எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு
திருப்பூரில் விருது
சுப்ரபாரதிமணியன்
எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை ) திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது இன்று தரப்பட்டது. காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது… இப்பள்ளி முன்பு நம்மாழ்வார், ஜெயமோகனுக்கும் விருது வழங்கியுள்ளது.
புதன் மாலை திருப்பூர் கோதபாளையம் காது கேளாதோர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகசாமி பரிசு வழங்கினார், பள்ளி அறக்கட்டளைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
காது கேளாத ஒருவைன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட்து ” நிமித்தம்” நாவல்.
விருதைப் பெற்றுக்கொண்டு எஸ். ராமகிருஷ்ணன் பேசினார்: “ யாரைப் பற்றி நான் எழுதினேனோ அவர்களே என்னை அங்கீகரித்து விருது தருவது பெரிய கவுரவமாகும். சின்ன கிராமத்து அரசு பள்ளியில் படித்து எழுத்தாளன் ஆனதற்கு நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள் வழிகாட்டிகளாக இருந்தனர்.. ” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” என்பது உலகளவிலான மானுடத்தத்துவம். அந்தப் பெயரில் விருது வழங்கப்படுவது சிறப்பானது தங்கள் உடல் குறையை மீறி இப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்து வருவது முன்னுதாரணமாக்த் திகழ்கிறது .என் எழுத்துலகப் பயணத்தில் துணை நிற்கும் மனைவி, மகன்கள், தோழர் எஸ்.ஏ. பெருமாள் ஆகியோருக்கு நன்றி..புகைப்படத்துறையில் இங்குள்ள மாணவர்களுக்கான படிப்புப்பிரிவு அவர்களுக்குப் பெரிய கொடை. ‘ என்றார்
. எஸ். இராமகிருஷ்ணனின் படைப்புகள் பற்றி சுப்ரபாரதிமணியன் பேசினார். ” நாவல் பரப்பில் விரிந்த களன்களைக் கொண்டவை அவரின் நாவல்கள்.யதார்த்தமும், புனைவின் உச்சமும் கொண்டு வெவ்வேறு பரிமாணங்களில் தமிழுக்கு பெரும் கொடையாக அவரின் படைப்புகள் விளங்குகின்றன. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை குறித்தப் படைப்புகளில் அக்கறை கொண்டவர் என்பதை காது கேளாதவர் உலகம் பற்றி “ நிமித்தம் ” நாவலில் அவர் எழுதியிருப்பது நிரூபிக்கிறது “ என்றார்.
தரணிதரன் இயக்கிய சிலப்பதிகாரம் காவிய நாடகம் , வேற்று கிரகவாசி, வகுப்பு ஆகிய நாடகங்களை காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவியர் நடத்தினர்.
( நிர்வாகி காது கேளாதோர் பள்ளி 9488871537 , 9965631066 )