சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 11 நவம்பர், 2025

Thiriller screen plays SubrabharathiManian Cash, Crush & Chaos / The currency trap He is a man who has known loss — a widower working a modest government job, quietly hoping for a promotion that seems forever out of reach. His life carries on with quiet routine, but responsibilities continue to grow. His lover, a determined woman, works as an assistant professor in a college. Though she pours her heart into teaching, her job remains temporary — and securing it permanently comes with an unspoken price: a bribe. Together, they care for his daughter, now a college student with dreams of her own. Like any young woman, she wishes for a scooter — a symbol of freedom and belonging. These are ordinary dreams, shared by countless families. But behind each of them, there lies a common need — money. When their small salaries fail to meet these mounting hopes, frustration brews. One day, in half-serious jest, they speak of printing counterfeit money — a silly thought tossed between tired shoulders. But what begins as a joke takes a sharp turn. A shadowy gang hears of their desperation and makes a tempting offer: “We’ll print the fake notes. You just distribute them.” It sounds simple. It sounds like a solution. It becomes their downfall As fake notes pass from hand to hand, so do consequences — legal and personal. Slowly, the trap tightens. The man, the woman, and the child — each must now face the reality of the choices made in the name of love, ambition, and survival. Do they get what they longed for? Did the man earn his promotion? Did the woman secure her future as a professor? Did the daughter receive her scooter
இந்த வாரம் பயணித்தவை: 1. உத்தரகோசமங்கை 2. திருப்புல்லாணி 3. ஏர்வாடி 4. மதுரை 1. மாணிக்கவாசகர் எனும் எழுத்தாளர்: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1] இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.[2][3] இது உலகின் பழமையான சிவன் கோயில் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை] இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிடும்‌ அளவுக்குப் பெருமை வாய்ந்த திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை. இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர். இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாற்றப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு./[சான்று தேவை] இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலபைரவர் துணைக்கோயில்களும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட அரசகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளன. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும். 0 மாணிக்கவாசகர் (Manikkavacakar) சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். இவர் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.[1] மாணிக்கவாசகர் பாடிய பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்). இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு. தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார். மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.[2] சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.[3] திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.[4] 2. பழ்மையான வைணவத்தலம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[2] இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.[3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°16'57.7"N, 78°49'27.8"E (அதாவது, 9.282700°N, 78.824400°E) ஆகும். • புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு இராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். • சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க, மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால், அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே, கரையில் மூன்று நாட்கள் இராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார். இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர். இக்கோயிலில் ஆதிஜெகநாதப்பெருமாள், பத்மாசனி சன்னதிகளும், ஆண்டாள், தர்ப்ப சையனராமர், சந்தானகிருஷ்னர், பட்டாபிஷேகராமர் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு, கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது. 3. ஏர்வாடி : மனநல மையம் ஏர்வாடி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் . இது கீழக்கரை தாலுகா மற்றும் பேரூராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது . மதுரையுடன் தொடர்புடைய வரலாற்று ஆட்சியாளரான குதுப்-உஸ்-சுல்தான் சையத் இப்ராஹிம் பாட்ஷா ஷாஹீத்தின் கல்லறை மற்றும் சன்னதியைக் கொண்ட கிராமம் இது . [ எப்போது? ] ஏர்வாடி முதலில் கடலாடி சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது , இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது . 2009 ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர்வாடி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது . ராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய்க்கு ஏர்வாடி இரண்டாவது பெரிய பங்களிப்பாளராகக் கருதப்படுகிறது. சையத் இப்ராஹிம் ஷாஹீத் தனது ஆட்சிக் காலத்தில் ஏர்வாடியில் அச்சிட்ட நாணயம். உள்ளூர் மரபுகளின்படி, சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத் தனது தளபதி சிக்கந்தர் பாதுஷாவை மதுரையில் உள்ள பாண்டிய ஆட்சியாளர் திரு பாண்டியனிடம் இஸ்லாத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் அனுப்பினார். இந்த சலுகை நிராகரிக்கப்பட்டபோது, ஒரு போர் வெடித்தது, இதன் விளைவாக ஷாஹீத்தின் படைகள் வெற்றி பெற்று சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மதுரையின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார் . இதைத் தொடர்ந்து, ஷாஹீதின் படைகள் பவுத்திராமணிக்கப்பட்டினம் (இன்றைய கீழக்கரை ) நோக்கி முன்னேறின. அங்கு, ஷாஹீத் மன்னர் விக்ரம பாண்டியனை இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ராஜா மறுத்து ஷாஹீதை ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறச் சொன்னார், ஆனால் ஷாஹீத் மறுத்துவிட்டார், தனது பணியை நிறைவேற்றாமல் தான் வெளியேற மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து தொடர்ச்சியான போர்கள் நடந்தன, ஒவ்வொன்றும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நீடித்த பத்து போர்கள். இந்த மோதல்களின் போது, ஷாஹீத்தின் ஒரே மகன் சையத் அபு தாஹிர், அவரது சகோதரர் சையத் இஸ்மாயில், அவரது மைத்துனர் ஜைனுல் அபிதீன் மற்றும் பல அமைச்சர்கள் உட்பட அவரது குடும்பம் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. [ 2 ] [ சிறந்த ஆதாரம் தேவை ] இறுதியில், மன்னர் விக்ரம பாண்டியன் மற்றும் அவரது மகன்களான இந்திர பாண்டியன் மற்றும் சந்திர பாண்டியன் ஆகியோர் கொல்லப்பட்டனர், ஷாஹீத் வெற்றி பெற்றார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் பௌதிராமணிக்கப்பட்டினத்தை ஆட்சி செய்ததாகவும், தெற்கு தமிழ்நாட்டில் இஸ்லாம் பரவுவதில் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது . சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத்தின் ஆட்சியின் போது அச்சிடப்பட்ட நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [ 3 ] [ சிறந்த ஆதாரம் தேவை ] மதீனாவின் மன்னராகவும் , இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் 18வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்தவராகவும் நம்பப்படும் அல் குத்புல் ஹமீத் வல் கௌசுல் மஜித் பாதுஷா சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நபியின் விருப்பத்திற்கு இணங்க இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்துடன், இந்தியாவிற்கு ஒரு பயணத்தின் போது எர்வாடிக்கு (அப்போது பௌதிராமணிக்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது) [ எப்போது? ] வந்ததாகக் கூறப்படுகிறது . [ 4 ] ஏர்வாடி சந்தனக்கூடு விழா [ உருஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தர்காதர்கா வளாகத்திற்குள் ஒரு மினாருடன் கூடிய மசூதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா இஸ்லாமிய மாதமான துல்-கீதாவில் நடத்தப்படுகிறது . இந்த விழா குதுப் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹித் பாதுஷாவின் "ஷஹாதத்" (தியாக நினைவு நாள்) நினைவாக நடத்தப்படுகிறது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களால் கூட்டாகக் கொண்டாடப்படுகிறது. [ 5 ] ( இணைய தளக்குறிப்புகள் 4. மதுரை
குறளினி : சுப்பரபாரதி மணியன் வணக்கம். குறளினி அவர்களின் பேச்சு திறமையை அவருக்கு திருப்பூரில் இளையோர் விருது தரப்பட்ட நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டேன்.அவரின் படைப்பாற்றல் பற்றி அவரின் முந்திய நூல்களில் தெரிந்துகொண்டேன். அவர்களின் கற்பனை உலகமும் குழந்தைகளின் இயல்பான எதார்த்த வாழ்க்கையும் எளிமையாக கொங்கு நாட்டு இயல்பு மொழியில் சொல்லப்பட்டு இருந்தன. இந்த நூலும் அப்படித்தான். கொங்கு மொழியில் குழந்தைகளில் அனுபவங்கள் வெகுளி தானமாகவும் எதார்த்தமாகவும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. நல்ல படைப்புகளின் உச்சத்திற்குச் செல்லும் அருமையான வாய்ப்புகளை நோக்கி குறளினியுடைய பார்வை இருக்கிறது என்பதற்கு இந்தக் கதைகள், இந்தக் கட்டுரைகள், இந்தப் படைப்புகள் சாட்சி, அவருக்கு கிடைத்து வரும் அங்கீகாரமும் விருதுகளும் தொடர்ந்து கிடைக்கவேண்டும். அவை இன்னும் பல இளைய தலை முறையினருக்கு எழுதுவதற்கான ஊக்குவிப்பாக அமையும். வாழ்க அவருடைய தளம்! -சுப்பரபாரதி மணியன் திருப்பூர்.
திருப்பூர் இலக்கிய விருது 2025 விழா ” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்” என்று திரைப்பட இயக்குனர் வ. கீரா “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டார். அவரின் வீரா நாவலுக்காக அவருக்கு “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ வழங்கப்பட்டபோது ஏற்புரையில் இவ்வாறு பேசினார். ( வீரா நாவல் டிஸ்கவரி புக் பேல்ஸ் , சென்னை வெளியீடு ) மற்றும் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி உட்பட30 படைப்பாளிகளுக்கு நேற்று அவ்விருதுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் ” என்ற சுற்றுச்சூழல் நூலை அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.அந்த நூலை சென்னை கோரல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூ330. விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தனுபவங்களை விவரித்தனர். முத்துபாரதி நன்றி கூறினார். கீழ்க்கண்டோர் “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பெற்றனர். ஓவியர் புகழேந்தி, தொல்லியலாளர் மூர்தீஸ்வரி, திரைப்பட இயக்குனர் வ.கீரா, திருக்குறள் க.காமராசு, பேரா. ரமணி எழுத்தாளர்கள் கோ.கலியமூர்த்தி மு.யாழினிஸ்ரீ,,ஞானசூரியன், மலர்வதி, ஆர்னிகாநாசர், அய்யனார் ஈடாடி, கோவை தனபால், சசிகுமார், இலக்கியா நடராஜன், ராணி சீதரன், கோவை ஆனந்தன்,செந்திரு, க.ஜெய்சங்கர், மா. காளிதாஸ், ரம்யா அருண்ராயன், பிரசாந்த்.வே , ஆங்கரை பைரவி, துவாரகா சாமிநாதன், காப்பியன், நாகஜோதி, செல்வராஜா, லீலா...கோ மொழிபெயர்ப்பாளர்கள் சுந்தரராமன், கன்னிமாரி தினேஷ், ஆர். முத்துமணி இடம்: சேவ் அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவமனை வீதி., கலைஞர் அறிவாலயம் அருகிலான கிளை வீதி, தாராபுரம் சாலை, திருப்பூர் சேவ் அலோசியஸ், சுசிலா, கிரிஜா சுப்ரமணியன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். எழுத்தாளர்கள் கீழ்க்கண்டத் தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். 0 கவிதை அரசியல் 0 சோறு அரசியல் 0 கை வரை ஓவியங்கள் மதிப்பிழந்து விட்டனவா,. 0 ஆடியோ புத்தகங்கள் இன்றைக்கு ஏன் தேவை 0 தொல்லியல் அரசியலாகி விட்டதா. 0 இன்னும் திருக்குறளை பரப்ப வேண்டி உள்ள அவலம் ஏன் 0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா 0 விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா 0 0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது 0 மொழிபெயர்ப்பு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா 0 சுற்றுச்சூழல் இலக்கியம் போதுமானதாக வருகிறதா 0 திரைப்பட அனுபவங்கள் இலக்கியத்திற்கு சவாலா.. **** புகைப்படம் : திரைப்பட டைரக்டர் வ.கீரா பேசுகிறார். . மேடையில் சுப்ரபாரதிமணியன், சேவ் இயக்குனர் அலோசியஸ், சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி புத்தக வெளியீடு: அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.
சாந்தாதத் சிறுகதைகள் குடும்ப அமைப்பு பாதுகாப்பானது என்று கருதுகிறவர் சாந்தாதத் அவர்கள். குடும்ப அமைப்புக் கொள்கைகளும் , நடைமுறை வாழ்க்கை விஷயங்களும் என்று பலவற்றை கதைகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். .குடும்ப அமைப்பை தாண்டி அவர் வாழும் ஊர் சார்ந்த கதைகளையும் அவர் சுற்றுலா என்ற வகையில் வெளியூர் செல்கிற போது அந்த அனுபவங்களையும் அவரின் பார்வையில் பாடும் நிகழ்வுகளையும் பல சிறுகதைகளாக எழுதி இருக்கிறார் பெரும்பாலும் நடுத்தர வாழ்க்கைக் குடும்ப உறவுகளை பற்றி எழுதியிருக்கிறார் என்று தோன்றினாலும் செகந்தராபாத் ஹைதராபாத் விளிம்புநிலை மக்களை பற்றியும் எழுதி இருக்கிறார் என்று அடையாளப்படுத்தலாம் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அது அடையாளமாக வழங்குகின்றன. வெளி மாநில ஊர்களில் அலையும் போது கண்டடைகிற அனுபவங்களையும் உள்ளூர் அனுபவங்களையும் கதைகளாக்கிக் கொண்டிருக்கிறார் இது அவரின் ஆறாவது சிறுகதை நூல். அறுபதாவது நூலாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நான் 120 நூல்களை எழுதி விட்டேன் அவரும் அவ்வளவு அனுபவங்களை வைத்திருப்பவர், அவரும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அனுபவம் தரும் கதைகளையும் மையங்களையும் கொண்டு எழுதி இருக்கிறார் அதில் ஒரு பகுதியாக இந்த கதைகள் உள்ளன இந்த கதைகளின் தொடர்ச்சியாக நிறைய நாவல்களும் அவர் எழுத வேண்டும் மொழிபெயர்ப்பில் சிகரம் தொட்டவர், படைப்பிலக்கியத்திலும் சிகரங்களைக் காட்ட வேண்டும் இனியும். வாழ்த்துக்கள் அன்புடன், சுப்ரபாரதிமணியன் 9486101003
Amirtha issue சிறுகதை பனிரெண்டு மணி நேரம் : சுப்ரபாரதிமணியன் 0 ”துபாய் கரன்சிக்கு என்ன பெயர் “ ‘ திர்ஹாம் “ “ இந்திய பணத்தில் எவ்வளவு இருக்கும் “ “ இருபத்தைந்து ரூபாய் சுமாராய் “ “ ஒரு காபி சாப்பிட அங்கு பத்து துபாய் ரூபாய் என்றால் இந்தியப் பணம் எவ்வளவு ஆகும்” “ இருநூற்றைம்பது ரூபாய் “ “இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து காபி சாப்பிட மனம் வருமா ‘ “ இந்தியப் பணத்தில் கணக்கு போட்டால் சாப்பிட முடியாது. ,மனம் வராது. திர்ஹாம் நோட்டை சாப்பிடவா முடியும். ஆனால் சம்பளமும் அப்படித்தானே வரும். அதையும் கணக்குப் போட்டுக்கொள் நிலா “ “ சரிதான். அங்கு என்னவெல்லாம் இருக்கிறது பார்க்க “ “ நிறைய இருக்கும். பாலைவனம் எங்குமாயிருக்கும். மூவாயிரம் அடி உயரம் கொண்ட புர்ஜ்கலிபா கட்டிடம்...பாம்ஜிமேரா “ “ அதென்ன.. “ “ மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு...பனை மரம் போல்....பனை உருவத்தில் கட்டிடங்கள். தீவு அது.l அப்புறம் துபாய் மெரினா “ “ மெட்ராஸ் மெரினா ஒரு முறை பார்த்தது. இன்னொரு முறை அங்கே போகணும் அல்லி “ “ போலாம் நிலா. துபாயிலிருந்து வந்த பின் போகலாம் “ “ சினிமாக்களில் காட்டப்படும் பாய்மரக்கப்பலை ஒத்த ஹோட்டல்..” “ அதுவும் இருக்கும். இப்போதைக்கு ஒரு ஹோட்டல் நம் பசியைத் தீர்க்க தேவை நிலா “ இரவு நேர மின்னொளியில்,ஜொலித்துக்கொண்டிருந்தது கோவை மாநகரம். போக்குவரத்துகள் நிறைந்த அவினாசி சாலையில் தனக்கு முன்னால் சென்ற வாகனங்களை ஓவர்டேக் செய்து போய் கொண்டிருந்தது அந்த பல்சர் பைக். பைக் ஒரு உயர்தர ஓட்டல் முன்பு நிற்க,பைக்கில் இருந்து இறங்குகிறான் அல்லிராஜ். நிலாவும் இறங்குகிறாள் அவளது பின்புறம் பார்ப்பதற்கு எடுப்பாக கவர்ச்சியாக இருந்தது.அது சிலரின் பார்வைக்குப் படுகிறது. அல்லிராஜ் தனது ஹெல்மெட்டை கழற்றிவிட்டு,நிலாவை பார்க்கிறான்...பின்புறம் கண்ணாடியில் தெரிந்த அளவு அழகாக அவளது முகத்தில் பொலிவு தெரியவில்லை. அவளது முகம் சுமாரான அழகில் தான் இருந்தது. சுமார் முஞ்சி என்று அவளே அவ்வப்போது சொல்லிக் கொள்வாள். "வா நிலா" என அழைத்தபடி ஹோட்டல் உள்ளே நுழைகிறான் அல்லிராஜ்.அவனை தொடர்ந்து நிலாவும் உள்ளே நுழைகிறாள்.இருவரும் பேமிலி ரூம் என எழுதியிருந்த அறையின் கதவை திறந்து,உள்ளே சென்று,ஒதுக்குப்புறமான மேஜையில் போய் அமர்கிறார்கள். "நிலா என்ன சாப்பிடுறே" "நீங்க விரும்புறதெ சொல்லுங்க" என சொல்ல,அங்கு வரும் பேரரிடம்,"இரண்டு மசால் தோசை.ஒரு காளான் கிரேவி.அப்புறம் என்ன வேணும் நிலா?" என கேட்க,"இது போதும் " என சொல்ல,பேரரை நோக்கி,"இதக் கொண்டு வாங்க" என சொல்ல,"ஓ.கே" சார் என்றபடி பேரர் செல்வது. "என்ன நிலா.எதுவும் பேசமா மௌனமா இருக்கெ? நாளைக்கு இந்நேரம் நான் துபாயில இருப்பேன்." அல்லிராஜ் சொல்ல,நிலா மேஜை மீது இருந்த அவனது கைகளை தனது கைகளால் தழுவது.முகம் வாடி வருந்துவது.கண்களில் நீர் துளிகள் கசிந்தது. ,"நீங்க என்னெ திருமணம் செய்தது என்னோட பாக்கியம்.ஆனா,இன்னைக்கு என்னெ பிரிஞ்சு வெகுதூரம் கடல் கடந்து போகுறதெ நினைச்சா,மனசு வலிக்குதுங்க.", " அழாதெ நிலா.இரண்டு வருஷம் தானே.கண்மூடி திறக்கும் முன் உன் கண்முன்னே இருப்பேன்.கண்ணெ தொட" என்று நிலாவுக்கு ஆறுதல் சொல்ல,பேரர் ஆர்டர் செய்த உணவுகளுடன் வருவது. .நிலா தனது கைகளால் அல்லிராஜின் இடுப்பை சுற்றி வளைத்தபடி அவளை நெருக்கினான்., " நாம காதலிச்ச காலத்துல,நாம இதுமாதிரி எத்தனமுறை ஹோட்டல்ல வந்து சாப்பிட்டிப்போம்" ," அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல.ஆனா,நாம ரெண்டு பேரும் ஒருநாள் ராத்திரி மழையில நனைஞ்சு, ஒதுங்க இடமில்லாம யாரும் இல்லாத பழைய கட்டிடத்தில ஒதுங்கி,அந்த மழையில் நனஞ்ச உன் உடம்பை பார்த்து,நான் உன்னை கட்டிபிடிக்க,நீ என்னெ கட்டி பிடிக்க,அன்னைக்கு நமக்கு நடந்த்து மட்டும் தான் ஞாபகம் வருது" அவர்களின் நினைவுகள் அவர்களின் முகங்களின் போக்கை மாற்றி விட்டது. முன்னால் இருந்த உணவுத்தட்டுகளைப் பார்த்தார்கள். 2 அல்லிராஜ்,நிலாவின் முகத்திலிருந்து,முத்தமிட்டபடியிருக்க , ,நிலா உணர்ச்சி பிழம்பாய் மாறி அல்லிராஜை இறுக கட்டி அணைத்தான்.. அல்லிராஜ் இனி இரண்டு வருடங்கள் நிலாவை தொட முடியாது என்பதனை உணர்ந்தவனாக ஆக்ரோஷத்துடன் இருந்தான் ,அவளும் அந்த முரட்டுதனத்தை விரும்பியவளாக அல்லிராஜீக்கு ஈடுகொடுக்கிறாள். ,அல்லிராஜ் மிகுந்த களைப்புடன், படுக்கையில் படுக்கிறான்.நிலாவும் பெருமூச்சு விட்டபடி,எழுந்து தண்ணீர் குடிக்கிறான். "நிலா,உன்னெ ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா" , "இது கஷ்டமில்லைங்க.சுகம்.இந்த சுகத்துக்காக எவ்வளவு வேணுமின்னாலும்,கஷ்டப்படலாம்" என சொல்ல,அல்லிராஜ் கடிகாரத்தை பார்க்க, இரவு மூன்று .மணி. "நிலா,அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும்.சீக்கிரம் ரெடியாகனும்" என்றபடி எழுந்து குளிக்க செல்வது. . " என்னங்க தினமும் எனக்கு போன் பண்ணணும்.மறந்திடக்கூடாது.நான் உங்க போனுக்காக காத்திட்டு இருப்பேன்.", "வேல முடிஞ்சதும் அடுத்த வேலெ,என் நிலாவுக்கு போன் செய்யுறதுதான்.எனக்கு இருக்குற ஒரே கவலை அந்த அமாவாசை தான்." "அமாவாசை வந்தா உங்களுக்கு என்ன?", "அன்னைக்கு நிலா வானத்துல தெரியாது." என்றபடி நிலாவை முத்தமிட,அதை கண்ணாடியில் பார்த்தான்,டாக்ஸி டிரைவர், "சார்.மேடத்தோட பேரு நிலாவா?". "எப்படி கண்டுபிடிச்சே" ,"நீங்க பேசுன டயலாக்கை வெச்ச தெரிஞ்சுக்கிட்டேன்." , "கில்லாடி தான்யா நீ".,வண்டி,கோவை ஏர்ப்போர்ட் வாசலில் நின்றது.. நிலா காரில் அமர்ந்தபடி கண்களை மூடி ஏதோ யோசனையில் இருக்கிறாள், "மேடம்,சார் என்ன வேலைக்கு துபாய் போறார்", "டெக்ஸ்டைல்ஸ் ஓர்க்தா...நம்ம பனியன் கம்பெனி வேலையை துபாய்ல செய்யப் போறாரு.", "சரி மேடம். ஆனா நல்ல சம்பளம் கெடைக்கும். கொஞ்சம் மிச்சம் பண்ணலாம்" “ ஆமா.. திர்ஹாம்லே மிச்சம் பண்ணனும். “ “ திர்ஹாம்ன்னா “ “துபாய் பணத்துப் பேரு..” 3 அன்றைக்கு அவனின் துபாய் பயணம் முழுமையாகவில்லை. தடைபட்டது. ஒர்க் பர்மிட் சரியாக இல்லையென்று அங்கு சென்ற பிறகு தடுக்கப்பட்டான். திரும்ப வேண்டியதானது. அதற்குப் பிறகு அவன் முயற்சி செய்யவில்லை மறுபடியும் துபாய் பயணத்திற்கு. முந்தின பயணத்திற்காக அவன் வாங்கியிருந்த கடனை அடைக்க அவன் நீண்ட நாட்கள் பனியன் கம்பனியில் வேலை செய்ய வேண்டியிருந்தது.. ஓவர் டைம் செய்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தான். அப்போதே அவனின் வேலை நேரம் பத்து மணி நேரமாக இருந்தது. அதன் பின்னால் பனிரெண்டு மணி நேர வேலை என்பது அமுலுக்கு வந்தபோது கடனை அடைக்கிற வகையில் பல திட்டங்கள் பற்றி யோசித்தான். அவற்றை அமல் படுத்தும் போது மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டியிருந்தது. அவள் வேலைக்குப் போன பனியன் கம்பனி டீ சர்ட்டுகளில் அவள் அச்சான திர்ஹாம் நோட்டுகளைக் கண்டாள். அதை மெசின் எம்ப்ராய்டரி செய்யும் வேலை அவளுக்கு கச்சிதமாக அமைந்து விட்டது. பனிரண்டு மணி நேரமும் திர்ஹாம் நோட்டுகள் அவள் கண்களிலேயே இருந்தது. 0
uyirmmai கெடா கறி : சுப்ரபாரதிமணியன் மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ. தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ. கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை மூக்கைத் துளைத்தது அவனுக்கு. 0 ” அடுச்சாச்சா.. அடிக்கனுமா ” ”என்ன “ ” கட்டிங் அடிச்சாச்சா . அடிக்கனுமா “ சுந்தரனை உலுக்கிவிட்டது அக்கேள்வி. சாதாரண விசயம்தான். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படும் போது புதிதாகி விட்டது. அவன் உடம்பை உலுக்கி விட்டக் கேள்விதான். 0 புரட்டாசி மாதம் சுந்தரனை உலுக்கிவிட்டது. ஒரு மாதமாய் அசைவ உணவு உண்ணவில்லை. வீட்டில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது அசைவ உணவு இருக்கும். அதுவும் நண்டும் மீனும் வாங்கி வந்து விட்டால் நல்ல புளி போட்டு இரண்டு தினங்களுக்கு இருக்கும். பிறகு மட்டன், சிக்கன் ஒரு நாள் இருக்கும் இப்படிச் சாப்பிட்டுப் பழகிய வழக்கமான மாதங்களில், புரட்டாசி மாதம் என்பது எதுவுமே சாப்பிட முடியாமல் செய்துவிட்டது முன்பெல்லாம் புரட்டாசி மாதங்களில் கட்டுப்பாடு காரணமாக வெளியே சாப்பிட்டுக்கோ என்று மனைவி சொல்லிக் கொள்வாள் அப்படித்தான் அவனும் வெளியே சென்று எதையாவது சாப்பிட்டு திருப்திப்படுத்திக் கொள்வான். ஆனால் ஒரு முறை காடை என்று சாப்பிட்டு போக அது வயிற்றைக் கழுவி விட்டது. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது அதனால் அசைவ உணவை வெளியில் சாப்பிடுவதை அவன் தவிர்த்து இருந்தான். பிரியப்பட்டது ஏடாகூடமாய் ஏதாவது ஆகி விடக்கூடாது என்று அவனுக்கு பயம். அவனுடைய பயத்தில் செலவு என்பது மிக முக்கியம்.. கொஞ்சம் சிக்கனக்காரன்தான். அதனால் இது எல்லாம் வேண்டாம் என்று அவனும் தன் விருப்பத்தை மனைவியுடன் சேர்ந்து பயந்து எதிர் கொண்டிருந்தான். புரட்டாசி மாதம் முடிகிற போது தான் அந்த விபத்து நடந்தது இரண்டு வீதி தள்ளி இருக்கும் அவன் சித்தப்பா ஒருவர் இறந்து விட்டார். அவர் இறந்த நேரம் சரியில்லை அடைப்பு என்று சொல்லிவிட்டார்கள். அடைப்பு மூன்று மாதத்திற்கு இருக்குமாம். அதற்குப் பின்னால் சாமி கும்பிட்டு விட்டு அசைவ உணவுக்குப் போக வேண்டும் என்றார்கள். வேறு வழி இல்லை.. இன்னும் மூன்று மாதத்திற்கு காத்திருக்க வேண்டுமா என்றிருந்தது ஆனாலும் நல்ல அசைவ உணவு கிடைத்தால் நல்ல ஹோட்டலாக இருந்தால் சாப்பிட்டு விடலாம் என்று தான் அவனுடைய தீர்மானம்., மனைவியும் ஒத்துவந்தாள் அது சரியென்றாள். அப்படித்தான் அந்த்த் தீர்மானத்தை மனதை கொண்டு வந்து பார்த்துக் கொண்டே இருந்தான். நல்ல ஓட்டல் எதுவும் அமையவில்லை. இருப்பவை அதிக செலவு வைக்கக் கூடியவை. அப்போதுதான் பேக்கரி மோகன் குமார் மதுரைக்கு போகலாம் என்று அழைத்தார். ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தார் ஆயிரம் ஒரு ஆளுக்கு என்றார். எதற்கு என்றேன் கோவிலுக்கு போகும் செலவு என்றார் மதுரை என்றால் எனக்கு ஞாபகம் வருபவர் மீனாட்சி தான். பலமுறை போயாச்சு இப்போது தேவையில்லை என்றேன்.. அது இல்ல ,,பாண்டி கோயில் போகலாம் பாண்டி கோயிலா அது என்ன புதுசா இருக்கு பாண்டி முனீஸ்வரன் சக்தி வாய்ந்தவர் ஏக கூட்டம் வரும் தினசரி 100, 200 கிடா வெட்டு.. நடக்கும். வாங்க ..யார் வேணா போய் சாப்பிட்டுக்கலாம். அசைவ உணவு நல்ல விருந்து சாமி கும்பிடலாம் நான் அவர்கூட ஒத்துக் கொள்ளவில்லை பலமுறை மதுரைக்கு சென்று இருந்தாலும் கூட பாண்டி கோயிலைப் பற்றி அவன் கேள்விப்படவில்லை. ஆனால் அவர் அவருடைய தெருவில் உள்ளவர்களுடன் சென்று விட்டு வந்து முனீஸ்வரன் தரிசனம் அபாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பிரசங்கத்தை தவிர்க்க முடியாது. அவருடைய பேக்கரியில் ரசாயன பொருள்கள் கலக்காமல் இனிப்புகள் செய்வார் அதை வாங்குவதற்காக அவ்வப்போது அவன் அங்கு செல்வான் அதனால் மோகன் குமாரின் பேச்சை, பிரசங்கத்தை எந்த வகையிலும் தவிர்க்க முடியாது ஒரு மாதம் கழிந்திருக்கும் அப்போதுதான் புரட்டாசி முடிந்திருந்தது. அப்புறம் சித்தப்பா மரணமும் சாம்பலாகியிருந்தது.. மதுரைக்குப் போகும் வேறு வேலை அமைந்துவிட்டது சனிக்கிழமை அந்த வேலை.. பாண்டி கோவில் போவதற்காக ஞாயிற்றுக்கிழமையும் ஒதுக்கிவிட்டான் நூறு இருநூறு கிடாவெட்டுகள் நடக்க ஒரு கை அசைவசோறு கிடைக்காமல் போகுமா என்பது தான் அவருடைய எண்ணம். ஆனால் பல சமயங்களில் அது மாதிரியும் நடந்திருக்கிறது சின்னதாராபுரத்தில் கண்மணி வீட்டு விசேஷத்திற்கு போயிருந்தான் அமராவதி ஆற்றின் ஓரத்தில் இருக்கும் கோவிலில் வைத்து அவளின் பையன்களுக்கு மொட்டை அடித்தார்கள் காது குத்தினார்கள்.. பக்கம் இருந்தவர்கள் கெடாவெட்டி பொங்கல் வைத்து விருந்து போட்டார்கள் கண்மணி அசைவிருந்து இல்லை என்றாள். சரி இவ்வளவு பேர் அசைவ உணவு சமைக்கிறார்கள். யாராவது கூப்பிட மாட்டார்களா அல்லது எந்த பந்தியிலாவது போய் உட்கார்ந்து கொண்டால் யார் என்ன என்று கேட்கவா போகிறார்கள்என்று நினைத்தான். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. யாரும் கூப்பிடவில்லை அவனும் எந்த பந்தியிலும் போய் உட்காரவில்லை. பல பந்திகள் நடந்து கொண்டுதான் இருந்தன அதுவே மனதில் வந்து தொண்டைக்குழிக்குள் நின்று கொண்டிருந்தது பாண்டி கோவிலுக்கு போக மாட்டுத்தாவணியில் இருந்து இலவசப் பேருந்துகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது என்றார் மோகன்குமார். அல்லது ஆட்டோவுக்கு 20 ரூபாய் போதும் .ஷேர் ஆட்டோவில் போய்விடலாம் என்று சொல்லி இருந்தார் அவன் மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திற்க்குப் போனபோது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவனை தரையில் கிடைக்கும் எச்சில் இலையைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.. அப்படி எல்லாம் ஆட்டோ போகாது அங்கெல்லாம் பஸ் போகாது என்றார்கள். பஸ் எங்கிருந்து போகும் என்று கேட்டபோது வெகு தூரத்தை காட்டினார்கள் அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இரண்டு மூன்று பூக்கள் விற்கும் பூக்காரிகளிம் கேட்டான் அவர்கள் அருப்புக்கோட்டை பஸ் போகும் என்றார்கள்.. அது பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்தது. அந்த இடத்தை தேடி போனான். புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பேருந்து அவன் கவனத்திற்கு வந்தது.. அங்கிருந்த காக்கி சட்டைக்காரரிடம் போய் பாண்டி கோவில் போக வேண்டும் என்றான் இந்த வண்டி போகும் என்றார் அவர். ஆனால் வண்டியில் போகும் இடம், நிறுத்துமிடம் என்ற விபரங்களில் இடங்களில் பாண்டி கோவில் இல்லை. ஆனாலும் அவர் காக்கி சட்டை போட்டவர் அதிகாரப்பூர்வமாக தான் சொல்கிறார் என்பதாய் யூகித்துக் கொண்டு அவனும் ஏறி உட்கார்ந்தான் அந்த நிறுத்தத்தில் இறங்கிய போது கோவிலுக்கு போய் சேர முடியுமா என்ற வகையில் கூட்டம் அபரீமிதமாக இருந்தது அந்த இடத்திற்கு முன்பே ஒரு கிலோமீட்டர் பேருந்துகள், வாகனங்கள் அணிவகுத்து சாலையின் இரு பக்கங்களிலும் நின்றன பெரிய கோயிலாக தான் இருக்கும் பெரிய விசேஷமாகத்தான் இருக்கும் என்பதை உறுதி செய்து கொண்டான் அவன் நுழைந்த அந்த மண்டபத்தில் அப்போது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவர்கள் பக்கம் போன போது இலைகளில் நான்கு விதமாக அசை உணவுகளும் தென்பட்டன.. நல்ல விருந்துதான் என்று நினைத்தான். ஆனால் யார் போடுகிறார்கள்.,. என்ன போடுகிறார்கள் என்று தெரியவில்லை. வலது பக்கத்தில் ஒரு மேசையில் உட்கார்ந்து இருந்தவர் பெரிய நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார் பணத்தை வாங்கி போட்டுக் கொண்டிருந்தார் அது அன்பளிப்பாக இருக்கும் என்று நினைத்தான். .அப்படித்தான் மெல்ல தலை நீட்டி பார்த்தபோது அந்த நோட்டில் 501, 1000, 1051 என்று நன்கொடை எண்கள் இருந்தன நூறு இருநூறு என்று எந்த நன்கொடையும் இல்லை. ஏதோ விசேஷம் என்று மனதில் கொண்டான் கோயிலுக்கு போனால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும்.. சாப்பிடத்தான்.. ஏதாவது அசைவ வழி கிடைக்கும் .. கோயில் எங்கே இருக்கிறது என்று ஒரு கிழவியிடம் கேட்டான். அந்த கிழவி வாயில் இருந்த பற்களை எல்லாம் இழந்து வெறும் சொற்களை மட்டும் காற்றாய் தருபவளாக இருந்தாள். அவள் கையை நீட்டி அடுத்த வீதியில் இருக்கிறது என்றாள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெயிலில் இங்கே வருவதற்கு சிரமப்பட வேண்டியது அதிகம்தான் . இன்னொரு தெருவை கடந்து போக வேண்டுமா என்பதில் அயற்சி வந்து விட்டது வெளியே வந்து குறுக்காக தென்படும் ஒரு மண்பாதையைப் பார்த்தான் அங்கு விறகு கட்டைகள் எரிந்து கொண்டிருந்தன தீயில் காய்ந்து கொண்டிருந்த பாத்திரங்கள் சமைக்க தயாராக இருந்த அசைவ உணவு வகைகள் என்றெல்லாம் அவன் கண்ணில் பட்டன.. சாக்கு முதல் பிளாஸ்டிக் தட்டிகள் வரை தரையில் கிடக்க அவற்றில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டும் நிழல் தேடியும் பலர் இருந்தார்கள். சட்டெனக் கடந்து போன போது அந்த பாண்டி கோயில் குறுக்காக வந்துவிட்டது அவனுக்கு அதிர்ஷ்டமாகத் தான் தோன்றியது வெயிலில் அலைந்து திரிய வேண்டியதில்லை. அவனுக்கு முன் இருந்த கூட்டம் எங்கு போகிறது என்று தெரியவில்லை எல்லோர் கைகளிலும் தட்டுகள். தட்டுகளில் பெரிய பெரிய மாலைகள். அந்த மாலைகள் விற்கும் பூக்கடைகள் ஏராளமாக கண்ணில் பட்டன. வழக்கமான தேர்த்திருவிழாவுக்காக இருக்கும் கடைகள் அங்கே இருந்தன. அந்தக் கூட்டம் எங்கே சென்று முடிகிறது என்று பார்ப்பதற்காக அவன் புழுதி பறக்கும் அந்த பாதையில் நடந்து கொண்டே இருந்தான். கும்பல் போய் சேரும் இடத்தில் ஒரு முறையான வரிசை வந்து விட்டது அந்த வரிசை பாம்பு போல் பல விதங்களில் வளைந்து போனது .எங்கேயாவது போய் கூட்டிச் செல்லும். இறுதியில் உள்ள கறபகிரகம்தான் பாண்டி முனீஸ்வரனின் ஸ்தலமாக இருக்கக்கூடும் என்று நினைத்தான் ஆனால் போகிறவர்கள் செருப்புகளை தாறுமாறாக விட்டுப் போயிருந்தார்கள். இந்த செருப்புகளை வந்து மறுபடியும் தேர்வு செய்ய முடியுமா. கொஞ்ச தூரத்தில் அவனை தடுத்து நிறுத்திய வயதானவர் உனக்கெல்லாம் அறிவு இருக்கா என்று கேட்டார். அவன் புரிந்து கொண்டான். .செருப்பைப்போட்டு அவன் கோயிலுக்குள் வந்து விட்டதை பார்த்தவர் சத்தம் போடுகிறார் என்று தெரிந்தது.. வேறு வழியில்லாமல் பின்னோக்கி வந்து கொஞ்சம் தூரம் நடந்து போனான் செருப்பை பாதுகாக்க வேண்டும். 699 ரூபாய் செருப்பு. அதைப் பாதுகாக்க ஏதாவது இடம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் அந்த இடத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் 10 , 15 பேர் தரையில் உட்கார்ந்து கொண்டு எதையோ வெட்டுகிற பாவனையில் இருந்தார்கள் அருகில் சென்று பார்த்த போது அவர்கள் கோழிகளையும் ஆடுகளையும் வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆட்டுத்தலைகளை கருக்கிக் கொண்டிருந்தார்கள் சிலர். ஆட்டின் தலை கருகிற வாசம் எங்குமாக இருந்தது கருத்தத் துகள்கள் உட்கார்ந்திருந்தவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. ஆட்டுக் கழிவுகளின் மத்தியில் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அப்பா வீட்டில் தலைக்கறி செய்கிற போது ஞாபகமாய் அடுப்பின் பக்கம் போய் உட்கார்ந்து தீயில் கருக்குவார்.. .கத்தியால் சுத்தம் செய்வார். இங்கே அடுப்பு பூந்துருத்தியாக இருந்தது. ஒருவர் சக்கரத்தை சுற்ற பூந்துருத்தி உலை காற்று தீயை வெளி கொட்டிக் கொண்டுள்ளது.. அதை எடுத்து சிலர் கழுவிக்கொண்டிருந்தன. சீக்கிரம் ஆட்டுத்தலைகள் கருகி தூரம் போய் விழுந்தன. அவற்றை சுரண்டி இன்னொருவர் சுத்தம் செய்தார்.. இன்னொரு புறத்தில் ஆட்டின் பாகங்கள் சில துண்டுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முழுக்கோழிகள் தோல்களை இழந்து நிர்வாணமாகிக் கொண்டிருந்தன எல்லோரும் கழிவுகளுக்கு மத்தியில் தான் இருப்பதாக தோன்றியது. இப்போதெல்லாம் இந்த கோழி கழிவுகளை வாங்கி தின்ன வடநாட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள் கோழி கழிவுகளை எடுத்து சுத்தம் செய்து மற்றும் குடல்களை சுத்தம் செய்து தனி சமையல் பாவமாக அவர்கள் ஆக்க பழகி இருந்தார்கள் கோழிகளின் கழிவுகளை சிக்க்னம் கருதி வடமாநிலத் தொழிலாளர்கள் ஊரில் வாங்குவதைக் கவனித்திருக்கிறான். அப்படி இந்த ஊரில் கூட வடநாட்டு தொழிலாளர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இது உணவாகக் காத்திருப்பதாக நினைத்தான். அவர்கள் இந்த ஊர்களிலும் நிறைய இருக்கிறார்கள். இங்கே கிடா வெட்ட, சமையல் செய்ய இடம் வாடகைக்கு தரப்படும் என்ற பலகை வெளிச்சம் போட்டு காட்டியபடி இருந்தது. அதில் இரண்டு மூன்று எண்கள் இருந்தன.. அவன் அந்த எண்களை கைபேசியால் படம்பிடித்தான் அப்போது உள்ளே இருந்து வந்தவர் எதுக்கு படம் பிடிக்கிறாய் என்றார் நம்பர் வேண்டி இருந்தது என்றான். எந்த ஊரு.. கோயம்புத்தூர் பக்கம். என்னன்னு பார்க்க வந்தேன் ” பாக்குறீங்க என்ன இருக்கு பாக்க “ “ இல்ல கடா வெட்டணும் அதை பார்க்க வந்தேன் அதான் பாத்துட்டு போயிட்டு ஊர்ல பெரியவங்க கிட்ட சொல்லணும்” “ அப்படியா சரிங்க “ “ இங்க கிடா வெட்டி சமையல் பண்றதுக்கு இடம் கிடைக்குதா” ” அதுக்குத்தா நான் இருக்கேன் சமையல் பண்ணிட்டு இருக்காங்க பாருங்க. அந்த இடத்துக்கு 2000 ரூபாய் வாடகை காலையிலிருந்து சாயங்காலம் வரை வச்சுக்கலாம். கோழி வெட்டலாம். அறுக்கலாம். ஆடு வெட்டலாம் சமையல் பண்ணலாம் சாப்பிடலாம். வசதி இருக்கு . சீட்டு ஆடக் கூடாது.. எவ்வளவு பேர் வருவாங்க “ “ ரெண்டு பஸ் அளவு. சமையல் பண்ண ஆள் கிடைப்பாங்களா” ” வழக்கமா அஞ்சு பேர் வருவாங்க 12,000 ரூபா. கெடா கிளின் பண்ண எட்டு நூறு ரூபா . எப்போ வருவீங்க “ “ஊருக்கு போய் பெரியவங்க கிட்ட கேட்டு தான் சொல்லுவேன்: ” “சரி உட்காருங்க எங்க நம்பரை எடுத்துக் கொண்டு போங்க ”அவனின் எண்ணை எழுதினான் . அவன் வருகிறபோது வாங்கிய தனியார் பேருந்தின் பயணச்சீட்டு அதற்கு பயன் உள்ளதாக இருந்தது. அதில் 10 எண்கள் வருகிறதா என்று அந்த நிலத்துக்காரர் எண்ணி எண்ணிப் பார்த்தார். “ 2000 ரூபாய் வாடகை .ஒரு 500 ரூபாய் குறைக்கலாம் சமையல் ஆட்களுக்கு 12,000 ரூபாய். அதிலெ 1000 குறைக்கலாம் அவ்வளவுதான் பண்ண முடியும் வேற ஒன்னும் பண்ண முடியாது “ “செலவு பெருசா இருக்கு இல்ல” “ ஆமா நல்ல காரியம் பண்றது எல்லாம் செலவு கணக்குலெ வராது செலவு பண்ணி தான் ஆகணும் கெடா வெட்டி பொங்க வைத்து நாலு பேருக்கு சமைத்து போட்டா அதுல வரும் புண்ணியத்துக்கு ஈடு எங்க இருக்கு. அதுவும் அந்த முனீஸ்வரன் அருளாலே எல்லா கஷ்டமும் தீர்ந்து போயிடாதா” “ ஆனா செலவு தான் அதிகமா இருக்கு. சமையல் பாத்திரங்கள் ” “ அது அந்த 12000 ரூபாய்லே வந்துரும் உங்களுக்கு வேண்டிய சமையல் பாத்திரங்களை நீங்க வாங்கிக்கலாம்” அவன் சுற்றிலும் பார்த்தான் பல குழுக்கள் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். சில பேர் பலவகையான பழைய பிளக்ஸ் போஸ்டர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். “ சீட்டாடலாமா “ “ அதெல்லாம் பண்ண முடியாது தண்ணி அடிக்கிறது இதெல்லாம் முடியாது” “ எங்க ஆளுங்க தண்ணி கூட அடிக்காம இருப்பாங்களா” “ அது எங்காவது போய் மறைவா பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.. பொதுவான இடத்துல பண்ணக் கூடாது எப்ப கெடா வெட்டு வக்கிறீங்க சொல்லுங்க “ “ நான் ஊருக்கு போயி மத்தவங்க கிட்ட பேசிட்டு சொல்றன்” “ எப்ப வருவீங்க எத்தனை பேர் “ “ ஒரு பஸ், ரெண்டு பஸ்ஸோ. எவ்வளவு ஆள் சேர்ராங்களோ அதைப் பொருத்து .. சரி இங்க எல்லாம் வந்து பொதுவான சமையல் இல்லையா.. பொதுவா சமைக்கிறங்க எடத்திலெ சாப்பிட வசதி இருக்கா” “ கோவிலில் அன்னதானம் போடுவாங்க ஒரு அம்பது பேருக்கு டோக்கன் கொடுப்பாங்க . அவ்வளவுதான் ஐம்பது பேருக்கு முடிஞ்சா அவ்வளவுதா “ பத்து நூறு கிடாய் வெட்டி சுற்றிலும் சமைக்கிறார்கள் கோவிலில் அன்னதானம் என்றால் அதுவும் அசைவ உணவாகத் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அந்த அன்னதான உணவு நிச்சயம் ருசியாகத்தான் இருக்க வேண்டும் ஆகவே இன்றைக்கு அசைவ உணவை ஒரு பிடி பிடித்து புரட்டாசி மாதம் விட்ட ருசியை ஐப்பசியில் தொடரலாம் என்று நினைத்தான் “ அந்த அன்னதானத்துக்கு எல்லாம் எப்படி போலாம்” ” கோவிலுக்குள்ள போனீங்கன்னா இடது புறத்திலெ இருக்கு கடைசியில்” “ அன்னதானத்துக்கு தான் வந்தீங்களா ” ” இல்ல தெரிஞ்சிக்கலாம்னு. இங்க போன 100, 200 கெடா வெட்டுவாங்க.நீங்க வேணும் சாப்பிடலாம் யார் வேணாலும் சாப்பிடலாம்ன்னு சொன்னாங்க . அதுதா “ “ போய் பாருங்க “ அவனுக்கு செருப்பு ஒரு பெரிய தடையாக இருந்தது இதை எங்கே விட்டுவிட்டு செல்வது என்பது தெரியவில்லை. எல்லா இடங்களிலும் செருப்புகள் குவிந்திருந்தன எண்ணும்படி அவன் கண்களில்பட்டது. . இந்த செருப்புகளை எல்லாம் தாண்டி அவன் செருப்பை பாதுகாப்பது கஷ்டமான வேலை.699 ரூபாய்க்கு வாங்கியது. இடது புறம் சென்ற போது கோயிலின் இன்னொரு வாசல் வந்து விட்டது செருப்பை பாதுகாக்க வேண்டும் என்பதால் அவன் செருப்புடனே நடந்தான் எங்கு பார்த்தாலும் செருப்புகள் அவற்றுள் தன் செருப்பை மறுபடியும் தேடுவது சிரமமாகும் என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.அதனால் காலில் இருப்பதே பாதுகாப்பு என்று நினைத்தான். அறுக்கப்படுவதற்காக கட்டப்பட்ட கோழிகள் கரகரப்புச் சப்தத்துடன் விழிகள் வெறிக்க கால்களை உதறியபடி இருந்தன. கயிறுகள் கால்களை நகர முடியாமல் செய்தன. பல கம்பிக் கூட்டுக்குள்ளும் இருந்தன. எங்கு பார்த்தாலும் கழிவுகள் இருந்து கொண்டே இருந்தன.மாமிச கழிவுகளை மிதிக்காமல் செல்வது பெரிய சாசகம் என்பது போல் அவன் நடந்தான் கிணறுகளும் அதனடியில் சமையல் பாத்திரங்களும் தனித்தனியாக தென்பட்டன. தனியாக இல்லாதபடி மனிதக்கூட்டம் வேறு திசையை நோக்கிப் போய்க்கொண்டேயிருந்தது.. எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவன் அந்த எல்லையை ஜாக்கிரையாகக் கடந்து கொண்டிருந்தான் அப்போதுதான் அன்னதானம் மண்டபம் என்று தென்பட்டது சரியான இடத்துக்கு தான் வந்து விட்டோம் என்று நினைத்தான் அன்னதான மண்டபத்திற்கு முன்னால் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். பெரிய கூட்டம் இல்லை ஆகவே வரிசையில் நிற்பது பெரியதாய் சிரமமாக இருக்காது என்ன நினைத்தான்.. தூரமிருந்து பெண்களின் வீரிடல் இருந்து கொண்டேயிருந்தது. அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த ஒரு மணி என்பது இன்னும் சில நிமிடங்களில் வந்து விடும் அதற்குள் ஆசுவாசமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று அவன் நினைத்தான். மதியம் ஒரு மணி சீக்கிரம் வந்து விட்டது. டோக்கன் பெற்றிருந்த சில பேர் முன்பாக சென்றார்கள் அவன் முறை வந்தபோது அந்த அமர்வு முடிந்து விட்டது என்றார்கள் ” அவ்வளவுதானா ” “இல்ல இன்னொரு 50 டோக்கன் கொடுப்போம். இன்னும் அரை மணி நேரம் காத்திருக வேண்டும்” ஆனால் அதற்குள்ளாகவே இன்னொருவர் வந்து டோக்கன் கொடுத்து இங்கு எல்லாம் சாப்பிட வாங்க என்றார் ஒரு நல்ல அசைவ உணவுக்காக அவன் நின்று கொண்டிருந்தான் அப்போதுதான் முனீஸ்வரன் ஸ்தலத்திற்கு செல்லும் வரிசையை முழுமையாகப் பார்த்தான். பெண்கள் கைகளில் தட்டுகளும் பூஜை சாமான்களும் இருந்தன. ஏதாவது ஒரு கூச்சல் இருந்து கொண்டே இருந்தது அவையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கூச்சலாக இருந்தன. சாமி வந்துவிட்டது ஆடுகிறார்கள். இந்தக் கூச்சலை தவிர்த்து விட்டு அவன் தலை குனிந்து கொண்டாலும் அந்த கூச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது .அந்த கூச்சல் ஒருவருக்கான கூச்சல் அல்ல .பலருக்கான கூச்சல். ஒருவர் சாமி வந்து ஆடும் போது கூச்சலிடுவதும் அது வீழ்ந்து விட்டால், அல்லது முடிவுக்கு வந்து விட்டால் இன்னொரு வீரிடல் தொடங்குவதுமாக சாதாரணமாகியது இந்த வீரிடலில் இருந்து தப்பிப்பது இந்த அன்னதானத்தை தவிர்க்க செய்து விடும் என்று காதுகளில் பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் வேர்வை வழிய முனீஸ்வரன் ஸ்தலத்திற்குப் போகிற வரிசை ஒரு பக்கம் இருந்தது. இன்னொரு பக்கம் சின்ன வரிசை அன்னதான மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தது. அவன் தன் முன்னால் வந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான். அதில் முட்டை கோஸ் பொரியல் இருந்தது இன்னொருவர் கையில் இருந்த இளம் நெஞ்சுக் கத்திரிக்காய் அவனுக்கு பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. என்ன அசைவ சமையலாக இருக்கும் என்றால் இப்படி முட்டை கோஷ் கத்திரிக்காய் இங்கு எதற்கு வருகின்றன. இந்த சுற்று முடிந்து விட்டால் அசைவ உணவு என்று நினைத்தான். பிறகு சாதம் போடப்பட்டது சாம்பார் பருப்பு ஊற்றப்பட்டுள்ளது அப்போதும் அவன் அடுத்த ரவுண்டு அசைவ உணவாக தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினான்..கத்தறிக்குழம்பு. ரசம் வந்துவிட்டது பக்கத்தில் ஒருவர் மோர் வாங்கி விட்டார். இதற்கு பிறகும் நப்பாசை இருந்தது அசைவம் வரும் என்று. கடைசியில் கறி வருவலோ வேற ஏதாவது வரும் என்று இருந்தான் ஆனால் எதுவும் இல்லை. எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள் அவனுக்கு யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை நூறு டோக்கன் முடிந்து விட்டதால் அங்கிருந்த கும்பல் மெல்ல வடிய ஆரம்பித்தது கைகழுவும் போது என்ன அசைவ விருந்து எல்லாம் இல்லையா என்றான். பக்கமிருந்த நடுத்தர வயதுக்காரர் கைகளை துடைத்தபடி ”கோயில் அன்னதானம் இங்கே. எப்படி அசைவு விருந்து எல்லாம் வரும். வெளிய போனா போடுவாங்க “ என்றார். ஆஹா உண்மை முன்பே தெரிந்திருந்தால் கோயில் சுற்றி இருக்கும் இடங்களுக்குப் போயிருக்கலாம். அசைவ உணவு சாப்பிட்டிருக்கலாம் இப்போது கூட அவருடைய வயிறு மூன்றில் ஒரு பங்கு காலியாக தான் இருந்தது. சைவ உணவு என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டது. நல்லது என்று பட்டது.. வெளியில் போய் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்து காலியாக வைத்துக் கொண்டது கூட நல்லது. அடுத்த சுற்றாய் அசைவ உணவு எங்கே கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும் பல கல்யாண மண்டபங்கள் இருந்தன பல உணவுக் கூடங்கள் இருந்தன அவற்றையெல்லாம் கடந்து அவன் போனான் எல்லாவற்றிலும் குறிப்பிடப்பட்ட சில பேர் இருந்தார்கள் சில இடங்களில் அவனும் நின்று பார்த்தான். யாராவது கூப்பிடுவார்களா அல்லது உள்ளே போகலாமா என்று யோசித்தான். அப்படியெல்லாம் போனால் விட்டுவிடுவார்களா .கேவலமாகி விடும் என்று அவன் மெல்ல நடந்து கொண்டே இருந்தான். வாய்விட்டு கேட்கலாம் என்று நினைத்தான் ஆனால் வருகிறவர்கள் வணக்கத்தை பெற்றுக்கொண்டு சாப்பிடும் இடங்களுக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு தான். ஆனால் இதெல்லாம் ஒரு அழைப்பால் தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் இப்படி அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் யாரும் போய் சாப்பிடலாம் அசைவ உணவு கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவனைப்போலவே சிலர் பார்வையில் ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்கள். அவன் இப்படித்தான் போன மாதம் பெங்களூர் சாய்பாபா மருத்துவமனை சென்றிருந்தான். அவருடைய நண்பர் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அங்கு எல்லாமே இலவசமான சிகிச்சை என்று அவரை அழைத்துக்கொண்டு போயிருந்தான் அவருக்கு வயது 85 அவரை அழைத்துக்கொண்டு போவது, பேருந்து ஏறுவது, தொடர்வண்டியில் ஏறுவது இதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணிப்பது மட்டும் அப்போது சுவாரஸ்யமாக இருந்தது கிருஷ்ணராஜ சாகர் இணையத்தில் இறங்கி வீதிகளை கடந்து மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்று இருந்தான். அப்போது கூட வந்து இருந்த நண்பர் நடப்பதற்கு சிரமப்பட்டார். மூச்சிரைப்பு ஏற்பட்டது. ஆட்டோவிற்கு 400 ரூபாய்க்கு குறைவாக யாரும் கேட்கவில்லை. சாய்பாபா மருத்துவ மனைக்கு பத்து மணிக்கு சென்றான் ஆனால் அங்கே மருத்துவமனை உள்ளே விடவும் மறுத்தார்கள் அங்கிருந்த பலகையில் ஒரு எண் இருந்தது அந்த எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள். அந்த எண்ணில் உங்களுடைய வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கன்னடத்திலும் இந்தியிலும் திரும்பத் திரும்ப சொன்னார்கள். “ அட்மிஷன் எல்லாம் கிடைக்காதா” “ அதெல்லாம் கிடைக்காது . நாளாகும். தகவல் வரும் “ ” போனா உடனே அட்மிட் பண்ணிக்குவாங்க சொன்னாங்க” “ அந்த டோக்கன் முறை எல்லாம் போயிடுச்சு இப்போ போன்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கு தகவல் வரும் போங்க “ திரும்பத் திரும்ப இதே வார்த்தைகளைக் கேட்டான் ஆகவே அந்த அந்த எண்ணைக் குறித்துக்கொண்டு அந்த எண்ணில் பதிவு செய்தான். திரும்பத் திரும்ப பதிவு செய்யப்பட்ட குரல்கள் தான் கேட்டன நண்பர் நாம் காத்திருந்து இங்கே அறை போட்டுத் தங்கி என்ன பிரயோஜனம் ஊருக்கு போய் விட வேண்டும். பின்னர் . தகவல் தருவார்கள் என்று சொல்கிறார்களே என்று சொன்னார் அவர் மனதில் செலவாவது ஓடிக்கொண்டிருந்தது இந்த மருத்துவ செலவுக்காக அவர் பல நண்பர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கித் தான் வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பலாம் என்ற தீர்மானத்தை அவர் சொல்லிவிட்டார். சாய்பாபா மருத்துவமனைக்கு போனால் எல்லாம் இலவசம், சிகிச்சை இலவசம், உடனே எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.. பயனில்லாமல் போய் விட்ட்து.பல முறை பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. சாயிபாபா நண்பரைக் கைவிட்டார் . அப்படித்தான் இப்போது பாண்டி கோவில் வந்தால் எங்கு போனாலும் அசைவ உணவு கிடைக்கும் சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தததும் ஞாபகம் வந்தது . சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று அவனை கேட்ட ஓரிருவர் பசியுடன் இருந்தார்கள். அவர்களெல்லாம் எதிரில் தென்பட்ட திருமண மண்டபங்களை காட்டினார்கள். ஆகவே அவர்கள் அங்கு போய் கேட்பதும் ஏமாறுவதுமாய் பின்னர் நகர்ந்து போவதும் தெரிந்தது. . ஆனால் இது எல்லாம் தாண்டி அசைவம் சாப்பிடாமல் போய்விட முடியுமா என்பது மனதில் வந்தது ஏதாவது ஹோட்டலுக்கு புகுந்து தான் சாப்பிட்டாக வேண்டும். இந்த புரட்டாசி மாத ஆசையை தவிர்க்க முடியாது. ஆனால் பக்கத்தில் எங்கும் ஹோட்டல் என்பது தென்படவில்லை.. எல்லாம் கெடா வெட்டுச் சமாச்சாரங்கள். தூரத்தில் தெரிந்த பசுமையான மரங்கள் இந்த வெயில் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசம் படுத்தும் என்று நினைத்தான். என்ன மரம் என்று பார்க்க முடியாதபடி வெயிலில் கண்கள் கூசின. கொஞ்சம் நகர்ந்த போது பார் என்று இடப்பட்டிருந்த பெரிய போர்டு அவனின் கண்களில் பட்டு ஆசுவாசத்தை கொண்டு வந்தது. சரிதான் செலவு செய்து அசைவ உணவை சாப்பிட்டு புரட்டாசி மாதக் கனவை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று நகர்ந்தான் அப்போதுதான் அது அரசு மதுபான கடையல்ல தனியார் மதுபான கடை ஏதோ கிளப் என்று போட்டிருந்தது தெரிந்த்து. அவர் கைக்கு வந்த பீர் சில்லென்று இல்லாமல் சாதாரணமாக இருந்தது. ரொம்ப கூட்டம்..இந்த ஆறிப்போன பீரங்கி குடிப்பதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டுமா இன்னும் ஆறிப்போன கோழிக்கறி சாப்பிட தான் வந்திருக்கிறமா என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது. டெட் பீர், டெட் சிக்கன் .. அவன் எதிரில் வந்து உட்கார்ந்தவன் ஒரு தனி டம்ளரில் ஐஸ் கியூப்கள் வைத்திருந்தார். அவன் அதிலிருந்து இரண்டை எடுத்துக்கொண்டு பீர் பாட்டிலில் போட முயற்சி செய்தான் அது பாட்டிலுக்குள் செல்லாமல் அதன் முகப்பில் நின்றது. உள்ளங்கையால் குத்தி சிறு துகள்கள் ஆக்க ஆசைப்பட்டான். ஆனால் அவை அவள் கைகளுக்குள் அகப்படாமல் தப்பித்து வெளியே போய் விழுந்தன “ உங்களை எங்கையோ பாத்திருக்கேனே “ “சாப்புட இடம் தேடிக்கொண்டிருந்தேன் மனைவியுடன். ” நீங்களும் அலஞ்சீங்க “ “ இல்லெ இல்லெ , நான் ஒன்னும் அலையலே. வேடிக்கை பார்த்தேன். நீங்க சாப்பிட்டிங்களா “ “ இல்லையில்லை. அலஞ்சு பாத்தம். யாரும் வான்னு கூப்புடலே. அப்படி பொதுவா போட ஆள் இல்லே “ “ ஆமாம் . அப்ப நீங்களும் சாப்புடலே.. மனைவி “ “ அவங்களும் சாப்புடலே “ “இப்போ அவங்க எங்க” “ வெளியிலெ வெயிட் பண்றாங்க . இளனி குடிச்சாங்க . எண்பது ரூபா வாங்கிட்டான் “ “ அவங்களுக்கு இளனி. உங்களுக்கு பீர்” “ ஆமா” “ அப்புறம் சாப்பாட்டுக்கு எடம் தேடணும்” “ பக்கம் ஓட்டல் ஒண்ணும் காணம் “ “ பத்து நூறு கெடா வெட்டற எட்த்திலெ ஓட்டல் இருக்குமா “ ” சரி நான் தனியா போய் குடிக்கறன். டிஸ்டர்ப் ஆயிட்டன் “ “ அசைவம் கெடைக்காத்துனாலயா “ “ ஆமா. இங்க அசைவம் கெடைக்கும்.மனைவிக்கும் வாங்கிட்டு போகணும்” அப்போது அங்கு வந்த சர்வரிடம் கொஞ்சம் ஐஸ் குயூப் வேண்டும் என்றான் “ வேற என்ன வேணும் சிக்கன் மசாலா, , பிரைட் அயிட்டம் வேண்டாமா “ “ வேண்டாம் இது போதும் “ சின்ன சின்னதான ஐஸ் கூப்புகளை எடுத்து அவன் பாட்டில்கள் போட்டு பாதி தீர்ந்திருந்த பீர் பாட்டிலைக் குளுமையாக்கிக் கொண்டான் அப்படி குளிர்ந்த பீர்குடிப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சிக்கன் அளவும் அதிகமாக தான் இருந்தது எலும்பு அதிகமாகத் தான் தென்பட்டது. எப்படியோ ரொம்ப நாளைக்கு பிறகு கறி சாப்பிடுகிற ஆசை தீர்ந்தது என்றபடி அவன் சர்வரிடம் ஒரு சிகரெட் கேட்டான் “ என்ன சிகரெட் எவ்வளவு ரூபாய் சிகரெட் ” “ அதெல்லாம் தெரியாது எப்போவோ வாயில் வைக்கிறது உண்டு. ஏதாச்சும் “ “ சரி ” சிகரட்டை வாயில் வைத்து ஊதிய போது அது கொடுத்த வலுத்த இருமல் அவன் சாப்பிட்ட அசைவத்தை வெளியே கொண்டு வந்து விடும் போல் இருந்தது 0 subrabharathi@gmail.com
திருச்சூர்/ திரூர் : சென்றிருந்தேன் எழுத்தச்சனுக்கு அஞ்சலி செய்யும் விதமாக..நல்ல சூழல் ( இயற்கை மற்றும் இலக்கியச் சூழல் ) திரூர் துஞ்சன் பறம்பு என்பது கேரளாவில் உள்ள திரூரில் அமைந்துள்ள ஒரு முக்கிய இடமாகும். இது மலையாள மொழியின் தந்தை என்று கருதப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் அவர்களின் பிறப்பிடமாகும். இங்கு எழுத்தச்சனின் நினைவாக ஒரு நினைவிடம் உள்ளது. மேலும், துஞ்சன் பறம்பில் ஒரு வருடாந்திர இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது, மேலும் "வித்யாரம்பம்" போன்ற பல சடங்குகள் இங்கு நடைபெறுகின்றன. • வரலாற்று முக்கியத்துவம்: இது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் பிறப்பிடமாகும். • இடங்கள்: • எழுத்தச்சன் பயன்படுத்திய இரும்பு எழுத்தாணி. • அவர் சீடர்களுக்கு கற்பித்ததாகக் கூறப்படும் பழைய இஞ்சா மரத்தடி. • அரிதான நூலகங்களைக் கொண்ட ஒரு நினைவு மண்டபம். நிகழ்வுகள்: • டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் வாராந்திர இலக்கிய விழா. • "வித்யாரம்பம்" போன்ற குழந்தைகள் தொடர்பான கற்றல் விழாக்கள், குறிப்பாக விஜயதசமி அன்று. துஞ்சத்து எழுத்தச்சனின் பிறப்பிடமான திரூரில் உள்ள துஞ்சன் பறம்பு மைதானத்தில் துஞ்சன் நினைவு அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. மலையாள மொழியின் தந்தையாகக் கருதப்படும் துஞ்சாத்து எழுத்தச்சனின் பிறப்பிடமான திருரூரில் உள்ள துஞ்சன் பறம்பு மைதானத்தில் துஞ்சன் நினைவு அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. பறம்பு அல்லது சதி 1964 ஆம் ஆண்டு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு இப்போது ஒரு முழுமையான ஆராய்ச்சி மையமாக செயல்படுகிறது. நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சொத்து, அறக்கட்டளை அலுவலகம், ஆராய்ச்சி மையம், இலக்கிய அருங்காட்சியகம், கிராந்தபுரா (கையெழுத்துப் பிரதி நூலகம்), உட்புற ஆடிட்டோரியம் மற்றும் மாநாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் வெளிப்புற மேடை, சரஸ்வதி மண்டபம், குழந்தைகள் நூலகம், விருந்தினர் அறைகள், ஓய்வு அறைகள் மற்றும் திறந்தவெளிகளையும் கொண்டுள்ளது. மலையாள மொழியின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் இலக்கிய அருங்காட்சியகத்தில் உள்ளன. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் தொடர்புடைய பல்வேறு கருவிகள் மற்றும் கட்டுரைகளை இங்கே காணலாம். மலையாள மொழியின் வரலாறு பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தியது முதல் அரிதான, பழைய மலையாள புத்தகங்கள் வரை, நூலகத்தில் ஒரு பெரிய தொகுப்பு உள்ளது. இந்த கிராந்தபுரம், பனை ஓலைகளில் எழுதப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட தனித்துவமானது. எழுத்தச்சன் எழுதப் பயன்படுத்திய இரும்பு எழுத்தாணி மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அவர் தனது கவிதைகளை இயற்றிய பண்டைய காஞ்சிரா மரம் இன்னும் உள்ளது. இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையின் போது கற்றலின் தொடக்கத்தைக் குறிக்கும் வருடாந்திர வித்யாரம்பம் விழாவும், துஞ்சன் திருவிழாவும் இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 0 துஞ்சத் எழுத்துச்சன் மலையாளப் பல்கலைக்கழகம்: மொழி மற்றும் கலாச்சாரத்தின் மரபு துஞ்சத் எழுத்துச்சன் மலையாளப் பல்கலைக்கழகம், கேரள அரசால் 2012 நவம்பர் 1 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது, மேலும் துஞ்சத் எழுத்துச்சன் மலையாளப் பல்கலைக்கழகச் சட்டம் 2013 ஆல் முறைப்படுத்தப்பட்டது. இந்த முன்னோடி நிறுவனம் மலையாள மொழி மற்றும் கலாச்சாரத்தை சமகால சூழலில் வளப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தொடக்க துணைவேந்தராக மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான திரு. கே. ஜெயக்குமார், ஐஏஎஸ் இருந்தார்.,internet views 0 கேரளா திரைப்பட விழாவில் குறிப்பிடதக்கப் படங்கள் 1 பெமினிஸ்ட் பாத்திமா: கடலோர நகரமான பொன்னானியில் வசிக்கும் இல்லத்தரசி பாத்திமா, தனது மரபுவழி கணவர் அஷ்ரப்பின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வசிக்கிறார். அவரது மகன் அவர்களின் பழைய மெத்தையை நனைக்கும்போது, அதை மாற்ற பாத்திமா முயற்சிப்பது மோதலைத் தூண்டுகிறது. முதுகுவலி மற்றும் வளர்ந்து வரும் விரக்தி இருந்தபோதிலும், அஷ்ரப் ஒவ்வொரு திருப்பத்திலும் அவளைத் தடுக்கிறார். இறுதியில், பாத்திமா மெத்தை ஆறுதலை மட்டுமல்ல, அது தனது சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகும் என்பதை உணர்ந்தார். இறுதியாக அதை வாங்குவதன் மூலம், அவள் ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கிறாள் இயக்குனர் : பாசில் முஹம்மது *பெண்ணிய பாத்திமா* என்ற திரைப்படத்தின் மூலம் ஃபாசில் முகமது இயக்குநராக அறிமுகமாகிறார். இது வீட்டு வேலையாட்களின் வாழ்க்கையையும் அவர்களின் அன்றாட போராட்டங்களையும் ஆராய்கிறது. கடலோர நகரமான பொன்னானியைச் சேர்ந்த ஃபாசில், உள்ளூர் கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டு வருகிறார், இந்தக் கூறுகளை கதையில் புகுத்துகிறார். இந்தப் படம் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை ஆராய்வது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் துன்பங்களைத் தாங்குவதில் அவர்களின் மீள்தன்மை மற்றும் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இயக்குவதைத் தவிர, திரைப்படத் தயாரிப்பில் தனது பல்துறைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், ஃபாசில் திரைப்படத்திற்கான எழுத்தாளர் மற்றும் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். பல பிரபலமான படங்களுக்கு ஸ்பாட் எடிட்டராகவும், புகழ்பெற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றிய பல வருட அனுபவத்துடன், ஃபாசிலின் இயக்குனர் பதவிக்கான மாற்றம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. *பெண்ணிய பாத்திமா* என்பது அவரது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கலாச்சார நுண்ணறிவு இரண்டையும் பிரதிபலிக்கும் ஒரு சிந்தனையைத் தூண்டும் படைப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 2. sangla: maraaththi padam: கிணற்றின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள நீர் 'சங்கலா' (அடி நீர்) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மகாராஷ்டிராவின் மராத்வாடா போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், அனைத்து சிரமங்களையும் மீறி தனது பசுக்களுக்கு தீவனம் தயாரிக்கும் ஒரு வயதான சுயமரியாதை விவசாயியின் கஷ்டங்களைப் பற்றிய ஒரு எழுச்சியூட்டும் கதை. 0
வேலைகள் சிறுகதை : சுப்ரபாரதிமணியன் தேவனும் வாசுகியும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர்டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னான். “ வாசுகி இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவ “ ” வழக்கமா தான். ஏதாவது சுமூகமாகப் பேசி முடிச்ச கேஸ் அகப்ப்ட்டா திருப்ப்தியாக்க் கிளம்புவேன். நீங்க பிரிச்சுப் போட்டுடு கிளம்புவீங்களே ” “ ஆமா ஏதாவது படத்துக்கு போலாமா “ “ ஓட் டிடடியில் வருகிற படங்களை பார்த்தால் போதும் தியேட்டருக்கு போறதுக்கு செலவு. நம்ம சம்பாதிக்கிறதிலெ தியேட்டர் செலவு இன்னும் வரல அப்படித்தானே “ “ ஆமா “ டாக்ஸி ஒரு இடத்தில் நின்ற போது வாசுகி இறங்கி கொண்டாள். வாசுகினுடைய அலுவலகம் அந்த பக்கம் இருந்தது அந்த அலுவலகம் வாடகை இடம்தான் இன்னும் பத்து நிமிடம் பயணம் செய்து தேவன் அவனுடைய அலுவலகத்தை அடைவான். அதுவும் வாடகை கட்டடம் தான் இன்னைக்கு உபர் கிடைக்காமல் ரொம்ப சிரமம் தாமதம். சாலையில் வாகன நெரிசல் ரொம்ப சிரமமாக இருந்தது. “ இப்படி சிரமப்படுவதற்கு நாமளே ஒரு கார் வச்சுக்கலாம் “ “ ஆமா சம்பாதித்து ஒரு கார் வைக்கணும். இந்த வாடகை ஆபீஸ் விட்டு சொந்தமாக ஆபீஸ் வேணும்.. கவனிக்கணும்” “ ஆமா உங்க ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கும். என் ஆபிஸ் ஒரு பக்கம் இருக்கும். அது சரியா இருக்கும். ஒரே பில்டிங்கில் ஒரே ஆபீஸ்ல ரெண்டு பேரும் வேலை செய்ய முடியாதல்லவா “ இது வழக்கமான உரையாடலில் ஒன்றாக இருக்கும். சீக்கிரத்தில் உபர் டாக்ஸி தொடர்ந்து தன்னை காலியாகி கொண்டு மறைந்து கொண்டிருந்தது . 0 தேவன் விவாகரத்து சம்பந்தமாக ஆலோசனை சொல்லும் அலுவலக வைத்திருந்தான். விசேசமாக விவாகரத்துதான். விவாகரத்து செய்ய வேண்டும் என்று வருகிற தம்பதிகள் வழக்குகள் அவனிடத்தில் வரும் அவற்றை அவன் சரியாக பார்ப்பான். வாசுகி திருமணம் சம்மந்தமான மற்றும் பிரிந்து போனவர்கள் இணைப்பது சம்பந்தமாக ஆலோசனை சொல்வதற்காக என்று தன் வேலையை எடுத்துக் கொண்டாள். ஒரு பக்கம் தேவன் விவாகரத்து தருவதாக இருந்தால் இன்னொரு பக்கம் வாசுகி பிரிந்து இருக்கிற தம்பதிகளை சேர்க்க ஆலோசனை சொல்வதாக இருந்த்து. இப்படித்தான் அவர்களுடைய வேலைகளும் அமைந்திருந்தன. 0 உங்கள் பிரச்சனை எப்படி போய் கொண்டு இருக்கிறது என்று கேட்டாள் வாசுகி வந்திருந்த இருவரும் தேவகியின் அழுத்தமான முகப்பூச்சைப் பார்த்துக் கொண்டார்கள். அவள் அலுவலகம் வந்த் பின்னர் ஒரு முறை முகத்தைக் கழுவி பவுடர் போட்டுக்கொள்பவள். “ நான் கொஞ்சமாக மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் “ என்றான் அவன் “நான் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் “ என்றாள் அவள் “ அதைத்தான் முதலில் சொன்னேன் இருவரும் ஆங்கிலத்தில் பேசுவதை தவிருங்கள் என்று ‘ “ அதை ஆரம்பித்து விட்டோம் இப்போது அவள் மலையாளத்தில் பேசுகிறாள் நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன் நானும் தமிழில் பேசுகிறேன் அதை அவளும் கொஞ்சம் புரிந்து கொள்கிறாள் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து விட்டோம். நானும் கொஞ்சம் மலையாளத்தில் சில வார்த்தைகளை பேச ஆரம்பித்திருக்கிறேன் “ “ நானும் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்திருக்கிறேன்” என்றாள் அவள். இருவரும் ஒருனித்துச் சிரித்துக் கொண்டார்கள் புன்னகை சிரிப்பாக வந்துவிட்டது. இருவருக்கும் தேநீரை ஊற்றி கொடுத்தாள் “ வாசுகி இதே வகையில் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் தொடர்ந்து செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முதலில் மொழியில் இருந்து ஆரம்பிக்கலாம் “ என்றாள் ஆமாம் என்றாள் அவன் பிறகு நான் உன்னை காதலிக்கிறேன் என்று மனைவியைப் பார்த்து மலையாளத்தில் சொன்னான் அவளும் திரும்ப நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை அழகாகத் தமிழில் சொன்னாள் “ இரண்டு பேரும் மொழியை அழகாகத்தான் பயன்படுத்துகிறீர்கள் வாழ்க உங்கள் தாய்மொழி பெற்று வளர்க உங்களுடைய வேற்று மொழி பற்றும் கூட” என்றாள் வாசுகி 0 தேவன் முன்னாள் உட்கார்ந்து இருந்த அந்த பெண்ணை பார்த்தால் உங்கள் கணவரை இரண்டு மணிக்கு வரச் சொல்லி இருக்கிறேன் நீங்கள் சொல்லுகிற விஷயங்களை வைத்துக் கொண்டுதான் நாம் பேச வேண்டும் என்றான். பேச என்ன இருக்கிறது விவாகரத்து தான் முடித்துவிடலாம் என்றாள் அவள் ஆனாலும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே ” நீங்கள் விவாகரத்து வாங்கித் தந்தால் உங்களுக்கு சன்மானம் கிடைக்கும் கூலி கிடைக்கும் அதை விட்டு ஏன் இந்த சமரசம்” ” கொஞ்சம் பேசிப் பார்ப்பது பிரிப்பதை விட சேர்ப்பது கூட நல்ல தானே. “ அதற்கும் சில பேர் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் செல்லாமல் உங்களிடம் வந்து இருப்பதற்கு காரணம் நீங்கள் சீக்கிரம் விவகாரத்து வாங்கி தந்து விடுவீர்கள் என்று பரவலாக பேசப்படுவதால்.. இந்த விஷயத்தில் நீங்கள் வெற்றிகரமானவராக இருக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டு தான் வந்தேன்” “ சரிதான் என் வருமானத்தை நான் இழக்க விரும்பவில்லை உங்கள் விவாகரத்தில் நான் அக்கறை கொள்வேன் சீக்கிரம் வாங்கிக் கொள்வேன் என் கூலியை “ ” கணவர் வந்தால் இதையே சொல்ல வேண்டும் “ ” கண்டிப்பாக சொல்வேன் “ ” கணவருக்கு எப்போது நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள் “ ” இரண்டு மணிக்கு ” ” அந்த நேரத்தில் அந்த மனிதர் சாப்பிட்டு விட்டு தூங்கும் நேரம். தூங்கும் நேரத்தில் அவருடைய காதுகளில் நீங்கள் சொல்வதெல்லாம் பட வேண்டும்” ” காதுக்கு நிச்சயமாக படும். கேட்கும். கொஞ்சம் பொறுத்து இருங்கள் நீங்கள் எப்படி போகப் போகிறீர்கள் ” ” வழக்கமான என்னுடைய ஸ்கூட்டி வண்டியில் தான் “ ” நீங்கள் ஸ்கூட்டி விட மாட்டீர்கள். எப்போதும் துணை “ ” ஆமாம் அந்த ஸ்கூட்டியில் அவரை அழைத்துச் செல்லும் போதெல்லாம் பிரச்சனையாக இருக்கும் அவருக்கு ஸ்கூட்டி பிடிக்காது இதெல்லாம் ஒரு வண்டியா. இதெல்லாம் ஒரு பயணமா என்று கேட்பார். அப்படித்தான் அவர் வைத்திருக்கிற எல் எம் எல் வெஸ்பா. அதில் உட்கார எனக்கு பிடிக்காது அதை ஏதோ ஒரு மிருகத்தை கையாளுவது போல கையாள்வார். அதன் கனத்த என்ஜின் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு அவரை எப்போதும் விழ வைத்து விடும். அவர் விழுவதைப் பார்த்து நான் சிரிப்பேன். அதெல்லாம் அவருக்கு எரிச்சலா இருக்கும். இருவரும் பொதுவாக ஒரு வாகனத்தை வைத்துக் கொள்ளலாம். யோசனை எடுபட்டதில்லை” ” இருவரும் வேலை செய்வது வேறு வேறு இடங்களில் அல்லவா” ”ஆனாலும் பொதுவான வாகனம் என்பது நல்லது தான் என்றான் தேவன் 0 இப்படித்தான் இருவர் சார்ந்த வழக்குகளும் போய்க் கொண்டிருந்தன. 0 மாலையில் உபர் சீக்கிரம் கிடைத்துவிட்டது “ இன்று எப்படி இருந்தது “ என்றான் தேவன் “வழக்கம் போல் தான் கெஞ்சி கெஞ்சி சேர்க்க முயல்கிறேன் உங்களுக்கு வழக்கம் போல் தான் வெட்டு ஒன்று தொண்டு ரெண்டு என்றுதான் எல்லாரும் கேட்பார்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இப்படி விவாகரத்து வாங்கி தருவது, ஒட்டச் சொல்வது இதெல்லாம் பிடிக்கவில்லை இதெல்லாம் விட்டு ஓடிவிட வேண்டும் போல் இருக்கிறது. “ “ எனக்கும் தான் கெஞ்சி கெஞ்சி அவர்களை சேர்க்க வேண்டி இருக்கிறது என்ன பிழைப்பு. எதற்காக இப்படி மன்றாடுவது எதற்காக இப்படி பிச்சை எடுப்பது என்று இருக்கிறது.” “ நாம் பிச்சை எடுப்பதை தவிர்க்க கொஞ்சம் பணம் சம்பாதித்தால் போதும் பிச்சை எடுப்பது நிறுத்தி விடலாம் பொதுவான இன்னொரு வேலையை தேடிக் கொள்ளலாம் ” ‘அந்த வேலை என்னவாக இருக்கும்” “ திருமணம் என்று வைத்துக் கொள்ளலாமே அல்லது முதல் இரவு ஏற்பாடுகள் செய்யும் ஏஜென்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது திருமணம் ஏ டு இசட் “ “ நன்றாகத்தான் இருக்கிறது என்றாள் அவள் உபர் டாக்ஸி அவருடைய பேச்சில் கலந்து கொண்டு நிதானமாக ஓடிக்கொண்டே இருந்தது 0 விரைவில் வேலையை மாற்றிக்கொண்டு விடுவார்கள் என்பது போல் அவர்களின் பேச்சு இருந்தது. இப்படி பலமுறை, பல நாட்கள் பேசியிருக்கிறார்கள். அன்றைக்கும் பேசினார்கள். அதற்குள் வாடகை வீடு வந்தால் பேச்சு முற்றுப்புள்ளி பெற்று விடும். சொந்த வீடு, சொந்த கார் கனவோடு உபர் டாக்சியை விட்டு இறங்கிப் போவார்கள். அன்றும் அப்படித்தான் இறங்கினார்கள்.கனவுகளோடு வாடகை வீட்டுக்குள் நுழைந்தார்கள் Reply Forward Add reaction

சனி, 30 ஆகஸ்ட், 2025

சமூக மேம்பாட்டில் பெண்கள் : சுப்ரபாரதிமணியன் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் பொது நலத்திற்கு உகந்தபடி ஊக்கமும் ஆர்வமும் ஆக்கமும் கொண்டு மனிதர்கள் செயல்பட வேண்டும் மக்களின் தனித்தன்மையானவை தகர்ந்து விடாமல் தேவையான கட்டுப்பாட்டுடன் அவர்களுக்கு தேவையான சமூக வாழ்க்கையை தருவது நல்லிணக்கமாக இருக்கும். இத்தகைய வாழ்க்கை அறத்தின் பாடுபட்டது இவ் வாழ்க்கையில் தலையாய அறம் என்பதை அதன் செயல்பாடுகள் மூலமாக பல பெரியவர்கள் நிருபித்திருக்கிறார்கள் அப்படித்தான் பல பெண்மணிகள் சமூகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அவர்கள் இருவரைப்பற்றியது இக்கட்டுரை. இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு…இவ்வாண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடும் இரண்டு பெண்மணிகளை பற்றி இதில் காணலாம் ஒன்று கிருஷ்ணம்மாள் ஜெகநாதன என்ற சமூகப் போராளி இன்னொன்று ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்தாளர் 1. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உழைப்பவனுக்கு தான் சொந்த நிலம் அவசியம் வேண்டும் என்று பாடுபட்ட காந்தியை வாதி. அதிகாரங்களை எதிர்த்து போராடி விளிம்பு நிலை மக்களுக்கு இதெல்லாம் வாங்கித் தந்தார். தமிழகத்தில் பூமிதான இயக்கம் என்பதை பரவலாக்கி வினோபாவின் அறிவுரைப்ப்ப் போராடி பலருக்கு நிலங்களைப் பெற்றுத் தந்தார். கீழ்வெண்மணி மக்களுக்கு நிலங்களை சொந்தமாக்கி அவர்களுடைய மறுவாழ்வுக்கு உதவினார். இப்படித்தான் அவரை நாம் அறிமுகம் செய்யலாம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள் லாப்டி என்று அமைப்பின் மூலம் சொந்த நிலம் ஏழை விவசாயிகளுக்கு என்பதைக் கொள்கையாகக் கொண்டு பாடுபட்டார். நிலங்களைப் பெற்று பல ஏழை விவசாயிகளுக்கு கொடுத்தார். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதால் தாழ்த்தப்பட்ட பெண்களுடைய கல்விக்காக பாடுபட்டார். பெண் குழந்தைகள் நிறைந்த கிராமத்தில் படிக்க முடியாத சமூகத்திலிருந்து வந்து பட்டப் படிப்பு படித்தவர்., பலரை அதே போல் பட்டங்கள் வாங்க உதவி செய்தார்.அவரின் கிராமத்திலிருந்து முதலில் கல்லூரிக்கு சென்ற பெண்மணியான அவர் பலரை கல்லூரி வாசலைத் தொட வைத்தார். காந்தி வழியில் செயல்பட்டு அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் தொழில் என்பதை கைக்கொண்டார். வினோபாஜி பத்து வயதிலேயே சன்னியாசம் சென்றவர். காந்தியுடன் செயல்பட்டவர். அவருடம் சேர்ந்து பூமிதான இயக்கத்தை வலிமையாக்கினார். அவர் படிக்கும்போது பட்டுத் துணியை கையில் தொடக்கூடாது, நகைகளை தொடக்கூடாது என்று முடிவெடுத்தவர் வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் எளிய காந்திய வாழ்க்கையை மேற்கொண்டார் மக்களுக்காக பதினாறு வயது முதல் சிறை சென்ற அவருடைய கணவர் ஜெகந்நாதன் சுதந்திர நாட்டில்தான் திருமணம் செய்து வேன் என்று சொல்லி சுதந்திரம் பெற்ற பின்னால்தான் கிருஷ்ணம்மாளைத் திருமணத்தை செய்து கொண்டார். கூலி மக்களிடையே உள்ள பிரச்சனைகளை கண்டு நில உரிமைக்காரர்களை எதிர்த்து பல இயக்கங்களை நடத்தினார். அதில் முக்கியமானது பூமிதான இயக்கம். கீழ் வெண்மனியில் விவசாயிகளுக்கு எதிராகப் படுகொலை நடந்த போது அங்கு சென்று அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி நிலம் பெற வற்புறுத்திச் சொன்னார். நிலமற்றப் பெண்களுக்கு தினத்தை சொந்தமாக்குவது வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு அதை செய்தும் காட்டினார். எல்லோருக்கும் குடியிருக்க இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பகுதியில் வெற்றியடைந்திருக்கிறார் வீடுகளைபல்வேறு வகைகளில் இழந்தவர்களுக்கு குடிசை வீடுகளை கட்டி தர பல்வேறு திட்டங்களை எடுத்துக் கொண்டு நிறைவேற்றினார். இறால் பண்ணையால் கடற்கரை பகுதிகள் சீர்கெட்ட போது பல வழக்குகளை தொடர்ந்தார். போராட்டங்களை நடத்தினா.ர் அந்த போராட்டங்களின் விளைவாக கடற்கரையை ஒட்டி 500 மீட்டர் அளவில் எந்த இறால் பண்ணையும் அமைக்க்க் கூடாது என்று போராடியதால் அரசாங்கம் பல சட்டங்கள் போட்டு இறால் பண்ணையைக் கட்டுப்படுத்தின. 100 வயதை எட்டிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள் தொடர்ந்து தன்னுடைய சமூகப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் இன்றும் 2. ராஜம் கிருஷ்ணன் அவர்கள் . 1. 1925இல் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் முறையான பள்ளிக் கல்வி பெறாதவர் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர். தானாகவே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி கற்றுக் கொண்டவர். இந்த சமூகத்திற்கு தன் எழுத்து பயன்படும் என்று இடதுசாரி பார்வையோடு பெண்ணியப்பார்வையும் கலந்து இலக்கிய படைப்புகளை தமிழில் தந்தவர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள். வெவ்வேறு களங்களுக்கு சென்று கள ஆய்வுகளை செய்து தன்னுடைய படைப்புகளை சமூகத்திற்கு தந்து நல்ல சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டவர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் வளர்ந்தவர் என்றாலும் அவருடைய எண்ணங்கள் சாதாரண புராதான கட்டுப்பாடுகளுக்குள் இருக்கவில்லை. சுதந்திர ஜோதி என்ற நாவல் மூலம் அறிமுகமானார் அதன் பின்னால் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து கரிப்பு மணிகள் நாவலும் நீலகிரி இன சமூக வாழ்க்கையை குறிப்பிடும் குறிஞ்சித்தேன் நாவலும் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய நாவலும் என்று புதிய பார்வைகளை எழுதினார். சமூக விடுதலையைப் பற்றிய அக்கறை அவருடைய படைப்புகளில் இருந்தன. பெண்ணியச் சிந்தனைகளுக்கும் வடிகாலாக அவரின் படைப்புகளையெல்லாம் கொண்டு வந்தார். 90 வயதில் உடல் நலக் குறைவால் இறந்தார். உடலை மருத்துவமனைக்கு கொடுத்தார். அவருடைய சொத்துக்களை எல்லாம் சமூக வாழ்க்கைக்குச் செலவு செய்தார். அரசியல் சமூக அவலங்களை கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் இலக்கிய படைப்புகளில் தமிழ் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற கூறிய பார்வையை தந்தவை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றன. 'வேருக்கு நீர்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அகாதமி விருதைப் பெற்ற முதல் தமிழ்பெண் படைப்பாளர் இவர்தான். வளைக்கரம் சோவியத்லாந்து விருது பெற்றது நூற்றாண்டு கொண்டாடும் இந்த இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை சமூக மேம்பாட்டிற்காக பெண்களின் அக்கறையை குறிப்பிட்ட செயல்களாக இருந்தன.. இவர்களை பின்பற்றி தமிழ் இலக்கிய உலகம் தன் பார்வையை சமூகவயமான படைப்புகள் மீது கொண்டு செல்ல வேண்டும். சமூக மேம்பாட்டில் பெண்கள் பங்கின் உதாரணமாக விளங்கியவர்கள் இவர்கள் . இவர்களின் காலடிகள் தொடரப்பட வேண்டும் ---------------------- 0 SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199