சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

கைபேசி மூலம் திரைப்படங்கள் எடுக்க ஒரு நாள் முகாம் “ ” கைபேசி என்பது என்று மனிதனுக்குத் தேவையான முக்கியமான கருவி என்று ஆகிவிட்டது. படிக்கவும் பார்க்கவும் என்று இருப்பதை படைப்புகள் உருவாக்கவும் பயன்படுத்தலாம். அந்த வகையில் கைபேசி மூலம் இப்போது குறும்படங்களும் திரைப்படங்களும் கூட உருவாகின்றன... கைபேசியில் சிறு குறும்படங்களையும் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றையும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். உருவாக்குகிறார்கள் அவற்றின் உருவாக்கலின் மூலமாக சாதாரண மக்களும் இன்றைக்கு நம்மை வந்தடைந்திருக்கும் தொழில்நுட்பு வசதி வைத்துக் கொண்டு பெரிய சாதனைகளை படைப்பு ரீதியாக செய்ய முடியும். இதற்கு உதாரணம் கைபேசி மூலம் குறும்படங்களும் திரைப்படங்களும் தயாரிப்பது ஆகும். முழுமையான படைப்பு அனுபவத்திற்கு உகந்ததாக கைபேசி இன்றைக்கு இருக்கிறது “ என்று இயக்குனர் திரைப்பட இயக்குனர் அமுதன் அவர்கள் திருப்பூரில்திங்கள் அன்று நடைபெற்ற கைபேசி மூலம் திரைப்படங்கள் எடுக்கும் முகாமைத் துவக்கி வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார். திருப்பூர், கரூர், திருச்சி, கொடைக்கானல் பகுதியைச் சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். சேவ் இயக்குனர் அஅலோசியஸ், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் உட்பட பலர் முன்னிலை வகித்தார்கள். திருப்பூர் கனவு இலக்கிய அமைப்பு, மதுரை மறுபக்கம் திரைப்பட இயக்கம், சேவ் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. பங்கேற்றவர்கள் சிறுசிறு நிகழ்ச்சிகளைக் குறும்படங்களாக எடுத்து எடிட் செய்து முழுமையாக்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தகவல் : சுப்ரபாரதிமணியன் திருப்பூர் கனவு இலக்கிய அமைப்பு
The Mystic River (Mayaru)/ Subrabharathimanian 0 The Irualas are a tribal community living in Coimbatore district and some parts of Kerala. They are found in the Mudumalai forests in Coimbatore district. These poems are about them. Mayaru is a small stream passing through their settlements. The Mystic River (Mayaru)/ Subrabharathimanian - Tamil The songs of a tribe 1. Mayaru overflows Whenever Mayaru overflows There is joy The joy of seeing floods. 2. The kiluvai fence can be moved by anyone Crushed by anyone So gentle The line of my determination Can never be moved by any hero Does chastity depend on a mere line. ** Kiluvai – a wild bushy tree used for fencing 3. To prevent fire from spreading In the forest There is the fire line. We have drawn our own lines Around us To protect our dignity. 4. For eight children I am the mother I am Bommakka In number eight I am at the head In number eight inside the tail is my husband However lustfully your eyes feed on me Stand far away you supervisor 5. Among the wild animals Grazing in our forest is the mouse deer But what kind of deer you are? Your are only commodities Goods to be traded Liquor Greed are you. 6. I am sitting with a few gooseberries Guavas spread on an old tray in front of me That youth runs off teasing me Touching my head The king cobra will rise three feet to the thigh Any snake will sting the foot. I rise like a cobra and thrash my hands. You have escaped A snake does not take revenge Will not forget so easily 7. The Game Hut Princes and Englishmen Used to stay after hunting Stands majestically still. Nobody goes near it Nobody goes as it is feared ghosts haunt it Did they hunt only deer tiger other animals How many tribal women Like Bommakka Numerous We were born from the ancient tree of the tribe You boast You were all born From the body, from the shoulder, head and foot Then we should have been only from the tree It is our pride. 8. Water from Mayaru is for everything To bathe to wash clothes to drink Infected we suffer from cold fever cough Crocodile of Mayaru, come Grap our leg and drag us somewhere Elephants, come hurl us with your trunk Or kick us Enough is this life Fever never leaves us Disease never leaves us 9. Sadayandi Eezhu Kannimaru deities of our clan After worshipping our gods if we stand with folded hands Even the elephant will retreat Nobody knows the age of this vengi tree Whatever be the ailment Vengi leaf is our medicine The vengi tree is axed Our grandfather, great grandfather and his father are in rage To appease them To boil rice give us a piece of land, sami. *vengai tree – Indian kino tree. It has medicinal properties Sami- a term of respect used by the so called ‘low-caste’ people Cooking rice specially for an occasion in a designated place is a kind of ritual. - Subrabarathimanian Translated by Prof Vincent
திருப்பூர் புத்தகக் கண்காட்சி -2 சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் நிகழ்வு இவ்வாண்டு திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் நடைபெறுகிறது. சென்றாண்டு ஒரு லட்சம் விருதுத் தொகையைப் பகிர்ந்து கொண்ட ஆறேழு எழுத்தாளர்கள் செலவு தவிர 2 லட்சம் வாடகைத் திருமண மண்டபத்தில் இரவு விருந்துடனும்.. படைப்பிலக்கியவாதி மா அரங்கநாதனின் மகன் நீதிபதி அர. மகாதேவனின் சிறப்புரையும் சிறப்பம்சங்களாக அமைந்தன. திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகளுக்கான புத்தகங்கள் குறிப்பிடத்தக்கதாக சமீப ஆண்டுகளில் இல்லை என்று நான் சில மாதங்களுக்கு முன்னால் புலனத்தில் ( வாட்ஸ் அப் ) குறிப்பிட்ட ஒரு குறிப்புக்கு அவர்கள் பக்கம் இருந்து வந்த எதிர்வினை கசப்பாக இருந்தது. திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விழாக்களில் எழுத்தாளர்களின் கலந்துரையாடல்களில் நான் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறேன்.. பெரும்பான்மையாக திருப்பூர் எழுத்தாளர்கள் புறக்கணிக்கும் நிகழ்வாக அது இருந்திருக்கிறது.. ஆனால் நான் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் அவர்களின் கசப்பான எதிர்வினை காரணமாக இந்த ஆண்டு திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது விழாவில் இருந்து என்னை நான் தவிர்க்கும் விதமாக விலகி இருக்க விருப்பப்படுகிறேன்.. திருப்பூர் தமிழ் சங்கம் உலக அளவில் சிறந்த தமிழ் சேவைகள் செய்யும் சங்கம் என்று சென்றாண்டு 5 லட்சம் ரூபாய் தொகை உடன் தமிழக அரசு விருது கொடுத்தது. அப்போது என் இலக்கியப் பணிக்காக இரண்டு லட்சம் ரூபாய் தொகையுடன் விருது கொடுத்தார்கள். திருப்பூர் தமிழ்ச்சங்கம் தன் விருதின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் இந்த விருதை கடந்த ஆண்டுகளில் பெற்றிருக்கிற டெல்லி தமிழ்ச்சங்கம், பம்பாய் தமிழ் சங்கம் திருவனந்தபுரம் தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்கம் போன்ற அமைப்பின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு திருப்பூர் தமிழ் சங்கம் தன்னுடைய இலக்கிய முயற்சிகளை மேல் எடுத்துச் செல்ல வேண்டும்.அது தமிழக அரசின் விருதை பெருமைப்படுத்தும். திருப்பூர் புத்தக கண்காட்சியில் இந்த வாரம் ஞாயிறு பொதுமக்கள் நிறைய வந்து போயினர். புத்தகங்கள் வாங்கினர் பொதுவான புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள் அதிகம் விற்றன. இந்த வாரத்தில் இரண்டு மூன்று தினங்கள் இப்படி கூட்டம் வந்து போனால் போதும் பதிப்பாளர்களுக்கு ஆறுதலாக இருக்கும். திருப்பூர் பொதுமக்களே இப்படித் திரளாக வந்து கலந்து கொண்டு புத்தங்கள் வாங்கி பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆதரவு தாருங்கள். திருப்பூர் புத்தக கண்காட்சியில் தள்ளுமுள்ளு என்ற வகையில் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் பரபரப்பாக பேசியதால் இந்த கூட்டம் வந்தது என்று சில பேர் சொன்னார்கள் அப்படி தள்ளுமுள்ளு என்று பத்திரிகைகள் மறுபடியும் பேசி , எழுதி மறுபடியும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது திருப்பூர் பொதுமக்கள் தங்களுடைய நடவடிக்கைகளை புத்தக கண்காட்சியில் சார்ந்தும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிற நொய்யல் விழா, பொங்கல் சமயத்தில் நடத்தப்படுகிறது. புத்தக கண்காட்சியும் அரசின் உதவி பெற்று நடத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் எல்லாம் படைப்பிலக்கியவாதிகளுக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற பெரிய கேள்வி இருக்கிறது. படிப்பு என்பது இவர்கள் பேசும் பேச்சில் இருக்கிறது .படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் சார்ந்த அக்கறை செயல்களில் இல்லை என்று தான் தோன்றுமளவு இதன் முக்கியஸ்தர்களுக்கு மனத்தடை இருப்பதை அவர்கள் விலக்கிக் கொள்வது. ஆரோக்யமானதாக இருக்கும். இப்படி மக்களின் வரிப்பணம், அரசின் நிதி உதவியில் நடத்தப்படும் விழாக்களில் படைப்பிலக்கிய வாதிகளுக்கும் பங்கு இருப்பதை பிற ஊர் விழாக்கள் சொல்கின்றன. . திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டில் ஒருமுறை இலக்கிய விருதுகளோடு நிறுத்திக் கொள்கிறது. முன்பெல்லாம் புதிய வணிகத் திரைப்படத்திற்கு டிக்கெட் கொடுத்து உறுப்பினர்களை சந்திக்கும் வேலையைக் கைவிட்டது ஆறுதலான விஷயம்.. திருப்பூர் தமிழ்ச்சங்கம் எப்பவாவது பவா செல்லத்துரை போன்ற பிரபல பேச்சாளர்களுக்கு மேடை அமைத்து தருவதோடு தன்னுடைய இலக்கியப் பணி முடிந்து விட்டதாக நினைக்கிறது திருப்பூர் நூலகங்களில் நடத்தப்படும் விழாக்களில் இவ்வகை படைப்பிலக்கியவாதிகளுக்கு புறக்கணிப்பு இருக்கிறது அங்கே பொன்மொழிகள் தொகுத்து கவிதைள் என்று போடுபவர்களுக்கும் கொஞ்சம் பணம் தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தேநீர் செலவு ஏற்றுக் கொள்பவர்களுக்கும் இலக்கியவாதி என்ற பட்டம் தரப்படுகிறது. அந்த நூலக வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தகுதிகளாக ஆசிரியராக இருக்க வேண்டும், பணக்காரராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இன்னும் முன்னணியில்.. திருப்பூரில் திருக்குறள் மற்றும் பழைய இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருகிறது இவற்றில் தேநீர் செலவு செய்யும் பணக்காரர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்கு இலக்கியவாதிகள் என்ற கீரிடம் தொடர்ந்து தரப்படுகிறது. இதனால் நூலக இயக்கங்களும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும ஆறுதல் பெற்றுக் கொள்கிறார்கள். இதே போதும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பல வசதியானப் புரவலர்கள் நிதி உதவியால் நடத்தும் இலக்கிய கூட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக சன்மானம் வாங்காத பெரியவர்கள் இலக்கியம் பேசி நிறைய சன்மானம் பெறுகிறார்கள். இவர்கள் இலக்கிய இதழ்களுக்கு சந்தா கட்ட கூட மனம் இல்லாதவர்கள். பெரிய இலக்கியம் கூட்டம் வெளிச்சம் இவை ஊரோடு ஒத்துப் போகும் விஷயங்கள் என்று இந்த வள்ளல்கள் நினைக்கிறார்கள். சிந்து வெளி சார்ந்த அரங்குகள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கின்றன. மகிழ்ச்சி . அதே சமயம் சிறுபத்திரிக்கை சார்ந்த கலாச்சாரத்திற்கும் சமாதிகள் கட்டப்படுகின்றன. திருப்பூரில் சிறு பத்திரிகை விற்கிற இலக்கியப் பத்திரிக்கைகள் விற்கிற கடை என்பதே இல்லை. மகேஸ்வரி புத்தக நிலையம் இலக்கிய இதழுக்காக ஒரு சின்ன இடத்தை முன்பெல்லாம் தந்திருந்தது. இப்போது இலக்கிய இதழ்கள் பெரிய அளவில் விற்பனையாவது இல்லை என்று காரணத்தைக் காட்டி தயவு தாட்சணியம் இல்லாமல் அந்த இடத்தையும் பிரபல பேச்சாளர்களின் நூல்களுக்காக ஒதுக்கி விட்டது.. மகேஸ்வரி புத்தக நிலையம் ஒரு காலத்தில் மூன்று கடைகள் இருந்தன இப்போது ஒரு கடையாகச் சுருங்கி விட்டது நேஷனல் புக்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடைக்காரர்கள் நடத்தி வந்த புத்தகக் கடை மூடப்பட்டுவிட்டது. இலக்கிய பத்திரிக்கைகள் விற்று வந்த பெட்டிக்கடைகள் இப்போது கஞ்சா சாக்லேட் விக்கிற கடைகளாக மாறிவிட்டன இந்த சமயத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள் புறக்கணிப்பிற்கும், இலக்கிய சாதி, அரசியல் சாதி சார்ந்த தீண்டாமைக்கும் உள்ளார்கள். கட்சி சார்ந்த இலக்கிய வட்டங்களில் இருக்கும், தென்படும் எல்லை கோடுகளில் நெருப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது தூரம் இருந்துதான் அந்த நெருப்பை பார்க்க முடியும். டாப் லைட் நூலகம், வாசகர் சிந்தனை பேரவை போன்றவை நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வதில் என்னை போன்றவர்கள் ஆறுதல் அடைகிறார்கள். டாப்லைட் நூலகம் 250 பேரை அழைத்துக்கொண்டு இந்தாண்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், சென்றாண்டு கீழடிக்கும் நிறைய செலவு செய்து பலரை சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கும் வெகுஜன எழுத்தாளர்கள் நடவடிக்கைகளுக்குத்தான் முன்னுரிமை. திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் குறும்பட விருது, திருப்பூர் சக்தி விருது போன்றவற்றில் என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது. இந்த வாரம் ஆரம்பித்திருக்கும் தாய் தமிழ் இலக்கிய பேரவை, பாரதி தமிழ் சங்கங்கள் போன்றவை ஆறுதல் தருகின்றன தமிழாசிரியர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் தமிழ் மொழி சார்ந்தோ, இலக்கிய அக்கறை சார்ந்தோ அவர்கள் செயல்படுவதில்லை என்ற வசவு, சாபம் அவர்கள் மேல் இருந்து கொண்டே இருக்கிறது. அதை இப்போது ஆரம்பிக்கும் பாரதி தமிழ்ச்சங்கம் போன்ற தமிழாசிரியர்கள் உள்ள அமைப்புகள் இந்த வசவைத் தீர்க்க வேண்டும். . இந்த தமிழாசிரியர்களின் இலக்கிய பணி என்பது பட்டிமன்றம் சார்ந்த வேலைகளில் முடங்கி போய் விடுகிறது. “ கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இலக்கிய நடவடிக்கை என்றால் பட்டிமன்றம் தான்” என்று ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை சொன்னதை அவர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ஆசிரியர்களும் தொடர்ந்து சரியாகக் கடைபிடிக்கிறார்கள். தீவிர இலக்கியம் சார்ந்த இளைஞர்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகள் பெரிய அளவில் நடக்கின்றன அவர்களை அடையாளம் காட்ட மறுக்கிறார்கள் தங்களின் சிம்மாசனங்களை காப்பாற்றிக் கொள்ள பல எத்தனைகளைச் செய்கிறார்கள். தலை யூட்யூப்பர்களும், மாப்பிள்ளையாக இருந்தாலும் பிணமாக இருந்தாலும் தாங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற சிவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் சேகரிப்பின் ஒரு கட்டம் இது. அதில் அவர்கள் வெற்றி பெறட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இலக்கிய அண்ணன்களுக்கு லட்சக்கணக்கான ரூபாயை நிதியாகவும் உதவியாகவும் வழங்கிய கதைகள் உள்ளூரில் நடந்தன சமீப ஆண்டுகளாய்… மக்கள் பணம் அவை. தீவிர இலக்கியம் சார்ந்த படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் நடவடிக்கைகளுக்கு அந்த வகை நிதி உதவி எல்லாம் தடை செய்யப்பட்டது போல நடந்து கொள்கிறார்கள் . ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவாணி தரும் நகரம் தன்னுடைய இலக்கிய நடவடிக்கைகளால் இன்னும் பெருமைப்பட வேண்டும். .மேடைகளும் பெரு வெளிச்சமும் தேவைதான் அதைத் தாண்டி தீவிரமாக இலக்கிய நடவடிக்கைகள் நகரத்தின் சரியான அடையாளமாக கொள்ளப்பட சரியான இலக்கிய செயல்பாடுகள் தொடர வேண்டும். இதெல்லாம் எங்களுக்கு தொடர்பில்லாத சமாச்சாரங்கள் என்று ஒரு பக்கம் பலவகை வள்ளல்கள் நடந்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனாலும் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இந்த பதிவு சார்ந்த எதிர்வினைகள் மோசமாகத்தான் இருக்கும் அவை ஒரு வகையில் மிரட்டல்கள் கூட இருக்கலாம் அவற்றையும் தொடர்ந்து நண்பர்கள் பதிவு செய்யலாம். நானும் பதிவு செய்வேன். திருப்பூர் புத்தக கண்காட்சி இந்த முறை நம்பிக்கை அளிக்கும் என்ற ஒளிச்சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை கண்காட்சிக்கு வந்த பொதுமக்களின் கூட்டத்தால் தெரிகிறது இந்த வெளிச்சம் தீவிர படைப்பிலக்கியவாதிகள் சார்ந்த நடைமுறைக்கு கூட பலரால் கண்காணிக்கப் பட்டால் அது பெரிய ஆறுதல் தான். 0 திருப்பூர் புத்தகக் கண்காட்சி நாள் 1;; RPS 0 அமைச்சர்கள் அரசாங்க அலுவலர்கள் புடைசூழ சிறப்பாக ஆரம்பித்தது. கூட்டம் குறைவாக இருந்தது விற்பனையும் குறைவு முதல் அரங்கம் பின்னல் டிரஸ்ட் அரங்கம் திருப்பூர் புத்தக கண்காட்சியின் முக்கிய பங்குதாரர். அதில் அதன் நிர்வாகி சௌந்தரபாண்டியன் அவர்கள் காணப்படவில்லை அவர் உடல் நல குறைவு பற்றிய செய்திகள் கிடைத்தன. அவர் மீண்டு வர வேண்டும். சென்றாண்டைப் போலவே பின்னல் டிரஸ்ட் அரங்கத்தை இந்த ஆண்டும் தோழர் ஈரோடு இளங்கோ நிர்வகிக்கிறார். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அவருக்கு நெருக்கமானது.. திருப்பூர் படைப்பாளிகள் நூல்கள் கவி உழவன் அரங்கில் இருப்பது ஆறுதல் தந்தது டாப்லெட் நூலக இந்துமதி உட்பட திருப்பூர் படைப்பாளிகள் அங்குகுவிந்திருந்தனர். மகா ஆறுதல். திருப்பூர் படைப்பாளிகளின் நூல்களை வைக்க ஓர் அரங்கம் என்பது ஆறுதல் உயிர்மை அரங்கில் புத்தகங்கள் குறைவாக இருந்தன புத்தகங்கள் பண்டல்கள் வேறு இடத்திற்கு திசை மாறிப் போய்விட்டன வந்துவிடும் என்றார்கள் எழுத்தாளர் பாரதிநாதன் நூல்கள் பொன்னுலகம் பதிப்பகம் அரங்கில் கிடைக்கும். இந்த முறை திருப்பூர் குணா அரங்கம் அமைக்கவில்லை. பாரதிநாதன் இந்த முறை காதல் மற்றும் சேர்ந்து வாழ்தல் சார்ந்த அனுபவங்களை இரண்டு நாவல்களாக கொண்டு வந்திருக்கிறார். நல்ல முயற்சி. புரட்சி பாரதி பதிப்பகம் அந்த நூல்களை வெளியிட்டு இருக்கிறது.இரண்டும் வாங்கினேன் ரூ 300 இன்னொரு போராளி நடிகர் நாவலாசிரியர் சந்திரகுமாரின் ” முடக்க காலகதைகள் “ நாவல் நீண்ட கால தவணையிலிருந்து விடுபட்டு முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது அதற்கு நான் முன்னுரை எழுதி இருக்கிறேன் 550 ரூபாய் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் என்னுடைய நாவல் ” முகப்பறவையே எங்கே சென்றாய் “ .வந்திருந்த பிறகு பிரதிகள் உடனே தீர்ந்து விட்டன பிரதிகள் கேட்டிருக்கிறேன் வெப்பம் என்ற என் சிறிய சிறுவர் நாவல் குறைந்த விலையில் இருப்பதால் கணிசமான பிரதிகள் நேற்று விற்றன. கமலஹாசனின் தக்லைப் படத்தின் கலை இயக்குனர் குழு ஓவியர் ராம மூர்த்தி அவர்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட என் சிலுவை நாவலின் அட்டையை பார்த்து ரெம்பரெண்ட் ஓவியம் என்றார். எனக்குத் தெரியவில்லை புத்தகத்தில் உள்ளேயும் அது பற்றிய குறிப்பு இல்லை. மீண்டும் ராமமூர்த்தி கூகுளில் தேடி அந்த படம் ரெம்பரெண்ட் ஓவியம் தான் என்பதை உறுதி செய்தார். என்சிபிஎச் பதிப்பகம் சிலுவை நாவலின் மூன்றாவது பதிப்பை போடுகிற போது அந்த ஓவியம் ரெம்பரெண்ட் என்பதை குறிப்பிட வேண்டும் .அவருடைய சகோதரி மைதிலி ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார் அவர் அப்பா நிதர்சன கோவிந்தராஜன் ஒரு கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது விஷ்ணுபுரம் விருது பெற்ற திருப்பூர் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் வான்கோ புத்தக நிலையத்தில் இருக்கிறார். வான்கோ புத்தக நிலையத்தை ஆரம்பித்து இருப்பதாகவும் புத்த வெளியீடுகளில் அக்கறை கொண்டிருப்பதாகவும் சொன்னார் சமீபத்தில் அவர் திருமணம் முடித்து இருந்தார். அவருக்கு திருமண வாழ்த்துக்கள் வழக்கம்போல் என்சி பிஎச் மேலாளர்கள் ரங்கராஜ், குணசேகரன் ஆகியோர் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கிராமத்து நதி கவிதைத் தொகுப்பு என் சி பி எச் பதிப்பகம் ஒரு பதிப்பை கொண்டு வந்திருக்கிறது அழகாக. முன்பே பல பதிப்புகளை கவிதா பதிப்பகமும் பொள்ளாச்சி கோலம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கின்றன. இப்போது புதிய கோலத்தில் என்சிபிச் பதிப்பகம் சிற்பி அவர்களின் கவிதைகளை கொண்டு வந்திருக்கிறது. முதல் பார்வையில் மாத்தளை சோமு அவர்களின் சிறுகதைகள் முதல் பாகம் பெரிய அளவில் கண்ணில் தென்பட்டது அழகான பதிப்பாக அமைந்திருந்தது.. திராவிடக் கழகத்தின் தனி அரங்கை அமைச்சர் பெருமக்கள் அக்கறையுடன் கவனித்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார்கள் பாரதி புத்தகாலயம் நாகராஜன் சென்னையிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பார்த்திருந்தேன். சென்ற ஆண்டு 27 புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்காக கையெழுத்தானது . எதுவும் வெளிவரவில்லை என்றார். இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். திருப்பூர் மகேஷ்வரி புத்தக நிலையம் மகாதேவன் சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனை பற்றி எப்போதும் உற்சாகமாக செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்.இம்முறை சரியில்லை என்றார். பலரும் அப்படித்தான் சொன்னார்கள். காலச்சுவடு அய்யாசாமி சென்ற ஆண்டைப்போலவே நல்ல விற்பனை என்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் புத்தக கண்காட்சிக்கு நண்பர்கள் எல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழடி சார்ந்து ஒரு அரங்கை கலைஇலக்கியப் பெருமன்றம் செயலாளர் ஆனந்த் அவர்கள் நிர்மாணம் செய்து கொண்டிருந்தார் இன்னும் வேலை முடியவில்லை அது இந்த ஆண்டின் புத்தகக்கண்காட்சியின் சிறப்பம்சமாக இருக்கும். அதை மோகன் கார்த்திக் அவர்களின் கிட்ஸ் கிளலப் பள்ளி அமைக்கிறது என்பது முக்கியமான செய்தி. அவர் தான் திருப்பூர் தமிழ்ச்சங்க செயலாளர் கூட . பருமனானவர். பெரிதாய் ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு திருப்பூர் எழுத்தாளர்களிடம் உள்ளது. சிக்ஸ் சென்ஸ் பதிப்பகம் என் அசாம் பயணக் கதை நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. தீயும் மலரும் அதன் பிரதிகளை அங்கு போய் கேட்டபோது அப்படி ஒரு நூல் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு தேடி கொடுத்தார்கள் அந்த நூலின் தலைப்பு சட்டென எனக்கு மறந்துவிட்டது வயது சார்ந்த இந்த மறதி எல்லாவற்றிலும் தொற்றிக் கொள்கிறது.தீயும் மலரும் ரூ 220 கண்காட்சி ஒன்பதரை மணி வரைக்கும் நடக்கும் நேற்று கண்காட்சிக்கு வந்திருந்த ஒரு சமூகப் பணியாளர் தன்னிடம் இருந்த 3500 ரூபாயை இன்று ஒரு நாளில் குடித்து தீர்த்து விட்டதாகவும் மிச்சம் இருப்பது 160 ரூ என்று தெரிந்து கொண்டு அதில் நூற்று ஐம்பது ரூபாய்க்கு என்னுடைய ஒரு கை உணவில் நாவல் மற்றும் வெப்பம் சிறார் நாவல் ஆகியவற்றை வாங்கி சென்றார். அவருக்கு ஒயின் ரொம்ப பிடிக்குமாம் நேற்றும் அதைத்தான் விரும்பி எடுத்துக் கொண்டதாக சொன்னார். மதுவின் வாசம் கூட அந்த நேரத்தில் ரொம்ப பிடித்திருந்தது எழுத்தாளன், முதலாளி இருவரும் ஒரே நேரத்தில் வந்து விடுகிறார்கள். வரவேற்பாளர்கள் எழுத்தாளனுக்கு ஒரு கை ஆட்டி அசைத்து ஒரு வகை வணக்கம். முதலாளிக்கு இரு கை கூப்பி வணக்கம். நிதர்சன உலகம். இப்படி ஏக மரியாதைதான் எழுத்தாளனுக்கு. தொடரட்டும் கைகூப்பல்கள். ஜெயந்தனின் ஒரு கதையில் பணி நிறைவு பெற்று செல்லும் அதிகாரி, புதுப்பணியில் சேர வரும் அதிகாரி ஒரே நேரத்தில் .. யாருக்கு மரியாதை தருவது என்பதில் குழப்பம். சுவாரஸ்யமான கதை ஞாபகம் வந்தது. எழுத்தாளன், முதலாளி இருவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டால் மரியாதை முதலாளிக்குத்தான். ஸ்பான்சர்கள் வேறு குறைவாகவே வந்திருப்பதாக பி எஸ் என் எல் சுப்ரமணியன் சொன்னார். முதலாளிகள் சரியாக கவுரவம் செய்யப்பட வேண்டியவர்களே..
திருப்பூர் புத்தக கண்காட்சி 2025 சுப்ரபாரதிமணியன் வழக்கமாய் திருப்பூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை, , பொன்னுலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகிய அரங்கங்களில் உட்கார்ந்து நண்பர்களைச் சந்திப்பது பேசுவது என்று புத்தக கண்காட்சி காலத்தில், மாலை நேரத்தில் என் பொழுது போகும். இந்த முறை பொன்னுலகம் பதிப்பகம் அரங்கம் போடவில்லை உயிர்மை பதிப்பகம் ஆண்டுதோறும் என்னுடைய புத்தகங்களை கொண்டு வந்து விடும். இந்த முறை கொண்டு வரவில்லை சுற்றுசூழல் திரைக்கதைகள் என்ற நூல் உயிர்மை பதிப்பகத்திற்கு அனுப்பி வைவித்தேன். அவருக்கு மின்னஞ்சல் செய்தேன் கூப்பிட்டேன். பதில் இல்லை தமிழ் பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை மதிக்கும் விதம்தான் இது. இந்த முறை திருப்பூர் புத்தக கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அரங்கத்தில் இருந்து கொண்டு நண்பர்களைச் சந்திப்பதும் பேசுவதும் என்று என்னுடைய புத்தக கண்காட்சி தினங்கள் மாலையில் கழிந்தன. இந்த முறை புத்தக வெளியீடுகள் அரங்குகுகளில் அதிகம் காணப்படவில்லை.. அப்போது அதிகம் விற்பனையாகும் நூல்கள் பற்றியும் சில கணிப்புகள் வந்தன.. நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் போட்டி தேர்வுகள் என்று பல புத்தகங்கள் அவர்கள் பதிப்பது நிறைய விற்பனையாகிறது. அவற்றை வாங்குவதற்காக கல்லூரி மாணவர்களும் போட்டியாளர்களும் நிறைய வந்து போகிறார்கள் அடுத்து இறையன்பு அவர்களின் நூல்கள் அதிகம் விற்பனையானது. அப்துல்கலாம் நூல்கள் விற்பனையாவது குறைவாக இருக்கிறது இறையன்பு நூல்கள் அதிகம் விற்பனைக்கு ஒரு காரணம் பல தலைப்புகளில் பல நூல்கள் வந்திருப்பதால் என்ன நினைக்கிறேன். அவை சுவாரஸ்யமாக இருப்பதாக வெகுஜன வாசர்கள் படிக்கிறார்கள். வெகு ஜன வாசகனுக்கு ஏதாவது நாவல் தேவைப்படுகிற போது அவன் தெரியாத பெயராக இருந்தால் கூட அதனை தேர்வு செய்து கொள்கிறான் அப்படித்தான் என்சிபிஎச் புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிற பல நாவல்களை பலர் தேர்வு செய்து இருந்தார்கள் என்பது தெரிந்தது. பெண் எழுத்தாளருடைய படைப்புகளை பலர் விரும்பி வாசிக்கிறார்கள் பாமா போன்ற தீவிர எழுத்தாளருடைய படைப்புகளுக்கும் ஒரு இடமிருந்த்தைக் கண்டு கொண்டேன் என்னுடைய படைப்புகளில் சிலுவை நாவலை நான் தனிப்பட்ட முறையில் 147 பிரதிகள் முன்பு விற்று இருக்கிறேன். இந்த புத்தக கண்காட்சியில் சிலுவை நாவலின் பத்துக்கு மேற்பட்ட பிரதிகளை விற்கப்பட்டது என்பது ஆறுதல். சிலர் என்னிடம் கூடுதலாக சலுகை விலையில் கிடைக்கும் என்று சொல்லி என்னிடம் தனிப்பட்ட முறையிலும் வாங்கினர் என்னுடைய சுற்றுச்சூழல் நூல்கள் நிறைய என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இந்த முறையும் வெப்பம் என்ற சிறுவர் நாவல் சுற்று சூழ்நிலை மையமாகக் கொண்டும் வேர்களை இழக்கும் பூமி என்ற சுற்றுச்சூழல் கட்டுரைகள் கொண்ட தொகுப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும் வேட்டையாடிகள் சிவப்பு பட்டியல்., சூழல் அறம் போன்ற நூல்கள் நிறைய விற்பனையாகின. என்னுடைய சாயத்திரை மறுபதிப்பு கணிசமாக விற்றது. வாங்குகிற வாசகர்கள் பலர் புதியவர்களாக இருந்தார்கள் உள்ளூர் எழுத்தாளர்கள் புத்தகங்களை வாங்குவதில் சுணக்கம் காட்டினார்கள் வாசிப்பதிலும் சுணக்கம் காட்டுகிற பழக்கம் உள்ளவர்கள் அவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.. அவர்கள் படைப்புப் பயிற்சிகளுக்கு, முயற்சிகளுக்கு மேலாக புத்தகங்கள் வாங்குவதும் புத்தகங்களை படிப்பது முக்கியமானது என்பதை நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன் பக்கத்தில் இருந்த பெரியார் சுயமரியாதை இயக்க அரங்கத்தில் பெண் ஏன் அடிமையானாள் 50 பிரதிகள் விற்றதை அவர்கள் சாதனையாக சொன்னார்கள். ஆனால் சில நாட்களில் அந்த பிரதிகள் தீர்ந்து விட்டன அச்சில் இல்லை பிரதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள. இன்னும் பக்கத்திலிருந்து தினமலர் அரங்கத்தில் திருப்பூர் கிருஷ்ணன், வரலொட்டி ரங்கசாமி போன்றோரின் புத்தகங்கள் அதிகம் விற்று இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் இரவு 9.30 மணி வரை காத்திராமல் சீக்கிரம் கடையை மூடினார்கள். திருப்பூர் போன்ற நகரங்களில் மக்கள் தினசரி அதிக நேரத்தை வேலைகளில் ஒதுக்குபவர்கள் என்பதால் படிக்க நேரம் இருக்காது ஆனால் ஆண்டு தோறும் இப்படி நடக்கிற கண்காட்சிகளை புத்தகங்களை வாங்குவது என்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.நல்லது திரைப்படத்துறையினர் சிபாரிசு செய்யும் நூல்கள் கவனம் பெற்றன. அரவிந்த சாமி சிபாரிசு செய்த பணம் சார் உளவியல் உதாரணம் என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் சிறுவர் நூல்கள் அதிகம் இருந்தன. அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில் சிறுவர் நூல்கள் அவை சிறு வெளியிடானாலும் உலக இலக்கியம் என்று சுருக்கு பட்ட பிரதிகள் 99 ரூபாய்க்கு கிடைத்தாலும் அவை அதிகமாக விற்பனையாகின. அதேபோல பாரதி புத்தகாலயம் வெளியிட்ட சிறுவர் நூல்கள் நிறைய தமிழில் தென்பட்டன அவை அதிகம் விற்பனையாகின்றன. அங்குநிறைய சிறுவர் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் தங்கள் படைப்புகளை பிரசிக்கிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டேன் பெரிய வரவாக அவை இருந்தன திருப்பூர் தமிழ்ச்சங்கம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது அவர்கள் எது சொன்னாலும் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகள் மிக முக்கியமான தமிழின் நவீன இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் அவர்கள் விருது தருகிற நூல்கள் குறிப்பிடத்தக்கதா இல்லை என்பதை இந்த ஆண்டும் கண்டு வருத்தமாக இருந்தது. வழக்கமாக மூன்று பேர் கொண்ட நடுவர் குழு இருக்கும் இந்த ஆண்டு அந்த நடுவர் குழு பற்றிய, நடுவர் குழு பற்றிய அறிவிப்பு அழைப்பிதழில் இல்லை. நடுவர் குழு என்று யாரும் அறிமுகப்படுத்தவில்லை சிறந்த நவீன இலக்கியவாதிகளுக்கு அறிமுகம் , அவர்களின் , நடுவர் குழு.,, விருதுகள் என்று வழங்கிய தமிழ் சங்கத்தின் விருது பட்டியல் சமீபமாய் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்னுடைய முந்திய விமர்சனத்தையே மீண்டும் வருத்தத்துடன் வைக்கிறேன். தமிழ் சங்கத்தினர் விரோதமான எடுத்துக் கொள்ளாமல் என்னுடைய சிறு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதை தமிழ்ச்சங்கத்தினுடைய தலைவர் செயலாளர் போன்றவர்கள் கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மோசமாக எதிர்வினை தருவது, விரோதமாக பார்ப்பது என்ற போக்கைத் தமிழ்ச்சங்க நண்பர்கள் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். வேறு பதிப்பக விற்பனை பற்றி அதிகம் எழுதவில்லை இங்கு. உள்ளூர் படைப்பாளிகள் நூல்களுக்காக தனியிடம் இல்லை. ஆனால் கவியுழவன் அரங்கத்தில் பலர் வைத்திருந்தார்கள். அதுவும் கவனம் பெறவில்லை என்பது வருத்தமே புத்தக கண்காட்சியில் சனி ஞாயிறுகளில் தென்பட்ட கூட்டமும் புத்தகங்கள் வாங்கியதும் ஆறுதலாக இருந்தது.. இந்த ஆண்டு கொஞ்சம் பயம் இருந்து கொண்டிருக்கிறது காரணம் சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது தான் ஆனால் திருப்பூர் ஏமாற்றவில்லை சிந்து வெளி அரங்கம், தமிழக அரசின் பல துறை அரங்கங்களால் பல பிரிவினரும் பங்கு பெற்றார்கள். மேடைப்பேச்சின் அரசியல் சார்ந்து தள்ளுமுள்ளு, சர்ச்சைகள் இருந்தன. கண்காட்சி பற்ரி நான் எழுதிய சில கருத்ஹ்டுக்களை பலர் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் எரிச்சல்பட்டார்கள். பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஓரளவு ஆறுதல். பெற்றார்கள் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்த உழைப்பு தொடங்க செயல்பாடுகள் சார்ந்து திருப்பூர் புத்தக கண்காட்சி வெற்றிக்கு உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
நேர்காணல் - எழுத்தாளர் – சுப்ரபாரதிமணியன் ( கண்டவர் செ. சுரேஷ் , சென்னை 8778970794 ) 1. ேீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி?அதற்கான அகச்சூழல் புைச்சூழல் எப்படி அறமந்தது? ோன் அடிப்பறையில் ஒரு நேசவாளக் குடும்பத்றத நசர்ந்தவன். ோன் எழுத்துத் துறைக்கு வந்தது ஒரு தற்நசயலான ஒன்றுதான். முதலில் பள்ளிப் பருவங்களில் ராணி, குமுதம் நபான்ை வார இதழ்கறள வாசிக்கத் நதாைங்கிநனன். ோன் நகாறவ பிஎஸ்ஜி கறலக் கல்லூாியில் கணிதவியல் படித்து நகாண்டிருந்த காலத்தில், மாணவர்களுக்காக கல்லூாி தமிழ்த்துறை புது நவள்ளம் என்ை ஒரு பத்திாிறகறய ேைத்தி வந்தது. இப்பத்திாிறகயில் இருந்துதான் எனக்கு எழுத்திற்கான அைிமுகம் கிறைத்தது. எங்கள் கல்லூாியில் திருக்குைள் அத்தியாயம் என்ை ஒரு அறமப்பு ேிறுவப்பட்ைது. அவற்ைில் ஒவ்நவாரு மாணவரும் திருக்குைளில் ஒவ்நவாரு அத்தியாயம் பற்ைிய தங்களது கருத்துக்கறள கூை நவண்டும். இந்த அறமப்பில் ஆண்டுநதாறும் பாிசு தருவார்கள். எனக்கும் ஒரு ஆண்டு பாிசு கிறைத்தது. பின்னர் நஜயகாந்தனின் எழுத்துக்கள் என்றன மிகவும் கவர்ந்தன. தினமும் ோம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வியறலயும் விளிம்பு ேிறல மக்கறளயும் பைம்பிடித்து காட்டும் அவரது பறைப்புகள் என்றன நமலும் வாசிக்கத் தூண்டியது. நஜயகாந்தன் அவர்கள் திருப்பூர் வரும் சமயங்களில் அவரது கூட்ைங்களில் பங்நகற்க எனக்கு வாய்ப்பு கிறைத்தது. அவரது கர்ஜறனயான நபச்சாற்ைல் எனக்குள் ஒரு மிகப்நபாிய தாக்கத்றத ஏற்படுத்தின. ோன் முதுேிறலக் கணிதவியல் படிக்கும் நபாது என் பள்ளி கால ேண்பர்கறள மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிறைத்தது. அவர்கநளல்லாம் உயர்ேிறலப் பள்ளியுைன் படிப்றப ேிறுத்திக் நகாண்டு பனியன் கம்நபனிக்கு பணிக்கு நசல்லத் நதாைங்கிவிட்ைார்கள். அப்நபாழுது அவர்கள் குைிஞ்சி என்ை ஒரு றகநயழுத்துப் பத்திாிறக ேைத்தி வந்தனர். அப்பத்திாிறகயில் கவிறத எழுத எனக்கு வாய்ப்பு கிறைத்தது. ோன் எழுத்துத் துறைக்கு வந்ததற்கான ஆரம்பமாகவும் அறமந்தது. 2. புத்துமண் ோவல் உருவான பின்னணி என்ன? ோன் திருப்பூறரச் நசர்ந்தவன் என்பதால் திருப்பூாில் ேைக்கும் சுற்றுச்சூழல் அவலங்கறள கவனிக்க நதாைங்கிநனன். ேதி மாசுபாடு, ேிலத்தடி ேீர் மாசுபாடு, மண் மாசுபாடு நபான்ைறவகள் திருப்பூாில் ேிகழ்ந்த வண்ணம் இருந்தன. அங்கு ேிறைய தன்னார்வ குழுக்கள் இச்சுற்றுச்சூழல் சீர்நகடு குைித்து பலவிதமான விமர்சனங்கறள முன் றவத்தார்கள். இருப்பினும் நபரு ேிறுவனங்களின் கார்ப்பநரட் முதலாளிகளிைம் அவர்களுறைய விமர்சனங்கள் எடுபைவில்றல. பின்னர் ோனும் சில தன்னார்வ நதாண்டு அறமப்புகளுைன் நசர்ந்து பயணிக்க நதாைங்கிநனன். நபரணி, கருத்தரங்குகள் ேைத்துவது, சில எழுத்தாளர்கறள அறழத்து கூட்ைங்கள் ேிகழ்த்துவது நபான்ை பணிகறள நசய்து வந்நதன். பின்னர் ஒரு எட்டு ஆண்டுகள் இறைநவளி எடுத்து றைதராபாத்தில் உள்ள நதாறலத் நதாைர்பு அலுவலகத்தில் பணி நசய்து வந்நதன். பின்னர் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்த பிைகு திருப்பூாில் நபரும் மாற்ைங்கறள ோன் கண்நைன். என் ேண்பர்கள் சிலர் பின்னலாறை ேிறுவன ஏற்றுமதியில் நகாடி கட்டி பைந்தார்கள். திருப்பூறர நபாறுத்தவறர அந்ேிய நசலவாணி அன்று 25 ஆயிரம் நகாடி வறர இருந்தது. இன்று அது 50,000 நகாடி எட்டி உள்ளது. இருப்பினும் 50,000 நகாடிக்கு பின்னால் நபருவாாியான சுற்றுச்சூழல் சார்ந்த நபரழிவுகறள எதிர் நகாள்ள நவண்டி இருந்தது. அவற்ைின் சாயக்கழிவுகள் மாசுபாடு, வீட்டு கழிவுகள் மாசுபாடு ஆகியறவ நோய்யல் ேதியிநல கலந்து ேதி மாசறைந்து விட்ைது. இது தவிர குழந்றத நதாழிலாளர்களும் அதிகளவில் பல ேிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ைனர். இவற்றைநயல்லாம் நசர்த்து எழுதத் தூண்டியதுதான் சாயத்திறர ோவல். முதன்முதலாக என்னுறைய சாயத்திறர ோவல் எழுதி நவளிவரும்நபாது பின்னலாறை ேிறுவன முதலாளிகளிைமிருந்து மிகப்நபாிய எதிர்ப்பு எனக்கு எழுந்தது. இவ்வாைாக சூழலியல் ஆர்வலர்கள் எதிர்நகாள்ளும் சிக்கல்கறள ஒரு ோவலாக பறைக்க நவண்டும் என்ை எண்ணம் நதான்ைியது. அவ்வறகயில் உருவானநத இந்த புத்துமண் ோவல். 3. பறைப்பிலக்கியம் வழியாக சுற்றுச்சூழல் குைித்து உறரயாடுதலின் அவசியம் என்ன? கரூாில் சுப்பிரமணியம் என்ை ஒரு சூழலியல் ஆர்வலர் இருந்தார். அவர் சுற்றுச்சூழலுக்கு எதிராக நசயல்படுவர்கறள பற்ைி தனது பத்திாிறககளில் எழுதி வந்தார். அவர் அதனால் பல சிக்கல்கறள எதிர்நகாள்ள நவண்டி இருந்தது. அவருறைய இைப்பிற்கு பின்னர், அவறரப் பற்ைிய குைிப்புகறள நசர்த்து எழுதப்பட்ைது தான் இந்த புத்து மண் ோவல். இது முழுக்க முழுக்க ஒரு உண்றம சம்பவம். ஒரு சுற்றுச்சூழறலக் காப்பாற்ை ேிறனக்கும் சூழலியல் ஆர்வலர், அவர் சந்திக்கும் இன்னல்கள் நபான்ைவற்றை இப்புதினத்தில் நதாகுத்து எடுத்துறரக்கப்பட்டுள்ளது. திருப்பூாில் சூழலியல் சார்ந்த பாதிப்புகள் ஆங்காங்நக ேிகழ்ந்த வண்ணம் இருந்தது. என்னுறைய கனவு பத்திாிறகயில் இது நதாைர்பான பல்நவறு கட்டுறரகறள ோன் எழுதியுள்நளன். கட்டுறர வடிவில் எழுதப்படும் பறைப்புகள் இலக்கிய மாணவர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் மட்டுநம படிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதுநபால் சுற்றுச்சூழல் நதாைர்பான சிக்கல்கறள ஒரு புதினமாக பறைத்தால் அறனவரும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பநத என்னுறைய கருத்து. அதனாநலநய என்னுறைய பறைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த பறைப்புகளாக சாயத்திறர, புத்துமண், நவப்பம் நபான்ைறவ புதினங்களாக நவளிவந்தன. றேஜீாியாவில் நகன் சநரா விவா என்ை ஒருவர் விவசாய ேிலங்களில் வாயுப் பழுப்புகள் புறதப்பதற்கு எதிராக நபரும் நபாராட்ைங்கறள எதிர்நகாண்ை சுற்றுச்சூழல் நபாராளி. இவற்ைிற்நகதிரான நபாராட்ைத்தில் அவர் நகால்லப்பட்ைார். இதுநபான்று பல சுற்றுச்சூழல் நபாராளிகள் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நபாராட்ைங்களில் தன் இன்னுயிர்கறள ேீக்கின்ைனர். இதுநபான்ை சுற்றுச்சூழல் நபாராளிகறள யாரும் சாிவர கண்டுநகாள்வதில்றல. ஆறகயால் என்னுறைய ோவல்கள் இதுநபான்ை கதாபாத்திரங்கறள றமயமாக றவத்து பறைக்கும் நபாது, அவற்றை படிக்கும் வாசகர்களுக்கு இந்த உண்றம சம்பவங்கள் குைித்த நசய்திகறள அைிய வாய்ப்புள்ளது என்று ோன் ேிறனக்கிநைன். ஒரு எழுத்தாளர் என்ை முறையில் இது நபான்ை நபாராளிகறள கறதமாந்தர்களாக சித்தாித்து என் பறைப்புகளில் நகாண்டு நசல்வறத ோன் நபருறமயாக கருதுகிநைன். 4. புத்துமண் ோவலில் ‘மண்’ பாதுகாப்பு குைித்து அதிகம் நபசுகிைீர்கள் ஏன்? கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆற்றுமணல் அதிகளவில் அள்ளப்படுகிைது. ஆறுகநள ேீறரப் பாதுகாத்து விவசாயம் நபான்ை நதறவகளுக்கு பயன்படுத்தப்படுகிைது. ஆற்றுமணல் அள்ளப்படுவதால் ஆறுகள் ேீறர உைிஞ்சி நதக்கும் தன்றமறய இழக்கிைது. புத்துமண் ோவலில் வீரண்ணன் எனும் கதாபாத்திரம் மணல் திருட்டுக்கு எதிராக நபாராடி, மணல் நகாள்றளக்காரர்களால் நகால்லப்படுவான். இந்த சம்பவமும், கதாபாத்திரமும் கரூாில் ேைந்த ஒரு உண்றம சம்பவம். இதுநபான்ை நபாராளிகள் மட்டுமல்லாது மணல் நகாள்றளறய தடுக்கும் பல நேர்றமயான அரசு அதிகாாிகளும் நகால்லப்படுகிைார்கள். ஆதலால் இவற்றை றமயமாக றவத்நத இப்புதினம் எழுதப்பட்ைது. 5. புத்துமண் ோவலில் உங்களுக்கு கிறைத்த மைக்கமுடியாத பின்னூட்ைம் என்ன? புத்துமண் ோவல் நவளிவந்த பின்னர் ேிறைய வாசகர்கள் என்றன நதாைர்பு நகாண்டு தங்கள் கருத்துக்கறள நதாிவித்தனர். அவற்ைில் குைிப்பாக சாகித்ய அகாைமியின் முன்னாள் தறலவர் ைாக்ைர்.ராஜமுத்து அவர்கள் இந்ோவல் குைித்து தன் கட்டுறரயில் குைிப்பிட்டு எழுதியுள்ளார். அது மட்டுமல்லாது பல கல்லூாிகள், பல்கறலக்கழகங்களில் இந்த புத்துமண் ோவல் பாைமாக றவத்திருப்பதநத இதன் சிைப்பு. அதுமட்டுமன்ைி ேிறையப் பிரதிகள் விற்பறனயானது. இறவ அறனத்றதயும் சிைந்த பின்னூட்ைமாகநவ ோன் கருதுகிநைன். 6. பறைப்பிற்கும் ேறைமுறைக்கும் இறையில் உள்ள நவறுபாடுகள் பற்ைிய உங்களது கருத்து என்ன? எந்த ஒரு பறைப்பும் உண்றம சம்பவங்கள் இல்லாமல் நவறும் புறனவுகறள றவத்து உருவாக்க முடியாது. அவற்ைில் எத்தறன சதவீதம் உண்றம இருக்கிைது? எத்தறன சதவீதம் புறனவு இருக்கிைது? என்பறத மட்டுநம பார்க்க நவண்டும். எதார்த்தம் மட்டுநம ஒரு மிகப்நபாிய கறல வடிவமாகாது. என்னுறைய ோவல்கள் அறனத்துநம 99 சதவீதம் உண்றமக் கறதறயத் தழுவி எழுதப்பட்ைது. இவ்வாறு பறைப்பிற்கும் ேறைமுறைக்கும் உள்ள இறைநவளி குறையும்நபாது அந்த பறைப்பினுறைய வலிறம அதிகமாக இருக்கும். Subrabharathimanian, Tiruppur 0 சுப்ர பாரதி மணியன் : 25/10/1955 . / 69 வெளியாகி உள்ள நூல்கள் : 115 நூல்கள் / 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் / 3 குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/, வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 ) பரிசுகள் : 0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு 0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு 1998 0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016 0 தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருது 2022 0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் 0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021 0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021 0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின் முகங்கள்” நாவலுக்காக 0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது 0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம் நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023 0 தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன் 1 0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன் 0 பொறுப்பு: 0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர் 2008 - 12 0 தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர் மொழிபெயர்ப்பு: 0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது 0 ஹிந்தியில் ஐந்து நாவல்களும் மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும். 0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன 0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன சுற்றுச்சூழல் நூல்கள் : நாவல்கள் : 0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண் 0 கட்டுரைத் தொகுப்புகள் : தண்ணீர் யுத்தம், சூழல் அறம், நீர்ப்பாலை, மேக வெடிப்பு, சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா, பூமிக்குத் தீ வைத்தோம், பசுமை அரசியல் உட்பட 12 கட்டுரைத் தொகுப்புகள் இதழியல் : 0 கனவு இலக்கியக் காலாண்டு இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 0 கனவு திரைப்பட இயக்கம்,, 0 தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு 30 ஆண்டுகளாய். திரைநாவல்கள் : 0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில் 70 திரைக்கதைகள் உள்ளன. திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார். குறும்படங்கள்: 0 சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம் ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை ) இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக வெளியாகி இருக்கிறன.. ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு பயணங்கள்: 0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய் சார்ஜா , இஸ்ரேல் பாலஸ்தீனம், ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து
சிறார் இலக்கியத் திருவிழா 2025 திருப்பூரில் கல்வியாளர் சசிகலா பசுபதி தலைமையில் நடைபெற்றது 0 0 கதை சொல்லிகளின் சிறப்புரைகளாக நான்சி கோமகன், சரிதா ஜோ சுப்ரபாரதிமணியன், அழகுபாண்டி அரசப்பன், ஆனந்த குமார் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 0 சிறார் ஓவியக் கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் சங்கஅலமேலு திறந்து வைத்தார் சிறார் நூல்கள் கண்காட்சியை மூத்த எழுத்தாளர் மதுராந்தகன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கிரிஜா சுப்ரமணியன் , பாக்யலட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறாரின் கதை சொல்லல் ( ஆங்கிலம்/தமிழ் ) நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பங்கு பெற்றனர். சிறார் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்வியாளர் பசுபதி, சமூகப் பணியாளர்கள் ஸ்டார் குமார், லீலா ஜகன் உள்ளிட்டோர் கல்ந்து கொண்டு சிறப்பித்தனர். 0 நன்றியுரை : மோகன்ராஜ் மனோகரன், தமிழாசிரியர் கனவு இலக்கிய அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. செய்தி : சுப்ரபாரதிமணியன், 9486101003 புகைப்படங்கள் : கதை சொல்லும் மாணவி / சிறப்புரை ஆற்ரிய நான்சி கோமகன்
திரைக்கதை நூல் என் நாவல்கள் சிறுகதைகள் என்று முப்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதைகள் உருவாக்கத்தில் ஈடுபட்டபோது என்னை பாதித்த வேறுகதைகளையும் திரைக்கதையாக்கினேன். மூன்று திரைக்கதை நூல்களை வெளியிட்டேன் அப்படி திரைக்கதையாக்கியதை ( சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வெளி வராதவற்றை ) நாவல் வடிவத்துள் கொண்டு செல்லலாம் என்று முயன்றதன் விளைவில் இந்த நாவல் பிறந்தது. அதனால் நிகழ் காலத்தில் எழுதப்பட்ட பாணியில் இந்த நாவலை எழுதியுள்ளேன். இந்தப் பாணியிலும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று முயல்கிறேன். பார்க்கலாம். எப்படி வருகிறது என்று. திரைப்பட காமிரா பாணியில் நிகழ் காலத்தில் எழுதப்படுவதை கொஞ்சம் முயன்று பார்த்திருக்கிறேன் இதில். திரைப்பட தாக்கங்களையும் தவிர்க்க முடியவில்லை. தலைப்பிலேயே இது தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். NCBH rs 60
நொய்யல் மீள சாத்தியங்கள் தெரிகின்றன நொய்யல் விழா கோவை திருப்பூர் பகுதியின் நொய்யல் நதிக்கரை, சமவெளியில் வாழக்கூடிய உங்களுக்கு ஒரு உறுத்தலானtது நொய்யல் விழா என்பது. அதில் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவு மாசு அதனால அதை ஒட்டி நம்மளோட கலை பண்பாட்டு நிகழ்வுக்கு பெயர் வைப்பது என்பது பொருத்தமாக இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஆனால் ஆச்சரியமான பல விஷயங்கள் இருக்குது அண்மையில் சூலூர் பெரிய குளத்துல நடந்த இடத்துல ஒரு ஆய்வுல பழமையான அழிஞ்சு போயிருப்போம்ன்னு நம்புன உயிரினங்கள், நன்னீர்ல வாழக்கூடிய அதிக வகை மீன் உயிரினங்கள் வந்து இப்போதும் இருக்குது அப்படின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அது வந்து இன்னும் இதன் தன்மை வந்து மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு முன்னாடி வரைக்கும் இருக்கு. இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நதி பாயும் இடத்துக்கு முன்பாக வரைக்கும் நொய்யால வந்து பழையபடி மாசற்ற திறமையோடு மாற்ற முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்குது மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதன் கிழக்குப் பகுதியில் வந்து அங்கிருந்து பாத்தீங்கன்னா, அது வந்து ஈரோடு மாவட்டத்துல நுழையக்கூடிய பகுதிகளில் ஒரு ரெண்டு ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய நீரில் காரத் தன்மையும் அமிலத்தன்மையும் அதில் கலந்து இருக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த உப்புகளையும் நீக்கும் பணி என்கிறது மிகப்பெரிய சவால். அந்த சவாலை வந்து முன்பைக்காட்டிலும் இப்போ வந்து இன்னும் நிறைய முயற்சிகள் ஆங்காங்கே நடந்துகிட்டு இருக்கிறதுனால அதை செய்து ஒரு எதிர்காலத்தில் வெற்றிகரமாக்க ம்முடியும். 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி மாசற்ற ஒரு நதி, கடந்த 16 ஆண்டுகளாக ஓரளவு மாசு குறைந்திருக்கிறது அதை தீர்ப்பு வந்து 16 ஆண்டுகள் ஆகுது கிட்டத்தட்ட இன்னொரு பத்து வருடங்களில் வந்து முழுமையான மாற்றத்தை வந்து அடைய முடியும் என்பது ஒரு நம்பிக்கை.. பெரிய நம்பிக்கை இது . இந்த நொய்யல் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்கம் சார்ந்த விஷயங்களை வந்து உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சுற்றுசூழல் போராளி நண்பர் ஒருவருடனான உரையாடலில்…
சிறுகதை: முடிவு : சுப்ரபாரதிமணியன் “ மதிய உணவுக்கு வாருங்கள் “ சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் புது சிம்மும், புது எண்ணும் பெற்று தொடர்பில் இருப்பாள். அதனால் இம்முறை வந்த புது எண்ணில் இருந்த சந்திரமதி என்ற பெயர்தான் உறுதிப்படுத்தியிருந்தது அவள் ஊருக்கு வந்திருப்பதை. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து அழைத்தான். “ நல்லா இருக்கீங்களா. இப்பிடி கேட்க சில சங்கடங்கள் வந்திருச்சு .. வாங்க வீட்டுக்கு.. பேசலாம் ’‘ சந்திரமதியின் முகத்தில் தெரிந்த பதற்றம் உடம்பு முழுக்கப் பரவியது போல சந்திரமதியின் முகம் வியர்த்து சோர்ந்திருந்த தோற்றம் சொல்லியது. சேலையை இடுப்பிலும் மார்பிலும் ஒரு சேர சரிசெய்து கொண்டாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைக்க்க் கைக்குட்டையை தேட நேரமற்றது போல் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டாள். சந்திரசேகரன் எதிரிலிருந்த நாற்காலியைக்காட்டினான்.அதன் இயல்பான நிறத்தை இழந்து வெளிறியிருந்தது நாற்காலி. “ மொதல்லே உக்காருங்க “ “ துபாய் பிளைட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. அதெக் கான்சல் பண்ணிட்டு உடனே போறதுக்குன்னு வேற புக் பண்ண நெறைய செலவாகும். அதுவரைக்கும் எங்க தங்கறதுன்னு தெரியலே “ சந்திரமதிக்கு சந்திரசேகரின் வீட்டு நிலமை நன்கு தெரியும். மூன்று அறைகளில் பத்துக்குப்பத்து சமையலறை. மீதி உள்ள இரண்டு அறைகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் அறையில் அவன் அம்மா மூலையில் உட்கார்ந்திருப்பார். காலில் சின்னதாய் அடிபட்ட பின் மூலையில் இருந்த அவரின் கட்டில் வெளியில் சென்று கிடக்க அவர் தரையில்தான் உட்கார்ந்திருக்கிறார். இன்னொரு அறை படுக்கையறை என்று. இரண்டும் பதினாறுக்குப் பத்து என்று அளவு. தொலைக்காட்சி உள்ள அறையில் மகன் சிவனும்,மகள் பிரியாவும் படுத்துக் கொள்வர்.. முன்பெல்லாம் “ பாட்டி தடவற எண்ணெய் வாசம் சகிக்க முடியலே. அவங்க இருமல் வேற பெரிய தொல்லை ” என்று அவர்கள் இருவரும் உள் அறைக்கே சென்று விட்டார்கள். சந்திரசேகரும் கிருஷ்ணகுமாரியும் தொலைக்காட்சி அறைக்கு வர வேண்டியதாகி விட்டது. தூக்கம் வரும் வரை தொலைக்காட்சி பார்ப்பான் சந்திரசேகர். அதனால் தாமதமாகவே எழுவான் .சந்திரமதிக்கு தூரத்து உறவினன். “ அதுவரைக்கும் எங்க வீட்லே இருக்கமுடியுமுன்னு தோணலே “ அவள் கையில் வைத்திருந்த சூட்கேசைத் திறந்து எதையோ பார்ப்பதும் மூடுவதும் என் பரபரவென்று அவளின் கைகள் இயங்கின. எதையோ தேடுவது போல் இருந்தது அவள் கைகள். பரபரவென்று கண்களும் சூட்கேசை விட்டு வெளியே தாவி ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிக்கும் அவள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிக்குமிடையில் அலைக்கழிந்தது..இந்தத் தேடலை அறைமுழுவதற்குமாக நீட்டிக்க வேண்டும் என்ற ஆசையில் அவள் பரபரத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. “ டென்சன் ஆகாதீங்க . கொஞ்சம் நிதானமா உட்காருங்க “ “ என்னமோ பரபரப்பா இருக்கு. அந்நியமான எடத்திலே இருக்கற மாதிரி பரபரப்பு ” “ இதை புது எடமா நெனைக்காதீங்க . அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ரிலேக்ஸ் “ “ இதத்தா எல்லாரும் சொல்றாங்க . எப்பிடி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். இன்னொரு பொண்ணெ என் இடத்திலே வெச்சுப் பாக்கறதிலே ஒவ்வொரு நொடியும் இம்சைதா. தற்கொலைதா பண்ணிக்கணும் “ “ விபரீதாமெல்லா நெனக்காதீங்க “ “ எல்லாம் விபரீதமாத்தா நடந்திட்டிருக்கு.” “ எப்படி வேண்ணா சொல்லிக்கலாம் “ “ இதெல்லா ஏன்னு உங்களாலே ஒரு வார்த்தை அவர் கிட்ட நீங்க கேக்க முடியுமா .. இல்லே.. இல்லே அவன் கிட்ட ,..” “ எப்பிடி கேக்க .. என்ன அதிகாரம் எனக்கிருக்கு...சாதாரண கடன் பிரசினையிலெ என்னன்னு பக்கத்திலெ இருக்கறவன் கிட்ட கூட கேக்க முடியாத நெலமை. இதிலெ இதுவெல்லா பெரிசுதா ..” “ தலெ விதின்னு சொல்றாங்களே இதுதானா..” சட்டெனத் தூறலாய் இருந்த மழை வலுக்க ஆரம்பித்தது. எதனாலோ தாக்கப்பட்டது போல் விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தாள் . மழைச்சப்தம் அறைக்குள்ளும் ஊடுருவியிருந்தது. “ மழை பலமா பெய்யுதா. வெளியே போக முடியுமா ... ஏதோ மாட்டிகிட்டன்னு தெரியுது” சட்டென பாளம்பாளமாக அருவியைப் போல தண்ணீர் விழுகிற சப்தம் அவளின் காதில் கேட்க ஆரம்பித்தது. உடம்பிலிருந்து கழுத்து தனியே தெறித்துப் போய் விழுகிற மாதியான பரபரப்புப் பார்வையுடன் பார்த்தாள். விர்ரென்று அந்த அறையினுள் நுழைந்த ராகேஷ் சாக்லெட் தட்டை நீட்டினான். இரண்டை அள்ளிக் கொண்டான் சந்திரசேகர். “ உனக்கு ஏதாச்சும் கிப்ட் குடுக்கணுமே “பாக்கெட்டிலிருந்து அய்ம்பது ரூபாயை உருவினான் சந்திரசேகர்.. “ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. எனக்கு இன்னிக்கு பெர்த் டே “. சந்திரமதி அவனின் செதில்செதிலான மேல்உடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் கவர்ச்சியும் பளபளப்பும் அவளின் கண்களைக் கூச்சச் செய்தன. “ எத்தனாவதுடா ‘ “ ஆறு... சிக்ஸ் “ “ போன வருஷமும் இதைத்தா சொல்லியிருப்பியா “ “ நான் என்ன நடிகையா. ஒரே வயசெச் சொல்றதுக்கு ..” “ அடடா.. அதெல்லா தெரிஞ்சிருக்கா உனக்கு “ “ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. பெர்த் டே சாக்லேட் “. சந்திரமதி காபி கலர் தாளிலிருந்த ஒற்றை சாக்லெட்டை எடுத்தாள். “ இதெல்லா சாப்புடற, ரசிக்கிற மன நிலை இல்லாமெப் போச்சு பாருங்க இப்போ. நான் அங்கிருந்து வாங்கிட்டு வந்த சாக்லெட் பிரிக்காமெ கெடக்குது அங்கெ “ “ சமாதானமா என்ன சொல்றதுன்னு தெரியலே “ “ எனக்கு பிளைட்டுக்குப் போறது வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியலே .. அங்க தங்கியிருக்கக் விருப்பமில்லை.தங்கியிருக்க முடியும்ன்னு தோணலே. மனசு பதறது ” “ வேறே என்ன பண்ணலாம் . யோசிக்கலாம்..” “ என் சொந்தக்காரங்க ரொம்பவும் அந்நியமாகி ரொம்ப வருஷமாச்சு. யார் கிட்டையும் உறவில்லை. அவங்களுக்கு நான் துபாய் போனதிலெ ஆரமபத்திலிருந்து இஷ்டமில்லெ.. இப்போ இந்த நிலமையிலெ அவங்ககிட்டையெல்லா திரும்பிப் போக இஷ்டமில்லே” “ அவங்களுக்கு எப்பிடி இஷ்டமில்லாமெப் போச்சு “ “ வளர்ந்திட்டிருக்கற கொழந்தைக. பக்கத்திலிருந்து பாக்க வேண்டிய பருவம். இப்போ எதுக்கு வுட்டுட்டுப் போகணும் வெளிநாட்டு வேலைக்குன்னு கேட்டாங்க. உள்ளூர்லே ஏதாச்சும் வேலைக்குப் போ. அதுலே கஷ்டமோ நஷ்டமோ சமாளிச்சுக்கன்னாங்க. அவன்தா கேட்கலே. துபாய் வேலைக்கு ஆள் புடுச்சு காசு குடுத்து எல்லாம் தயார் பண்ணிட்டான். போ.போ.ன்னு தொரத்துனான். அவனோட சின்ன வேலையிலெ அந்த வருமானத்திலெ குடும்பத்தெ ஓட்ட முடியாதுன்னு போனன். இப்போ சொந்தக்காரங்க அவங்க சொன்னதே சொல்லிக்காமிச்சு ஏசுவாங்க. எல்லாம் தலை கீழாகிப்போச்சு “ அவளின் பரபரப்பு பேச்சு தடைபட்டும் கோர்வையற்றும் இருப்பதில் தெரிந்தது.கைகள் சற்றே நடுங்குவது போல் பட்டது. “ எங்க தங்கி இருபது நாளைக்கடத்துவேங்க . ஒரு சின்ன விசயம் ஞாபகம் வருது. பக்கத்து வீதி டிராவல் ஏசன்சியில் அறுபடை வீடு அப்புறம் கொஞ்சம் வடநாடுன்னு ஒரு டூர் புரகிராம் இருக்கறதெ நோட்டீஸ் விளம்பரத்திலெ பாத்தன். ரெண்டு வாரத்துக்கு மேலெ ஆகும். அதிலெ போனா பொழுதும் போகும் .செரியாவும். மனசு அலைபாயாமெ, இவங்களையெல்லா பாத்துப் பாத்து மனம் புழுங்காமெ கொஞ்சம் நாளும் கழியும்..மனசுக்கும் கோவில்களுக்குப் போறதிலெ ஆறுதல் கெடைக்கும்.. ஊர் திரும்பறதெ அதெப்பாத்துட்டு முடிவு பண்னீக்கலாம் “ அவளே தீர்மானித்துக் கொண்டு சொன்னாள்.ஒருவகையில் பதற்றம் தணிந்து விட்ட்து போலிருந்தது. முதல் முறையாக குவைத்திற்குச் சென்ற மூன்று மாதத்தில் வளைகுடாப் போர் வந்து உயிர் பிழைக்கவென்று பலர் திரும்பி வந்தனர். அப்படி அவளும் திரும்பி இருக்கிறாள். ” அங்க போன செலவெல்லா இன்னம் கட்ட முடியாமெ . அதெல்லாம் மனசிலெ வெச்சு மறுபடியும் போய்த்தானே ஆகணும் “ . இரண்டாம் முறை அங்கு போக நிர்பந்தங்கள் இப்படித்தான் ஆரம்பித்தன. அது பற்றி ஒரு இந்தித் திரைப்படம் வந்திருப்பதாய் உறவினர் மோகன் கூடச் சொன்னான். சவரம் செய்யப்படாத மனிதர்களால் நிரம்பிய படம் போல் அவளுக்குத் தோன்றியது. அவ்வளவு இருட்டு அவர்களின் முகங்களில் இருட்டு அப்பிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. கழுத்தில் ஏறிவிட்ட பாம்பை உதறித்தள்ளுவது போல் ஒவ்வொருவரும் பிரயத்தனம்படுவது போலிருந்தது.அந்த நிலைமை இப்போது தனக்கு வந்து விட்ட்தைப் போலவே அவள் உணர்ந்தாள். “ ஊருக்கு அவங்கெல்லா திரும்பி வர்றதலே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. அந்த ஆம்பளெ பொம்பளியிலெ உன்னைத் தேடிப்பாத்தன் அக்கா ” “ அது சினிமாடா . அதுலெ நான் எப்பிடிடா வருவன்.” “ என்னமோ அதிலே நீ இருக்கறதா நெனச்சு பாத்துட்டே இருந்தேன். “” ” அதுதாண்டா சினிமா ..அந்த சிடி கெடச்சா குடு. மறுபடியும் பாக்கணும் “ மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை.அதை வீட்டில் போட்டுக்காட்டினால் தான் திரும்பியதில் இருந்த சிரமங்களை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தாள்.அந்த ஏர்லிப்ட் என்ற படக்குறுந்தகடு தேடியும் கிடைக்கவில்லை. “ நாங்க உன்னெ அனுப்பறதுக்கு என்ன க‌ஷ்டப்படறோம்ன்னு இன்னொரு சினிமா எடுக்கலாம்” : என்றார் கணவர். பணம் எல்லாக்கஷ்டங்களையும் சொல்லி விட்டுப் போனபோது அந்த துபாய் பயணம் அமைந்தது. அங்கு வேலை கொடுப்பவரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, கொஞ்சம் சமையல் வேலையில் உதவுவது என்பது அவளுக்கான வேலையாகச் சொன்னார்கள். சாப்பட்டிற்குப் பிரச்சினை இல்லை. துணி, தங்குமிடம் இலவசம். ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் விட்டு வர செலவுக்குத் தருவார்கள். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பையன் அவளுக்கு. மாமியார் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னபின்பு கிளம்பிப் போனாள். மூன்றாம் தடவையாக இப்போது ஊருக்கு வந்திருக்கிறாள். முதல் தரம் வந்தபோது குடும்பம் சந்தோஷத்தில் மிதப்பதும் அவள் அனுப்பும் பணம் குழந்தைகளின் படிப்பிற்கும் குடும்பப் பராமரிப்பிற்கும் சுலபமாக ஒத்துவருவது தெரிந்தது. போதும் இனி போக வேண்டாம் என்று ஒருபுறம் மனதில் ஆசை துளிர்த்தது. யாருக்காகவோ உழைப்பது. எல்லோரும் வேலைக்குப் போன பின்பு எப்போதும் ஏசி இருக்கும் அறையில் உடம்பு எலும்பு போல் கட்டையாகிற மாதிரி உட்கார்ந்திருப்பது .அரக்கப்பறக்க வேலை செய்வது இதெல்லாம் பிடிக்கவில்லை அவளுக்கு.ஓய்வு என்று அமையாமல் காலம் விரைந்து கொண்டிருந்த்து. ஈரக்கையை சேலைத்தலைப்பிலேயே துடைத்தபடியே வந்த ரூபா “ ரொம்பவும் பதட்டமா இருக்காதீங்க மதி.. எல்லாம் நடக்கறதெ நல்லதுக்குத்தா . நல்லதே நடக்குமுன்னு நெனையுங்க ‘ என்றாள்.அப்போதுதான் முகத்தை நன்கு கழுவிப் பளிச்சென்று ஆக்கியது போல் ரூபா இருந்தாள். மழையின் சப்தத்தை மீறி உள்ளே பைப்பிலிருந்து ஏதோ தண்ணீர் விழும் சப்தம் கேட்டதும் மீண்டும் ரூபா சமையலறைக்குச் சென்றாள். .” இனிதா படிப்புக்குன்னு நெறைய செலவெல்லா இருக்கு. மூணு பேர்த்தெ கரையேத்தணும் . ரெண்டு பொண்ணுக. எங்கம்மா இவங்களுக்கும் அம்மாவா இருந்துப் பாத்துப்பாங்க மதி ” . அங்கு அனுப்புகையில் கணவன் தீர்மானமாகவே முன்பு சொல்லியிருந்தான். குழந்தைகள் வளர்வதைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் அவள் அனுப்பும் பணத்தைச் சுட்டிக் காட்டி எல்லாம் நீ போட்ட சாதம்மமா என்று குழந்தைகள் சொல்லி சொல்லி அவளைக் குளிப்பாட்டினார்கள். மாமியாருக்கு முடியாத போது வந்து விட வேண்டியதுதான் என்ற தீர்மானத்தில் ஒரு சமயத்தில் இருந்தாள். குடும்பத்தில் வறுமை அகன்று விட்டதாகத் தோன்றியது அவளுக்குப் பெருமை தந்தது. குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிற வேதனை அவர்கள் நன்கு வளர்ந்து நிற்பதில் கரைந்தது.. மூன்று குழந்தைகள் பெற்றவளுக்கு உடம்பு எந்த விருப்பங்களையும் வைக்காதபடி காலத்தைத் தள்ளினாள். இந்த முறை வந்தபோது வீட்டில், அவளின் இடத்தில் வேறொரு பெண் இருப்பது தெரிந்தது. அதிர்ந்து போனாள். “ஆம்பளெ தனியா இருக்க முடியுமான்னு சமாதானமெல்லா சொல்ல மாட்டேன் , எல்லாம் கை மீறிப் போச்சு. வளர்ற பொண் குழந்தைகளுக்கு மத்தியில ஒருத்தியெக் கொண்டாந்து வெச்சிட்டு எனக்கு அவ வேணுங்கறான். இதுகளையெல்லா வுட்டுட்டு வீம்புக்கு நான் எங்க போயி நிக்கறது. நீ வந்தா இதுகளெ கையில் புடுச்சுகுடுத்துட்டு வெலகிக்கலாம்ன்னு உள்ளுக்குள்ளியே அழுதுட்டிருந்தேன் சந்திரா. என்னை மனச்சிடம்மா .. “ என்று அழுதாள் மாமியார். “ அப்பிடி நீ தனியா போறதுன்னா சொல்லு இவங்களியும் கூட்டிட்டு வர்றன். தனியா போயிர்லாம். அவன் புதுசா வந்தவளோட என்னமோ பண்னுட்டும். “ “ ரெண்டு பொண்ணுகளுக்குன்னு கொஞ்சம் நகைக கொண்டாந்தேன். கொஞ்சம் காசு இருக்கு. அதெல்லா எத்தனெ நாளைக்கு வரும்ன்னு தெரியாது. மூணும் படிக்கதுங்க. இப்பத்திக்கு அந்த யோசனையெல்லா தனியா போறதெல்லா எடுபடாது. தனியான்னும் போக முடியாது. .பாக்கலாம். திரும்பப் போயிதா யோசிக்கணும். காசு மிச்சம்பண்ணிக்கனும். இந்த ஆம்பளெ பண்ணுன மாதிரி நானும் நெனச்சிருந்தா, அங்க நடந்துட்டிருந்தா என்னாகும்” “ எனக்கும் புரியுதம்மா . நான் கெழட்டுப் பொம்பளை. நான் என்ன பண்ண முடியும் . எல்லாம் கை மீறிப் போச்சு. .கொஞ்சம் வார்த்தைக மீறுனா கூட இந்த மூணுகளோட நான் வீதியில் நிக்கணும். நான் நின்னு சவமாயிருவன். வயசு அப்பிடி. இந்த மூணும் என்ன பண்ணும்“ “ அந்த தைரியந்தா அந்த ஆம்பளைக்கு. போலீசுக்குப் போனா அவன் நிலைமை என்னாகும்ன்னு தெரியுமா “ “ எதுவா இருந்தாலும் வீதிக்கு வர்றவங்க நாங்க நாலு பேருந்தா. இப்போ புதுசா வந்திருக்கற அவ வேறே.. ‘ சின்னப்பெண் சந்திரமதியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெரிதாய் பிரச்சினை புரியவில்லை போலிருந்தது. “ நீ இருக்கற ஊர்லெல்லா ராக்கெட் இருக்கும்மா ..ராகெட்லே உட்காந்து பாக்கணும். அதுக்குன்ன்னு படிக்கணும் “ “ படிக்க வைக்கறண்டி.. பாத்துக்கலாம் “ அவள் வேலைசெய்யும் இடத்தில் பக்கத்து வீட்டு வேலைக்காரி இந்தோனிசியாப் பெண் நிர்ஷா ஞாபகம் வந்தாள். அவள் வரும் போது ஒரு ஆறு வயதுப் பையனை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கிறாள். வேறொருவருடன் சினேகிதமாகி அவனுடன் மறைமுகமாய் குடும்பம் நட்த்துகிறாள். அவ்வப்போது ஊருக்கும் போய் விட்டு வருகிறாள். ஏதாவது கேட்டாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போய் விடுவாள். வங்கதேசத்திலிருந்து வந்த சில வீட்டு வேலைசெய்யும் பெண்களும் அவளுக்குத் தெரிந்திருந்தார்கள். எல்லோருக்கும் அவள் ” மா “ தான். யார் ” மா “என்று சொல்லிக்கூப்பிட்டாலும் தன் இரண்டு பெண்கள் கூப்பிடுவது போல் நினைத்துக் கொண்டு கண் கலங்கிவிடுவாள் சந்திரமதி. சந்திரமதிக்கு வீட்டில் இருக்க வேண்டாம் என்று தோன்றி விட்டது..கணவன் பற்றி யாரிடமாவது போய் புகார் செய்யலாம் என்று தோன்றியது.காவல்துறைக்கு வேண்டாம். வடக்குத் தெருவில் பார்த்த பிளக்சில் கோமதியின் பெரியதலை தென்பட்டது. வருங்கால முதல்வரே வருக என்று போட்டிருந்தார்கள். சந்திரமதியோடு உயர்நிலைப்பள்ளியில் படித்தவள் அரசியலுக்குப் போனாள். சிரமங்கள் இருந்தன.வட்டச்செயலாளர், மாவட்டச்செயலாளர் என்று உயர்ந்து கொண்டே போனாள்.ஆனால் முதலமைச்சர் என்ற அடைமொழியுடன் பிளக்ஸ்தட்டியைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. முன்பெல்லாம் ஓரிருவர் முதலமைச்சரின் வாரிசு என்று சொல்லிக்கொள்வார்கள். நிரந்தரமுதல்வர் காலமானபின்பு பத்துப் பேர் அந்தமாதிரி சொல்லிக் கொள்வது தெரிந்தது. இரண்டு மாதங்களுக்குள் அந்தப்பட்டியல் நூறு பேரைத்தொட்டு விடும் போல் இருந்தது.இப்போது போய் அவள் முன் நின்றால் ஒன்றும் நடக்காது. அவளுக்குப் பரபரப்பு அரசியல் முக்கியம் ஆனால் வீட்டில் உட்கார்ந்திருந்தால் மனம் தாறுமாறாய் அலையும். கொலைவெறி வந்து விடும் என்று ஒருதரம் வாய் முணுமுணுத்துக் கொண்டபோது வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். சித்தப்பா பாலாமணி ஞாபகம் வந்தார்.தன்மகள் திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு பதிவுத்திருமணம் செய்து வைத்தார். நாலு பேரைக்கூட்டி அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பும் செய்தார். வீட்டில் அவள் இருக்கும் போது பலரின் பேச்சு அவரைத்தடுமாறவைத்தது. ” பொழங்கற சாதி கூட இல்லெ பாரு “ என்று பலரும் குத்திக் காட்டினார்கள்.ஒருநாள் நிறைமாத கர்ப்பிணியான அவள் மேல் மண்ணெண்யை ஊற்றிப் பற்ற வைத்து விட்டார்.. சிறைக்குப் போன போது தலையில் அடித்துக் கொண்டு தான் நடந்து கொண்டதைப்பற்றி ப்ற்றி சொல்லி அழ ஆரம்பித்தார். புத்தி கெட்டுப் போச்சு என்று சொல்லி அழுதார். அதுபோல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனதில் போட்டுப் புளங்கிக் கொண்டிருந்தால் ஏதாவது விபரீதத்திற்கு மனக்குரங்கு வழி காட்டி விடும். அதில் பலியாகப்போவது கணவனா, புதிதாய் வந்த பெண்ணா என்று பிரித்துக் பார்க்க இயலாமல் போய் விடும்.மெல்ல மெல்ல ஏதோ பூதம் அவளை எங்கோ கொண்டு போய் தள்ளிவிடும் என்று தோன்றியது. வெளியில் வந்து விடுமுறை தினங்களைக் கழித்து விட்டு குவைத்துக்குப் போவதுதான் நல்லது என்று தோன்றியது. அறைக்குள் நுழையும் போது தலையிலிருந்த முக்காட்டுச் சேலை நழுவி சந்திரமதியின் கழுத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது. சந்திரசேகர் அதிகபட்ச அதிர்ச்சியுடன் சந்திரமதியின் மொட்டைத்தலையைப் பார்த்தான். கொஞ்சம் சந்தனக் கீற்றுகள் எண்ணெய் பிசுக்குடன் இருந்தன. “ என்னங்க.. இப்பிடி “ “ அறுபடை வீடு போனா முருகனுக்கு மொட்டை அடிக்க வேண்டாமா “ “ மொட்டை அடிக்கறன்னு சொல்லவேயில்லே..” “ யாருக்குத்தெரியும். பழனியிலே திடீர்ன்னு ஒரு எண்ணம் வந்துது. வேண்டுதல்ன்னு ஒண்ணும் இல்லே.. நீங்க அதிந்து போன மாதிரி எங்க வீட்லே எல்லொருக்கும் சின்னதா அதிர்ச்சி தரணும்ன்னுதா.. ஒரு சின்ன அதிர்ச்சி. பெரிய அதிர்ச்சியெல்லா தர்ர அளவு கொடுமைக்காரியில்லே நான் ..அந்த மனுஷன் மாதிரி .. “ அவளுக்கே அவளின் முகத்தை மொட்டைக் கோலத்தில் பார்க்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது.மொட்டை அடிக்கும் இடத்தில் வரிசையாய் உட்கார்ந்திருந்த பெண்களின் முகங்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிவது போலிருந்தது. குடும்பத்துச் சிரமங்களியெல்லாம் நினைத்து அழுகிறார்களா என்ன. அல்லது மொட்டை அடிக்க லகுவாகட்டும் என்று தலையை நனைக்க போடப்பட்ட நீரா இப்படி வழிந்தோடுகிறது என்றிருந்தது..அந்த இடத்தில் இருந்த சப்தங்களின் உச்சமும், மயிர்கள் குவியலாய் அங்கங்கே தாறுமாறாய் இறைந்து கிடந்ததும் அவளுக்கு அருவருப்பையேத் தந்தன. செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் ஏதோ பசையில் கால்கள் ஒட்டிக் கொள்வது போலிருந்தது. ஒவ்வொருவரின் கைகளிலும் கண்ணாடிகள். சிறிதும் பெரிதுமாய். ஹாலின் சுவர்களில் இருந்த பெரிய கண்ணாடிகள் மொட்டைகளைக் காட்டி பயமுறுத்தின . சடைசடையாய் மயிர்கற்றைகள் தலையிலிருந்து கழனறு விழும்போது அவளின் கண்களிருந்தும் கண்ணீர் வழிந்தது. இந்தக்கண்ணீருக்கான காரணகர்த்தாக்களின் மேல் ஏதாவது சாபமிடலாமா...தன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகட்டும் என்று விருப்பபடலாம். தன் கஷ்டமெல்லாம் இப்போதுதான் ஆரம்பமாகியிருப்பது போலவும் பட்டது. இதுபோல் பிரச்சினை வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை அவள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருப்பது போல் பட்டது . பழனி மலை முருகன் அந்தக் கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பான் என்ற நம்பிக்கை மனதில் வந்தது. இப்படியெல்லாம் கஷ்டம் வந்து விட்டதே என்றிருந்தது.. எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளலாம். புருஷனைப் பங்கு போட்டுக் கொள்வதை மட்டும் சகித்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்தது. “ எப்பிடியோ இருபது நாளு கழிஞ்சது. பிளைட்டுக்கு செரியா இருக்கும். எல்லார்த்துகிட்ட சொல்லணுமில்லியா வர்ற வழியிலெ வீட்டுக்குப் போனன். நான் இன்னிக்கு ஊருக்குப் போறது தெரிஞ்சு அந்த ஆளு அந்தப் பொண்ணோட வெளியூர் போயிட்டான். குழந்தைக கொஞ்சம் அழுதாங்க. வந்துரும்மான்னாங்க. இன்னம் ஒண்னும் முடிவு பண்ண முடியலேன்னு சொன்னன். மொட்டை அடிக்க முடிவு பண்னுன மாதிரி ஏதாச்சும் முடிவு எப்பவாச்சும் எடுப்பன். எப்போன்னு தெரியலே. என்னன்னு தெரியலே..” ‘’ ஆமா . அந்த நாட்லே மொட்டை அடிச்சுட்டு இருக்க அனுமதி இருக்குமா. வேற மத அடையாளம்ன்னு எதுவும் அனுமதிக்க சிரமம் இருக்குமா..” “ ஆமா .. நீங்க சொன்னப்புறந்தா ஞாபகம் வருது. சிக்கலா மாறுமா.. தெரியலெ. அங்க ஏர்போர்ட்லிருந்து வெளியே போக வுடுவாங்களா.. இல்லே ஏதாச்சும் காரணம் காட்டி திருப்பி அனுப்புச்சுவாங்களா .. எதுவா இருந்தாலும்.... “ “ பாசிட்டிவா இருங்க “ “ செரி. எதுவா இருந்தாலும் ஏத்துக்கத்தா வேணும். எந்த முடிவெ எடுக்கவும் எந்த சமயம்ன்னு ஒண்னு இருக்கில்லியா ..” பக்கத்தில் வந்து நின்ற சந்திரசேகரவனின் மனைவி ரூபா சந்திரமதி நீட்டிய பஞ்சாமிர்த டப்பாவை வாங்கிக் கொண்டாள்.விபூதி அது மூடப்பட்டிருந்த பிளாஸ்டி உறையைத் தாண்டி ககமமத்தது. “ சின்ன வயசிலே எனக்கு பழனி பஞ்சாமிர்தம்ன்னா ரொம்பப் பிடிக்கும். இந்த தரம் என்னமோ புடிக்காத மாதிரி டேஸ்டே பண்ணலே “ என்றாள் சந்திரமதி மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே... மினுங்கலாய் நரை மயிர்கள் தெரிந்தன. Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602 094861 01003/ subrabharathi@gmail.com. Ananda viketan weekly feb 2025

வெள்ளி, 25 அக்டோபர், 2024

SUBRABARATHIMANAIAN’S 3 Novels –based on Hyderabad. The celebrated Tamil writer Subrabarathimanian was living in Hyderabad for about eight long years1984-92 . He penned three novels during his stay in Hyderabad. All these three works have now been made into an anthology and ready for sale. His first novel ‘’Matrum silar ‘’ (Few more ones) is a fiction on those migrants settled in Hyderabad, journeyed from the village Chinnalapatti, Madurai. The story was about a Hindi teacher who had lost her job in Tamilnadu and deprived of the best source of survival whilst the non-Hindi agitation was vigilant. It was also about the conflicts of the Tamils living in Hyderabad as there was a widespread unrest due to the Telengana struggle. It has been listed in the Tamil classics series and popular publishers like Marudha, Narmadha and Discovery have all brought out this work earlier. Nakaram 90 (the city 90) was another work that deals with the then inner political turmoil within the congress party, which had witnessed changes in the posting of the chief minister in the same rule. It was also about a time that provided grounds for religious intolerance and bigotry ,resulted into much unrest. This work was given the best novelette Air India–Kumudam award, with a trip to UK and European countries in the 90s. Chudu manal(hot sand)was another novel that depicted the violence unleashed on the Tamils living in Hyderabad ,whenever the water sharing issue between the states arise and politically debated. This novel is a stark criticism of the national question in sharing natural resources. This work has found its rendering in Malayalam and English versions with 16 editions in Tamil. These works stand as archetypes of migrated livings and helpless citizens in a non-native setting. The lives of the Tamils from the year 1960 to 95 have been recorded here in all his works with an ambiance and deals with the estrangement of the Tamils in national, political situations. He has taken a leaf out of the books of Asokamithran ,the Tamil writer who tried to bring out the predicaments of a non-native in another linguistic state (Hyderabad)through his short fictions and in his novel 18 –Atchayak kodu (18 th latitude). ( This volume has now been published by Kavya Publications –Chennai –price Rs 480/.—From The Hindu Tamil . Nalkappian ) Awards and recognitions: Published 110 books including 25 novels He has won the Katha award for best short fiction –personally received it from the president. Government of Tamil nadu’s best novelist award and many such awards.And translation award for 2023 with cash Rs 2 lakh Best novel award from Ezhuthu trust 2020 –awarded with a cash prize of Rs 100,000/ Bookish Award from the Sharjah international Book Fair 2021 S R M Tamil Perayam—Puthumaip Pithan best novel award 2024 –Rs 1,00,000 cash prize. Of late, his novel “Siluvai ‘—a mega novel with 1000 pages has been published in this year and widely acclaimed for its historical account. SUBRABHARATHIMANIAN/ R P Subramanian சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199 --------------------------------------------------------------------------------------------------------------------------------FB kanavu subrabharathimanian tirupur Subrabharathimanian palaniasamy ------------------------------------------------------------------------------------------------------------------------------ Mail: subrabharathi@gmail.com rpsubrabharathimanian@gmail.com