“ திருப்பூர் -100 “
திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று
மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு
நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன.
அதிகாலை முதல் இரவு வரை “ ஜனசந்தடி”
நிறைந்து வழியும் நகரமாக
இருந்து வருகிறது. “ விடி நைட் “ என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும்
பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி
100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச்
சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக்
கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக “ திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
“ தீதும் நன்றும் “ நேர்மறையும் எதிர்மறையும்
என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது “ திருப்பூர் -100 “ . செழித்து நின்ற நொய்யல் இன்று
செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள்.
கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி
விட்டன.
இவற்றிற்கானக் காரணங்கள்
கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த
நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத்
தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி
தங்களன்புள்ள
கே.சுப்பராயன்
( முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
Rs 100 திருப்பூர் கலை
இலக்கியப் பெருமன்றம் வெளியீடு.