சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 3 டிசம்பர், 2017

சுப்ரபாரதிமணின்
சமரச  சக்திகளின் மாயக்குரல்கள்
------------------------------------------------------------------------------------                            திருப்பூர் : “  டாலர் சிட்டி  ஆவணப்படம்

பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத்தொழிலாளி, விசைத்தறி தொழிலாளிகள் , பனியன் உற்பத்தியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம்  சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஒரு ஆவணப்பட இயக்குனரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக்கொள்ளலாம்..

ஒரு தலித் முதியவளின் பார்வையில் இப்படம் தொடங்குகிறது. 50  ஆண்டுகளுக்கு முன்  திருப்பூரில் இருந்த சாதிய அடுக்குகள், அது இன்றும் நகர வளர்ச்சியில் மறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறார்.  1000 கோடி மது சரக்கு விற்பனையாகும் ஊர். கஞ்சா பூங்கா பொழுதுபோக்கிற்கு திரைப்பட அரங்குகள், உற்பத்தியாளர்கள் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  “ 25 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலை நிறுத்தமே இல்லை. என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்.  போடப்படும் சம்பள ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னாலும்  போராட்டங்கள் ஆதி காலத்து மே தின விழா  முதல் சாதாரண கூலி உயர்வு வரைக்கும் என்று நீண்டு வருவது காட்டப்பட்டிருக்கிறது.
ஒரு பனியன்  தொழிலாளியின் தினப்படி வாழ்க்கை மெதுவாக்க் காட்டப்படுகிறது வீட்டில் இருந்து கொண்டு பனியன் சம்பந்தமான வேலை செய்யும் ஒரு பெண்ணின் தினப்படி வாழ்க்கை ( வீடு, பனியன் பிரிக்கும் வேலை, அலர்ஜி, ஆத்துமா,சுகாதாரமின்மை ) மெதுவாகக் காட்டப்படுகிறது. ஆனால் திருப்பூர் தொழில் வளர்ச்சி, கூலி இவையெல்லாம் அடிப்படை உரிமைகளை விட பெரிதாகப் பட்டுவிடுகிறது தொழிலாளர்களுக்கு.  மேதினக் கொண்டாட்டம் போதும் தங்களின் உரிமைகளை பறைசாற்றிக் கொள்ள. எதிர்காலம் பற்றிய கணிப்பில் 1லட்சம் கோடி ரூபாய்  அந்நிய சொலவாணி, மற்றும்  எதிர்காலத்தில் தொழிற்கொள்கைகள் கடை பிடிக்கப்படாமல் போகுமானால்    அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே இங்கிருப்பர் என்று ஒரு முதலாளி சொல்கிறார். பழைய திருப்பூராகும் என்று பயமுறுத்துகிறார். ஆனால் வேலை , சமூகப்பாதுகாப்பின்மையை  மையப்படுத்தி தொழிலாளர் குரல்கள்  தொனிப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.
விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பனியன், பின்னலாடை, விசைத்தறி போன்றவற்றில் இளைஞர்கள் காட்டப்படுகையில்  நெசவு தொழில் மட்டும் வயதானவர்கள் மூலம்  சொல்லப்படுகிறது.

 நெசவை இளைய தலைமுறை கை விட்டிருப்பதை அது காட்டுகிறது.பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி மீன் ,முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்., கேட்பாரற்று கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்... அபாரமான குறியீடுகள். சமூக நீதி, மெய்யான நாகரீகம் என்று தொழிலாளர்களுக்கு கோரும் பார்வையில்தென்படும்  இடதுசாரித்தனம் மே தினக்கூட்டம்,ஊர்வலம்முதற் கொண்டு மோடி பற்றிய விமர்சனம் வரை நீள்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்   Rise and raise of Tiruppur என்ற படத்தின்  பல பகுதிகள் இப்படத்தை ஆக்கிரமித்திருகிறது.
  அதிகாரம் செலுத்துகிறவர்கள் தமது அதிகாரத்தின் மூலமாகவோ  அல்லது ஆதிக்கம் செலுத்துகிறவர்களை மூளை சலவைச் செய்வதன் மூலமோ மட்டும் ஒடுக்குவதில்லை. ஒடுக்கப்படுபவர்களுக்கும் தேவையான ஏதோ ஒன்று கிடைப்பதாலேயே ஒடுக்குமுறைகள் சம்மதமாகின்றன. சுரண்டலுக்கு ஒத்திசைவு  கூடி விடுகிறது  என்ற அந்தோனி கிராம்சியின் கருத்து நாசூக்காக சொல்லப்படுகிறது.சுரண்டலுக்கு ஒத்திசைவாக தொழிலாளிகளின் போக்கு அதிர்ச்சிதருகிறது. ஒடுக்குமுறைகள் இதனால் சாதாரணமாகின்றன,வன்முறை மூலம் மட்டும் அல்ல ஒத்த கருத்தின் மூலம்  ஆதிக்கம் உருவாக்கப்படுகிற ஆபத்தை பின்னலாடைத் தொழிலை முன் வைத்து இப்படம் சொல்கிறது.

அதில் பின்னாலாடைத் தொழிலைக்காப்பாற்ற வேண்டிய , முன்னேற்ற வேண்டிய ஒத்த கருத்தாகும். குஜராஜ் மாதிரியில் இருக்கும் பேரமைதி பற்றி பலர் பேசுகிறார்கள். அந்நிய செலவாணியை முன் வைத்து  இவ்வகை ஒத்தக் கருத்துடன் திருப்பூர் அதற்கு முன்பே உருவாகி வளர்ந்து நிற்பது தெரிகிறது. தொழில் பாதுகாப்பின்மை தெரிகிறது. தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டே செல்கிறது.   உழைப்பு அந்நியமாகும் நிலை விரிந்திருக்கிறது.எவ்வளவு பெரிய மோசடியும் கடுகாகிறது. அடிமாட்டு தொழிலாளர்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக் கொண்டே  இருக்கின்றன.வெற்று சம்மதங்கள் அபாயகரமானவை.தொழிலுக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று  குற்றம் பேசும் விமர்சனப் பார்வை இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலானத் தன்மை இதில் தெரிகிறது..  காலாவதியான மார்க்சியம், காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிப்பதாய் கிண்டல்கள் எழுகின்றன.. கூட்டுக் களவாணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளிசுரண்டலுக்கு பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதான்  குறிக்கோள்.எல்லாரும் சேர்ந்து செய்கிற  திருப்பூர் கூட்டுகளவாணித்தனம் என்று கடுமையாகவும் இதைப் பார்க்கலாம்..உலகச் சந்தையை முன் வைத்து  பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. இது குறித்த தொழிலாளி, மக்களின் மவுனம் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமான இடைவெளியைக் காட்டுகிறது.சிவப்புக்கொடிகளின் பட்டொளி வீசும் காட்சிகள் படத்தின்  ஆரம்பத்திலும் இறுதியிலும் அஞ்சலி போல் அமைந்துவிடுகிறன.
சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது . பின்னலாடையிலே  சுமங்கலித்திட்டக் கொடுமை வந்து விட்டது..இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்... பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல்வார இறுதிகளில் அவர்கள்  விபச்சாரத்துக்கு பயன்படுடற நிலை போன்றவை சொல்லப்படாதது குறையாக பலர் முன்வைக்கிறார்கள். இவற்றை முன்வைத்தே திருப்பூரைப்பற்றி இருபத்தைந்து ஆவணப் படங்களாவது எடுக்க பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன

ஆர்பி அமுதனின் முந்தைய 20 ஆவணப்படங்களின் நேரடித்தன்மை போல் இதில் இல்லை. ஆனால் ஒரு தொழில் நகரைக்காப்பாற்றும் ஆதிக்க சக்திகளின் மாயக்குரல்களின் கலவையை மறைமுகமாக அடங்கிய குரலில்  கேட்க வைக்கிறார்..

( இயக்குனர் ஆர்.பி. அமுதன் .77 நிமிடங்கள்…)

சனி, 2 டிசம்பர், 2017

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.                                               திருப்பூர்  மாவட்டம்
* ஜனவரி  மாதக்கூட்டம் .7/1/18 மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்

முன்னிலை:  கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,

* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில் கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல் பற்றி  தோழர் ந. சேகர்

* உரைகள் : படைப்பு அனுபவம்
மிலிட்டரி பொன்னுசாமி ( சீன டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள் நூல்)
சு.வெங்குட்டுவன் ( இசையோடு வாழ்பவன் –கவிதை நூல் )
எஸ்.எ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத் தொகுப்பு )

 * உரைகள் : வாசிப்பு  அனுபவம்
திராவிடமணி ( தெற்கிலிருந்து ஒரு சூரியன் )
அருணாசலம் ( மார்க்சீயத் தத்துவம் )

மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488


சுப்ரபாரதிமணின்
சமரச  சக்திகளின் மாயக்குரல்கள்
----------------------------------------------------------------------------------------------------
                                   திருப்பூர் : “  டாலர் சிட்டி  “ ஆவணப்படம்

பனியன் தொழிலாளிகைத்தறி நெசவுத்தொழிலாளிவிசைத்தறி தொழிலாளிகள் , பனியன் உற்பத்தியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம்  சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும்சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஒரு ஆவணப்பட இயக்குனரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக்கொள்ளலாம்..

ஒரு தலித் முதியவளின் பார்வையில் இப்படம் தொடங்குகிறது. 50  ஆண்டுகளுக்கு முன்  திருப்பூரில் இருந்த சாதிய அடுக்குகள்அது இன்றும் நகர வளர்ச்சியில் மறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறார்.  1000 கோடி மது சரக்கு விற்பனையாகும் ஊர். கஞ்சா பூங்கா ,  பொழுதுபோக்கிற்கு திரைப்பட அரங்குகள்உற்பத்தியாளர்கள் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  “ 25 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலை நிறுத்தமே இல்லை. “ என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்.  போடப்படும் சம்பள ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னாலும்  போராட்டங்கள் ஆதி காலத்து மே தின விழா  முதல் சாதாரண கூலி உயர்வு வரைக்கும் என்று நீண்டு வருவது காட்டப்பட்டிருக்கிறது.
ஒரு பனியன்  தொழிலாளியின் தினப்படி வாழ்க்கை மெதுவாக்க் காட்டப்படுகிறது வீட்டில் இருந்து கொண்டு பனியன் சம்பந்தமான வேலை செய்யும் ஒரு பெண்ணின் தினப்படி வாழ்க்கை ( வீடுபனியன் பிரிக்கும் வேலைஅலர்ஜிஆத்துமா,சுகாதாரமின்மை ) மெதுவாகக் காட்டப்படுகிறது. ஆனால் திருப்பூர் தொழில் வளர்ச்சிகூலி இவையெல்லாம் அடிப்படை உரிமைகளை விட பெரிதாகப் பட்டுவிடுகிறது தொழிலாளர்களுக்கு.  மேதினக் கொண்டாட்டம் போதும் தங்களின் உரிமைகளை பறைசாற்றிக் கொள்ள. எதிர்காலம் பற்றிய கணிப்பில் 1லட்சம் கோடி ரூபாய்  அந்நிய சொலவாணிமற்றும் எதிர்காலத்தில் தொழிற்கொள்கைகள் கடை பிடிக்கப்படாமல் போகுமானால்   அரசியல்வாதிகளும்அரசு அதிகாரிகளுமே இங்கிருப்பர் என்று ஒரு முதலாளி சொல்கிறார். பழைய திருப்பூராகும் என்று பயமுறுத்துகிறார். ஆனால் வேலை , சமூகப்பாதுகாப்பின்மையை  மையப்படுத்தி தொழிலாளர் குரல்கள்  தொனிப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.
விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பனியன்பின்னலாடைவிசைத்தறி போன்றவற்றில் இளைஞர்கள் காட்டப்படுகையில்  நெசவு தொழில் மட்டும் வயதானவர்கள் மூலம்  சொல்லப்படுகிறது.

 நெசவை இளைய தலைமுறை கை விட்டிருப்பதை அது காட்டுகிறது.பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி மீன் ,முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்.கேட்பாரற்று கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்... அபாரமான குறியீடுகள். சமூக நீதிமெய்யான நாகரீகம் என்று தொழிலாளர்களுக்கு கோரும் பார்வையில்தென்படும்  இடதுசாரித்தனம் மே தினக்கூட்டம்,ஊர்வலம்,  முதற் கொண்டு மோடி பற்றிய விமர்சனம் வரை நீள்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்   Rise and raise of Tiruppur என்ற படத்தின்  பல பகுதிகள் இப்படத்தை ஆக்கிரமித்திருகிறது.
  அதிகாரம் செலுத்துகிறவர்கள் தமது அதிகாரத்தின் மூலமாகவோ  அல்லது ஆதிக்கம் செலுத்துகிறவர்களை மூளை சலவைச் செய்வதன் மூலமோ மட்டும் ஒடுக்குவதில்லை. ஒடுக்கப்படுபவர்களுக்கும் தேவையான ஏதோ ஒன்று கிடைப்பதாலேயே ஒடுக்குமுறைகள் சம்மதமாகின்றன. சுரண்டலுக்கு ஒத்திசைவு  கூடி விடுகிறது  என்ற அந்தோனி கிராம்சியின் கருத்து நாசூக்காக சொல்லப்படுகிறது.சுரண்டலுக்கு ஒத்திசைவாக தொழிலாளிகளின் போக்கு அதிர்ச்சிதருகிறது. ஒடுக்குமுறைகள் இதனால் சாதாரணமாகின்றன,வன்முறை மூலம் மட்டும் அல்ல ஒத்த கருத்தின் மூலம்  ஆதிக்கம் உருவாக்கப்படுகிற ஆபத்தை பின்னலாடைத் தொழிலை முன் வைத்து இப்படம் சொல்கிறது.

அதில் பின்னாலாடைத் தொழிலைக்காப்பாற்ற வேண்டிய , முன்னேற்ற வேண்டிய ஒத்த கருத்தாகும். குஜராஜ் மாதிரியில் இருக்கும் பேரமைதி பற்றி பலர் பேசுகிறார்கள். அந்நிய செலவாணியை முன் வைத்து  இவ்வகை ஒத்தக் கருத்துடன் திருப்பூர் அதற்கு முன்பே உருவாகி வளர்ந்து நிற்பது தெரிகிறது. தொழில் பாதுகாப்பின்மை தெரிகிறது. தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டே செல்கிறது.  உழைப்பு அந்நியமாகும் நிலை விரிந்திருக்கிறது.எவ்வளவு பெரிய மோசடியும் கடுகாகிறது. அடிமாட்டு தொழிலாளர்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன.வெற்று சம்மதங்கள் அபாயகரமானவை.தொழிலுக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று  குற்றம் பேசும் விமர்சனப் பார்வை இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளிமுதலாளிதொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலானத் தன்மை இதில் தெரிகிறது.. காலாவதியான மார்க்சியம்காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிப்பதாய் கிண்டல்கள் எழுகின்றன.. கூட்டுக் களவாணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளி,  சுரண்டலுக்கு பேர் போன முதலாளிசந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதான்  குறிக்கோள்.எல்லாரும் சேர்ந்து செய்கிற  திருப்பூர் கூட்டுகளவாணித்தனம் என்று கடுமையாகவும் இதைப் பார்க்கலாம்..உலகச் சந்தையை முன் வைத்து பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. இது குறித்த தொழிலாளிமக்களின் மவுனம் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமான இடைவெளியைக் காட்டுகிறது.சிவப்புக்கொடிகளின் பட்டொளி வீசும் காட்சிகள் படத்தின்  ஆரம்பத்திலும் இறுதியிலும் அஞ்சலி போல் அமைந்துவிடுகிறன.
சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது . பின்னலாடையிலே  சுமங்கலித்திட்டக் கொடுமை வந்து விட்டது..இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்... பாரீசின் சொகுசுத்தனம்ஆப்ரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல்,  வார இறுதிகளில் அவர்கள்  விபச்சாரத்துக்கு பயன்படுடற நிலை போன்றவை சொல்லப்படாதது குறையாக பலர் முன்வைக்கிறார்கள். இவற்றை முன்வைத்தே திருப்பூரைப்பற்றி இருபத்தைந்து ஆவணப் படங்களாவது எடுக்க பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன

ஆர்பி அமுதனின் முந்தைய 20 ஆவணப்படங்களின் நேரடித்தன்மை போல் இதில் இல்லை. ஆனால் ஒரு தொழில் நகரைக்காப்பாற்றும் ஆதிக்க சக்திகளின் மாயக்குரல்களின் கலவையை மறைமுகமாக அடங்கிய குரலில்  கேட்க வைக்கிறார்..

( இயக்குனர் ஆர்.பி. அமுதன் .77 நிமிடங்கள்…)









திருப்பூர் : டாலர் சிட்டி ஆவணப்படம்
  பற்றிய கூட்டத்தின் விமர்சனங்களை  தொகுத்துள்ளேன்  )
 1:
தலித் பிரச்சினைகள் பற்றி முகத்தில் அடிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்த நீங்க இவ்வளவு மேம்போக்கா திருப்பூரைப் பத்தி ஏன் படம் எடுக்கணும். தொழிலாளிமுதலாளிதொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வெச்சு சமரசமா இயங்கற ஊர்லேஇதுலே நீங்களும் சமரசம் பண்ணீட்டீங்களா 

3. காலாவதியான மார்சியம்காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிச்சிருக்கீங்க ..துக்கம்..தூக்கம் .

4.,  பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி மீன் முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்... கேட்பாரற்று கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்... அபாரமான குறியீடுகள்.... அபாயமான குறியீடுகள்.
5. கூட்டுக் களவணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளி,  சுரண்டலுக்கு பேர் போன முதலாளிசந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதா  குறிக்கோள்.எல்லாரும் சேந்து பண்ற திருப்பூர் கூட்டுகளவணித்தனத்தே  நாசுக்கா சொல்லீட்டீங்க.
6. சேரிக திருப்பூர்லே வளர்ந்திட்டே இருக்கு. பின்னலாடையிலே  சுமங்கலித்திட்டக் கொடுமை வந்திருச்சு. வட மாநில பெண்கள் வார இறுதிகள்லே விபச்சாரத்துக்கு பயன் படற நிலை.இதியெல்லா சொல்லாமா திருப்பூரைப் பத்தி படம் என்ன வேண்டிக்கிடக்கு....குணா
7. பாரீசின் சொகுசுத்தனம்ஆப்ரிக்காவின் வறுமை திருப்பூர்லே இருக்கு. இந்தப் படத்திலெ இதெல்லா இல்லே. திருப்பூரைப் பத்தின வெறும் அறிமுகம்.
8. திருப்பூரைப்பத்திச் சொல்றப்போ மோடியில வந்து ஏன் முடியணும். மோடி காய்ச்சல் உங்களுக்கும் இருக்கு.. நேரடியான படமல்ல..முழுமையில்லாத படமல்ல.



9. motivateபண்ற படம்.     Quiet, subtle    பார்வை.  . converted audience, non-converted audienceக்கான யுத்தம் திருப்பூரைப் பத்தின விமர்சனம் இல்லை.  
10. பனியன் தொழிலாளிகைத்தறி நெசவுத்தொழிலாளிபவர்லூம் தொழிலாளிகளோட பார்வை இருக்கு. தமிழ் டப்பிங் பார்த்து மகிழ்ச்சியா இருக்கறதா ஒரு சின்னத்திரை வசனம் வருது. அதுதா திருப்பூர் உள்ளூர் வாசிகளின் அற்பமான நிலைமை.
11. கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் பார்வையிலே தலித் அம்சம் இருக்கும்உங்களதும் தலித் பார்வை,விளிம்பு நிலைப் பார்வை இருக்கும்.  அது இதிலெ மிஸ்ஸிங். ஆனாலும் கபாலி சொல்றது மாதிரி மகிழ்ச்சி.



12. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது
13. தொழிற்சங்கங்களின் பலவீனத்தை  இப்படி அப்பட்டமா சொல்லியிருக்க வேண்டாமே







                   

subrabharathi manian subrabharathi@gmail.com

Nov 6
to dhalavai

திங்கள், 6 நவம்பர், 2017

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
                                              திருப்பூர்  மாவட்டம்

* டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்

தலைமை: சுப்ரபாரதிமணியன்
முன்னிலை:  கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,சண்முகம்


* நூல்  அறிமுகம்..:    பிஆர் நடராசன் எழுதிய                  “ சுதந்திரப்போராட்டத்தில் திருப்பூர் தியாகிகள் “ நூல்
பற்றி தோழர் ஜி. ரவி
* உரைகள் : முதல் ( நாவல் ) அனுபவம் :
      கொங்கு நாவலாசிரியர்கள்    
    கோவை  இரா.முருகவேள், உடுமலை ராகவன் தம்பி
* உரைகள் : படைப்பு அனுபவம்
செ. நடேசன் ( இந்தியா எங்கே செல்கிறது-கட்டுரை நூல்)
பழனி மீனா சுந்தர் ( மருதத்திணை –கவிதை நூல் )
இராவணன் ( பெரியாரியல் “காட்டாறு “ –இதழியல் )

* உரைகள் : பெண் எழுத்து  :
 பேராசிரியை செல்வி, பேரா. கலைவாணி
* : மாற்றுக்கலாச்சாரம் எது
உரைகள்  : பொன்னுலகம் குணா  ( மாற்று அரசியல் ) ஹீலர் பாலாஜி (  மாற்று மருத்துவம்   )
* மண்ணின் பாடல்கள்: கா. ஜோதி, துருவன்பாலா
 மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக..
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488






நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                         கடவுச்சீட்டு “ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.             திருப்பூர்  மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..            பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு       (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                                      கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர் நடராசன் நூலை வெளியிட்டார்.

சுப்ரபாரதிமணியன் ஏற்புரையில் :தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் 15 வது நாவலாக                 கடவுச்சீட்டு “  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது.  மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இது வந்திருக்கிறது. .அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.
      ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது.காரணம் மலேசியா இளைய சமூதாயத்தை சீரழிக்கும் குடி அவளின் கணவனை சீரழித்திருப்பது.  அந்தப்பெண் இங்கு வருவதற்கு முன்பே பெண் பார்க்க்கும் படலத்தின் போதே நாட்டைப்பற்றி வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். இங்கு தமிழர்கள் எவ்விதம் இருகிறார்கள். கோவிலகள் உண்டா . முஸ்லீம் நாடென்றால் சட்டதிட்டங்கள் கடுபிடியா. மதுப்பழக்கம் ஆண்களிடம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இங்கு வந்த பின்பு அவள் கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். இந்த நாட்டு நடைமுறையில் இருக்கும் சுகாதாரமும், மருத்துவமனைகளில் இல்லாத லஞ்சம் போன்றவை அவளை மகிழ்விக்கின்றன.ஆனால் அவளின் வாழ்க்கை யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் என்பார்கள் அங்கு இனிப்பு நீர் வியாதி என்கிறோம். இது போன்ற சிறுசிறு விசயங்களையும் கவனமாகக்குறிப்பிடப்பட்டிருக்கிறது.. லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை இவரின் எழுத்துப் பார்வையில் படாதவர்கள் இல்லை. மஜாஜ் சமாச்சாரம் முதல் மலேசியா பற்றிய பல விபரங்களை இந்நாவலில்  உள்ளன .அவற்றை பலஇடங்களில் விபரங்களாகவும் சில இடங்களில் உரைநடைமூலமாகவும் அமைந்துள்ளன..தோட்டப்புறத்தில் பங்களாதேஷ்காரர்கள், இந்தோனிசியாக்காரர்கள் அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகியும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை இதில் பதிவாகியிருக்கின்றன.

 தமிழ் இளைஞர்களின் வன்முறைக்கலாச்சாரத்தில்  கட்டை, சரக்கு போன்றவை  ஆக்கிரமிக்கிறது.. சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனிசியப்புகையால் பாதிப்பு போன்றவையும் தப்பவில்லை. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் போது மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக  இருக்கும் போது உணவு விடுதிகளை அதிகம் நாடாத்தும் பாதித்த்து ..  இலக்கியம் வேதனையை , சோதனையை மட்டுமா சொல்லவேண்டும் என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில்  உள்ளது.. அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால்  இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும்  கடவுச்சீட்டு மலேசியா தமிழ்ச்சமூகம் பற்றிய முக்கியப் படைப்பு என்ற வகையில்  இந்நாவல் சிறப்பு பெறுகிறது என்றார். thanks p. rajendran 


( (சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                         கடவுச்சீட்டு “ ரூ120. 180 பக்கங்கள் .,முன்னேற்றப் பதிப்பகம் சென்னை வெளியீடு 94867 32652  ))
* நூல்  அறிமுகம்..:  .மார்க்சீய மெய்ஞ்ஞானம்    ஜார்ஜ் பொலிஸ்டரின்   தத்துவ நூல் பற்றி :  பிஆர் நடராசன் பேசினார்.

 பெண் படைப்பு :கவிதையியல் பற்றி மணி பாரதி பேசினார். கவிதை வாசிப்பில் சாமக்கோடாங்கி ரவி, துருவன்பாலா. , ஆலம். ,ஜோதி  ஆகியோர் பங்குபெற்றனர்.அவேர்னஸ் அப்பா சிவசுப்ரமணீயன் ரத்த தானம், உடல் தானம் பற்றிய அவரின் தென்னிந்தியப் பயணம் பற்றி விவரித்தார்.
 * : மாற்றுக்கலாச்சாரம் எது உரை நிகழ்த்தினார்  பாண்டிசெல்வம், ( அவர் மாற்றுகல்வி, , மாற்று உணவு பற்றி  விரிவாய் பேசினார் ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்             திருப்பூர்  மாவட்டம் த்வர் சண்முகம் தலைமை தாங்கினார். யோகி செந்தில், விபி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.வெண்மணி நடராஜன் நன்றி கூறினார்.
                -- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488







தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு