சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 14 பிப்ரவரி, 2011

அண்டைவீடு: பயண அனுபவம்

டாக்கா செய்தித்தாள்களில் கப்பல் உடைப்புப் பணிகளில் ஈடுபடுவோரின் சாவும், விபத்துகளும் அது குறித்த அரசின் எச்சரிக்கைகளும், சட்டரீதியான நடவடிக்கைகளும் செய்திகளாய் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்க நேரிட்டது.

1970க்குப்பின் கப்பல் உடைத்து அதன் இரும்பு பாகங்களை ப் பிரித்தெடுப்பது முக்கிய வேலைகளில் ஒன்றாக, உலகம் முழுவதும் 700 கப்பல்கள் பழையதாகியும், செயலிழந்தும், விபத்துக்கள் ஏற்பட்டும் உடைப்புப் பணிக்காகத் தயாராகின்றன. இதுவரை 45,000 கப்பல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து, தைவான், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முக்கியத் தொழிலாக இது நடந்து வருகிறது.


இந்தியாவில் அலாங் என்ற குஜராத்தைச் சார்ந்த கடற்பிரதேசத்தில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்றாண்டு சென்னையில் செயலிழந்து போன ஒரு கப்பலை உடைக்கும் பணி தொடங்கியபோது சர்ச்சைக்குள்ளானது.

வங்கதேசத்தில் டாக்காவிலிருந்து 125 கி.மீ. தள்ளி உள்ள சிட்டகாங் துறைமுகப் பகுதியின் 20 கிமீ பரப்பளவு உடைக்கப்பட்ட இரும்புப் பொருட்கள், உதிரி பாகங்களால் மாசுபடுத்தப்பட்ட மிக மோசமான பகுதியாக இருக்கிறது. உடைக்கும்போது ஏற்படும் விபத்துகளில் சிட்டகாங்கில் மட்டும் கடந்த 20 வருடங்களில் 400க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். 6000 பேருக்கு மேற்பட்டோர் கடுமையான காயங்கள் அடைந்திருக்கிறார்கள். ஒரு கப்பல் தளப்பிரதேசத்தில் ஒரு நாளைக்கு ஒருவராவது மிகுந்த

2.சோதனை மிகுந்த அளவில் காயப்படுவது என்பது சாதாரணமாக நிகழ்கிறது. இரும்புக் கம்பிகள், தளவாடங்கள் நசுக்கி சாகிறவர்களும் இருக்கிறார்கள். மின்வாயு மூலம் இரும்புப் பகுதிகள் துண்டிக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. பெரிய விபத்துக்கள் என்றால் 10ஆயிரம் முதல் 15ஆயிரம் டாக்கா வரை நஷ்ட ஈடு தருகிறார்கள்.1965ல் வங்கதேசத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமொன்று ஒரு லட்சம் டாக்கா வரை நஷ்டஈடு தர வாய்ப்பு தந்துள்ளது. ஆனால் அது அமலாக்கப்படுவதில்லை என்பதாலும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் இல்லை என்பதாலும் போராட்டங்களும் தொடர்கின்றன.உலகின் 430 தொழில்கள் மோசமானவை என்ற பட்டியலில் உள்ளன. அதில் 67 இன்னும் மோசமானவையாகவும், அதிலும் இன்னும் இன்னும் மோசமான தாகவும் கணிக்கப்படுகிறது. 11ல் ஒரு தொழிலாக கப்பல் உடைப்பு இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களும் பெண்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.ஆனந்தா குழும ம் சிட்டகாங்கில் கப்பல் உடைப்புத் தொழிலிலும், புதுக் கப்பல்களை உருவாக்கும் பணியிலும் தீவிரமாக வங்கதேசத்திலும், இந்தியாவிலும் ஈடுபட்டு வருகிறது. குறைந்தது ஆண்டுக்கு 25 கப்பல்களையாவது ஆனந்தா குழுமம் உடைத்தெடுத்து இருக்கிறது.


பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சோர்வுறும் மீனவர்களும் கப்பல் உடைப்புத் தொழிலுக்கு மாறிவிடுகிறார்கள். மீனவர்கள் கரையேறி விட்டாலும் கஷ்டங்கள் ஓய்வதில்லை.