திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா ஞாயிறு மாலை காந்திநகர் மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. சு. மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு , தலைவர், திருப்பூர்), தலைமை தாங்கினார். மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கனடா நாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர் அகில் நூலை வெளியிட மணி ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலத் தலைவர்) பெற்றுக்கொண்டார்.. தேசியம் என்பது கற்பிதம் என்பதினை வெளிப்படுத்தும் வகையில் நதிநீர் பிரச்சினையில் தமிழர்கள் அவதியுறுவதை இந்த நாவல் வெளிப்படுகிறது. இது தமிழில் 3 பதிப்புகள் வந்துள்ளது. மலையாளத்தில் சபி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை திருவனந்தபுரத்தைச் சார்ந்த சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.( இதற்கு முன்பே சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. )மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். * கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பை வழக்கறிஞர் ரவி அறிமுகம் செய்தார்.* மாற்றுக் கல்வி குறித்த நூல்கள் பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” மற்றும் கிருஸ்ணகுமாரின் “முரண்பாடுகளிலிருந்து கற்றல்” ஆகியவற்றை பற்றி மருத்துவர் சு. முத்துசாமி(தாய்த்தமிழ்ப் பள்ளி, பாண்டியன்நகர்), வழக்கறிஞர்கள் நீலவேந்தன், கனகசபை, சிவகாமி,ஈஸ்வரன், இளஞாயிறு, வெற்றிச் செல்வன், நந்த கோபால் ஆகியோர் பேசினர்.கனடா எழுத்தாளர் அகில் ”புகலிடத்தில் தனி ஈழம் சம்பந்தமான குரல் வலுவிழந்து வருகிறது. அதே சமயம் புகலிடத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் இளம் வாரிசுகள் ஈழப்பிரச்சினையை மனித உரிமை மீறல் பிரச்சினகளாக எடுத்துக் கொண்டு வெளிப்படுத்துவதால் அய். நா. சபை தீர்மானம் ஆகியவை சமீபத்தில் நிறைவேறியுள்ளன. இலங்கையில் இப்போது நடைபெறும் சிங்கள் அரசின் தாக்குதல் வன்முறையும், அழித்தொழிப்பும் தொடருமானால் இன்னும் அய்ந்து ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் இனமே இல்லாமல் போய் விடும்" என்றார். இலங்கைப் படிப்பாளிகள் அச்சூழலை இலக்கியத்தில் பதிவு செய்திருப்பதை பல்வேறு நாவல்கள் மூலம் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் விளக்கிப் பேசினார்.. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தை சார்ந்த மாநிலத்தலைவர் மணி பேசுகையில் ”கற்பித்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடே. ஆசிரியன் என்பவன் நடுநிலையாளனாக இருக்க முடியாது. . கல்வி வியாபாரமாகியிருக்கும் இன்றையச் சூழலில் மாற்றுகல்வி, மற்றும் தாய்வழிக்கல்வி ஆகியவற்றை முன்னேடுத்துச் செல்லவேண்டிய அவசியம் ஆசிரியர் சமூதாயத்திற்கு உள்ளது. இல்லையெனில் எதிர்காலச் சமூகம் ஆசியர்களை நிச்சயம் சபிக்கும். ஆசிரியர்கள் சமூகப் பொறுப்புடன் எல்லாதளங்களிலும் செயல்படவேண்டும்“ என்று விரிவாய் பேசினார். நீணிப்பவளக்குன்றன் உட்பட பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். (சுடுமணல் மலையாள மொழி பெயர்ப்புவெளியீடு : சிந்தா பதிப்பகம், திருவனந்தபுரம், விலை: ரூ.60/-, அகிலின் “கூடுகள் சிதைந்த போது ” வம்சி, திருவண்ணாமலை, ரூ120, மாற்று கல்வி நூலகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை வெளியீடு ) செய்தி: சுபமுகி (கனவு இலக்கிய வட்டத்திற்காக) 4/6/2012 ( கனவு,8/2635, pandiyan nagar, TIRUPUR – 641602. 9486101003.)
subrabharathi@gmail.com
subrabharathi@gmail.com