சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 9 மே, 2020

திக்குத் தெரியாத உலகில்—சுப்ரபாரதிமணியன்
கொரானா காலத்திற்குப் பின் தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறும் விசயமும் இப்படித்தான்...
..சுப்ரபாரதிமணியன்
கொரானாவுக்குப் பின்னான வருங்காலத்தில் ஒருமுறை அணிகிறஆடைகளுக்கான தேவை அதிகரிக்கும்.ஆடைக்காக ஏன்அதிகபொருளை
செலவிடவேண்டும்என்கிறஒருகேள்விநம்
மனதில்எழுவதால்,மறு சுழற்சி, நிலை நிறுத்தல்,(Recycle, reuse ,sustain)போன்றவார்த்தைகள்மிக
அதிகமாகபுழக்கத்தில்இருப்பதால்,மீண்டும்
மீண்டும்பயன்படுத்தக்கூடியவடிவமைப்பை
கொண்டிருக்கிறஆடைகளும்ஏற்கனவே
பயன்படுத்தியஆடைகள்இருந்தும்
தண்ணீர்போத்தல்களிலிருந்தும்மறுசுழற்சிமூலம்பெறப்பட்டநூல்இழைகளில்இருந்து
உருவாக்கப்பட்டஆடைகள்அதிகமாக
விற்பனைக்குவரும் என்கிறார்நண்பர் யுவராஜ்சம்பத் .
இது கொரானாவுக்கு முந்தியே இவ்வாண்டின் ஆரம்பத்தில்  திருப்பூரில் ஆரம்பித்து விட்டது.

திருப்பூர் என்றால் சாயக்கழிவு வீட்டுக்கழிவு அதிகம் உள்ள நகரம் என்றப் படிமம் பலருக்கு வந்து விடுவதுண்டு. யதார்த்தம் கூட
திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை என்கிற ரீதியில் ஏதாவது இங்கு நடந்து கொண்டே  இருக்கின்றன

சாயக்கழிவு மூட்டை மூட்டையாய் நொய்யல் கரையில் பார்த்தவர்களுக்கும் ஆற்று நீரில் கலந்து போவதைக் கண்டவர்களுக்கும்  கழிவிலிருந்து   இன்னொரு உப்பொருள் தயாரிக்க முடியும்  என்பதே பெரிய ஆறுதல் . அதுவும் டீசர்ட்., போன்றவை கூட ...
     நீடித்த இயற்கை சூழல் என்பது
பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
       திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020  சமீபத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .
ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை  ஆகியுள்ளன.  இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .
திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை  மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை .திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது
 திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள்  முக்கியம் ஆகும் .டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து  உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் .பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது.  எப்படி முடிகிறது .இப்படித்தான்  அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் .
திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,. கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல்  2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது 
திருப்பூரின் இன்றைய நிலை பற்றி:
 . திருப்பூரின் 10000 தொழிற்சாலைகளும்மூடப்பட்டுவிட்டன.அதைநம்பியிருந்த 10 லட்சம்பேர்வீட்டில்முடங்கிக்கிடக்கின்றனர் 
திருப்பூரின்பெரியபிரபலமானபல்வேறுஏற்றுமதியாளர்கள்வயிற்றில்நெருப்பைகட்டிக்கொண்டுதிக்குத்தெரியாமல்அல்லாடிவருகிறார்கள்
.இதில்ஏற்கனவேநிகழ்வுற்றஒருமரணமும்அடங்கும்

திருப்பூர்ஏற்றுமதியாளர்கள்ஒருவித்தியாசமானவியாபாரதந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள்..அதுஎதிர்மறையானவிளைவைதற்போதுதரப்போகிறது..இனியாவது திருந்த வேண்டும்..

மாதம் 2500 கோடிரூபாய்வியாபாரம்செய்கிறஊருக்கு 2 மாதம்விற்பனைசெய்தசரக்குபணம்வரவில்லைஎன்றால்அவர்கள்
நிலைஎன்னஅடுத்துமூன்றுமாதங்களுக்குவியாபாரமேஇல்லை
என்றால்அவர்கள்முதலீடுஎன்னாவது?
இந்தக்கேள்விகளுக்குவிடைகிடைத்தால்திருப்பூரின்நிலைஉங்களுக்குதெளிவாகும்..
கோடைகாலவியாபாரம் 60 லிருந்து 70 சதவீதம்திருப்பூரில்நடக்கும்.கொரோனாஇந்தகோடைகால
வியாபாரத்தைஅப்படியேநிறுத்திவிட்டது.தயாரித்தஆடைகள்நிறுவனங்களிலும்,வியாபாரிகளுக்குஅனுப்பப்பட்டபெட்டிகள்கப்பல்களிலும்
,கப்பலிலிருந்துஇறக்கப்பட்டபெட்டிகள்அந்தந்ததுறைமுகங்களிலும்
அப்படியேநிற்கின்றன..இவர்களின்சோகத்தைசுமந்தபடி..
இந்தபாதிப்புஇந்தியாவைவிடவங்காளதேசம்வியட்நாம்விடும்
கம்போடியாவிலும்அதிகம்இருக்கலாம்என்றுஆராய்ச்சியாளர்கள்
சொல்லுகிறார்கள்..
இந்தஆயத்தஆடைவியாபாரம்ஏதோஉங்களுக்கும்ஆடைக்கும்உள்ளதொடர்புமட்டுமேஎன்றோ அல்லதுதயாரிப்பாளருக்கும்இறக்குமதியாளர்கள்உள்ளதொடர்புஎன்றோ நினைப்பது நல்லது அல்ல ( யுவராஜ் சம்பத் )
 மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர்.மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில்  மறைந்த பூசணிக்காயாய் இருக்கின்றன.

பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தையேத் தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது.
இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .


திக்குத் தெரியாத உலகில்—சுப்ரபாரதிமணியன்
  சூடான பூமி   :  
 சின்ன வயதில் சூட்டுக் கொட்டையை தரையில் உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்பளித்துவிடும் விளையாட்டை விளையாடியிருக்கிறேன்.நல்ல சூடு இருக்கும் .அது போல் கொரானா செய்திகள் சூட்டுக் கொட்டை சூட்டைப் போல் வலிதருகின்றன.
ஒரு கோப்பையில் இருக்கும் வெந்நீர் 80 பாகை செல்சியஸ் என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரும் 80 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கலாம். ஆனால், கப்பில் இருக்கும் நீரின் வெப்பசக்தியை விட, பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரில் அதிக வெப்பசக்தி இருக்கும். காரணம் பெரிய பாத்திரத்தில் அதிகளவான நீர் மூலக்கூறுகள் இருக்கும். பெரிய பாத்திரமாய் பூமி சூட்டில் தவிக்கிறது.
      சீன இனக்குழு ஒன்றின் திருமணச் சடங்கொன்றில் தீமிதியில் மனைவியை கணவன் கையில் ஏந்தி எடுத்துச் செல்லும்  வைபம் ஒன்று உள்ளது. தீ எரியும் சூழல் என்றாலும் மனைவியைக் கையிலேந்திக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு சடங்கு இருக்கிறதாம்
கொரானா என்ற தீ மிதி குண்டத்தையே  தாண்டி வந்திருக்கிற நாடு சீனா. சீனர்கள் திமிதி குண்டங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.
நாம் தீ மிதி போன்ற அதிகமாகும் வெப்பம் – ஏப்ரல், மே காலங்களில்-கொரானாவிலிருந்து நம்மைக்காப்பாற்றும் என்பதை கடவுள் நம்பிக்கை போல் நம்பிக்க்கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் பத்து நகரங்களில்   ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெயில் சதம் அடித்து சிலருக்கு அப்படியெல்லாம் நம்பிக்கை தந்திருக்கிறது. ஆனால் கொரானா கட்டுப்படாமல் எகிறிக் கொண்டிருக்கிறது .
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மெக்சிகோ தடுப்புச்சுவர் மூலம் இடம்பெயர்வு சம்பந்தமான - மாபெரும் தடை  ஒன்றுக்கு முயற்சித்து வருகிறார், வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஒரு தடுப்புச்சுவர் ஒன்றை அவர் வந்த போதே கட்டி முடித்து விட்டார் என்றார்கள் கிண்டலாக.
டிரம்ப் இந்தியா வந்த போது ஏழை மக்களின் வெப்பப்பார்வை படாமல் இருக்க சுவர் கட்டினார்கள் சாலையில்.
 வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பல ஆண்டுகளாக நடந்து வரும் சர்வதேச முயற்சிக்கு இப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பின்   ஆதரவு இல்லாததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது சென்றாண்டின் செய்திதான்.முந்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்து நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்  .இந்த முயற்சிக்கு முன் மாதிரியாக இருந்து முன்னர் அமெரிக்கா தலைமை தாங்கியது.  இனி தலைமை தாங்குமா என்பது கேள்விக்குறியாகி விட்டது .
இன்றைக்கு கூட உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க தரும் நிதியுதவியை  ரத்து செய்து ஒரு உத்தரவு போட்டுள்ளார்.அவர்கள் மேல் பழி போடும் முயற்சியாக ரு வெப்ப குண்டைப் போட்டிருக்கிறார்.
           அவர் ஆட்சிக்கு வந்த பின் சிறுபான்மையினர் நலன்இந்தியர்களின் வேலை வாய்ப்பில் பல கெடுபிடிகளைப் செலுத்தியுள்ளார் டிரம்ப். இப்போது பெரிதாய் கை  வைத்திருப்பது புவிவெப்பம் மக்களுக்கு ஆதரவான முயற்சிகளில் பெரிய முட்டுக்கட்டைகளை  அவர் வைத்துள்ளார் இதில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைப் போக்க நடவடிக்கை எடுத்திருப்பது  நல்லது .தொடர்ச்சியாக இதிலும் முனைந்துள்ளார்
உலக அளவில் பருவநிலை மாற்றம் என்பது வெப்ப சலனக் காற்று, பனிப்பகுதிகள் உருகுதல்வெள்ளம் அல்லது வறட்சி மற்றும் கடல் மட்டங்கள் உயர்தல் போன்றவை விளைவுகளாக இருக்கும்  என்று சொல்லப்பட்டது.அதன்  அடையாளங்களை சமீப மாதங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம்.
 இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் பருவகால மழை என்பது பெரும் மாற்றம் இல்லாமல் ஏமாற்றத்தையே தருகிறது வங்காள விரிகுடாவிலும் புயல்கள்  என்தில் 2000 க்கு முன்   பெரிய மாற்றம் இல்லை இமாலயப் பனி உருகி வருகிறது.
  21ம் நூற்றாண்டில் 15 முதல் 30 சதவீதம் வரை மழையளவு அதிகரித்த போது இதே சீதோஷ்ண நிலை வெப்பம் 5 சதவீத சென்டிகிரேட் அளவு உயர்ந்தது . ஆல்ப்ஸ்  பகுதியில் சில செடிகள் அபூர்வமாக வளர்கின்றன பல செடிகள் மறைந்துவிட்டன இங்கிலாந்தில் பறவைகளின் சுபாவத்தில்  பல மாற்றங்கள் தென்படுகின்றன  முட்டையிடும் 65 பறவை இனங்கள்  ( பறந்து செல்பவை அவை ) முட்டை போடும் காலத்தை  முன்னதாக்கிக் கொண்டிருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையில் 17 பில்லியன் மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகிறார்கள். இது  2025இல் 25 மில்லியனாக உயரும் .இந்த காலத்தில் 480 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் தண்ணீருக்காக அலைவர்.  லத்தீன் அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருட்களின் விளைச்சல் இந்த காலத்தில் வெகுவாக குறையும்.
 அதிக வெப்ப நாட்களில் வயதானவர்களின்  நோய்கள் அதிகரிக்கும் மரணமும் அதிகரிக்கும் என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் உள்ளன.  கால்நடைகளை மிகவும் பாதிக்கும் பயிர்களை நாசம் விளைவிக்கும் சுற்றுலாத்தலங்கள்  வெகுவாக பாதிக்கப்படும் நிலச்சரிவு வெள்ளம் அதிகரிக்கும் . உலக நிலப்பரப்பில் 2.4% இந்தியாவை சாரும் 17%  மக்களும் 15% கால்நடைகளும் இதில் அடக்கம்.  இந்தியாவில் சிறு விவசாயிகள் அதிகம் இருக்கிறார்கள்  பங்களாதேசிற்கு  அடுத்தபடியாக சிறு விவசாயிகள் இங்கு அதிகம்,,
 இந்தியா வறட்சியின் பிடியில் அதிகம் சிக்கும் இந்தியாவின்  பருவ நிலைகள் பாதிக்கப்படும் இந்தியாவின் பருவ நிலைகளை ஒட்டி இந்திய விவசாயம்  பாதிக்கப்படும் ,, தமிழ்நாடு ஏழில் மூன்று பகுதி மழையை நம்பி இருப்பது பருவமழை தவறியதால் உணவு உற்பத்தியும் கால்நடைகள் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகும் பருவநிலை மாற்றத்தில் ராகி போன்றவை பொதுவாக பாதிக்கப்படும்  ராகி பயிர் விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டது உணவுப் பாதுகாப்பு என்பது சில பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் . 1979  உலக அளவில் பருவநிலை மாற்றம் சிக்கலாக மாறும் என்று கண்டறியப்பட்டது . அப்போது கரியமிலவாயுவின் தன்மை உயர்ந்திருப்பது உணரப்பட்டது இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது இது மின் உற்பத்தியை பாதிக்கும் .
சூரிய ஒளியைப் பயன்படுத்தும்  உணர்வு அதிகரித்திருக்கிறது அதேசமயம் காடுகளை அழிப்பதும் அதிகரித்து வருகிறது . மனித குல பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக  பருவநிலை  பரிமாற்றம் என்பது அமைந்திருக்கிறது .
இன்னும் 15 ஆண்டுகளில் மிகவும் குறைந்த மழை பொழிவு என்பது பெரும் கொடூரக்கனவாக இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்கும் போர்வெல்களால் அதிகம் சுரண்டப்பட்டு விடும் .விவசாயத்தில் நீரின் பயன்பாடு குறையும் அதிக வெப்ப சூழல் பயிர் வளர்ச்சியைக் குறைக்கும் விவசாயிகளின் வருமானத்தை குறைக்கும் விவசாயிகளை வேறு தொழில்கள் மற்றும் நகரங்களை நோக்கி நகர செய்யும் மற்றும் வறுமை அவர்களை சூழவும் செய்யும்.  ஈரமற்ற காற்று பயிர்களைப் பாதிக்கும்.
 அதிக வேகத்தில் காற்று வீசுவது பயிர்களைப் பாதிக்கும். விளைச்சலைக் குறைக்கும்.         மண்ணரிப்பு அதிகமாகவும் மரங்களும் காய்கறி செடிகளும் இல்லாது குறையும்.    பஞ்சம் தலைவிரித்து ஆடி சொட்டுநீர் பாசனம்,   பயிர்களுக்கு இன்சூரன்ஸ் என்பதை சாதார மக்களை அவற்றுள் தள்ளும் மாற்றுப்பயிர்களை நாட வேண்டியிருக்கும் உரங்களின் தன்மையை மாற்ற வேண்டியிருக்கும் அதிக வெள்ளம் மண்ணரிப்பைக்  கொண்டு வரும் விவசாய நிலங்களீன் பல  குறைகளின்  மத்தியில் மக்கள் தங்கள் வாழ்க்கை காரணங்களையும் எதிர்நோக்குவது சிறந்தது
மறுபடியும் முன் இடத்திற்கு வருவோம் முன்னாள் அதிபர் கொண்டு வந்த திட்டங்களை  இப்போதைய அதிபர்  குழுவினர் மறுத்து ரத்து செய்திருக்கிறார்கள். இப்போது டிரம்பின் கை பருவநிலை மாறுபாட்டுக்கொள்கையிலும் விழுந்திருக்கிறது.. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுப்படுத்துவது தொடர்பான  ”  2015 பாரிஸ் உடன்படிக்கை பற்றி டிரம்ப்  அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் பல ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்கிறார்.
 பொருளாதார வளர்ச்சிவேலைவாய்ப்பு உருவாக்கம் செய்யாமல் தூய்மையான காற்றுசுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வேன் என்கிறார்.
 புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அவரின் அரசு உறுதி அளிப்பதை சூழலியலாளர்கள்  எதிர்பார்க்கிறார்கள் விரைவாய் சூடாகும்  பூமியை யாரால் தடுக்க முடியும்.
கொரானாவிலிருந்து சூடாவதை 14, 21 நாட்களை மீறி காலம் தான் தீர்க்கவேண்டும்

Uyirmmai.com
எனக்குக் கேட்கல...  உங்களுக்கு கேக்குதா சுப்ரபாரதிமணியன்
கொரானா காலத்தில் மதுவகைகளும் இரண்டு,  மூன்று மடங்கு அதிகவிலையில் சுலபமாகக் கிடைக்கின்றன, அதிக விலை கொடுக்க முடியாதவர்கள் ஷேவ் லோசன், கள்ளச்சாரயம் என்று குடித்துச் சாகிறார்கள்.சில குடிகார நண்பர்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத கஷ்ட காலத்தில் தூக்க மாத்திரை விலை குறைவு என்று ஒன்றைப்போட்டு நித்திரை தேவியை சுலபமாக அணைத்துத் தூங்கப் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.
லோகேஸ்வரி இறந்த போது அவளின் அப்பாவுக்கு பலநாட்கள் கவலையை மறக்க யாராவது சிறு சிறு அனுதாபத்தொகையைக் கொடுத்து மதுபானம் உபயோகப்படுத்தச் செய்து   லோகேஸ்வரியின் சாவை மறக்கடிக்கச்செய்தார்கள். 
 நல்லவேளை லோகேஸ்வரி கொரானாவுக்கு முன்னால் இறந்து விட்டாள். எவ்வளவோ சங்கடங்கள் மிச்சம் என்றார் சங்கமேஸ்வரி. அவளுடன் பஞ்சாலையில் வேலை செய்தவள்
லோகேஸ்வரிக்கு நிகழ்ந்த அந்த பஞ்சாலை தொழிற்சாலை விபத்திற்குப் பின் அவளை பீகாருக்குத் திருப்பி அனுப்புவதா. இல்லை உடல் நலம் சரியாகும்வரை பார்ப்பதா என்று அவளுடன் இருந்த மூன்று பீகாரி இளம் பெண்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இடது கையில் மூன்று விரல்களை அவள் இழந்திருந்தாள் .

         பீகாரின் ப்ரூனி பகுதியில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவள் லோகேஸ்வரி. ரப்தி சாகர் எக்ஸ்பிரசில் ஊரிலிருந்து புறப்பட்டு 3350 கிமி கடந்து 54 தொடர் வண்டி நிலையங்களைக் கடந்து  நான்கு இளம் பீகாரி பெண்களுடனும் வயதானப் பெற்றோரிடமும்  திருப்பூர் வந்து சேர 12 மணி நேரம் தாமதம்.  பீகாரில் கிளம்பி உஇ, ம.பி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, சென்னையைக் கடந்து வந்து சேர்ந்திருந்தாள் ..அரை நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஒரு புரோக்கர் மூலம் அடுத்த நாளே ஒரு பஞ்சாலையில் வேலையில் சேர்ந்து கொண்டாள்.
  ஓயவில்லாத பயணம் .உடம்பு அலுப்பு. தடுமாற்றத்தில் ஸ்பின்னிங் இயந்திரம் ஒன்றில் கை மாட்டிக் கொள்ள மூன்று விரல்கள் துண்டிப்பாகின. , சரியான சிகிச்சை இல்லாததால் ஒரு மாதம் கழித்து இறந்து விட்டாள்
மறுபடியும் இரண்டாவது பத்தியை மறுபடியும் சொல்லவேண்டியிருக்கிறது.
லோகேஸ்வரிக்கு நிகழ்ந்த அந்த பஞ்சாலை தொழிற்சாலை விபத்திற்குப் பின் அவளை பீகாருக்குத் திருப்பி அனுப்புவதா. இல்லை உடல் நலம் சரியாகும்வரை பார்ப்பதா என்று அவளுடன் இருந்த மூன்று பீகாரி இளம் பெண்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இடது கையில் மூன்று விரல்களை அவள் இழந்திருந்தாள் .
சரியான சிகிச்சை இல்லாததால் ஒரு மாதம் கழித்து இறந்து விட்டாள். எதேச்சையாக ஊரிலிருந்து வந்த அவளின் பெற்றோர்  இறுதி காரியத்தில் உடன்  இருந்தார்.
               கொரானாவுக்கு முன் ஒரு நாள் என் வீட்டுத் தெரு முனையில் இருந்து    வந்த  அழுகை குரல்  சாவுக்கானது  என்று தெரிந்து கொள்ளவே  எனக்கு ரொம்ப நேரம் பிடித்தது.  அந்த வீட்டில் பதின்பருவம் இளம்பெண் ஒருத்தி  மரணம் அடைந்து இருந்தாள்.  அவள்தான் லோகேஸ்வரி.ஒரு பஞ்சாலையில் வேலை செய்து வந்தாள்  மரணம் அடைந்த போதுதான்  அவள் எனக்கு அறிமுகமானாள்  என்பது  வருத்தம் கொள்ளச் செய்தது.
  அவள் சாவின்  பொருட்டு  ஏதாவது இழப்பீடு கிடைக்குமா  என்று அவளின் பெற்றோர்  இருதரப்பினரிடம்  அணுகினர்
1.  அவள் வேலை செய்துவந்த பஞ்சாலை
 2. அரசு
எதிர்வினைகள் :
1.  நிர்வாகம் அடியோடு  அப்படியொரு  ஆளைத் தங்களுக்கு தெரியாது  என்றார்கள்.  வேலைக்கான  எந்த அடையாள அட்டையும்  மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்த கூட இருந்த பிற  பெண்களுக்குக் கூட  வழங்கப்படவில்லை. 
2. தாலுக்கா அலுவலகம் சென்றபோது  கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து ஆரம்பியுங்கள்  என்றார்கள்.  கிராம அதிகாரி  வருவாய்த்துறை அதிகாரி தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று வரிசைக்கிரமமாக  வரவேண்டும்  என்றார்கள் .
 அலைந்து சலித்த அப்பெண்ணின் தந்தை பலரிடமும் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.   நீண்ட பயணத்திற்குப் பிறகு  பல யாத்ரிகர்கள்  ஒரு கிராமத்தை அடைந்தனர். அவர்களிடம் இருந்த உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை .அடுப்பு பற்றவைத்து  பாத்திரத்தில்  நீர் ஊற்றி  ஒரு கல்லைப் போட்டு நெருப்பை எரிய விட்டனர் . கிராமத்தினர்  என்ன உணவு என்று கேட்க  கல் சூப்  செய்வதாக சொன்னார்கள்.  ஒரு கிராமத்துக்காரர் கொஞ்சம் காரட்டுகள் தந்தார்,  இன்னொருவர் கொத்தமல்லி உப்பு தந்தார்.   சிலர் வேறு  சில பொருட்கள் தர தயார் ஆனது சூப்.  கல்லை வெளியே எடுத்துப்போட்டு  விட்டு சூப் குடிக்கத் தயாரானார்கள்   இவனுகெல்லா   அந்த மாதிரிதா...... அந்த யாத்ரீகர்கள் மாதிரிதா  
இந்தக்கதைக்குப் பின்னால் லோகேஸ்வைர்யின் பணி சூழல் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தேன்
கொஞ்சம் இல்லை “ கள்
 தொழிற்சாலைகளில்  பணி ஆணை இல்லை. வேலைக்கான கொள்கைகள் இல்லை .அடையாள அட்டை இல்லை  உடல்நலம்  உள் தொழிற்சாலை வசதிகள் இல்லை .(  தண்ணீர் கழிப்பறை உணவு விடுதி தங்குமிடம் என்பவை போதுமானதாக இல்லை )  நிவாரணத்தொகை சார்ந்த  குறுக்கீடுகள் இல்லை.  தொழிற்சங்கங்கள் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டைகள். குறைந்தபட்சம் நோட்டீஸ் போர்டுகள் இல்லை . பிஎப், இஎஸ்அய்  பிடித்தம்  பற்றியதில்   வெளிப்படைத் தன்மை  இல்லை. நிர்வாகத்துடனான  உரையாடல் இல்லை .உள்  குழுக்களும் இல்லை .  புகார் பெட்டிகள் இல்லை.  உத்தியோக உயர்வு  நிரந்தரமாக இல்லை  குறைகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை
 வேலையில் சேருவோர்  17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்  என்பதில் அக்கறை இல்லை. 19 வயது என்பது  தொழிற்சங்கத்தில் சேரும் உரிமை பற்றி அக்கறை இல்லை  குழந்தைத் தொழிலாளர்கள் என்ற முத்திரை படிவதில் அக்கறை இல்லை. பருவத்தில் அக்கறையில்லை
   அரசு நிர்ணயித்த குறைந்த கூலியைத் தருவதில் அக்கறையிருப்பதில்லை.  தொழிலாளரை  ஊக்குவிக்க  பரிசுகள் ஊக்கத்தொகை  பாராட்டுகளில் அக்கறையில்லை . வங்கிகளில்  சம்பளப் பணம் முதலீடு செய்வதில் பலருக்கு அக்கறை இல்லை.எந்த வகையில் வருட போனஸ் நிர்ணயிக்கப்படுகிறது என்பதில் அக்கறையில்லை.பதின்பருவப்பெண்களின் விடுதியைச் சரியாகப் பராமரிப்பதில்  அக்கறையில்லை. எச்சரிக்கைப் பலகை தீயணைப்போ, விதிகள் பற்றிய அறிவிப்புகளோ இல்லை. உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது விடுப்பு அங்கீகரிப்பு, சரியான மருத்துவ வசதி குறித்த அக்கறையில்லை. 
  சில சில வேண்டும்கள்
 தொழிலாளர் தரப்பில் குறித்த நேரத்திற்கு வேலைக்கு வருதல். தொழிலுக்கு நேர்மையாக தொழிலாளர்கள் இருத்தல்,  தேவையில்லாமல் விடுமுறை எடுத்து உற்பத்தியைக் குறைப்பது நல்லது அல்ல. தொழிற்சங்கங்கள் நடுநிலைமையுடன் நடந்து நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். தொழிலாளர் சட்டங்களில் அவர்களுக்கு சரியான வகையில்  அறிவுறுத்தவேண்டும். தூசுகள் இல்லாத வேலை உலகம் வேண்டும் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு வசதிகள் முறையாக தரப்படவேண்டும் .இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றாக  வேலை வாய்ப்பு தர வேண்டும். அரசு துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் வேலை வாய்ப்பு தர வேண்டும்.
 நிறைய வேண்டும்கள்  இருக்கின்றன .ஆனால் வழிகாட்டத் தலைகள் இல்லை. ஒரு செம்மறி ஆட்டின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் சிங்கங்கள் நமக்குத் தேவையா . ஆனால் ஒரு சிங்கத்தின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் செம்மறியாடுகள் பற்றித்தான் பயப்பட வேண்டியிருக்கிறது .அலெக்ஸாண்டர் போர் போன்ற பெரும் தலைகளுக்கு கூட இந்த பயம் இருந்திருக்கிறது செத்துப்போன பெண்  சாதாரண ஆடு போன்றவள்
     லோகேஸ்வரியை இழந்த பெற்றோர் அவளை அடக்கம் செய்து விட்டு  ரப்தி சாகர் எக்ஸ்பிரசில் ஊருக்குப்புறப்பட்டனர்.  3350 கிமி கடந்து 54 தொடர் வண்டி நிலையங்களைக் கடந்து   ஊருக்குப் போய் சேர வேண்டும். மூன்று நாள் பயணம். 
பொது கம்பார்ட்மெண்டில்தான் கழிப்பறை பக்கம் நெரிசலில் உட்கார அவர்களுக்கு இடம் கிடைத்தது. அந்த நெரிசலில்  ஊருக்கு உயிருடன் போய் சேருவோமா என்ற சந்தேகம் புழுக்கத்தாலும் மூச்சு விட இயலாத நெருக்கத்தாலும்  லோகேஸ்வரியின் அம்மாவிற்கு சேலத்தைக்க்கடக்கிற போதே அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது..
          கொரானா காலத்தில் மாநில எல்லைகளைக்கடந்து  500 கிமி நடந்து வந்து தெலுங்கானப்பகுதியில் மரணமடைந்த 21 வயது நாமக்கல்  இளைஞர் பற்றியெல்லாம் லேகேஸ்வரியின் அம்மா கேள்விப்பட வாய்ப்பில்லாதபடி பீகாரின் ப்ரூனி பகுதி கிராமத்திற்கு சென்று சேர்ந்திருப்பார்.
அவர் ஏதோருவகையில் அதிர்ஷ்டசாலி.




வெள்ளி, 1 மே, 2020

வியட்நாமியர் படித்து நெகிழ்ந்த கொங்குப் படைப்பு : மெய்நிகர் சந்திப்பு உரை 26/4/20
கே.சுப்ரமணியன்:  இஸ்கப் மாநிலச் செயலாளர் .. * தமிழ்நாடு ..பெருமன்றம்)
சுப்ரபாரதிமணியன் பன்முகத் தன்மை வாய்ந்த படைப்பாளி. அவர் சிறுகதை நாவல் சிறுகதைகள் கட்டுரைகள் உட்பட பல்வேறு தளங்களில் படைப்புகளை எழுதி வருபவர் .
   சுதேசமித்திரன் பத்திரிகையில் பாரதி 1909ல் ஒரு கட்டுரையில் இப்படி எழுதினார்:                தமிழ்நாட்டில் எத்தனையோ பஞ்சம் உள்ளன அதில் ஒன்று எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் தராத பஞ்சம் என்ற வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன                .அவருடைய சாயத்திரை நாவல் தமிழில் முக்கியமான போக்கை காட்டிய நாவல். மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் வங்காளம் கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பது சிறப்பாகும் நொய்யல் பண ஆசையால் முதலாளிகளால் சாயக் கழிவால் கெட்டுப்போனது .அதை சுற்றுசூழல் பிரச்சனையாக்கி நவீன வகை எழுத்துக்கள் மூலம் ஒரு நாவல் ஆக்கினார் .அதைப்பற்றி இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை கவனத்துக்குரியது அதில் பிரேமா நந்தகுமார் அவர்கள் ஒரு சிறு கதை ஒன்றையும் ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் இந்த நாவலோடு ஒப்பிட்டுள்ளார்.
1. நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும். இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது.

2. 1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

      மாசு மனிதகுலத்தின் தீங்கு .அந்த நாவல் அதை நவீனப்பாணியில்  வெளிப்படுத்தியது. சுமங்கலித் திட்டத்தில் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதும் உழைப்பு ரீதியாக சுரண்டப்படும் குறித்து பல்வேறு வழக்குகளில் நானும் பேசியிருக்கிறேன். பல கூட்டங்களில் பேசி இருக்கிறேன். சுப்ரபாரதிமணியன் தேநீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் இந்த பிரச்சனை சார்ந்த பெண்களுடைய வாழ்வியலை எழுதி இருக்கிறார். இந்த நாவல்களை பற்றி கோவை ஞானியின் ஒரு முக்கியமான கட்டுரையை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார் என்கிறார்.
 வேற்று மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு இல்லை இன்றைய கொரானா காலத்தில் கால்நடையாக அவர்கள் ஊர் திரும்புகிற அவலம். மனிதநேயம் உச்சபட்சமாக காட்டப்படுவதாக உள்ளது அவருடைய நாவல்களில் .வியட்நாம் நாட்டிற்கு இரண்டு ஆண்டுகள் முன்னால் இஸ்க்கப் அமைப்பின் மூலம் 20 பேர் கொண்ட குழு சென்றிருந்தோம்.  அப்போது சுப்ரபாரதிமணியன் தன் படைப்புகளின் ஆங்கில நூல்களை கொண்டு வந்திருந்தார் வியட்நாமில் உள்ள ஹலாங் கவர்னர்,பண்பாட்டு மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியட்நாம் இந்திய நட்புறவுக் கழக தோழர்களுக்கு அவரின் நூல்கள் சிலவற்றை வழங்கினோம் பரிசாக. அவற்றைப் படித்துவிட்டு, குறிப்பாக மைரேசன் நூலை- சிலர் நெகிழ்ந்து போய் கண் கலங்கினார்கள் .
அவருடைய ரேகை ஒரு வித்தியாசமான நாவல் என்று சொல்லலாம் .சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நிலப்பிரபுத்துவ சமூகம் குடும்பம் சீரழிவது பற்றிய ஒரு படைப்பாகும் .வல்லிக்கண்ணன் அவர்களின் குடும்பத்தின் கதை நாவல் கிராமப்புறம் சார்ந்த ஒரு குடும்பத்தின் சிதைவை மையமாக வைத்துள்ளது அதேபோல இந்த ரேகை ஒரு கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுடன் அந்த மக்களுடைய வாழ்வியலையும் அவருடைய சிதைவுகளையும் சொல்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகே இருக்கும் பழையனூர் என்ற ஊர் இந்த நாவலில் களமாக இருக்கிறது .சண்முகநதி என்ற நதி அங்கே ஓடுகிறது .ஆனால் இந்த நாவலில் அது முருகநதி என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிடம் பார்ப்பது பல தலைமுறைகள் அந்த கிராமத்தில் பல குடும்பங்களின் தொழிலாக இருந்து வருகிறது .அவர்கள் எல்லாம் இறைய  நிலையில் என்ன ஆனார்கள் .அவர்களின் வாரிசுகள் வேறு தொழிலுக்கு போக வேண்டிய அவசியம் என்ன.அங்கிருந்த அரசியல் இயக்கங்கள் சாதிய முறைகள் போன்ற பல்வேறு அணுகுமுறைகள் இந்த நாவலில் உள்ளன.

  இந்த நாவலின் தொடக்கத்தில் வள்ளுவர் சாதியை சேர்ந்த ஒருவன் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. திருவள்ளுவர் படமும் சிதைகிறது .ஜோசியம் சொல்லும் அவர்களுடைய வாரிசுகள் அதை கற்றுக் கொள்ளாமல் வேறு தொழிலுக்கு போகிறார்கள் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து முதலாளிகள் ஆகிறார்கள். சிங்கப்பூர் வேலை செய்கிறவன் திரும்பி வந்து அந்த நகரத்தில் அவனின் நடவடிக்கையை மேற்கொள்கிறான். கோபால் என்ற இளைஞர் ஜோதிடம் பார்த்து சென்னை கிளை, திருப்பூர் கிளை என்று ஆரம்பிக்கிறார். சினிமா உலகத்தில் ஜோதிடத்திற்கு பெரிய மதிப்பு இருக்கிறது ஜோதிடர்கள் 200 ,300 வருட கிராமிய முறைகள் சிதறி சிலர் முன்மாதிரியாக வெளியே வருகிறார்கள் ,விவசாயம் அழிந்து போக பல குடிகாரராக மாறுகிறார்கள், சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் காணப்படும் சுற்றுச்சூழல் அம்சங்கள் இந்த நாவலில் கூட உள்ளன ,அப்படித்தான் சண்முகநதி என்ற நதி சாயக்கழிவு, வீட்டு கழிவுகளும் சேர்ந்து நஞ்சு ஊட்டி ஓடுவதை காட்டி அதை சுத்தமாக வேண்டும் என்று ஒரு ஆசிரியர் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுடன் ஈடுபடுகிறார். இந்த நாவலில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் சுப்பையா. கலை இலக்கிய  ஆர்வம் கொண்டவர். சிறுதெய்வ வழிபாட்டில் அக்கறை உள்ளவர். குறும்படம் வீதி நாடகங்கள் முற்போக்கு இயக்கங்கள் என்று செயல்படுகிறார் .ஆனால் அவர் செயல்பாட்டில் முற்போக்கு இயக்கங்கள் பல சமயங்களில் தடை செய்கின்றன. .கட்டுப்படுத்த விரும்புகின்றன. அவர் தொடர்ந்து சமூக பிரச்சனைகளை தன்னுடைய வீதி நாடகங்களிலும் கவனம் செலுத்தி ஒரு எதிர்ப்புக் கலைஞனாக முடிந்ததை இந்த நாவல் சொல்கிறது .அதேபோல கடவுள் எதிர்ப்பு சார்ந்த ஒரு கதாபாத்திரமும், ஹமீத் தேனீர் கடை போன்ற இடங்கள் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பது சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன ,சண்முகம் சௌந்தர்யா என்ற கலப்பு மணம் புரிந்து கொண்டோரின் வாழ்க்கைச் சிக்கல்களை சொல்வது உடுமலை சம்பவத்தில் சங்கர் கௌசல்யா வை காட்டுகிறது. ஆனால் கொலை சம்பவத்திற்கு பிறகும் சவுந்தர்யா தீர்க்கமாக போராடி வாழ்வை முன்னிறுத்துவது நல்ல விஷயமாக இருக்கிறது .இயற்கை வேளாண்மை தமிழ் கல்வி அமெரிக்க இளைஞர் விவசாயத்தில் ஈடுபட்டுவருவது, உணவு அரசியல் போன்றவை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலமாக பூடகமாக சொல்லப்பட்டிருக்கின்றன. சாதி மோதல் ஆதிக்க சாதியினர் போக்கு பிணங்களை காவல்துறை அடக்கம் செய்யப்பட வேண்டிய நிலை போன்றவை காட்டப்படுகின்றன. பழையனூர் பழைய ஊராக இல்லை அது புதிராக இருக்கிறது. சாதி அடையாளம் தெரியாத வரை மனிதன் உயர்ந்தவன். சாதி அவனை மிருகமாக மாற்றி விடுகிறது என்ற குறிப்பு இந்த நாவலில் ஓரிடத்தில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் நகைச்சுவையும் கிண்டலுமாக இந்த நாவல் நகர்வது இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது .பரமேஸ்வரி என்ற ஏறத்தாள ஒரு விலைமாது ,அமலா என்ற பூக்காரி அவர்களுடைய வாழ்வியலை நடத்தி செல்லும் சிரமங்கள், கிராம சமூகத்தின் ஆதிக்க சாதி தன்னுடைய நிலை.. சுடுகிறது சமூக அரசியல், சாதி அரசியல் இதில் உள்ளன. இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது தமிழ்ச் செம்மல் விருது போன்றவை அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த அதிகாரங்களை அவர் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்கு தகுதியாக அவருடைய படைப்புகள் இருக்கின்றன. சாயப்பட்டறை மூடப்பட்டு அதன் பின்னணியில் ஏற்படுகிற பொருளாதார ,கலாச்சார மாற்றங்களில் புலம்பெயர்ந்த மக்கள் நிலை பற்றி ஒரு நாவல் கூட நீர்த்துளி என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். அவர் வாழும் சமூகம் அவரை பாதிக்கிறது. தன் பாதிப்பை தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் பதிவு செய்து வருகிறார்.