சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 30 ஜூன், 2008

புத்தக வெளியீட்டு விழா



திருப்பூர் கலை இலக்கிய பேரவை மற்றும் டி.கே.டி ஆசிரியர் பயிற்சி
பள்ளி சார்பில் தேவாங்கபுரம் பள்ளியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்
புத்தகத்தை மேயர் செல்வராஜ் வெளியிட யுனிவர்சல் தியேட்டர் அதிபர் பழனிசாமி
பெற்றுக்கொண்டார்.அருகில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்,விங்ஸ் ச்வுகத் அலி

செவ்வாய், 24 ஜூன், 2008

பட விமர்சனம்

துவக்குகளின் சப்தங்களிடையில்....
சுப்ரபாரதிமணியன்
----------------------------------


இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பிரசன்னா ஜெயக் கொடியின் 'சங்கரா' என்ற இலங்கை படத்தில் இவ்வகைச் சிக்கல் முழுதும் புறக்கணிக்கணிப்பட்டு அல்லது தேவையில்லாதாக்கப்பட்டு ஒரு திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோவிலில் வரையப்பட்டிருக்கிற 'தெலபதா ஜாதகயா' கதைகளை மையமாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சிதிலமடைந்திருப்பதை சரி செய்ய ஒரு புத்தத்துறவு வருகிறார். அக்கதைகளில் புத்தரின் உபதேசங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. உயர்ந்த லட்சியங்களை மனதில் கொண்டிருப்பவன் பெண் போன்ற மாயைகளால் கவரப்படக்கூடாது என்பது அதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

கிராமிய சூழல், வழிபாட்டிற்கென்று வந்து போகும் சிங்களவர்கள், தனித்து விடப்பட்ட சூழலில் புத்தத் துறவி தன் வேலையைத் தொடர்கிறான். இளம்பெண் ஒருத்தியின் தலை 'ஹேர்பின்'னை ஒருநாள் எதேச்சையாக கோவிலில் கண்டெடுக்கிறான். அந்த இளம்பெண்ணை அவன் அறிவான். அதை அவளுக்கு தருவது என்ற முடிவில் அலைவுறுகிறான்.சாதாரண மனிதனின் சபலமும் ஊசலாட்டமும் அவனின் துறவைக் கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த வாழ்க்கையின் சாரங்களும், ஓவியங்களின் மையமும் இருவேறு உலகங்களாகின்றன. இரண்டிற்குள்ளும் அலையும் மனமும் புனைவுகளும் வெவ்வேறாகின்றன.

ஓர் இரவில் அந்த ஓவியங்கள் சிதைக்கப்படுகின்றன. அந்த ஓவியங்களின் மறு žரமைப்பு என்பது அவனுக்கு கேள்விக்குறியாகிறது. தான் மாட்டிக் கொண்டிருக்கும் மோகவலையை பிய்த்தெறிவதா அல்லது அதனுள் மாட்டி அலைவுறுவதா என்பது அவனுள் விசுவரூபிக்கிறது. கோவிலைத் தாண்டிய புறச்சூழலை தவிர்த்து விட்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதில் பல கேள்விகள் தேவையில்லாததாக்கப்படுகின்றன. தேசிய இனச் சிக்கலில் பௌத்தமும், அது சார்ந்த அமைப்புகளின் சமரச உணர்வும் ஒரு புறம் இப்படத்தை மையமாக்கி ஒப்பீடு நிகழ்த்தப்படும்போது இப்படத்திற்கு இன்னுமொரு பரிமாணம் கிடைக்கலாம். அது வலிந்து கொள்ளப்படும் படிமமாகத்தான் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சூழலை பின்னணியாகக் கொண்டு ஒளிப்பதிவாளர் சி.கே.ராஜ்குமார், இயக்குனர் புதியவனின் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'மண்' திரைப்படம் இலங்கைச் சூழலில் ஜாதீய இறுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் சாதீய பிரச்சனைகள், தீண்டாமைக் கொடுமைகள் தமிழர்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இப்பிரச்சனைகள் முதன்மைப்படுத்திப் பேசுவது ஈழத்தமிழர்களுக்கு எதிராக முனைப்படுத்தும் போக்குகளால் பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியின் மலையகத் தமிழர்களும் தீண்டாதவர்களாகவே நடத்தப்படுகிற அவலத்தையும் இப்படம் சொல்கிறது.

'தோட்டக்கார நாய்' என்ற வசவுடன் வாழும் மலையகத் தமிழர் குடும்பம் ஒன்று கலவரமொன்றில் மகனை இழந்ததால் வவுனியா பிரதேசத்தில் கனகராயன் கிராமத்தில் இடம்பெயர்ந்து வ'ழ்ந்து வரும் சூழலில் அக்குடும்பத்து பெண் பண்ணையாரின் மகனைக் காதலித்து கர்ப்பமுறுகிறாள். பண்ணையார் மகன் இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்க லண்டன் சென்று விடுகிறான். இருபதாண்டுகள் கழித்து அவன் போரில் சிதைந்த தன் கிராமத்தைப் பற்றி ஒர் ஆவணப்படம் எடுக்க வருகிறான். ஏமாற்றப்பட்ட பெண்ணின் மகன் தன் தந்தையை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கிறான். சாதீய கொடுமைகளின் காரணமாக 'கும்பிட மட்டுமே உயர்ந்த கைகள் இப்போது கொடுமைக்கு எதிராகத் துப்பாக்கியைத் தூக்கவும் உயர்வதை' இயக்குனர் சுட்டுகிறார்.

கிராமிய சாதீய உணர்வின் ஆழமும், சிறுவயதினரின் பாலியல் குறித்த விவாதங்களும் பாலியல் அலைக்களிப்புகளும் நுணுக்கமாக படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ராஜ்குமாரின் தேர்ந்த ஒளிப்பதிவு இலங்கையின் வனப்பை ஏக்கம் கொள்ளும் வகையில் படமாக்கியிருக்கிறது. வனப்பின் பின்னணியில் கேட்கும் துவக்குகளின் சப்தங்கள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு வனப்பான பூமி போரால் சிதைவுறுகிற கொடுமை மனதை துன்புறுத்துகிறது. அந்தப் போரின் நியாயங்கள், விவாத தர்க்கங்களோ இப்படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அங்கு நிலவும் சாதீயக் கொடுமையின் அழுத்தம் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா பகுதியில் இப்படப்பிடிப்பு நடத்த போராளிகளின் அனுமதி , தமிழ்ப்படத்தின் தேவை ஆகியவை குறித்து பல சங்கடங்களும் மனதில் எழும். யுத்த பூமியிலிருந்து யுத்தம் தவிர்த்த விடயங்களைச் சொல்ல புதியவனுக்கு இருக்கும் உறுத்தலும் எளிதாக விளங்கக் கூடியதுதான்.

- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)


கமண்டலத்தில் நதி - சுப்ரபாரதிமணியனின் " ஓடும் நதி " நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா

சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது )

=============================================

கமண்டலத்தில் நதி
*****************

( நன்றி- கலாப்ரியா கவிதை)


சுப்ரபாரதிமணியனின் " ஓடும் நதி " பற்றி கோவை சி ஆர் ரவீந்திரனின் கட்டுரை சென்ற இதழில் வெளியாகியிருந்தது . அது சில யோசிப்புகளுக்குக் கொண்டு சென்றது.


துயரம் என்பது எப்படி வரும்.உடலால், மனதால், சூழ்நிலையால் இன்னும் எப்படி எல்லாம் வருமோ? அப்படி எல்லாம் வருகிறது செல்லமணிக்கு. செல்லமணியின் துயர நதி - அவள் அனுபவம் ஓடும் நதியாக மாற்றம் அடைந்துள்ளது. நதி என்ற குறியீடு பெண்ணையும், அவள் அனுபவ எண்ணங்களையும் குறிப்பதாகவே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.


செல்லமணியின் தற்கொலை எண்ணத்தில் ஆரம்பமான நாவல் அவள் நொண்டி புருஷனோடு வாழ்வதாக முடிகிறது. நிறைய முரண்பாடுகள் நிறைந்தது இந்நாவல். செல்லமணியின் சில மாத அனுபவங்கள் நீண்ட அத்தியாயங்களில் விவரிக்கப்படுகிறது. அவளோடு சில கண அனுபவங்கள் கூட நாவல் முழுவதும் வருகிறது. பல வருட வாழ்க்கை சில பாராக்களில் முடிகிறது. இப்படித்தான் வாழ்வு அமைகிறது.


'சொக்கன்' என்ற தலித் பாத்திரம் வில்லனாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும்? . சொக்கன் செல்லமணியை விட்டு செல்ல காரணம் என்ன என்பது நாவலில் இல்லை. செல்லமணியோடு இருக்கும் துயரத்தோடு அவன் செல்கிறான், நாவலை விட்டு வெளியேறுகிறான். சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிராகவே அந்த அத்தியாயங்கள் நீள்கிறது. ஆனால் பின் அத்தியாயங்களில்

கவுண்டர்களின் சாதி ஆதிக்கம் குறித்தும், தண்­ர் பிரச்சனையில் ஆதிக்க வெறியோடும், தலித்களுக்கு எதிராக கொலைவெறி தாக்குதலும் விவரிக்கிறது. அதில் கம்யூனிஸ்ட்களும் சாதி பின்னணியோடு இருப்பதாக குற்றச்சாட்டை, விமர்சனத்தை முன் வைக்கிறார். இது சிறுபான்மையினருக்கு எதிரான குரலாக அமைந்து விடும் அபாயத்தை தருகிறது.


நாவலில் செல்லமணி அனுபவத்தைவிட நம்மை வியக்க வைப்பது என நாகாலாந்து கடிதங்களை சொல்லலாம். அது தனித்து நாவலாக வந்திருக்க வேண்டியது.செல்லமணி வாழ்வோடு- எந்த வகையிலும் ஒட்டாதது. நவீன எழுத்தும் உத்தியும் புதிய அனுபவத்தோடும் ஆதி பொதுவுடைமை மக்களின் தொடர்ச்சியாகவும், கடிதங்கள் நன்றாக வந்துள்ளன.


அப்புறம் மேரி, பக்ருதீன் உறவு வித்தியாசமாக அமைந்து உள்ளது. வயதானவனின் காமம், இளம் பெண்ணின் தேவை என்ற உறவு நிலை- மிகச் சரியாக சித்தரிக்கப்படுகிறது.


வக்கீல், செல்லமணி உறவு கூட அப்படித்தான். ரமேஷ்குமார். அவள் வாழ்வில் வருவதை- அந்த வன்புணர்ச்சியை நிகழ்வை விவரிப்பது- இன்னும் துயரமிக்க அவள் உடல்வலியையும், மனவலியையும்- இன்றும் பதிவு செய்ய வேண்டியது.


செகந்திராபாத் ஜுலியின் வாழ்வு கூட நமக்கு புது அனுபவமே இன்னும் வடிவ நேர்த்தி கொண்டு நல்ல பெண்ணிய நாவலாக வர வேண்டியது அவரின் ஆண் பார்வை நாவலில் மிகுந்தே வருவதும்,. நவீன கதை சொல்லல் முறையும்- வாசகன் அவரின் மற்ற நாவல்களில் கண்டடைந்ததே. என்றாலும் குறிப்பிடத்தக்க நாவல் " ஓடும் நதி "


( " ஓடும் நதி " அமிர்தா பதிப்பகம் , சென்னை விலை ரூ 150/- பக்கங்கள் 346. )

ஓடும் நதி பற்றி "பால்கி"

ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :" ஓடும் நதி " நாவல்

பால்கி
======================================================

பால்கி ( மாநில செயலாளர் SNEA =BSNL அதிகாரிகள்

தொழிற்சங்க அமைப்பு )

=====================================================


சென்னை அமிருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான "ஓடும் நதி" வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன்.

சென்ற திண்ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கும் தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடமைவாதிகள் மீதான ஜாதீய விமர்சனம்

போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட பல விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.


நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப்போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டு வரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுது பிரச்சனைகள் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாய் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறசூழல் அக்கறை பல சமயங்களில் வாசகருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம்-இராசாயன நெடி-தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினை சொறிபவர்கள் யாராக இருந்தாலும் - இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினை பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.


செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்த காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லமிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.


படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித்தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாய் ஏற்படும் அதிர்வுகளாய் நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழிதெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடிசத்தங்கள் அதிகமாய் இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் பெண் என்பதை இந்த நாவலின் மையப் பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.


சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத்துக்களில் தன்மனச்சாட்சியை பேசவைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டு வந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.


நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர், சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப்பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதியின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்திருப்பதை லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார்.


வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லியோ நாவலின் மூலம் ஓடும்நதியின் இயல்பை உணர்ந்திருக்கிறோம்.



( ஓடும் நதி: ரூ150/- அமிர்தா பதிப்பகம் சென்னை பக்கங்கள் 350 )


( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு )

வெள்ளி, 20 ஜூன், 2008

வலை மொழி

வியாழன், 12 ஜூன், 2008

சுப்ரபாரதிமணியன் கதைகள் புத்தகம்

please visit

http://www.viruba.com/result.aspx?p=%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d&q=2

நன்றி !

-----------------

"விருபா வளர் தமிழ்" செயலி

The Coloured Curtain



Translation of Tamil Novel "

Chayathirai"/Subrabharathimanian. Translated by P. Raja. Delhi, B.R. Pub., 2003, xii, 196 p., $11 (pbk). ISBN 81-7646-356-6.
"The novel The Coloured Curtain is a translation of the Tamil Novel Chayathirai which is quite a significant novel in modern Tamil literature. The author portrays the reality of life in Tirupur pleasantly covered with a coloured curtain. He excels in the depiction of sorrow page after page by throwing light on illusion and reality, life and death, beauty and rubbish by tearing open the coloured curtain.
"It is remarkable that a uniform tone of depiction is maintained throughout the novel. Be it the portrayal of hunger or gluttony, love or disappointment, rise or fall, the voice and the feeling too are one and the same.
"The characters come alive in all their passions, appetites, delusions and deceptions. This novel’s devastating attack on human carelessness, greed and irresponsibility will linger with the reader long after he has completed reading it. A solid work of art that will stand the test of time. This novel was awarded the Best Novel Award by the Government of Tamil Nadu in 1999."

பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்

சுப்ரபாரதிமணியன்
---------------------------
தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சனைகளை முன் வைக்கிற 'கை', குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய "பாலிபேக்" ஆகியவற்றிலும் காணமுடியும்.
"பூங்கா"வில் அன்பிற்காக ஏங்கும் பெண்குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. "இப்படிக்கு பேராண்டி" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களில் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நம்முள்ளும் ஆழமாக விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறுசெடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிறபோது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்து காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தாபாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)
குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றிவிடுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.
தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் முறித்து இன்னும் சில நெகிழ்வுகளை அது சமச்žரான பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப்பதைக் காட்டியிருக்கும்.
இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந்திருக்கின்றன. ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் " நாடக நடிகர்களாகி" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளியமைப்பு உறுத்துகிறது. குழந்தைகளின் நுண்ணிய உணர்வுகளின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனுடன் தனிப்பயிற்சி மாணவர்களை உட்காரவைத்தபடி தேநீர் அருந்தும் குரோதமும் தென்படுகிறது. திரைப்படத்தனம் என்பது ஏற்படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவதிலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தா பாட்டி வேணும்" என்று கோஷமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள்கிறது. இந்தவகை சாதரண நிகழ்வுகளை யதார்த்த தளத்தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத்தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும்பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத்திய அவரின் சிறுகதை யொன்றிலும் இதை நுணுக்கமாக கவனிக்க முடிகிறது ). வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்தவகையில்தான் குழந்தைகளின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாப்பாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியால் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாக காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சியாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் பெறும் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிகக நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்திக் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும், நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளின் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம்தான்.
அன்பையும், பாசத்தையும் நெகிழ்வையும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற காட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முரற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடி இயங்குகிறார் அவர்.
- சுப்ரபாரதிமணியன் ( subrabharathi@gmail.com )
( இப்படிக்கு பேராண்டி.. தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்.
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: தாண்டவக்கோன்.55 நிமிட குறும்படம்
KA ARTS, TIRUPPUR >Ph., 09360254206 )

சுப்ரபாரதிமணியனின்" ஓடும் நதி " - ஒரு குறியீட்டு நாவல்

வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதனுள் இயங்கும் மனிதர்களை அவர்களுடைய இயல்புகளோடு வெளிப்படுத்தும் நாவல்கள் தமிழில் குறைவாக உள்ளன. கருத்தை முன்வைத்து அதற்கு ஈடுகட்டும் விதத்தில் கற்பனையான அனுபங்களையும், மனித இயல்புகளையும் வடிவமைக்கிம் போக்கிலிருந்து மாறுபட்டு அண்மையில் வெளிவந்திருக்கிறது சுப்ரபாரதிமணியனின் "ஓடும் நதி" நாவல். வாசிப்பு அனுபவத்தில் மாறுபட்ட புரிதல்களுக்கு இடமளிக்கும் இது ஒரு குறியீட்டு நாவல் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் தகர்ந்து விழுந்து எழுந்து ஓட முயலும் மனிதர்களையே நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் பார்க்க முடிகிறது. நவீன வாழ்க்கையில் எல்லா வகைப்பட்ட மனிதர்களும், தங்களுடைய மரபு வழிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விரட்டப் படுகிறார்கள்.நதி என்பது ஒரு கலாச்சாரப் பண்பாட்டின் அடிப்படையாகவே இருந்து வந்திருக்கிறது. தொழில் நாகரீகம் வெளியிலிருந்து திணிக்கப்படும் பொழுது மரபுக்கும், புதுமைக்கும் இடையில் மனிதர்கள் சிக்கித் தவித்து அவலத்திற்கு உள்ளாகி விடுகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்துவிட்ட மனிதர்கள் வாழ்க்கை ஓர் உன்னதம் என்ற மதிப்பீட்டைக் கைகழுவுவிட்டுப் பிழைப்பு அல்லது அபத்தம் நிறைந்த அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். மனித உறவுகள் சிதைந்து விடுகின்றன. அர்த்தமிழந்து போன வாழ்க்கையில் மனிதர் காயங்களுடன் சிதைந்து போன மனதைச் சுமந்து கொண்டு தம்மை நிலைப்படுத்திக் கொள்ள புதிய அர்த்தத்தைத் தேடுகிறார்கள். மரவு வழிப்பட்ட மதிப்பீடுகளை உதறிவிட்டுப் புதிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறார்கள். இதைப் புலப்படுத்தும் விதத்தில் செய்தியை உள்ளடக்கியிருக்கிறது இந்த நாவல். அதை அதற்கே உரிய இயல்புத் தன்மையுடன் வடிவப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.
நவீன வாழ்க்கைக்கு உட்பட முடியாமல் தம்மைத் தற்கொலைக்கு உள்ளாக்கிக் கொண்டவர்களைப் பற்றிய நினைவுகளிலிருந்து செல்லமணியின் அறிமுகம் நிகழ்கிறது. அவர்களைச் சார்ந்து சுற்றுப்புற சூழல்களின் அமைதியான நிலை தகர்க்கப்படுவதும், வாழ்கை தொழில் சார்ந்த நவீனத் தன்மைக்கும் உள்ளாவதை அடையாளம் காட்டுகிறார் நாவலாசிரியர். அழகும், தூய்மையும், இயல்பான வள்ர்ச்சியும் நிறைந்திருந்த ஒரு வாழ்க்கைச் சூழல் செல்லமணியின் கண்முன்னே தகர்ந்து நொறுங்கி சிதைகிறது. காலப்போக்கில் அவளுடைய வாழ்க்கையும் அவளும் சிதைந்து போவதை இயல்பாக நாவலில் பார்க்க முடிகிறது.
அவள் நேசித்த செல்வன் தொலைதூரத்திலிருக்கும் நாகாலாந்து பழங்குடியினரின் நடுவே வாழும் சூழலில் அவளுக்கு எழுதிய கடிதங்களை அவள் சேகரித்து நேசமாக வைத்திருந்து அவையும் பொருளற்றும் போய்விட்ட சூழலில் அவள் அவற்றைத் தீயிலிட்டுக் கருக்கிவிடுகிறாள். உடலின் வேட்கையால் அவள் கன்னித்தன்மை கழிவதும், வயதின் முதிர்ச்சியால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை நம்பி அவனுடன் புலம்பெயர்ந்து அநாதையாகக் கைவிடப்படுவதும்,அடைக்கலம் தேடி அலைவதும், சொந்த ஊர் திரும்புவதும், மனநிறைவில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும், தவிக்க முடியாத நிலைமையில் முறையில்லாத நிலைமையில் முறையில்லாத வாழ்க்கைக்கு உள்ளாகி மனச்சிதைவுடன் உயிர் வாழ்வதும் செல்லமணியின் வாழ்க்கைச் சாரமாகிவிடுகிறது.
அகலிகையின் குறியீடு நிலவுடைமைச் சமுதாயத்தின் அடையாளமாக இருப்பதைப் போல செல்லம்மணியின் குறியீடு நவீன சமுதாயத்தின் குறியீடாக இருக்கிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் அபூர்வமானவையாகவே இருக்கின்றன. நன்மையும், உண்மையும் நிறைந்த பழங்குடி மக்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கையை நேசிக்கும் செல்வன் தவிர்க்க முடியாத நெருக்கடியால் நகரத்திற்கே திரும்புகிறான்.
பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூருக்கும், நாகாலாந்துக்கும் இடையிலான கலாச்சாரப் பண்பாட்டு வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கும்போது, மனிதர்கள் இயற்கையிலிருந்து வெகு தொலைவு விலகி வந்துவிட்டார்கள் என்பதை நாவல் உணர்த்துகிறது.
சிறிய தொழில் நகரமாக இருந்த திருப்பூர் தன் அளவில் நொய்யல் நதியை மையமாக் கொண்டிருந்தாலும் அது மாசுபடிந்து அதன் சுற்றுப்புறங்களை அழித்து அவலப்படுத்திவிட்ட கசப்பான செய்தியை நாவல் அழுத்தமாகச் சொல்லுகிறது.
அழுக்குகளுக்கும், மனச்சிதைவுகளுக்கும், வாழ்வியல் மரபுகளின் தகர்வுகளுக்கும் இடையில் மனிதர்கள் இன்னும் அன்புடனும், பணிவுடனும், கருணையுடனும் வாழ்கிறார்கள் என்பதையும் நாவல் உறுதிப்படுத்துகிறது. செல்லமணியின் வாழ்க்கைச் சூழலுக்குள் வியப்பிற்குரிய விதத்தில் விதவிதமான மனிதர்கள் வந்து போகிறார்கள். தன்னுடைய சிதைந்த மனத்தின் வலியோடு வாழ்க்கையை ஏர்றுக் கொண்டு நிதானமாகவே வாழ்கிறார் செல்லமணி. தன்னுடைய கரைகளின்
ஓரங்களிலும், அவற்றின் அவை சார்ந்த நிலங்களிலும் வாழ்ந்த மனிதர்களுக்கு உயிர் உறவாக இருந்த நொய்யல் நதி கலங்கிச் சிதைந்து கழிவுகளைச் சுமந்து கொண்டிருப்பதைப் போல அவளுடைய வாழ்க்கையும் ஒடிக் கொண்டிருக்கிறது.
நாவலின் வடிவமும், மொழியும் சிதைவில்லாமல் ஒழுங்குமுறையில் ஒருங்கிணைந்து இருக்கின்றன. நாவலின் மொழி படைப்பாளியின் நெகிழ்ச்சியான வெளிப்பாட்டுத் தொனியுடன் ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் உள்ளடக்கிக் கொண்டு இயல்பாக இயங்குகிறது. நாவலின் வடிவமும், உள்ளடக்கமும் பலமுறை வாசிப்பதற்குரிய அனுபவத்தை மீண்டும் மீண்டும் தூண்டுகின்றன. நவீனமயமாகிவரும் வாழ்க்கையைக் நவீனமான வெளிப்பாட்டு முறையில் நாவலாசிரியர் இதைப் படைத்திருக்கிறார்.
- சி ஆர் ரவீந்திரன், கோவை

The Faces Of The Dead!

The Faces Of The Dead! Subrabharrathimanian's Novel!- R Balakrishnan -Subraharathimanians fictions palpatitate with passion for the poor and the marginalised based on the Tiruppur of 15,000crores rupees export town,Tamil nadu and related settings they deal with lives of migrant and unorganised workers and probably children, their plight etc.., This novel "Faces of the Dead" is a translation of his "pinakalin mughankal"in tamil. this work is thematised on how the strong, physical components of the body of the children are exploited by various, especially the hardcore labour system... Male ones are given jobs which are more for their capacity and female ones are sexually too exploited. Their parents are from a community of descendents who have neither anyform of possessions nor meaning behind their lives.These helpless ones are thrown into a space where the thoughtless plundering of the natural resourses take place from sunrise to sunset. Kanagu, senthil, devaki, veni, poorani are all central charaters of this novel, children they are in the beginning of their teens but are exposed the nearbig atire which never suit to. Instead of their dreams or even a persuit of heigher education they are exposed to hard working conditions- as their families need their salary. The Tamil original has been translated into English by R.Balakrishnan, a poet and an English lecturer.Kanagu and senthil are packed up, leave their school after the last working day. Kanagu has a dream to pursue higher education, wherever senthil belongs to a still poorer family wants to take up an errand job after holidays. Kanagu's father finds his job work in weaving indoldrum and gets difficult to make up both the ends meet. Hence Kanagu is forced to take up a small job at a nearby textile unit. Poorani is one such a ward, though interested in learning she finds it difficult to make herself comfortable in huge schools. The teachers too are seemingly threatening. She believes a job would bail out her from her troubles; so also her family, sheis given a small job of taking care of a mentally disturbed women Meenakshi. When days role by she finds how difficult it is to do a job instead of leaving Kanagu and Senthil find their pockets swell with a bit of money earned through hard work.., they spend lavishly, learn to smoke and drink too. Senthil develops a feeling for one of his colleagues in the mill, Devaki though she is older than him. she is a migrant from downsouth. Yet he got appalled in a situation after finding that she is sexual exploit of the mill owners,. the agonies of Meenakshi grow more and totally it results in sending out poorani from the job. Meanwhile the city is targeted with a terrorist attack, bombs serially exploidng everywhere hit the normal life and people lose jobs too as the city's economy is badly affected. This is the time perhaps Poorani may leave the town to find an another job, leaving her affectionate family at a tender age. There is an abandoned house, find a space a wide canvas of this novel which is probabily a place meant for illegal activities and brothel. Fire burns this small edifice and the story ends up into an epic setting burning.

Sent by: issundarakkannan7@gmail.com