரச்சினைகளும், சமூகப் பிரச்சினைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ‘லுக்கிங் பார் எரிக்’ படத்திலும் தபால்காரர் ஒருவரை முன்வைத்து நகைச்சுவைத் தன்மையுடன் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பற்றிய விமர்சனமாகவே படத்தை கென்லோச் அமைத்திருக்கிறார். எரிக்கின் குடும்ப வாழ்க்கை சோர்வு தருவதாக இருக்கிறது. இரண்டாவது திருமணமும் தோல்வியடைந்து விட்டது. முதல் மனைவி மூலமாகப் பதின்பருவ பையன்கள் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாதபடி இருக்கிறார்கள். ஒரு பையன் உள்ளூர் தாதா கும்பலுடனான பழக்கத்தில் ஒரு துப்பாக்கியை வீட்டில் மறைத்து வைக்கிறார். அதைத் தேடி காவல்துறையும் வருகிறது. முதல் மனைவியின் குழந்தையுடன் வெளியில் செல்லும்போது பிரிந்துவிட்ட இரண்டாம் மனைவியைச் சந்திக்கிறான். அவளுள் இருக்கும் அன்பு அவனை நெகிழ வைக்கிறது. வீட்டைக் கலைத்துப் போட்டு சிரமப்படுத்தும் ஒரு சிறு கும்பலைச் சிலருடன் சேர்த்து பழிவாங்கும் ‘சிறுபிள்ளைத்தனமான’ நிகழ்வொன்று படத்தின் இறுதியில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் ஆன்மீக நாட்டம் நிம்மதியைத் தருமா என்ற அலைச்சல் இருக்கிறது. சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது தற்கொலை முயற்சிகளிலிருந்து தப்ப வைக்கிற உபாயமாக இருக்கிறது. ஆனாலும் குடும்ப வாழ்க்கையில் இல்லாத நிம்மதியை முதல் மனைவியின் குழந்தை, இரண்டாம் மனைவி என்று தேடிப்போய் கண்டு ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரின் படுக்கையறையில் இருக்கும் எரிக் காண்டோனா என்ற கால்பந்தாட்ட வீரரின் சுவரொட்டிப் படத்துடன் மானசீகமாக உரையாடிக் கொண்டிருப்பது அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. கால்பந்தாட்ட வீரர் படத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து எரிக்குடன் தேனீர், மது அருந்துகிறார். ஆறுதல் சொல்கிறார். அவர் வீட்டைக் கலைத்துப் போட்டுச் சிரமமாக்கியவர்களைத் துவம்சம் செய்கிறார். சோர்வடையும் போதெல்லாம் அவரின் கூட இருக்கிறார். எரிக் காண்டோனாவை முன்வைத்துக் கால்பந்தாட்ட வரலாறும், சில பந்தயப் போட்டிகளின் காட்சிகளும் இடம் பெறுகின்றன. அவை படத்தினை இன்னொரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஒரு கால்பந்தாட்ட வீரர், பிரபலமானவர் என்ற வகையில் அவரின் ‘மாய’ இருப்பு அவருக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது. அவர் எரிக்குடன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளினால் அவர் பெறும் ஆதர்சமும், ஆதரவும் அவரைப் பிரச்சினைகளிலிருந்து அவரை நகர்த்திச் செல்கறிது. இதை கென்லோச் நகைச்சுவையுடன் சொல்கிறார். ஒரு சாதாரண தபால்காரனின் அவஸ்தையூடே இந்த நகைச்சுவை வெளிப்படுகிறது. கால்பந்தாட்ட வீரர் எரிக் காண்டோனா ஓரிடத்தில் சொல்கிறார், ‘கால்பந்தாட்டப் போட்டியில் கோல் போடுவது பிரதானமல்ல. பந்தை சுமுகமாக நகர்த்திக் கொண்டு போவதுதான்’ தபால்காரர் எரிக்கிற்குக் கூட இதுதான் வாழ்க்கையின் சுமுகமானதன்மைக்கு மிக முக்கியம் என்று தோன்றுகிறது எனலாம்.