கரோனா கவிதை .. -சுப்ரபாரதிமணியன்
கிழமைகள் பொதுவாகிவிட்டன.
நடை தூரங்கள் மாடி சுவரின்
இருப்புகளுக்குள் அடங்கி விட்டது.
நாள் முழுக்க முகக்கவசம் அணிந்து முகம் வேறு
வடிவம் எடுத்து விட்டது.. துர்வாசம் வீசும் முகக்கவசம். முகக்கவசம் எம் 95 வாங்குவதற்கு
வசதிப்படவில்லை.
பத்து ரூபாய் பதினைந்து ரூபாயில்
சுருக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. பின்னலாடை உற்பத்தி மறுபடியும்
துவங்கியிருக்கிறது.
ஆனால் பெரும்பாலும் முகக்கவசங்கள்தான்
செய்கிறார்கள். பனியன் துணியில் செய்யப்படும் முக்கவசங்கள் சுகாதாரணமானவையல்ல. அவை
கூட அதே விலைக்குத்தான் கிடைக்கின்றன.
மீளமுயாத நாட்களில் கிழமைகள் மாறுவதில்லை.
புத்தகங்கள் இல்லாவிட்டால் தற்கொலை
எண்ணம் சுலபமாக வந்திருக்கும். முகசவரம் செய்யாத்தால்
முளைத்த் வெள்ளை நரை மயிர்கள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகான வயதைக்
கடத்தி விட்டது.
வெறுக்கத்தக்கவர்களாக
சக மனிதர்கள் ஆகிவிட்டார்கள். முகக்கவசம் போட்டு வருபவர்களைக் கூட உட்கார அனுமதிக்க
மனதில்லாமல்...
அழலாம் போலிருக்கிறது
.திரைப்படக்குறுந்தகடுகள் வாங்கிச் செல்ல வந்த நண்பருக்கு 75 வயதாகிறது.
மலையாளப்படங்கள்தானா
வேறென்ன
நீலப்படம் இல்லையா.
ஏனோ என்னை நானே வெறுத்துக் கொள்கிறேன்.
அவருக்கு எந்த வகையிலும் உதவிசெய்ய
முடியாது.
இந்த மாதம் செலவழித்த பல்வேறு அமைப்புகளுக்கான
பத்தாயிரம் ரூபாய் பெரிய தொகைதான்.
பத்து ரூபாய்
நீலப்படக்குறுந்தகடைத்தான் அவர் கேட்கிறார்.
கொள்ளை நோயின் தூதராகஎண்ணி தள்ளி
நிற்கச் சொல்லியே பேசி அனுப்புகிறேன்.
ஐம்பது வருடப் பழக்கம்.
ஐம்பது நாள் கொரானாவுக்குப் பிறகு
அவரைக்குற்றப்பட்டியலில் சேர்ப்பார்களா.
ஞாயிறு முடிந்து வேலை நாள் வரும் என்ற பழைய நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்.
-சுப்ரபாரதிமணியன்