கோடுகள் : இந்த இதழில் மார்ச் 2019 வந்த என் பேட்டியிலிருந்து..சுப்ரபாரதிமணியன்
1.
ஒரு படைப்பாளிக்கு
வாழ்வு குறித்து எத்தனை தேடல், எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். அவன் பதில்களை
அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட
கண்டடையலாம். ஆனால் ஒருபோதும் அவன் அறுதியிறுதியான
முடிவுகளுக்கு –
அதன் பிறகு அதில் வேறு
எதுவும் இல்லை என்பது போல - வரமுடியாதவனாக இருக்க வேண்டும்.
ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா?
பெரும் பயணத்தில் அவன் சந்திக்கிற மனிதர்கள், நிகழ்வுகள், புறச்சூழல்கள் அவனை தொடர்ந்து இயங்கவேச்
செய்கிறது. படைப்பிலக்கியம் சார்ந்த நேர்மையும் சகமனிதனின் மீட்சிக்கான புதிய சூழல்களும் அவனின்
கனவாகவே இருக்கின்றன. ஒரு மதம் சார்ந்த மனிதனுக்கு
பக்தி, மோட்சம், காசி யாத்திரை கூட அறுதியிறுதியான
முடிவாகத் தெரிந்து விடுகிறது. ஆனால் ஒரு பகுத்தறிவு
சார்ந்த சக மனிதனே இந்த கண்டடைதலை விரும்பாத
போது எழுத்தாளன் எப்படி அந்த அறுதியிறுதிக்கும்
அடைபட்டுப் போவான்? எழுத்தின் மூலம் அந்தத் தேடலை
உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறான்.
1.
வாழ்வை ஒருவன் எப்படி
பார்க்கிறான் என்பது தான் அவனை ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாக ஆக்குகிறது.
அது மனிதர்களின் பொதுப்படையான பார்வையிலிருந்து
உருவாகி வருவதல்ல. அவனுடைய சொந்த
அணுகுமுறையிலிருந்து, சொந்த
பார்வையிலிருந்து உருவாகி வருவது. ஒரு படைப்பாக்கத்தில் இது என்ன
மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது?
இதற்கு தத்துவம் சார்ந்த அறிமுகமும் வாசிப்பும்
அவசியம். சொந்த அனுபவங்கள், தனிமனிதப்பார்வையை
ஒழுங்குபடுத்துவதில் அல்லது நெறிப்படுத்துவதில்
தத்துவத்திற்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது. உதாரணத்திற்கு
மார்க்சியம்.
2.
மனித உறவுகளுக்கென்று
நடைமுறை வாழ்வு சார்ந்த, எதார்த்த வாழ்வு சார்ந்த ஒரு வேல்யூ
இருக்கிறது.
இவை மறைத்து நிற்கும் எத்தனை பொய்மைகளுக்கிடையிலும்
உண்மையை காணும் திறன் ஒரு படைப்பாளிக்கு
தெரிந்தோ,
தெரியாமலோ ஒரு
கட்டாயமான தேவையாக இருக்க வேண்டும். அது அவனையும் அறியாமல்
நிகழ்ந்தால் அது அவன் அறிந்து நிகழ்வதை விட
சிறப்பானது. இதை எப்படிப்பட்ட கூற்றாக பார்க்கிறீர்கள்? இது ஒரு
படைப்பாளிக்கு தவிர்க்க முடியாத முக்கியமானதொரு
தேவையென சொல்ல முடியுமா? இதனால் அவனுக்கு
அகமும்,
புறமும் போராட்டங்கள்
ஏற்படலாம்.
இயந்திர உலகில் சக மனிதனோடு உறவாட, சந்திக்க வாய்ப்புகள் குறைவுதான். இந்த சூழலில் அனுமானமும், தன்
உள்ளூணர்வும்தான் உண்மையைப் படைப்பாளிக்குக் கொண்டு
வந்து சேர்க்கிறது. பல சமயங்களில் சிலருடனான
உரையாடல்கள்,
பத்திரிக்கைச்
செய்திகள் என்பது கூட உதவலாம். வாசிப்பின் மூலம் பிற படைப்பின் வழியே
பயணிக்கிறவனுக்கு இது எதேச்சையாகவும் அமைந்து விடும், சில சமயங்களில்.
3.
ஒரு படைப்பாளிக்கு
தேடல் என்பது என்ன? அது ஒரு ஆன்மீக தேடலாக இருக்க முடியாது.
தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே
திட்டவட்டமான அணுகுமுறையோடு, திட்டவட்டமான
வழிமுறையோடு இருப்பவை. ஒரு இலக்கிய படைப்பாளி
இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை
கொண்டிருக்கிறான்? ஒரு
படைப்பாளிக்கு தேடல் என்பது கட்டாயமானதா?
தொடர்ந்த வாசிப்பு, எழுத்து மூலம் சக மனிதர்களை அடையாளம் காண்பது. வாசிப்பின் மூலம் இனங்காண
வேண்டுகோள் விடுப்பது மெல்லியத் தொனியில், உலகத்தைத்திறந்து காட்டுகிறேன். உன்னை அடையாளம் கண்டு
கொள் என்பதில்தான் தேடல் தொடர்கிறது.
4.
ஒரு படைப்பாளியை
லெளகீகத்தளத்தில் வேரூன்றியிருந்து,
படைப்பாக்கத்தின் போது
இடைவிடாமல்
ஆன்மீகத்தளத்திற்கு எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லெளகீக தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே
போராடுபவனை போல. ஆன்மீகத்தளம் என்பது ஒரு
படைப்பாளிக்கு லெளகீக உன்னதமாகவும் இருக்கலாம்...
உண்மைதான். அவன் லெளகீகத்தளத்தில் இருந்து தனித்திருக்க இயலுவதில்லை. பிரம்மச்சாரியான படைப்பாளர்கள்
குறைவே. சம்சாரிகளான படைப்பாளிகள் லெளகீகத்தளத்தில்
இருந்து விலக நேர்வது இயலாததல்ல. மூளைக்குள்
ஏதோ பூச்சி ஊர்வதைப் போலத்தான் உறுத்திக் கொண்டே
இருக்கும்.
5.
எழுதப்போகும் ஒரு
படைப்பைப்பற்றி முன்னரே தெளிவான, நிறைவான திட்டமிடலை கொண்ட வரைபடத்தோடு
ஒரு படைப்பாளி இருக்கும் போது அப்படைப்பின்
எல்லைகளும், சாத்தியங்களும் குறுகுகிறதா? ஒரு
படைப்பாக்கத்தின் போது அவனை ஒரு முன்பின் தெரியாத
வாழ்வின் வழியாக நிகழும், புத்தம்புதிய மொழிவழி
பயணத்திற்கு எது ஆட்படுத்துகிறதோ அதுதான்
படைப்பாற்றல் என்பதா?
அந்த வகைத் திட்டமிடல் அடிப்படையாக நிகழ்வதுண்டு.
ஆனால் படைப்பாக்கத்துள் சென்று விடுகிறபோது
புறச்சூழல்களும் அவனின் அனுபவத்தில் மிதக்கும்
நிகழ்வுகளும் புதியப் பயணத்திற்கே கொண்டு செல்கிறது.
திட்டமிட்டு நடப்பது சில சமயங்களிலேயே
ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக – மொழியின் வழியாக - பின்தொடர்ந்து சென்று ஒரு
கருத்தையோ,
ஒரு உண்மையையோ
புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது?
பிறரது எழுத்தை கண்டு
பிரமிப்பனின்,
எழுத்தை கண்டு அதே
பிறர் கண்டு பிரமிப்பது போல. மனப்பாடம் செய்து தக்கவைப்பது கடினம்,
புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது என்பதை போல.
அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க சுதந்திரம்
என்பது என்ன?
அதைப்பின் தொடர்கிற முயற்சிகளுக்காக உழைப்பு தேவைப்படுகிறது. அவனின் அனுபவ உலகோடு நெருங்கியதாக
இருந்தால் பின் தொடர்வது எளிது. அல்லது சிரமமாகி
விடுகிறது. மனப்பாடமெல்லாம் இளம் வயதிலேயே சுலபம்.
வயது ஏற ஏற சிரமமாகி விடுகிறது. புரிதலில் அவன்
படிப்பு சார்ந்த துறைகளே எளிதில் பிடிபடும். அனுபவம்
சார்ந்த துறைகளே இயல்பாகும். இல்லாத போது மனப்பாடம்
செய்தாலும் மறந்து விடும். படைப்பாக்கத்தில்
அவனின் அனுபவம் சார்ந்த விசயங்களுக்கு பெரும்பாலும்
முக்கியத்துவம் கொடுப்பதே சுதந்திரம்
என்றாகிவிடும்.
ஒரு இலக்கிய படைப்பை, அப்படைப்பிற்கு
வெளியேயிருந்து அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய படைப்பின்
மதிப்புவாய்ந்த,
பொருட்படுத்தத்தக்க
கூறு என்ன? ஏதோ ஒன்றை காட்டி இலக்கியத்தின் பக்கமாக
ஒருவனை
திருப்ப முடியுமானால் அது என்னவாக இருக்க முடியும்? திரும்பவில்லையெனில் அதை ஒரு இழப்பு என்று எப்படி
கூறுவது?
அதை வெறும் ஆர்வத்தின்
கைகளில் ஒப்படைத்து விடலாமா?
சுலபமான வாசிப்போ, அவனின்
மனதோடு, அனுபவத்தோ,டு இயைந்து போவதோ தான் பொருட்படுத்தும். கவனம்
கூடுகிறபோது தான் திருப்ப
முடியும். திரும்ப வில்லையெனில் அவனுக்கானப் படைப்புகள் வேறாகக் கூட
இருக்கக்கூடும். மனம் விசித்திரக்குரங்காய்
எதைப்பற்றிக்கொள்ளும் என்பதை அறிய ரொம்ப நாள் பிடிக்கும்.
6.
----படைப்பாக்கத்தில்
கவிதைக்கும், கதைக்கும்,
நாவலுக்குமான தனியாக
பிரித்தறிந்து பார்க்கக்கூடிய வேறுபாடு
என்ன?
கவிஞனின் மனம்
பிரத்யேகமான முறையில் செயல்படுகிறதா?
ஒரு கதையையோ, நாவலையோ
விமர்சிக்க அணுகுவதை போல ஒரு கவிதையை அணுகுவது
கடினமாக இருப்பது எதனால்? அங்கு
தர்க்கங்களுக்கான சாத்தியம் குறைகிறதா? .
உள்மனப்பகுப்பாய்வில் படைப்பு என்னவாக இருக்கும்
என்று திட்டமிடுகிற போது எந்த வடிவம் என்பது வந்து
விடுகிறது. கவிதை மனம் என்று தீர்மானித்துக்கொள்கிற
போது அதற்காக மன ஆயத்தங்களுக்குள்ளும்
போய்விடுகிறான். பிரக்ஞை பூர்வமானதாகவே
நடைபெறுகிறது.
7.
படைப்பாற்றல் / கற்பனை
வளம் / மொழியில் புலமை மற்றும் மொழியை கையாளும் விதம் / வேறுபட்ட,
பரந்துபட்ட வாழ்வனுபவங்கள் / இடைவிடாத இலக்கிய
அறிமுகம் மற்றும் இலக்கிய வாசிப்பு / நடுநிலை மற்றும்
தர்க்க அறிவு / சொந்த பண்பாட்டு கலாச்சாரத்தில்
வேரூன்றி இருத்தல் / சுயதேடல், கேள்விகள்,
உரையாடல்,
அவதானிக்கும் திறன், தேர்ந்தெடுக்கும்
திறன், ஞாபகத்திறன் / ஆன்மீக அறிவு / மன ஆரோக்கியம் இவற்றில் அதன்
வேறுபட்ட முக்கியத்துவம் அடிப்படையில்
வரிசைப்படுத்தச்சொன்னால் எப்படி வரிசைப்படுத்துவீர்கள்? நீக்க
வேண்டியதும்,
சேர்க்க வேண்டியது என்ன?
வசதிக்காய் இப்படி பகுப்பாய்ந்து கொள்ளலாமேத் தவிர
இயல்பில் படைப்பாக்கத்தின் போது இவையெல்லாம்
காணாமல் போய் இவையெல்லாம் கலந்த ஒரு கூட்டு மனநிலை
இதையெல்லாம் விட படைப்பிலேயே மனதை
இருத்தி விடுகிறது
ஒரு படைப்பாளியையும், படைப்பாற்றலையும்
தற்செயலான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் முடிவு செய்கிறதா?
அல்லது படைப்பாளியும், படைப்பாற்றலும்
கடவுளின் அருளைப்போல வருகின்றனவா? சந்தர்ப்பமும்,
சூழ்நிலையும்தான் என்றால் – சகல வசதி வாய்ப்புகளும் அளிக்கப்படுமானால் – யார்
வேண்டுமானாலும்
படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முடியுமா? கடவுளின் அருள் என்றால் அந்த அருள் தவறவிடப்படுவதற்கான
வாய்ப்பு இருக்கிறதா? அதாவது
அந்த அருள் இருந்து ஒருவன் படைப்பாளியாக பரிமளிக்க முடியாமல் போக
முடியுமா?
அல்லது எவரெல்லாம்
படைப்பாளியோ அவருக்கு அது இருக்கிறது எனக்கொள்ளலாமா? அதுதான்
அளவுகோல் என்பதை போல.
தற்செயலான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள்தான் படைப்பினை வடித்தெடுக்க ஆதாரமாகிறது. கடவுள் அருள்
என்பதெல்லாம் பம்மாத்து. வாசிப்பு, சமூகத்தைக் கூர்ந்து நோக்கல் என்று அவதானிக்க்கிறபோது மனதின்
விருப்பத்தால் படைப்பு உருவாகிறது. படைப்பாளிக்கு
கடவுள் அருள் இருப்பதாக கடவுளை நம்பும்
பெரும்பான்மையான எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.
8.
படைப்புகள் என்று வந்து
விட்டால் சிலவற்றை நிராகரிக்க வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிலவற்றை கொண்டாட வேண்டும். சிலவற்றை குப்பை என
ஒதுக்க வேண்டும். சிலவற்றை வளர்த்தெடுக்க
வேண்டும். சிலவற்றை அவற்றின் இடத்தை - ஒன்றன் பின்
ஒன்றாக – உறுதிசெய்ய வேண்டும். எதற்கு முதல்
முக்கியத்துவம் கொடுப்பது, எதற்கு இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது என்பது போல. இதை அந்தரங்கமாக
நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? அல்லது இது ஒரு சிக்கலுக்குரியதும்,
பிரச்சனைக்குரியதும் என
விட்டுவிடலாமா?
ரசனைக்குறிய விசயமாக இருந்த இது அரசியலுக்கான, குழு மனப்பான்மைக்கான விசயமாகி விட்டது. படைப்பை
ஜனநாயக ரீதியாக அணுகுவது, ரசிப்பது என்றில்லாமல் குழு மனப்பான்மையுடன் அணுகுவது என்பது இன்றைய
நிலையாகி விட்டது துரதிஷ்டம்.
9.
மக்கள் தொகையோடு
ஒப்பிடும்போது வாசகப்பரப்பு மிகக்குறைவாக இருக்க காரணம் என்ன?
படைப்பிலக்கியங்கள் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைவதற்கான ஊடகவழி சாத்தியங்கள் குறைவாக
இருப்பதுதான் இதற்கு காரணமா? அல்லது வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து
விடுகிறதா?
அல்லது பெரும்பான்மையான
மனிதர்கள் இலக்கியத்தை நிராகரிக்க நியாயமான காரணங்கள்
இருக்கிறதா?
அது ஒரு சொகுசு, மேல்தட்டு, அசாதாரணம் என்பது போல
இது எல்லா நாட்டிற்கும் பொருந்துகிறதா என்று
தெரியவில்லை. இந்தியக்கல்வி முறையில் வாசிப்பு,
புத்தகங்கள்
என்பவை சொகுசு என்பதாகப் புரிந்து
கொள்ளப்பட்டிருக்கிறது, படித்தவர்களின் ரசனையில்
தேந்த நூல்கள்
குறைவாகவே உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டவை
அவர்களுக்குப் பிரதானமாகிறது. வாசிப்பை
தேவையானதாக உருவாக்காத மனங்களின் விசித்திரம் தான்
இது.
ஒரு இலக்கிய படைப்பில் புரியாமை, பூடகம், மர்மம்,
சிக்கலான சேர்க்கை
போன்றவை தவிர்க்க முடியாதவையா?
அது ஒருவேளை வாழ்வின் பூடகத்திலிருந்து வருவதா? அல்லது எதிர்மறையான கூறுகள் அவற்றில்
இடம்பெறுகிறதா?
வாழ்க்கையில்
மர்மங்கள் பல நிலைகளில்
உள்ளன. அதை படைப்பில் கொண்டு வருகிறவர்கள் குறைவுதான். அந்த
வகை அனுபவங்கள்
அவர்களை அது போன்ற
படைப்புகளை எழுதத் தூண்டலாம்.
10.
எழுத்தாளர்களில்
பலரையும், வரலாறையும் பார்க்கும்பொழுது இயல்பான,
வழக்கமான வாழ்வின்
துயரச்சாத்தியங்களிலிருந்து அவன் ஒரு எழுத்தாளனாக
இருப்பதாலையே அதைவிட அதிகமான, குறிப்பான
துயர்மிகுந்த வாழ்வை அடைகிறானா? அது அவனது சொந்த தனிப்பட்ட இயல்பூக்கங்களிலிருந்து
முளைத்தெழுகிறதா?
அல்லது சமூகம் அவனை
தன்னிலிருந்து வேறுபட்ட – பிரச்சனைக்குரிய அல்லது ஒவ்வாமை
போல - ஒரு மனிதனாக காண்கிறதா? அவனிடம் உள்ள பிரச்சனை என்ன?
அல்லது சமூகத்திற்கு
அவனிடம் உள்ள
பிரச்சனை என்ன?.
***
ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் பரிசீலிக்கலாம் என்று
எண்ணுகிறேன். நான் நாத்திகவாதி என்ற வகையில்
எல்லோரிடமும் இருந்து அந்நியப்படுகிறேன். மதம்
சார்ந்த நடவடிக்கைகள் இந்திய வாழ்க்கையில் பின்னிப்
பிணைந்திருக்கிறது. நாத்திகனாக இருந்து விலகி
இருப்பதால் எங்கள் வீதி விநாயகர் கோவில் விசேசங்களில் நான்
கலந்து கொள்ளாதபோது எங்கள்
வீதியில் இருப்பவர்களிடம் தொடர்ப்பு இல்லாமல் போகிறது. எங்கள் வீதி
மக்களின் பரஸ்பர சந்திப்பு, நட்பு என்பதெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. தனியே அவர்களைச்
சந்திக்கிற,
உரையாடுகிற சந்தர்ப்பங்கள் மிகக் குறைவே. இன்னும்
கொஞ்சம் அடுத்தடுத்த வீதிகளுக்குப் போனால் இருக்கும்
சவுண்டியம்மன் கோவிலுக்கு நான் சாதியரீதியாக வரி
கொடுப்பதில்லை. அவர்களும் என்னை இனம் கண்டு
கொண்டு தள்ளியே இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதி, சமயம் சார்ந்த வாழக்கைதான் இயல்பாக இருக்கிறது.
இதிலிருந்து விலகி நிற்கும் என்னை அந்நியனாகவே பார்க்கிறார்கள். இதில் தனிமைப்படும் நானும் அவர்களுடன்
கலந்து கொள்ளாமல் தனியாகவே நிற்கிறேன். என் அனுபவம்
போல் பிற எழுத்தாளர்கள் முரண்படும் பல
கோணங்கள் இருக்கலாம்.
11.
ஒரு படைப்பாளி தன்
சொந்த வாழ்வின் நிஜமான வாழ்வனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்பை
உருவாக்கும் போதே, அப்படைப்பு, படைப்புக்குரிய அழுத்தமான கூறுகளோடு வெளிப்பட முடியும். அவனுக்கு
வேறுவழியில்லை. அவன் பலவற்றையும் கண்டிருக்கலாம்.
புரிந்திருக்கலாம். அது ஒருவரை அவரது
அனுமதியில்லாமல் புகைப்படமெடுப்பது போலாகுமா? – ஒரு படைப்பு அச்சு அசலாக நிஜம்,
செய்தித்தாளில்
வெளிப்படுவதை போல வெளிப்படுவதில்லை என்ற போதிலும் -
அல்லது ஒரு வாசகனோ, ஒரு பார்வையாளனோ
ஒரு படைப்பின் மேன்மையான கூறுகளை கருத்தில்
கொள்வதற்கு முன் அது
ஒன்றுமேயில்லையா?
சொந்த அனுபவங்கள் சார்ந்த படைப்புகளே மேன்மையானவை
என்ற எண்ணம் ஆரம்பத்தில் எனக்கிருந்தது. அந்த
வகையிலேயே
என் அப்பா என்ற முதல்
தொகுப்பு முதற்கொண்டு பலவும் அமைந்திருந்தன. ஆனால் சொந்த
அனுபவங்களை எத்தனைப் படைப்புகளாக்க முடியும்? எழுத்து ஒரு பயிற்சி என்ற வகையில் தொடர்ந்து எழுத்
வேண்டியிருக்கிறது. பிறரின் அனுபவங்களை வரித்துக் கொண்டு எழுதுபவனே நிறைய எழுத முடியும். நாவல்
போன்ற விரிவான தளங்களுக்குள் செல்ல முடியும்.
படைப்பாளி படிப்பாளியாக இருந்து செயல்படும்போது இன்னும்
விரிவானத்தலத்திற்குச் செல்லவே ஆசைப்படுவான்.
12.
கலையின் அசாத்தியமான
சாத்தியங்களை கொண்டு பார்வையாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சினிமா
தான் அதிகபட்ச சாத்தியங்களை – என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் - கொண்டிருப்பது
போல தோன்றுகிறது. நீங்கள் பிற கலைகளோடு இலக்கியத்தை
எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? ஓவியம் - சிற்பம், சினிமா
-
நாடகம், பாரம்பரிய இசை - நடனம் இவற்றை அவை செயல்படும் முறையில் இலக்கியத்தோடு
ஒப்பிட்டு கூற
முடியுமா?
அல்லது இந்த ஒப்பிடல்
உபயோகமற்றதா? பொருத்தமற்றதா?
ஒவ்வொரு கலைக்கும் தனித்தனி சிறப்பம்சங்கள் உள்ளன.
இதில் ஒப்பிடுவது நல்லதல்ல. திரைப்படத்தின் வீச்சு
எல்லோரும் அறிந்ததே.
13.
படைப்பாளிகள்
தங்களுக்குள் அறிந்தோ, அறியாமலோ பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு
இருக்கிறார்களா?
ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதல்ல. ஒருவரையொருவர்
நெருங்க முடியாதவாறு அல்லது ஒரு பகுதி
இன்னொரு பகுதியை நெருங்க முடியாதவாறு இடையில்
குறுக்கிட்டு நிறுத்தும் கூறுகள் ஏதேனும் இருக்கிறதா?
இந்தியச் சூழலில் மனித மனத்தின் பிளவுகள் மிக
அதிகம். இந்திய சமூகச்சுழல்தான் காரணம். அதிலும் வர்க்க
வேறுபாடு முதல் சாதிய வேறுபாடு வரை அதிக அளவு
பிளவுத்தன்மை உள்ள சமூகத்தில் கலை சார்ந்த
பிளவுகளுக்கும் நம் சமூக அமைப்பும் சூழல்களுமே
முக்கியக்காரணம். இலக்கிய விசயங்களில் இன்னும்
குறுகியுள்ளது நம் மனம். ஜனநாயகம்
கேள்விக்குறியாக்கப்பட்டு மூச்சுத்திணறும் இடத்தில் இலக்கிய ஜனநாயக
செயல்பாடுகளும் குறைவே. ஜனநாயகரீதியான வாசிப்புக்கு
இடமளிக்கும் சூழல்களும் குறைவே,
14.
சிறுபத்திரிக்கைகளின்
செயல்பாடு தங்களுக்கு திருப்திகரமானதாக இருக்கிறதா? பல்வேறு
தரத்தில், பல்வேறு
வகையில்,
பல்வேறு பொருளில்
எழுத்துக்கள் ஒரு சிறுபத்திரிக்கையை நோக்கி வருகிறது. 30 நாட்களுக்கு
ஒருமுறை வெளியாகும் ஏறக்குறைய 80 பக்க ஒரு சிறுபத்திரிக்கையில் என்ன அடிப்படையில் எழுத்தாளர்களை
தேர்வுசெய்து முன்னிறுத்துவது? சந்தேகமில்லாமல் அது ஆசிரியரின் தனிப்பட்ட உரிமை என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதை வாங்கிப்படிக்கும் வாசகன் என்ற முறையில்
அவனது எதிர்பார்ப்புகளை எப்படி
வைத்துக்கொள்வது?
அந்தந்த தளத்தில் ஓரளவு திருப்தி கொண்டிருக்கிறது
என்றே சொல்லலாம். இலக்கிய அரசியல்,
குழுரீதியான
செயல்பாடுகளும்
இச்சூழலை
சிறுமையாக்கிவிட்டது. வாசகனின் திசையை பத்திரிக்கைகள் கட்டமைக்கின்றன.
எனவே வாசிப்பே அரிதாகி வரும் சூழலில் அவனின் எதிர்பார்ப்புகளை சுலபமாகத் தட்டையாக்கிவிடும் சூழல்கள்
சாதாரணமாக நடக்கின்றன.
15.
பதிப்பகத்தை ஒரு
தொழிலாக நடத்துவதை தவிர்க்கமுடியாது என்ற நிலையில், பதிப்பகங்கள்
பொதுவாக தீவிர
படைப்பிலக்கியத்தை எப்படிப்பார்க்கின்றன? படைப்பிலக்கியத்தோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்போடு
இருப்பவர்கள் தான் அதை பதிப்பிக்கிறார்களா? தீவிர படைப்பிலக்கியத்தின் விற்பனை பதிப்பாளர்களுக்கு லாபம்
தரும் ஒரு தொழிலாக இருக்கிறதா?
பதிப்பக முயற்சிகள் இன்றைக்கு கார்ப்ரேட் மயமாகி
விட்ட சுழலில் அவற்றின் வணிக நோக்கங்களும்
சாதாரணமாகி விட்டன. நுகர்வுச்சூழல் பதிப்பக
முயற்சிகளின் தடத்தையும் மாற்றுகிறது. இலக்கியம், அறம்,
ஆரோக்யமான சூழல்கள் குறித்த அக்கறை கொண்டவர்கள்
சிறுபான்மையினராக இருந்து கொண்டு தங்களின்
நேரமையானப் பங்களிப்பின் மூலம் ஆறுதல் தருகிறார்கள்.
15 நாவல்கள்,
15 சிறுகதைத்
தொகுப்புகள் உட்பட 55 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து
சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர்.
திருப்பூரில் வசித்து வருகிறார். ‘சாயத்திரை’
என்ற சுற்றுச்சூழல்
மாசுபாடு
பற்றிய
நாவலுக்கான தமிழக
அரசின் பரிசு,, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி
வழங்கிய “கதா
விருது”
“உட்பட பல முக்கிய
விருதுகளைப் பெற்றவர்.இவரின் நாவல்கள்,
சிறுகதைகள் பல இந்திய
மொழிகளிலும்
ஆங்கிலத்திலும்
வெளிவந்துள்ளன.குறிப்பாக
“ சாயத்திரை “ என்ற திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல்
ஆங்கிலம்,
இந்தி, மலையாளம், வங்காளம்,
கன்னட மொழிகளில்
வெளிவந்திருக்கிறது. “ தண்ணீர் யுத்தம் “,
“
நீர்ப்பாலை ”
போன்ற இவரின் நூல்கள்
சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றிப் பேசுகின்றன.பல நூல்கள் பல முக்கிய
பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இருக்கின்றன.
திருப்பூரைச் சார்ந்த இவர் ” கனவு ‘
என்ற இலக்கியச்