திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள். அத்வானி முதல் கொண்டு கபில்தேவ் வரைக்கும் பெரும் பிரமுகர்களுக்கு தொழில் பினாமிகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஊர். இதனால் வியாபார விடயங்களை மீறி அரசியல் வாதிகளின் பார்வைக்கு இலக்காகி இருக்கும் ஊர்.( ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை துணை முதலமைச்சர் இங்கு வருகிறார் என்பது முக்கிய கணக்கு. ஒவ்வொரு முறையும் அவர் இங்கு வரும் போது வரவேற்பு, பொதுக்கூட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது . ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் வாங்கிக் குவித்த சொத்து காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் எகிறிப்போயிருக்கிறது. ) உள்ளூர் மார்க்ஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அரை கோடி ரூபாயை தமிழக தொழிலாளர் நல அமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் நியதிப்படியான 8 மணி வேலை நேரம் இங்கு செல்லுபடியாகாது என்று சட்டத் திருத்தலுக்காக ஏற்றுமதியாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்பதான முதல் காரணமாகக்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தி மு கவில் இணைகிறார். ) தொழில் நகரம் என்பதை மீறி இது அரசியல் நகரம் ஆகி விட்டது.
இங்கு சமீபத்தில் பிரபலமான பேச்சாளர் தமிழருவி மணியன் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட ஒரு கட்சி ( இயக்கம்) ஆரம்பித்த வைபவம் நடைபெற்றது. காந்திய சமுதாய இயக்கம்.தமிழருவி மணியனுக்கு இங்கு எப்போதுமே பெரும் கூட்டம் கூடும். கவர்ச்சிகரமான பேச்சு, வாசிப்புப் பழக்கம் இல்லாமல் கூட்டத்தில் பேசுவதைக் கேட்கப்பழகி சொக்கிப்போய் கிடக்கும் பெரும் கூட்டம் திருப்பூரில் உண்டு. கட்சி ஆரம்ப விழாவுக்கு இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. அவரின் பேச்சு காந்தீயம் இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை விட கருணாநிதி மீதான எக்கச்ச்க்க கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. ( அவர் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு தந்திருக்கும் தீர்ப்பு பிரசித்தியானது. தமிழ் வாழ்க என்று கதறிக் கொண்டிருப்பதை விட தமிழ் அறிஞர்களுக்கு கவுரவம் தருவது நல்லது. முக்கியம் என்றார் சந்துரு.) காந்திய பொருளாதார விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க அறிக்கை தந்திருருந்தார் தமிழருவி. உறுப்பினர் சந்தா ரூ 20 மட்டும். போராட்டங்களுக்கு அழைக்கமாட்டேன் என்று உறுதி மொழி தந்திருக்கிறார். நெல்லைக்கண்ணன் போன்றோர் தமிழருவி மணியனை விட கூட்டங்களுக்கு அதிகத் தொகை வாங்குகிறவர்கள். அவருக்கு அதிக கூட்டம் கூடும் ஊர் திருப்பூர். அவருக்கு ஆதரவு தரும் பணக்காரர்கள், புரவலர்கள் இங்கு அதிகம். அவர் அவரின் ஆதரவாளர்களின் கூட்டத்தை இங்கு கூட்டக்கூடும். ( நகைச்சுவை மன்ற மாதக்கூட்டங்களுக்கு வரும் எக்கச்சக்க கூட்டத்தை வைத்துக் கொண்டு உள்ளூர் துணுக்கு எழுத்தாளர் ஒருவர் இது நல்ல சமயம் நகைச்சுவை கட்சி தொடங்க என்றார்.) சட்டமன்றத் தேர்தல் னெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற பலத்தைக் காட்டும் கூட்டங்கள் , புதிய கட்சிகளின் ஆரம்ப விழாக்கள் அதிகரிக்கும்.இந்திய ஜனநாயகம் கட்சிகளை ஆரம்பிப்பதை வெகுவாக ஆதரிக்கும் தாரளவாதம், பெருந்தன்மை கொண்டதாகும்.
ஆமாம், நகைச்சுவை கட்சித்தலைமைக்கு கீழ்க்கண்ட பேச்சாளர்களில் யாரை நீங்கள்சிபாரிசு செய்கிறீர்கள். 1.கு ஞானசம்பந்தம் 2. சாலமன் பாப்பையா.
3. லியோனி 4. ராசா
சிறந்த சிபாரிசுக்கு ஒரு டஜன் திருப்பூர் லோக்கல் பனியனும், ஈரோடு அயிட்ட ஜட்டி அரை டஜனும் பரிசு காத்திருக்கிறது.
======================================================>சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -