நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது.
இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும், அறிவுரை எண்ணத்தோடும் அவை வெளிப்பட்டுள்ளன கரையே( ற்)றுங் கருத்துக்கள் என்ற இந்நூலில்… இந்நூலின் கடை வரி:: இன்று புதிதாய் பிறந்தோம், நாளையும் புதிதாய் பிறப்போம் என்கிறது. இந்நம்பிக்கையை இந்நூல் முழுக்க பார்க்க முடிகிற்து.
அதில் சில:
குடும்பம் என்ற பல்கலைக்கழகத்திலிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம்.தந்தையிடம் தாய்மைப்பண்பு, ஆசிரியனிடம் தாய்மைப்பண்பு, அரசாள்வோரிடம் தாய்மைப் பண்பு வளர வேண்டும்- எல்லா உயிர்லும் ஒருமைப்பாட்டை காண பயிற்சி வேண்டும்.-உலக உயிர்த்திரளிடம் ஏற்படும் சகோதரத்துவத்தின் பழுத்த நிலையே அருள்- மேல் நாடுகளில் மது அருந்துவது உனவின் ஒரு பகுதியாக அமைகிறது. ஆனால் இங்கு அப்படி அல்ல. அதற்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கச் செய்வதற்காகவும், விளம்பர உத்தியாகவும் இத்தைய காட்சிகளை திரைப்படங்களில் அடிக்கடி புகுத்துகிறார்கள். பண்பாட்டு படுகொலை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுப்பது நாகரீகம் என்று கருதி யாராவது நஞ்சகளை உண்பார்களா-இன்றைய மனிதனைப் பாதிக்கும் சுமைகளும் ஒன்றாகச் செய்திச்சுமை என்பதைக் குறிப்பார்கள். அந்த முறையில் துள்ளித் திரிகின்ற கள்ளமற்ற குழந்தைகளின் மூளையில் இளம் பருவத்திலிருந்தே கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையாக எண்ணற்றச் செய்திக்குப்பைகளைத் திணிக்கத்தான் வேண்டுமா-இன்றைய மாணவர்கள் மனித வாழ்வில் இலட்சிய வேகம் நிரம்பிய காலம். சமூக முன்னேற்றம், சமூக வளர்ச்சி விளையும் வயல் நிலம் சமூக மாற்ற சிற்பிகள் மாணவர்களே. இன்றைய மாணவர்கள் இலட்சிய வீரர்களாக விளங்க வேண்டும்.- எம்மதமும் சம்மதம் என்ற நெறி நாம் பின் பற்ற வேண்டிய நன்னெறி அன்பு நெறி- வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல. நாம் கடலாக இல்லை என்றாலும் ஏரியாக இருக்கலாம். வெட்கப்பட வேண்டாம். மனம் என்ற தோணி இருக்க பயம் ஏன். இன்று புதிதாய் பிறந்தோம். நாளையும் புதிதாய் பிறப்போம் – என்கிறார். இதில் உள்ள பல்வேறு கட்டுரைகளில்..
இதில் குறிப்பிடப்படும் விசயங்களை வெளிப்படுத்த இந்திய தத்துவ மரபு, புராணங்கள், வெளிநாட்டுக்கதைகள் என்று பலவற்றை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
அதிலிருந்து ஒரு கதை;
1966ல் நோபல் பரிசு பெற்ற போலிஷ் பெண் கவிஞர் விஸ்வாவா சிம்போர்ஸ்கா எழுதிய உருவகக் கதை:
மீனவர் சிலர் கடலிலிருது ஒரு சீசாவை கண்டெடுத்தனர். அதற்குள் ஒரு துண்டுத்தாள் இருந்த்து. அதை எடுத்து படித்துப் பார்த்தார்கள். “ யாராவது என்னைக் காப்பாற்றுங்கள். யாரும் இல்லாத் தீவில் கடல் கொண்டு வந்து என்னை ஒதுக்கி விட்ட்து. உதவி வரும் உதவி வரும் என்ரு நான் கரையில் காத்து நிற்கிறேன். விரைந்து வாருங்கள் இங்கே இருக்கிறேன் நான்”
“ இதில் தேதியொன்றையும் காணோமே. உறுதியாக இப்போதே காலங்கடந்து விட்டிருக்கும் இந்த சீசா நீண்ட காலமாகக் கடலில் மிதந்து கொண்டிருந்திருக்க வேண்டும் “ என்றான் முதலாவது பேசிய மீனவன்.
“ இதில் இடம் எங்கே என்று சொல்லவில்லையே. எந்தக் கடல் என்றும் நமக்குத் தெரியாதே “ என்றான் இரண்டாவதாகப் பேசிய மீனவன்.
” இப்போழுது ஒன்றும் காலங் கடந்து போய் விடவில்லை. அது ஒன்றும் தொலைவிலும் இல்லை. இங்கே என்று சொல்லும் தீவும் எங்கேயும் உள்ளதுதான்” என்றான் மூன்றாவது மீனவன்.
எல்லோருக்கும் சங்கடமாகப் போயிற்று . வாயடைத்து நின்றார்கள். எல்லா பொது உண்மைகளின் கதையும் இதுதான்.
போலந்து மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்த பல படைப்புகள், மலையாளத்திலிருந்து பல படைப்புகள் ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சி. இராதா கிருஷ்ணனின் ஸ்பந்த மாபினிகளே நன்னி நாவல் உட்பட) இலக்கண ஆராய்சி நூலகள் ( உ வேசா இலக்கணப் பதிப்புகள், மலையாள் மொழியிலக்கண நூலாகிய பாஷா வ்யகரணம் உட்பட ) , சமூக நீதிப் போராட்டம் சம்பந்தமான நூலகள் ( நாராயண குருவும் அய்யன் காளியும் உட்பட ), தமிழ் மலையாளம் லெக்சிகோகிராபி நூல்கள் , நகுலன் கட்டுரைகள் போன்ற் தொகுப்பு நூல்களின் ஆசிரியரான பேரா. கி. நாச்சிமுத்து அவர்களின் வெகு எளிமையான நூல் இது.
( கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாடு ஆய்வி நிறுவனம், கோவை 30 விலை ரூ 70 )