நூறு சதம் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பரப்புரை
நூறு சதம் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பரப்புரை திருப்பூர் இணைய தளம்
அணி சார்பாக புதன் மாலை பாண்டியன் நகரில் நடைபெற்றது. இந்த பரப்புரைக்கு
திருப்பூர் இணைய தளம் அணி சார்பாக மனோகரன் தலைமை தாங்கினார். நூறு சதம்
வாக்குப்பதிவு அவசியம் பற்றி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ஜனனி காயத்ரி ஆகியோர்
வலியுறுத்தினர். சக்தி மகளிர் அறக்கட்டளைத் தலைவர் கலாமணி கணேசன், பழனிச்சாமி,
சுலோசனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, அண்ணா
நகர் பகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் பிரசுரங்கள் தந்து வலியுறுத்தப்பட்டன.
செய்தி: திருப்பூர் இணைய தளம் அணி சார்பாக: ஏ. மனோகரன் ( 8124283081 )