சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 21 ஜூன், 2020

Subrabharathimanians books in e  books


Ebooks : Pustaka
Subrabharathimaian
Title                                  A                  B        Language
1. Sayathirai  -               Fiction /social-      Novel       Tamil
2.Matrum silar               Fiction /social-      Novel      Tamil

3.Sudumanal                  Fiction /social-      Novel       Tamil

4. Manthirachimil           social-                    Poetry     Tamil

5.Pinnal                                social           shortstory     Tamil

6.Arivippu                          social           shortstory         Tamil

7.Azham                             social           shortstory           Tamil

8. Faces of dead             Fiction /social-      Novel    English translation
9. The lost symphony   social-                    Poetry     English translation
10.Unwritten     letters            Fiction /social-      Novel       English translation

11. The coloured curtain  Fiction /social-      Novel       English translation

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003

Some other Subrabharathimanians  e books in amazon.com
* Tuttan – முறிவு நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு
* Art of story telling – Childrens book s in Englsh Transalation
* Sudumananl  - Novel in Englsh Transalation  of novel sudumanal
*Faces of Dead  Novel in Englsh Transalation –பிணங்களின் முகங்கள் நாவல்
* The Banian Tree – Childrens book  in Englsh Transalation
*The hunt _ shortstories English translation
* God and satan –Poems in Englsh Transalation

* Lost documents  -shotstories  in Englsh Transalation
* Love is world – Childrens stories in in Englsh Transalation
* கடவுச்சீட்டு –நாவல்
* வெள்ளம் – சிறுகதைத் தொகுப்பு
* திருப்பூர் 100 –திருப்பூர் பற்றியக் கட்டுரைகள்
* பெண்மை –மலேசியா பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
* ஓ..சிங்கப்பூர் – சிங்கப்பூர் படைப்பாளிகள் பற்றியக் கட்டுரைகள்
* படைப்புமனம் -கட்டுரைகள்
* படைப்பும் பகிர்வும் –சுப்ரபாரதிமணீயன் படைப்புகள் பற்றியக் கட்டுரைகள்
* இலங்கை ஓகே குணநாதன் சிறுவர் உலகம்
* சி சு செல்லப்பா எழுத்துக்காரன்
* அரசியல் வாதியும் புறாவும் –மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* லாமியா அஞ்ஞிம்  கவிதைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* நீர்ப்பாலை- சுற்றுச்சூழல் கட்டுரைகள்
* படைப்பது அழிப்பது –சுற்றுச்சூழல் கவிதைகள்
* பெண்களும் தொழிற்சங்கங்களும் –மொழிபெயர்ப்பு






மின்நூல் வெளியீடும், உலக யோகா தின விழாவும்
கவிஞர் காங்கேயன் செல்வராஜ் தொகுத்த “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூல் வெளியீடு  திருப்பூர் கூத்தம்பாளையம் மூன்றாம் பிறை முத்தமிழ் மன்ற நூலகத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கவிஞர் காங்கேயன் செல்வராஜ் , சுப்ரபாரதிமணியன்,  SBM library u tube channel நிர்வாகி அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக யோகா தின விழா பற்றி கவிஞர் காங்கேயன் செல்வராஜ்  உரையாற்றினார். சமூக/தனிமனித இடைவெளியுடன் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மாணவர்களும், இலக்கிய வாசகர்களும் கலந்து கொண்டனர் . “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூலில் “ சுப்ரபாரதிமணியனின் கவிதைகள் பற்றிய கட்டுரைகள் ( விக்ரமாதித்யன், சூரியநிலா போன்றோரின் ), “ சுப்ரபாரதிமணியனின்  கவிதைகள் , அவற்றின் ஆங்கில,மலையாள மொழிபெயர்ப்புகள் அடங்கி உள்ளன. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது
சுப்ரபாரதிமணியனின்  பிற மின்நூல்கள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

செய்தி: மூன்றாம் பிறை முத்தமிழ் மன்றத் தலைவர் கவிஞர் காங்கேயன் செல்வராஜ்.. 7639614837
புகைப்படம் : காங்கேயன் செல்வராஜ் , சுப்ரபாரதிமணியன்,  நிர்வாகி அரவிந்த்

Subrabharathimanians books in e  books


Ebooks : Pustaka
Subrabharathimaian
Title                                  A                  B        Language
1. Sayathirai  -               Fiction /social-      Novel       Tamil
2.Matrum silar               Fiction /social-      Novel      Tamil

3.Sudumanal                  Fiction /social-      Novel       Tamil

4. Manthirachimil           social-                    Poetry     Tamil

5.Pinnal                                social           shortstory     Tamil

6.Arivippu                          social           shortstory         Tamil

7.Azham                             social           shortstory           Tamil

8. Faces of dead             Fiction /social-      Novel    English translation
9. The lost symphony   social-                    Poetry     English translation
10.Unwritten     letters            Fiction /social-      Novel       English translation

11. The coloured curtain  Fiction /social-      Novel       English translation

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003

Some other e books in amazon.com
* Tuttan – முறிவு நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு
* Art of story telling – Childrens book s in Englsh Transalation
* Sudumananl  - Novel in Englsh Transalation  of novel sudumanal
*Faces of Dead  Novel in Englsh Transalation –பிணங்களின் முகங்கள் நாவல்
* The Banian Tree – Childrens book  in Englsh Transalation
*The hunt _ shortstories English translation
* God and satan –Poems in Englsh Transalation

* Lost documents  -shotstories  in Englsh Transalation
* Love is world – Childrens stories in in Englsh Transalation
* கடவுச்சீட்டு –நாவல்
* வெள்ளம் – சிறுகதைத் தொகுப்பு
* திருப்பூர் 100 –திருப்பூர் பற்றியக் கட்டுரைகள்
* பெண்மை –மலேசியா பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
* ஓ..சிங்கப்பூர் – சிங்கப்பூர் படைப்பாளிகள் பற்றியக் கட்டுரைகள்
* படைப்புமனம் -கட்டுரைகள்
* படைப்பும் பகிர்வும் –சுப்ரபாரதிமணீயன் படைப்புகள் பற்றியக் கட்டுரைகள்
* இலங்கை ஓகே குணநாதன் சிறுவர் உலகம்
* சி சு செல்லப்பா எழுத்துக்காரன்
* அரசியல் வாதியும் புறாவும் –மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* லாமியா அஞ்ஞிம்  கவிதைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* நீர்ப்பாலை- சுற்றுச்சூழல் கட்டுரைகள்
* படைப்பது அழிப்பது –சுற்றுச்சூழல் கவிதைகள்
* பெண்களும் தொழிற்சங்கங்களும் –மொழிபெயர்ப்பு

* சுப்ரபாரதிமனீயனின் கவிதைக்கலை –தொகுப்பு காங்கேயன்

வியாழன், 4 ஜூன், 2020

திக்குத் தெரியாத உலகில்—
சுப்ரபாரதிமணியன்
கொரானா காலப்புதுப்பழமொழிகளிகளைக் கற்றுக் கொள்ள..

கையிலிருக்கும் காசைக் கொண்டு 3,000 ., 4,000 ரூபாயில் மிதிவண்டி வாங்கிக் கொண்டு பீகாருக்குச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையின் எல்லையைத்தாண்ட முடியாமல் காவல்துறையினரால் விரட்டப்பட்டு நகரத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியினூடே ...

              பிகாரைச் சேர்ந்த பதினைந்து 15 வயதுச் சிறுமி ஜோதிகுமாரி, குர்கவானிலிருந்து உடல்நலம் சரியில்லாத தந்தையை மிதிவண்டியில் வைத்து, தொடர்ந்து ஏழு நாட்கள், ஏறக்குறைய 1,200 கிமீ மிதித்துச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதிலுள்ள வலியையும் துயரத்தையும்விட, ஜோதிகுமாரியை இவான்கா டிரம்ப் பாராட்டிஉள்ளார் என்பதையும் இதனுடன் சேர்த்தே பார்க்க வேண்டியிருக்கிறது.
   எட்டு கோடிப் பேர் இடம்பெயர்ந்து வந்தத் தொழிலாளர்களில் அதிகபட்சமாய் நாற்பது லட்சம் பேர் ஊர்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இன்னும் நாற்பது லட்சம் பேர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். சென்றவர்கள் அதிகபட்சமாய் ஊர் சென்றடைய வழியில்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுப் போயிருப்பார்கள். ( திருப்பூரின் மக்கள் தொகையில் ஏற்க்குறைய பாதிப்பேர் இவர்கள். இவர்களில் 50 ஆயிரம் பேர் அனுப்பப்படிருக்கிறார்கள்.1 லட்சம் பேர் திருப்பூர் வாழ்க்கையே போதும் என்று இருக்கிறார்கள் .போனவர்கல் வட மாநிலத்தில் நவம்பர் வரை  அறுவடை கால வேலை இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றிருக்கிறார்கள் .இதில் வடநாட்டில் வெட்டுக்கிளிகள் வேறு அறுவடையைப் பதம் பார்க்கலாம் என்ற பயம் உள்ளது. ஆதிவாசி மக்களிடம் ஒரு நம்பிக்கைப்பாடல் இப்படி உண்டு.நாங்கள் விளைவித்ததில் பறவைகள் தின்றது போக, பெரிய ஜீவன்கள் யானை போன்றவை அழித்தது போக, மற்றவை எங்களுக்குப் போதும் )

  தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிகளில் அவர்களுக்கான சுகாதாரவசதிகளும் உணவு விநியோகமும் முறையாக இல்லாமல் அவர்கள் மனிதர்களாய் நட்த்தப்படவில்லை என்பதே வரும் செய்திகளாய் உள்ளன. அதிகபட்ச தொடர்வண்டிகளை இயக்குகிறோம், அதிகப்டச பேருந்துகளை இயக்குகிறோம் என்ற சாதனைச்செய்திகள் ஜோதி குமாரியின் சாதனையூடே தொடர்கின்றன.

   சமூக ஆர்வலர்கள் அந்த எட்டு கோடிப் பேரில் இப்போது ஊருக்குச் அனுப்ப்ப்ட்டிருப்பவர்கள் நாற்பது லட்சமே. இன்னும் நாற்பது லட்சம்பேர்  பதிவு செய்திருக்கிறார்கள் . நீதிமனறங்கள்., மனித உரிமை அமைப்புகள் திகைத்துப் போய் பேசாமல் நிற்கிறார்கள் .
       இவர்களில் பலரின் ஆதார்கார்டுகள் அபகரிக்கப்பட்டு   வெளியே போய் விட்டால் வேலைக்கு ஆள் கிடைக்காது என்று தனிமைப்படுத்தப்பட்டு மிரட்டலால் ஒதுங்கியிருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதற்குக் காவல் துறை ஒத்துழைப்பு வேறு.
       
 எந்த சூழலானாலும் இவர்களின் மனநல பாதிப்பு என்பது அதிக பட்சபட்சமாய் தற்கொலைக்குக் தூண்டி பலரும் தற்கொலை செய்து கொள்கிற சூழல்.
அவர்களுக்கான மத்திய அரசின் 3500 கோடி ரூபாய் உதவித் திட்டம் என்பதில் கிடைக்கும் 5 கிலோ அரிசி, 5 கிலோ  கோதுமை, ஒரு கிலோ பருப்பு அவர்களின் குடும்பத்தினருக்கு ஒருவார உணவாகும் ..
மற்ற தினங்கள் என்ன செய்ய ..பட்டினி சாவுகள் தொடரலாம் என்ற பயம் வந்து விட்டது.மே 28 உலகப்பட்டினி விழிப்புணர்வு தினம் வேறு அதை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.ஊட்டச்சத்துக்குறைபாடால் சாகிறவர்கள் ஒரு புறம் இருந்தாலும் பட்டினி சாவுகள் தொடரலாம் என்ற பயம் வந்து விட்டது இன்றைய சூழலில் .
  இடம் பெயர்ந்து தங்களின் நிலம் எதுவென அறியாதவர்கள்- நோ மேன்ஸ் லேட் -மனிதர்களாய் இவர்கள் மதிக்கப்படாமல் நடததப்படும் சூழல்கள் ..

இவர்கள் தங்களை இனிமேல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற இன்றைய நிலையில் அமைப்பு சாராத் தொழிலாளர்களின்  நல வாரியம் என்ற அமைப்போ இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நல சட்டங்களோ வெறும் வாய் அளவு வார்த்தைகளே ஆகிவிட்டன.வேலை வாய்ப்பைத் தரும் ஏழு இந்திய மாநிலங்களில் ஒன்று தமிழகம்.
இந்தியாவில், நாட்டுப் பிரிவினைக்கு அடுத்து, மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்றால், அது புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம்தான் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
ஒரே வித்தியாசம், அப்போது கொடூரமான வகுப்புவாத வன்முறை இருந்தது. நம்மிடம் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், மிருதுளா சாராபாய், கமலாதேவி சட்டோபாத்யாய போன்ற சுயநலமில்லா சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாகச் செயல்பட்டு இந்தியாவை ஒருங்கிணைத்து, சமூகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்கள்.
ஆனால், தற்போது கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய விளம்பரத்துக்காகவும், சொந்தக் கட்சியின் நலனை வளர்க்கவும் மட்டுமே சிந்திக்கிறார்கள்என்று ராமச்சந்திர குஹா சாடியுள்ளார்.

முன்பு வேலை வாய்ப்பு இருந்த  ஏழு மாநிலங்களில் இனி வேலைக்கு போதிய ஆள் கிடைக்காத நிலை குறைந்த வேலை இருந்தாலும். வீடு பாதுகாப்பானது என்ற உளவியல் நம்பிக்கை செத்தாலும் ஊருக்குப் போய்ச் சாவோம் என்ற தீர்மானத்துடன் நடந்துபோகவும் வைத்திருக்கிறது அவர்களை.


இதில் வெளிமாநில இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி உள் மாநில  இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் நிலை ஊர் போய் சேர்ந்து விட்ட ஆறுதலில் திளைத்திருப்பதுதான். அங்கு அவர்களின் உணவுக்கான உத்திரவாதத்தை அவர்கள் மெதுவாக யோசிப்பார்கள். அதுவும் பெண்கள் நிலைமை இன்னும் மோசம். காலகாலமாய் ஆண்களை நம்பியிருந்தவர்கள் கூலி வேலையாக இருந்தாலும் ஏதாவது சம்பாதித்து குடும்பத்திற்குத் துணையாக இருப்போம் என்ற நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது 

ஒரே தேசம் ஒரே ரேசன் கார்டு “ காலத்தில் கிராமப்பஞ்சாயத்து, உள்ளாட்சி நிர்வாகம் போன்றவற்றுக்கு இருக்கும் அதிகாரம் மோடிக்கு முன்னால் எடப்பாடி அரசுக்கும் இருக்கும் அதிகாரம் போன்ற  நோஞ்சான் தன்மைதான்.
பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலத்தைப் பார்த்து அரசின் நிவாரண உதவிகள் , தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வம் , உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் போன்றவற்றிலிருந்து  தமிழகம் கொரானா காலத்திலாவது நிறையக் கற்றுக் கொள்ளலாம் . கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியதில் உலகுக்கே முன்மாதிரி கேரளா முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் உண்மையானது என்கிறார்கள் வல்லுனர்கள்.


  பசியால் வாடுபவனுக்கு மீன் சாப்பிட தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது பற்றி பழைய மொழி நமக்குத் தெரியும்.

சோறு போடு, இலவசம் கொடு, எங்களைப் பிச்சைகாரர்களாக்கு  என்று தமிழகம் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட கேரளாவைப் பார்த்து பிச்சை வேண்டாம் வேலை கொடு, அடிப்படை உரிமைகளை நிறைவேற்று  என்று கேட்பதை தமிழகம் கற்றுக் கொண்டால் நல்லதுதான் .

கொரானா காலத்து ஜோக்குகள், கதைகளை அதிகம் உருவாக்கிய மாநிலமாக கொண்டாடப்படும் தமிழகம் கொரானா புதுப்பழமொழிகளிகளைக் கற்றுக் கொள்ள நேர்கிறது







திக்குத் தெரியாத உலகில்—
சுப்ரபாரதிமணியன்
இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு……
ஆறாவது பிரளயம் எப்போது ?
கொரானா மிரட்டல் வேறென்ன.
அதுதான் ?
கொரானாதான் ஆறாவது பிரளயம் என்று நம்பும் கட்சியினர் அதிகரித்து வருகிறார்கள் .
கல்கியின் பத்தாவது அவதாரம் பற்றிக்கூட பலர் தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.2012 இப்போது மறுபடியும் என்று அவர்களே சொல்லுகிறார்கள் .

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலுள்ள புராதனமான மயன் நாள்காட்டியின்படி, உலகம் 2012இல் அழிந்து விடும் என்று கூறினர். மயன் நாள்காட்டியின் பல கணிப்புகள் நடந்துள்ளதாகவும் சிலர் வாதிட்டனர். 2012லிருந்து தப்பித்தோம் .

2012 என்றத் திரைப்படத்தில் ஒரு காட்சி: உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் சொல்கிறார்கள் அதில் .. திரைப்படத்தில் கப்பலில் இடம் பிடித்து தப்பிப்பிழைப்பவர்கள் குன்றாகக் குறுகிப்போய் நிற்கும் எவரெஸ்டை தமது கப்பலில் பார்வையிட்டுச் சுற்றித்திரிவார்கள் .



முந்தின ஐந்து வகையான பிரளயங்கள், கல்கி பற்றி.......
உலக முடிவைப் பிரளயம் என்று சைவம் சொல்லுகின்றது.. நைமித்திக பிரளயம்;
. அவாந்தர பிரளயம்; மத்திம பிரளயம். மகா பிரளயம் போன்றவை அதில்.

   கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் பதினேழாம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் நான்கு இலட்சத்து இருபத்தாறாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய இருபத்தொன்பதாவது சதுரயுகத்தின் முதலாவதுயுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தொரு சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட இரண்டாயிரம் மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும். இவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். நிறைய குடிப்பதும், நிறைய உண்பதும், சுகிப்பதுமாக இருந்து அழிவை எதிர்கொள்கிறார்கள். அதைப் போலவே கொடிய நோய் ஏற்பட்டு எப்படியும் இறந்து விடுவோம் என்ற கட்டத்திலிருப்பவர்களும், சொத்தை பங்கிடுவதிலும் உண்பதிலும் கையில் தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து திரைப்படங்களைப் பார்த்து சுகிப்பதிலும் இருக்கிறார்கள்  “ (கீதா கோவிந்த தாஸி )
என்றார்கள் முன்பே .
 கலியுகம் என்பது ஒட்டுமொத்தமாக நான்கு லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. அதில் 5000 வருடத்துக்கு முன்பாக தான் கலியுகம் ஆரம்பித்திருக்கிறதாம் .அதனால் இந்த பூமியில் கல்கி அவதரித்து அழிப்பதற்கு இன்று சில லட்ச வருடங்கள் ஆகும் என்ற கதையை நம்பும் பெரும் மக்கள் தொகையினர் இந்தியாவில் இருக்கிறார்கள் .

அதற்குள்  2012, மயன் காலண்டர், கொரானா குத்தல் என்று மறுபடியும் தொடர்கிறது.

புதிய வைரஸ்களால்  இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு வருகிறது

மனிதன் இயற்கையுடன் சேர்ந்து இணைந்தே வாழ்க்கையை ஓட்டுகிறான் அவனுக்கான தேவைகள் இயற்கையிடம் இருக்கின்றன. மொழி,  பண்பாடு பழக்க வழக்கம் எல்லாம் அவன் வாழ்கிற இயற்கை சூழலைச் சார்ந்தே வளர்கிறது.
 பயோடைவர்சிட்டி -உயிர்ப் பன்மயம் என்பது -பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றியது. அந்த உயிர்ப் பன்மயத்துடன் மனிதர்களின் வாழ்க்கையையும் இணைந்து இருப்பதை உயிர் பண்பாட்டு மையம் பயோ கல்சரல் டைவர்சிட்டி  என்கிறார்கள்.
 பின்னால் சொல்லப்பட்டதை மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள் அதில் பண்பாடும் மொழியும் கூட முக்கியத்துவம் பெறுகிறது
1. பூமியில் சுமார் 100 லட்சம் வெவ்வேறு வகையான உயிரின வகைகள் இருக்கின்றனவாம் உயிரினங்களின் வேறுபாட்டை உயிரிக்  கோளம் –பயோஸ்பியர் - என்கிறார்கள் .உயிரிப் பன்மயம் என்பதை உயிரினங்களுக்கு இடையில் உள்ள  வித்தியாசங்களை குறிக்கிறது..  இதில் விலங்குகள்,  நுண்ணுயிர்கள்,  தாவரங்கள் அனைத்துக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை குறிப்பதாகும்
2. ஒருவன் புழங்கும் மொழி அவன் இருக்கும் மதம்,  சாதி மற்றும் வாழும் சுற்றுச்சூழல் அவன் சார்ந்த இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் பல பண்பாட்டுக் குழுவில் இருப்பார். பல்வேறு பண்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. எத்தினோஸ்பியர் - மனிதப் பண்பாட்டு கோணம் என்பதாகும் .வெவ்வேறு மனிதர்களுக்கு இடையே நிலவுகின்ற வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வெவ்வேறு வாழ்க்கை முறை,  பேச்சு வழக்கு,  வெவ்வேறு உணவு முறை , வெவ்வேறு உடை,  வெவ்வேறு நம்பிக்கைகள் என இவையெல்லாவற்றையும் ஒரு சேரக் கொண்டது பண்பாடு.
 பண்பாட்டு பன்மையம் என்பது மனிதர்களுக்கு இடையில் உள்ள வெவ்வேறு வித்தியாசங்களைக் கோடிடுகிறது.

3. இந்த பூமி இதுவரை ஐந்து முறை பேரழிவைச் சந்தித்துத் தப்பியிருக்கிறது . கடைசியாக பேரழிவு நடந்தது பல  கோடி ஆண்டுகளுக்கு முன்பு . இப்போது ஆறாவது பிரளயம் மனிதனின் செயல்களால் நிகழலாம் என்கிறார்கள் முன்பு.  
இம்முறை கொரானா அவ்வகைப்பேரழிவே என்போர் பலர்.
முந்தின ஐந்து முறை பேரழிவும் இயற்கையாக நடந்தவை.  இம்முறை அழிவில் உயிரினங்கள் , பண்பாடும் மொழியும் இடம்பெற்றுள்ளன
கடந்த 50 ஆண்டுகளில் உலக மொழிகளில் 20% அழிந்திருக்கிறது.  பெரிய ஆதிக்க மொழிகளின் வளர்ச்சியில் சிறிய மொழிகள் அழிந்திருக்கின்றன .மொழி பண்பாட்டு அறிவு இயற்கையுடன் மனித விரிசலை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் அழிவதற்குக் கொண்டு செல்கிறது.
 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாட்டு மாடுகளைக் காப்பது முக்கியக் கோரிக்கையாக இருந்தது . நாட்டு மாடுகளை இல்லாமல் ஆக்கி இறக்குமதி செய்யப்படும் மாடுகளால் கால்நடை வளத்தை நிரப்புவது சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும்.  இந்த ஒற்றைத் தன்மையை கால்நடையை  விடுத்து மொழி,  பண்பாடு,  இனம் பழக்கவழக்கம் என்று ஒற்றைத் தன்மையைத்  திணிப்பதால் உலக சமனற்ற நிலைக்குச் செல்லும்.
ஒற்றை மயமான உலகு ,ஒற்றை மயமான பொருளாதாரக் கொள்கை,  ஒற்றைமயமான அரசியல் போன்றவற்றின் தொடர்ச்சியாய்  எல்லாம் நிகழ்கிறது. அவை  இயற்கையைப் பாதிக்கிறது.  ஒற்றை மைய திணிப்பு காரணமாக ஒன்றின் அழிவு மற்றவற்றின் அழிவை வேகப்படுத்துவதைச் சொல்ல்லாம் .சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாடு,  மொழியை பாதித்துவிடுகிறது .

 செம்மரக்காடோ  தேக்கு மரக் காடோ  மட்டும் இருப்பது காட்டின் அடையாளத்தை முழுவதும் அழித்துவிடுவது போலத்தான் பண்பாடு,  மொழி,  சுற்றுச்சூழல் விஷயத்திலும் நிகழ்கிறது.  எனவே பன்முகத்தன்மை எல்லா விஷயங்களிலும் தேவையாக இருக்கிறது .
கலப்பின மாடுகளை நம் நாட்டில் இறக்குமதி செய்வது ஆரம்பித்துவிட்டது  அபாரமானதாகும்.. கலப்பின மாடுகளின் பால் கறக்கும் கொள்ளளவு அதிகம் . பண நோக்கம் கருதி அந்த மாதிரி அந்நிய வகை கறவைப் பசுக்களை வாங்கினர் பலர். விவசாயத்தில் பலவகை இயந்திரங்கள் குறிப்பாக கதிரடிப்பு  இயந்திரம்,  டிராக்டர் போன்றவை உழவு மாடுகளின் அவசியத்தை இரண்டாம்பட்சமாகி விட்டது. நாட்டுப் பசுமாடுகள், நாட்டுக்காளை மாடுகள் பயன்பாட்டைத் திட்டமிட்டுக்  குறைத்து விட்டனர்.
 கொங்கு பகுதியில் காங்கேயம் காளை,  தென்னகத்தில் கழுகுமலைக் காளைகள் , மயிலைக் காளை மச்சக்காளை,  கோம்பைக்  காளை என சுமார் 100 வகையான காளை  இனங்கள் பாரம்பரியமாக இருக்கின்றன.  ஆனால் சிந்தி,  ஜெர்சி  போன்ற கலப்பின மாடுகள் வந்து பாலைத் தரும் செயற்கை மாடுகளை அதிகரிக்கிறத் திட்டம் கால்நடை விவசாயத்தில் ஒற்றை தன்மையை நிர்பந்தப் படுத்துகின்றன
 இந்தியா போன்ற பன்முக்க் கலாச்சாரம் கொண்ட நாட்டில் ஒற்றைத் தன்மையை நிர்பந்திப்பது சமநிலையைக் குலைப்பதை  மொழி பண்பாடு சார்ந்து செய்யப்படும் மாறுதல்கள் விளைவித்திருக்கும் சீர்குலைவை மக்களின் எதிர் விளைவுகள் மூலம் அறியமுடிகிறது.
 சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பதும் உயிரின வேறுபாட்டைக் பாதுகாப்பதும் வெப்பச் சூழல் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதலும் உயிர் பண்பாட்டு பன்மையத்தைக் காப்பாற்ற உதவும்.
 .பிற்போக்குத் தனங்களை நிராகரித்து
ஆரோக்கியமான உயிர் பண்பாட்டுச்சூழல் உருவாக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பூமியில் மனித உயிர்கள் இயல்பாய் வாழ அந்த நீண்ட பாதை தெரிந்து கொண்டே இருக்கிறது.

             அதற்கு மத்தியில் இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு வருவது கொரானா தொற்றால் தெளிவாகவேத் தெரிகிறது.
திக்குத் தெரியாத உலகில்—
சுப்ரபாரதிமணியன்
கொரோனா நடை  :வலசை போதல்
கொரோனா நடை  ஒரு வடிவத்துக்குள் வந்து விட்டது.
மொட்டை மாடி வீட்டாளர்கள் மாடி செவ்வகத்துக்குள், சதுரத்துள் நடக்கப் பழகிக் கொண்டார்கள்.

மொட்டை மாடி இல்லாதோர் வீட்டுக்குள் எட்டு எண் நடை பயிற்சிக்குப் பழகி விட்டார்கள் .( நாலு தெரு சொந்தக்காரர் அவர். அவர் நடைபயிற்சி செய்வதோ மொட்டை மாடி செவ்வகத்துக்குள் தான்-ஒரு புதுமொழி ).

 இடம்பெயர்ந்தத் தொழிலாளர்கள்  ஊர் போகிற ஆசையில் நடந்துக் களைத்து செத்துப் போகிறார்கள். தொற்றால் அழுகுகிறார்கள்.தொடர்வண்டி பாதியில் விழுந்து சாப்பாத்திகள் மக்கிப்போவதைப்போல செத்துப்போகிறார்கள். மீறிப்போகிறவர்கள் முகாமில் அடை படுகிறார்கள். கொரோனா கிருமி நாசினி - தடுப்பு மருந்தை பீய்ச்சி அடித்து வரவேற்பு தருகிறார்கள் .


இடம்பெயர்ந்தத் தொழிலாளர்கள்  வலசைபோதல் என்பதற்கு உதாரணமாய் வயிறுப்பிழைப்புக்காகவும், சாதிய வன்முறைகளிலிருந்து தப்பிக்கவும் பயணம் மேற்கொள்கிறார்கள்.
வலசை போதல் பறவைகளுக்கு மட்டுமா. மனிதர்களுக்கும் என்றாகிவிட்டது.

வலசை போதல் என்று தலைப்பிடு ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன் .முடிக்கவில்லை  எப்போதாவது தொடர்வேன். வேறு நாவல் எழுதும்            வலசையாகி “ விட்டதுதான்  காரணம் .அந்நாவல் பறவைகளின் இடம்பெயர்தல் பற்றியதல்ல. மனிதர்களின் இடம்பெயர்தல் பற்றியதுதான் .நான் திட்டமிட்டது வேறு.கொரோனா சூழலில் அதன் மையம் மாறிவிட்டது.
குளிர்காலத்தில் பறவைகள் உணவைத் தேடி பின் பல இடத்திற்கு திரும்புதல் என்பதை வலசை போதல் என்கிறார்கள். கடிகாரத்தின் பெண்டுலத்தின் அசைவுகள்  போல் ஓர் இடத்திற்குச் சென்று திரும்பும் பறவைகளுக்கு உணவு உள்மன தூண்டல்,  வாழ் நிலைக்கான  ஆதாரம் தேடுவதற்காக அமைந்திருப்பது பறவையிலளார்களுக்கும் மர்மமாகவே இருக்கிறது. பெரும் பருவ நிலை மாறுதலும் அவைகளை இடம் பெயறச் செய்கிறது
            சுமார் பத்தாயிரம் வகைப் பறவைகளில் 2% ஆண்டுதோறும் பருவ காலத்தில் வலசை போகின்றன . வடக்கிலிருந்து தெற்கிற்கு  என்று சொல்லலாம்.  இனப்பெருக்கம் செய்து விட்டு பழைய பகுதிக்கே திரும்பும் பறவைகளும் உள்ளன.  நிலா , நட்சத்திரம்,  புவியின் காந்த ஈர்ப்பும் புலங்களை  அடிப்படையாகக் கொண்டு வலசை நிகழ்வதாக அறிஞர்கள் கருதுகின்றனர்
 தமிழர்களின் இடம்பெயர்தல் கிறிஸ்துவுக்கு முன்பாக- 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. சங்க காலத்திலும் புறநானூற்றிலும் இதற்கு குறிப்புகள் உள்ளன முல்லைப்பாட்டு நெடுநல்வாடை ஆற்றுப்படை நூல்களில் போர் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்து சென்றதைக் காண்கிறோம் . அன்றைய பூம்புகார் வெளிநாடுகளிலிருந்து வந்த புலம் பெயர் மாக்கள்  கலந்தினி உறையும் ”  என்று குறிப்பு பட்டினப்பாலையில்  உள்ளது. “  அவன் உரை முனிந்த ஒக்கலோடு  புலம்பெயர்ந்து என்கிறது நன்றிணை.  “ கலம்  தரு திருவின்  புலம்பெயர்  மாக்கள் “  என சிலப்பதிகாரமும் கூறுகிறது .
தமிழகத்திலிருந்து இலங்கை மலேசியா சிங்கப்பூர் பர்மா இந்தோனேஷியா தென்னாப்பிரிக்கா பிஜித்தீவுகள்  போன்ற நாடுகளுக்கு தேயிலை ரப்பர்  கரும்புத் தோட்டங்களுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றனர்.  இது 16 ஆம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைக்கும் மிகுதியாக நடந்திருக்கிறது .

புலம்பெயர் இலக்கியம் என்ற குறிப்பிடத்தக்க இலக்கிய வகை இன்று தமிழில் நிலைத்து விட்டது.  தமிழகத்தை கடந்து தொப்புள் கொடி உறவாக அவர்களின் அனுபவங்கள் தமிழிலக்கியத்தில் உரம் சேர்த்திருக்கின்றன.
 பறவைகளில் வலசை போதல் இயல்பானது மனிதர்களின் இடம்பெயர்தல் பலவகை நெருக்கடிக்குள் அமைவதாகும். சுற்றுலா குறிப்பிட்ட வேலை சார்ந்து குறிப்பிட்ட கால அளவில் மாறுதல் இதனுள் அடங்காது .வீட்டிற்கு அடங்காதவன் ஊர்சுற்றி என்பார்கள் ஆனால் வயிற்றுப் பசியை அடக்காதவர்கள் உயிரை காத்துக் கொள்ள ஆசைப்படுபவர்கள் இடம் பெயர்தல் என்பது இந்நூற்றாண்டின் முக்கியமாக உள்ளது.  அது சார்ந்து அகதிகள் உருவாவது கூட.
 உலகமயமாக்கல் சிறு தொழில்கள் விவசாயம் போன்றவற்றை ஒழித்து கிராமப்புற மக்களை பெரு நகரங்களுக்கு,  தொழிற்சாலை நகரங்களுக்கு இடம்பெயரச்  செய்கிறது . உள்நாட்டுக் கலவரங்களும் விடுதலை கோரிப் போராடும் தேசிய இனமக்களின் பிரச்சனைகளுக்கும் இடையே போர் காரணமாக உள்ளது. இது உலக நாடுகள் முழுக்க இன்று நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். கண்டுபிடித்துத் தீராத வழிகளை அவை கொண்டிருக்கின்றன
 சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டு இருக்கிறது இலங்கை இனப் பிரச்சனை காரணமாக ஈழத்தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள் வெவ்வேறு நாடுகளுக்கான போர் மனப்பான்மை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் தேசிய இனப் பிரச்சனைகள் உள்நாட்டுக் கலகங்கள் ஆகியவை மக்களை இடம்பெயரச் செய்து அவர்களை ஓட விட்டன.
  உலகமயமாக்கலும் அதன் தொடர்பான தொழில் சிதைவுகளும்  அகதிகளாக மக்களை வெளித்துப்பிக் கொண்டிருக்கச் செய்கின்றன  அந்நிய முதலீடுகள் பெரிய தொழிற்சாலைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் போது சுதேசிமயமான தொழிற்சாலைகளை மூடப்படுகின்றன.  இவை மூலமாக தொழிலாளர்களின் இடப்பெயர்வும் மக்களின் வாழ்நிலையை  பெருமளவில் பாதிக்கின்றன .
இந்த வகை இடப்பெயர்வுக்கு வறுமையும் வேலைஇல்லாத் திண்டாட்டமும் முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன .சமூக நிலையில் கீழ்ப்ப்டிலும் அதற்குச் சற்றே மேல் இருக்கும்  மத்திய தட்டுகளில் இருக்கும் தொழிலாளர்கள் இடம்பெயர்கிறார்கள் .
அவர்கள் அதிகம் படிக்காத முறைசாராத தொழிலாளர்களாக இருக்கிறார்கள் வேளாண்மை பொய்த்துப் போவது சாதாரணமாய் தண்ணீர் பற்றாக்குறை நிகழ்ந்து சொந்த நிலங்களை வைத்திருப்போர் வேளாண்மை செய்ய இயலாது வெளியேறுகிறார்கள்.. உறவினர்கள் யாராவது இருக்கும் பகுதியிலோ வீடுகளிலோ தற்காலிகமாய்க் குடியேறுகிறார்கள் .பல இடங்களில் தற்காலிக் குடிசைக்ள் போதும் தற்காலிகமாக மின்சாரம் சாலை வசதிகள் போன்றவை தங்கள் ஊரில் இருந்ததை விட சிறப்பாக இருப்பது ஆறுதல் தருகிறது அவர்களுக்கு தண்ணீர் லாரிகள் காமதேனுகளாக  வாழ்கின்றன
குழந்தைகளின் படிப்பிற்குச் செலவு செய்யும் மனநிலை அற்று போகிறார்கள் நாங்கள் இவ்வளவு கஷ்டப் படும்போது குழந்தைகளுக்கு கல்வி தேவைதானா என்ற கேள்வியின் முடிவில் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பத் துணிகிறார்கள் குழந்தைகளின் படிப்புச்  செலவுக்கும் துணிகளுக்கும் குறைவாகச் செலவிடுகிறார்கள் தினமும் குறைந்தது 12 மணிக்கும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது இருப்பிடச் சூழலும் தொழிற்சாலை சூழலும் அவர்களுக்கு மன ரீதியில் பாதுகாப்பானதாய் இல்லை உளவியல் சிக்கல்களையும் உளவியல் ரீதியான பாதுகாப்பின்மையும் சில விதங்களில் ஏற்படுத்திவிடுகின்றன தங்கள் உரிமை குறித்த அக்கறைகளுக்காக தொழிற்சங்கங்களின் அரசியல் இயக்கங்களில் சேர் மிகக் குறைவாக இருக்கிறது 10 சதவீதமானவர்களே தொழிற்சங்கங்களில் சேர்கிறார்கள் தொழிற்சங்க அரசியல் இயக்கங்களை விட தங்கள் பிரதேச மக்களின் கூட்டமைப்பு தங்கள் ஜாதியினரின் சங்கங்கள் சேர்வது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள் இதன் ஆபத்தை உணர்வதில்லை ஓரளவு சம்பளமும் தொடர்ந்து வேலை கிடைத்ததும் அவர்களின் துயரங்களை எல்லாம் சற்றே                  ஒதுக்கி வைத்துவிட்டு அதிலுள்ளே இருக்க வைக்கின்றன இன்னொரு பிரதேசத்திற்கு  நல்ல வேலை தேடிச் செல்கிற இடப்பெயர்வு கானல் நீர்தான் என்பதையும் உணர்கிறார்கள் .பறவைகளுக்கு இப்படி கானல் நீர் அனுபவம் இல்லை. ஏதாவது உணவாவது கிடைத்துவிடும் பறவைகளுக்கு .எதற்கு இறக்க. மனிதன் கையால் பிடிபடக்கூடாது என்று பறக்கிறது  பறப்பது அப்படி சுலபமா என்ன. பறக்கும் நிலை தோன்றும்போது இறக்கைகளுடன் சில பகுதிகளில் வளைந்து கொடுக்கும் நிலையும்  தேவைப்படுகிறது.  

இறக்கைகளில் இப்பகுதிகள் முக்கியமானவை. மாற்றங்களின் போது இறக்கைகளைத் தொடர்ந்து தொடர்ந்து வீசுவதாலும் மற்றும் இறக்கைகள் பற்றிக்கொள்ள இருக்கும் உறுப்புகள் செயல்பாடு முக்கியமானதாகவும்  இருக்கிறது .சில பறவைகளுக்கு  இரு தோள் பட்டை இணைப்புக்கிடையே உள்ள இடைவெளியை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளாக செயல்படுகின்றன. இவ்வுறுப்பு ஸ்போர்ட்ஸ் கார் பறப்பதைப்போல அதற்கு தேவையான சக்தியை சேர்த்து வைக்கிறது பறக்கும்போது இறக்கைகளை உயர்த்தி தாழ்த்தி மற்றும் சுழற்சிக்கு  உதவும் தசைகள் பெரும்பங்கு வகிக்கின்றன இதற்காக இரண்டு கோட்பாடு மேலும் நான்கு இயற்கை கோட்பாடு தத்துவங்களின்படி  முன்னங்கால்களில் இருக்கும் சதைகளும் தொடர்ந்து இயங்கி மிக வேகமாகவும் படிப்படியாகவும்  பறக்க ஏதுவாகிறது.பெரிதாகவும் மற்றும் வலிமையான இறக்கைகளைக் கொண்டவை இயற்கை நிலையிலேயே  மாற்றமடைந்து இவை காற்றில் பறப்பதற்கேற்ற சிறந்த மாற்றமடைய செய்கிறது  என்கிறார் பேரா கருப்பண்ணன். பறவைகளில் பறக்க உதவும் உறுப்புகள் உடலில் உட்புறத்தில் அமைந்துள்ளன முதுகெலும்புள்ள மற்றும் பிராணிகள் இடத்தைவிட பறக்கும் நிலையில் முன்னங்கால்களில் மற்றும் பல குழப்பம் உள்ள மாற்றங்கள் தோன்றியுள்ளன பின்னங்கால்களில் அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதில்லை .மற்றும் பழக்கம் இல்லை ஆனால் பறவைகள் சில முக்கியமாக மற்றும் சிறப்பான சந்தர்ப்பங்களினால் சிறப்படைய இரண்டாம் வகை பலமான உறுப்புகளைக் கொண்டுள்ளன. அதாவது இறக்கைகள் பறப்பதற்கும் மற்றும் கால்கள் நடக்கவும் ஓடவும் மற்றும் நீரில் நீந்தவும் உதவுகின்றன .குணாதிசயங்கள் பறவைகள் பரிணாம முறையில் பறக்கும் பரப்பும் அமைப்பை பெற முக்கிய காரணமாக அமைகின்றன என்கிறார்கள் பறவைகள்  ஆய்வாளர்கள்.

உபாசகர் வாரியார் தம்பதிகளைக்  கண்டால் நலமா குழந்தை உண்டா என்று கேட்பாராம் இல்லை என்று சொன்னால் அப்படிச் சொல்லாதே இனிமேல்தான் என்று சொல் என்பாராம். அதுபோல் வலசை போதல் பறவைகள் மனிதனுக்கு மட்டுமா இன்னும் இருக்கிறது என மீன்களும் பூச்சிகளும் கூட வலசை போதல்  என இயல்பாக இருக்கிறது..

 நாராய் நாராய் செங்கால் நாராய்/ பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன /  பவளக் கூர்வாய் செங்கால் நாராய்/  நீயும் உன் பெடையும் தென் திசை குமரியாடி வடதிசை ஏகுவராயின்.. என்ற பாடல்  போன்று தமிழ் இலக்கியங்களில் வலசை குறித்த பல பகுதிகள் உள்ளன.
உதிரிச் செய்தியாக  இருந்தாலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியொன்று. வலசை போகாத வண்ணத்துப்பூச்சிகள் பற்றியது கோவையில் உள்ள ஆனைகட்டி வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு வழக்கமாக வலசை போதலில் அக்கறை கொள்ளும் பட்டாம்பூச்சிகள் சென்ற ஆண்டு ( 2017 ) அந்த வலசை போகும் காலம் கடந்தும் இடம் பெறவில்லை
.வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது , அதனால் தட்பவெப்பச் சூழலில் ஏற்பட்டிருக்கும் விபரீதங்கள்,  பட்டாம்பூச்சிகளுக்கான இருப்பிடம் பாதிக்கப்பட்டிருப்பது,  வறட்சி போன்ற காரணங்களால் பட்டாம்பூச்சிகள் வலசை போகாமல் இருக்கலாம் என்று அறியப்பட்டிருக்கிறது.
இடம்பெயரும் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் கணிசமாக குறைந்து வருவதும் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .


  இடம்பெயரும் மனிதர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லாதபடி சாதாரண மனிதனுக்கு  சமூகப் பாதுகாப்பு இல்லாமல் அநாதை, அகதி என்ற வகையில் ஆகிப் போவதை கொரோனா காலம் காட்டுகி