சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 7 மார்ச், 2026
பறவைகள் கணக்கெடுப்பு 16/2/26 இறுதி தினம்
subrbaharathimanian
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களும் இயற்கை சூழல் ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அதாவது பிப்ரவரி நடுப் பகுதியில் உலக கொள்ளை புற கணக்கெடுப்பு தினம் மூன்று நாட்கள் உபசரிக்கப்பட்டு பறவைகளை கவனித்து அதைப் பற்றிய தகவல்களை சேகரிக்க ஜி பி பி சி என்ற பெயரில் கொல்லைப்புற பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கனவு இலக்கிய, இதழும் கனவு சிறார் மன்றம் மற்றும் முகவரி ஊடகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தினமும் 15 நிமிடம் காலையில் கணக்கெடுப்புக்கு வழிகாட்டுதலோடு கணக்கெடுப்பு நிகழ்த்த நகரின் முக்கியமான 14 வகைகளான பறவைகளின் புகைப்படம் மற்றும் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டது.
இன்று காலை 13/2/26 கனவு அலுவலகம் அருகே உள்ள சிறார் மன்றத்தில் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் மற்றும் ஓவியர் தூரிகை சின்னராசு ஆகியோரின் உதவியுடன் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாளையும் நாளை மறுநாளும் காலை 15 நிமிடம் அதே குறிப்பிட்ட இடத்தில் வரும் பறவைகளை கவனித்து அவர்களின் எண்ணிக்கைகளை சேகரித்து மொத்தமாக மூன்று நாட்களுக்குப் பிறகு ஜிபி பிசி அமைப்புக்கு இணையம் மூலம் பகிரப்படும்.
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடக்கும் இந்த கணக்கெடுப்பின் மூலம் பறவைகளின் வலசை மற்றும் அவைகளின் சூழல் அவைகளின் எண்ணிக்கை குறைபாடு அல்லது கூடுதல் போன்றவற்றால் நாம் சமூகத்திற்கு மட்டுமல்லாது பள்ளி மாணவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
வள்ளுவர் கூட தனது இரண்டு திருக்குறள்களில் இதை ஆழமாக வலியுறுத்துகிறார்.
எண்ணென்ப யான எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ற வாழும் உயிர்க்கு.
பகுத்துண்டு பள்ளியில் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றில் எல்லாம் தலை
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இன்றைய சூழலில் இந்த சுற்றுச்சூழல் பணியில் சூழல் சார்ந்து பெரும்பாலும் தன் எழுத்துப் பயணத்தை தொடரும் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்கள் சூழல் சார்ந்த நாவல்களும் கட்டுரைகளும் தற்பொழுது திரைக்கதைகளும் கூட எழுதிப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
ஓவியரும் குழந்தை எழுத்தாளரும் சிறார் கிரண் வளர் கல்வி செயல்பாட்டாளருமான தூரிகை சின்னராசு அவர்களும் பல்வேறு கட்டுரைகளை பிரபல பத்திரிகைகளில் எழுதியதோடு மட்டுமல்லாமல் தான் பணியாற்றிய பள்ளிகளில் பறவைகள் கவனித்தல் மன்றம் மூலமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளை கவனித்தல் அவைகளை ஓவியம் ஆக்கி கண்காட்சி வைத்தல் மற்றும் பறவைகள் கணக்கெடுத்து போன்றவற்றை தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகிறார்.
இந்த சீரிய பணி மூலம் நாம் எதிர்கால பூமியை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் மற்றும் நாம் எவ்வாறு இயற்கை சார்ந்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது இதன் நோக்கம்.
பறவைகள் தான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஒரு பள்ளியில் சங்கிலியின் மிக முக்கியமான ஒரு விடயமாக இருக்கிறது. பறவைகள் அழிந்து வரும் நிலையில் அவர்களை காப்பாற்றுவதன் மூலம் இந்த பூமியின் பல்லுயிர் உயிர் சூழல் மிகவும் பாதுகாப்பாக இன்னும் பல ஆண்டுகள் இயற்கை எய்தி விடாமல் இருக்க நமக்கு உதவும்.
0
பறக்கும் நண்பர்களை கணக்கெடுத்து சிறக்கலாம் வாங்க...
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை கவனித்தல் செயல்பாட்டாளர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களைபறக்கும் நண்பர்களை கணக்கெடுத்து சிறக்கலாம் வாங்க...
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை கவனித்தல் செயல்பாட்டாளர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களை கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது.
வரலாறு
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். மேலும் இதில் உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களும் கூடுதலாக ஆதரவளித்து பங்கேற்றுள்ளன. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்புடன் ஒத்துப்போகும் வகையில் பல தனித்தனி பறவைக் கண்காணிப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. . நிகழ்வின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் தொழில்முறை அல்லாத பங்கேற்பாளர்களின் திறன்களில் உள்ள குறைபாடுகளை சமாளிப்பதற்காக நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. நிகழ்வின் விளைவாக வரும் தரவுகள் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பொதுவாக பறவைகளின் வாழ்விடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களும் இதில் ஈடுபடலாம். இந்த கணக்கெடுப்பைப்பற்றிய தங்களின் சந்தேககங்களுக்கு பறவை கவனித்தலில் அனுபவம் கொண்டவரும், குழந்தைகள் எழுத்தாளருமான தூரிகை சின்னராசு அவர்களை கீழ்க்கண்ட எண்ணில் நீங்கள் தொடரபு கொண்டு விளக்கம் பெறலாம். தங்களின் செயல்பாட்டை உறுதி செய்ய தங்களின் பெயர், தொலைபேசி எண் : அல்லது மின்னஞ்சலை 9894111383 என்கிற புலனை என்னிலும் பதிவிடலாம். .
GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்.
இது போன்ற உலகளாவிய, நாடுதழுவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை வெகு விரைவில் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என்கிற ஒரு (தவறான) செய்தியை பலரும் சொல்லி வந்த நிலையில், நடத்தப்பட்ட நாடு தழுவிய citizensparrow எனும் திட்டத்தின் மூலம் (2012, 1 ஏப்ரல் -15 ஜூன் வரை) இணைய கணக்கெடுப்பு (online survey) நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின் வாயிலாக சிட்டுக்குருவிகள் இந்தியாவில் பல இடங்களிலும் பரவியிருப்பதும், பல இடங்களில் நல்ல எண்ணிக்கையில் இருப்பதும், குறிப்பிட்ட ஓரிரு மாநகரங்களில் அருகி வருவதும் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இங்கே காணலாம்.
மக்கள் அறிவியல் (citizenscience)
இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (citizenscientist)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC)
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்).
3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (18-19 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
eBird இணையதளம்
ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள்.
பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்
இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும்.
நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும்
பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும். நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும்.
பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும்.
ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்).
தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல்.
உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல்
நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இப்போது ஒரு மக்கள் விஞ்ஞானி!
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள். கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது.
வரலாறு
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். மேலும் இதில் உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களும் கூடுதலாக ஆதரவளித்து பங்கேற்றுள்ளன. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்புடன் ஒத்துப்போகும் வகையில் பல தனித்தனி பறவைக் கண்காணிப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. . நிகழ்வின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் தொழில்முறை அல்லாத பங்கேற்பாளர்களின் திறன்களில் உள்ள குறைபாடுகளை சமாளிப்பதற்காக நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. நிகழ்வின் விளைவாக வரும் தரவுகள் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பொதுவாக பறவைகளின் வாழ்விடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களும் இதில் ஈடுபடலாம். இந்த கணக்கெடுப்பைப்பற்றிய தங்களின் சந்தேககங்களுக்கு பறவை கவனித்தலில் அனுபவம் கொண்டவரும், குழந்தைகள் எழுத்தாளருமான தூரிகை சின்னராசு அவர்களை கீழ்க்கண்ட எண்ணில் நீங்கள் தொடரபு கொண்டு விளக்கம் பெறலாம். தங்களின் செயல்பாட்டை உறுதி செய்ய தங்களின் பெயர், தொலைபேசி எண் : அல்லது மின்னஞ்சலை 9894111383 என்கிற புலனை என்னிலும் பதிவிடலாம். .
GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி.
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும்.
இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்.
இது போன்ற உலகளாவிய, நாடுதழுவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை வெகு விரைவில் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என்கிற ஒரு (தவறான) செய்தியை பலரும் சொல்லி வந்த நிலையில், நடத்தப்பட்ட நாடு தழுவிய citizensparrow எனும் திட்டத்தின் மூலம் (2012, 1 ஏப்ரல் -15 ஜூன் வரை) இணைய கணக்கெடுப்பு (online survey) நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின் வாயிலாக சிட்டுக்குருவிகள் இந்தியாவில் பல இடங்களிலும் பரவியிருப்பதும், பல இடங்களில் நல்ல எண்ணிக்கையில் இருப்பதும், குறிப்பிட்ட ஓரிரு மாநகரங்களில் அருகி வருவதும் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இங்கே காணலாம்.
மக்கள் அறிவியல் (citizenscience)
இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (citizenscientist)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC)
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்).
3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (18-19 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
eBird இணையதளம்
ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள்.
பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்
இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும்.
நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும்
பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும். நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும்.
பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும்.
ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்).
தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல்.
உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல்
நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இப்போது ஒரு மக்கள் விஞ்ஞானி!
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்.
From subrabharathimanian 9486101003
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)