சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 21 டிசம்பர், 2025
ஒரு நாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2025
0
( சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட உலகக் குறும்படங்கள், ஆவணப்படங்கள் , திரைப்படங்கள் திரையிடல்)
0
The shadow Dreams
சுப்ரபாரதிமணியனின் ” திரை “ ( உலகத்திரைப்பட விழா அனுபவ நாவல் )
நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு ..Rs 350 Coral Publn.
0
சுற்றுச்சூழல் கவிதைகள் வாசிப்பு , சுற்றுச்சூழல் கதைகள் வாசிப்பு
உரையாடல்கள், சிறார் செயல் பாடுகள்…
0
21/12/25 காலை பத்துமணி முதல்..
டாப்லைட் நூலகம், பல்லடம் சாலை, திருப்பூர்
வருக..
வரவேற்கும்: கனவு/மறுபக்கம்/டாப்லைட் நூலகம்
தொடர்புக்கு: இந்துமதி நூலகர் ( 95667 11643 )
காமராஜர் 122
முதன் முறையாக சென்றேன் அமரர் காமராஜர் நினைவு இல்லம் , விருதுநகரில்.
அவர் வாழ்க்கை பற்றிய பல தகவல்கள். அரிய புகைப்படங்கள். நல்ல பராமரிப்பு
பல லட்சக்கணக்கான செலவில் அமைக்கப்பட்ட அவரின் நினைவு மண்டபம் விருதுநகர் ஊருக்கு வெளியே சரியான பராமரிப்பு இல்லாமல் மோசமாகக் கிடக்கிறது. தமிழக அரசு அதை கவனிக்கலாம்
0
நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.
இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.
12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
முதலமைச்சர் பதவி
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு
அப்படி அவர் என்ன செய்தார்?
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.
கல்விக்கு அளித்த முக்கியத்துவம்
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.
வேளாண்மையும் தொழிற்துறையும்
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.
இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.
காமராஜர் திட்டம்
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
எளிமையான வாழ்வு
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!
ஆதாரம் : http://www.vallamai.com/
நன்றி : ஜெயந்தி பத்மநாபன் (லேடி ஸ்விங்ஸ் வலைதளம்)
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் 100 வயது
. சந்தித்தேன் . காந்தி கிராமியப் பல்கலைக்கழகம், சின்னளப்பட்டியில்.
திருப்பூரில் வாழ்ந்த சர்வோதய சங்க நடவடிக்கைகளின் போது திருப்பூர் வாழ்க்கை பற்றிய சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். கொஞ்சம் வாசிக்கிறார். தன் காரியங்களை தானே செய்து கொள்கிறார்.
0
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (பிறப்பு: 1926) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் என இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் ரைட் லவ்லிவுட் விருதைப் பெற்றார். 2020 இல் இந்திய அரசின் பத்ம பூசண் விருதைப் பெற்றவர்.
பிறப்பு மற்றும் கல்வி
[தொகு]
1926 ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் குடும்பத்தில் ராமசாமி-நாகம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் கிருஷ்ணம்மாள். இவருடன் சேர்த்து மொத்தம் 12 குழந்தைகள். பட்டிவீரன்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்தார். மதுரையில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார் அங்கு ஆங்கில கல்வி பயின்றார்.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆலிஸ் மகாராஜா என்பவர் கிருஷ்ணமாவை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டார். இவரே கிருஷ்ணம்மாவுக்கு டாக்டர் சௌந்தரம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.அதன் பிறகு, டிவிஎஸ் ஐயங்காரின் மகளான செளந்திரம்மாளின் இலவச இல்லமான மீனாட்சி விடுதியில் சேர்ந்தார்.[1]
இளமைக்காலம்
[தொகு]
ஏழ்மை மற்றும் சமூக நீதி பற்றிய ஆர்வம் வர இவரது தாயார் நாகம்மாளின் பேறுகால இன்னல்கள் காரணமாக இருந்துள்ளன.[2] 1946 இல் காந்தி மதுரை வந்தபோது அவரால் ஈர்க்கபட்டு காந்தியம் மற்றும் சர்வோதய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அங்கு சர்வோதயாவில் பணி செய்த சங்கரலிங்கம் ஜெகன்னாதனைக் கண்டார், பின்னாளில் அவரது மனைவியானார். சங்கரலிங்கம் ஜெகன்னாதன் வளமையான குடும்பத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும் 1930ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்க அறைக்கூவலுக்கு செவிமெடுத்து அதில் பங்கு பெற்றார்.[3] ஒரு கட்டத்தில் கிருஷ்ணம்மாள் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார்.[2] மேலும் அவர் 1958ல் மார்டின் லூதர் கிங்கை சந்தித்துள்ளார்.[4] 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்.[3] சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த சங்கரலிங்கம் மற்றும் கிருஷ்ணம்மாள் 1950ல் சூலை மாதம் 6 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டனர்.[2]. பின்னர் அவர் 2006ல் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தின் பவள விழாவிற்குத் தலைமை தாங்கினார்.[5]
நிலமற்றவர்களுக்கு நிலம்
[தொகு]
1950 மற்றும் 1952 இடையே இரண்டு ஆண்டுகளாக சங்கரலிங்கம் ஜெகநாதன் வட இந்தியாவில் வினோபா பாவே பூமிதான இயக்கத்தில் பங்கு கொண்டார். அப்போது ஆறில் ஓரு பங்கினை நிலமற்றவர்களுக்கு தங்கள் நிலங்களிலிருந்து நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபா பாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். இதற்கிடையில் கிருஷ்ணம்மாள் தனது ஆசிரியர் பயிற்சியினைச் சென்னையில் முடித்தார்.
செயல்பாடுகள்
[தொகு]
கிராமத்தில் உள்ள ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும்,நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom (LAFTI) திட்டத்தை 1981 ல் தொடங்கினார்கள்.[6]
நாகை மாவட்டத்தில் கீழ வெண்மணி என்னும் சிற்றூரில் 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் உடலுடன் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968இல் நடந்தது. அக்கொடுமையைக் கண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்" (லாப்டி) என்னும் அமைப்பைத் தொடங்கினர். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள்.
2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தம் கணவர் மறைந்த பின்னரும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படம்
[தொகு]
கிருஷ்ணம்மாள்-ஜகன்னாதன் தம்பதியினரின் சேவையை மையக் கருத்தாகக் கொன்டு, அரவிந்த் மாக் இயக்கத்தில் சைய்யது யாஸ்மீனால் தயாரிக்கப்பட்ட 'தட் பையர்டு ஸோல்' ('That Fired Soul') என்ற குறும்படம் 2014 சென்னை சர்வதேச குறும்பட விழாவில் திரையிடப்பட்டது.
பெற்ற விருதுகள்
[தொகு]
• சுவாமி பிரணவானந்தா அமைதி விருது(1987)
• ஜம்னலால் பஜாஜ் விருது (1988
• பத்மஸ்ரீ விருது (1989)
• பகவான் மகாவீர் விருது (1996)
• சம்மிட் பௌன்டேசன் விருது --சுவிட்சர்லாந்து (1999)
• ஓப்ஸ் பரிசு --சியாட்டில் பல்கலைக்கழகம் (2008)
• மாற்று நோபல் பரிசு
• ரைட் லைவ்லிஹூட் விருது
• பத்ம பூசண்[7] (2020) wikipidia
புதிய புத்தகம்
கால நேரம் எதுவுமில்லை
சூழலியல் : சமகால சவால்கள்..
சுப்ரபாரதிமணியன்
பின் அட்டைக் குறிப்புகள் :
சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளில் என் கவனம் சாயத்திரை நாவல் மூலம் அறிமுகமானது. பின்னர் புத்துமண், வெப்பம் போன்ற நாவல்களில் தொடர்ந்தேன்.
பொதுவாசகர்களுக்கான அக்கறை என்றுகட்டுரைத்தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தேன்.
அவை அதிகமான விற்ற என் நூல்களின் பட்டியலில் சேர்ந்தன.
குப்பை உலகம் முதல், புலரியின் சாம்பல் நிறம் வரை இதுவரை பதினைந்து சுற்றுச்சூழல் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன.’
அந்த வரிசையில் கடந்த ஓர் ஆண்டாக நான் வெவ்வேறு இதழ்களிலெழுதியவை இக்கட்டுரைகள்.
--- சுப்ரபாரதிமணியன்
சமர்ப்பணம் :
பேரா. அலிபாவா தமிழ்த்துறைத் தலைவர்
( திருச்சி பாரதிதாசன் பல்கலைக்க்ழகம் )
உயிர்மை இதழ்
சிறுகதை
வெட்டுப்பட்டவை : சுப்ரபாரதிமணியன்
இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின.
1. ஹெலன்.. இளம் விதவை.அவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். மாரடைப்பு காரணமாக. ஹலனுக்கும் அவருக்கும் பதினைந்து ஆண்டுகள் வயது வித்யாசம்.. கணவர் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல உடல் கட்டுடன் இருப்பவர் ஹெலன்
2. மருத்துவர் ரகுராமன். மனோதத்துவ மருத்துவர். சமீபத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் ஞாயிறில் அவர்களின் கூட்டத்திலிருந்துத் தப்பிப்பதற்காக பிரார்த்தனைக்கு வருவதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். நன்கு .புல்லாங்குழல் வாசிப்பார்..
3. தோழர் கே. குப்புசாமி.எண்பதுகளில் பொதுவுடமை இயக்கத்தில் உறுப்பினராகவும் தீவிரமானவராகவும் இருந்தவர். அப்போது கொஞ்சம் தெரு நாடகங்களில் நடித்திருப்தை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.அதுவும் அயனஸ்கோவின் த லீடர், சங்கரப்பிள்ளையின் கழுதையும் கிழவனும் நாடகங்கள் தமிழில் நடத்தப்படபோது அதில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தது.. இப்போது ரியல் எஸ்டேட் வியாபாரம். பொதுவுடமைக்கட்சிகளுக்கு தாரளமாக நன்கொடை தருவது அவர் வழக்கம். பழக்க விசுவாசம் என்பார். ஆளும்கட்சிகளுக்கு அதிகம் தருவார். அவர் தேவ சங்கீதம் கேட்க இங்கு வருவார்.
4. நவீன சூத்திரதாரி என்ற சிறுபத்திரிக்கையைத் தொண்ணூறுகளில் நடத்திய ஆதி பக்தவச்சலம் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார்.தொகுப்பாக வந்ததில்லை. தீவிர பிஜேபி ஆதரவாளராகி விட்டார். ஜக்கி வாசுதேவ் முகசாயல் வந்து விட்டது அவரின் பேச்சிலும் கூட ஜக்கி பாதிப்பு. இப்போது. அவரின் முகநூல் குறிப்புகள் படிக்கப் பதட்டமாக இருக்கும். நிறைய வசவுகள்
எதிர்கட்சிக்காரர்கள் மீது இருக்கும். பயப்படவே வைக்கும்.
5. பாதிரியாரின் பேச்சில் பவுத்தம், ஜென், மற்றும் கிறிஸ்துவோடு பல விசயங்கள் இருப்பதால் அவற்றைக்குறிப்பெடுக்க வருபவர் குருலிங்கம். இளம் பெண்.கிறிஸ்துவ இலக்கியத்தில் போதனை என்றத் தலைப்பில் ஆய்வு செய்பவர்.
ஞாயிற்று கிழமை வழக்கம் போல லாரன்ஸ் பாதிரியார் திருப்பலியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இன்று தேவாலயத்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. ஈக்கள் மொய்த்தத் தின்பண்டம் போல்.
தேவாலயத்தினுள் ஆண்கள் அமர பதினைந்து வரிசையில் பத்து சேர்கள் வீதம் இடதுபுறமும், பெண்கள் அமர அதே போல வலது புறமும் போடப்பட்டிருந்தது
சிறுவர்,சிறுமியர் பீடத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்திருந்தார்கள்.கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்தார்கள்.
எலுசம்மா முன்னால் போய் கம்பளத்தில் அமர்ந்துக்கொண்டார்.அவளது மடியில் மேரி அமர்ந்திருந்தாள்.
"மேரி,கீழெ உட்காரு.
ஃபாதர் பாத்துட்டே இருக்கார்.அப்புறம் பூசெ முடிஞ்சதும் உன்னெ கூப்பிட்டு திட்டுவார்."
"சரிம்மா நான் கீழேயே உட்காருறேன்"
எலுசம்மா மடியிலிருந்து இறங்கி கீழே கம்பளத்தில் உட்கார்ந்தாள் மேரி. முதல் வாசகம் முடிந்த பின் ,பாடல் குழுவினர் பாடல் பாடினார்கள். அதை தொடர்ந்து
இரண்டாம் வாசகம் படிப்பதற்காக,
அலோசியஸ் எழுந்து பீடத்திற்குச் சென்றார்.
மைக் முன்னால் நின்று,அலோசியஸ் பைபிளை புரட்டினார்.
பிறகு எதிரே இருந்த மக்களை பார்த்தார்,
திருதூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்.
அதிகாரம் - 1 : 18 முதல் 22 வரை.
சகோதர,சகோதரிகளே,
"நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும்,'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை.கடவுள் உண்மையுள்ளவராய்
இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே.நானும்,
சில்வானும், தீமொத்தேயுவும் உங்கள் இடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிருஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல.மாறாக அவர் 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர்.அவர் சொல்லும் 'ஆம்' வழியாக கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறவேறுகின்றன. அதனால் தான் நாம் கடவுளை போற்றி புகழும் போது,அவர் வழியாக 'ஆமென்' எனச் சொல்லுகிறோம்.
கடவுளே எங்களை உங்களுடன் சேர்த்துள்ளார்.இவ்வாறு கிருஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர்
உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையை பதித்தார்"
அலோசியஸ் மீண்டும் மக்களை பார்த்து
"இது ஆண்டவரின் அருள்வாக்கு" என்றார் சற்றே புன்னகையுடன். அவர் தோள்கள் விரிந்தன சட்டென.
அனைவரும், இறைவனுக்கு மகிமை.
அலோசியஸ் இரண்டாம் வாசகத்தை படித்து முடித்து விட்டு பைபிளை மூடிவைத்தார்.பிறகு கீழே இறங்கினார்.
அடுத்ததாக நற்செய்தி வாசகம் படிப்பதற்காக
பாதிரியார் லாரன்ஸ் இருக்கையிலிருந்து எழுந்தார்.அப்போது
பாடல் குழுவினர் "அல்லேலூயா... அல்லேலூயா...
அல்லேலூயா... அல்லேலூயா... என்று பாடி நிறுத்த, பாதிரியார்
'நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன்.
நீங்கள் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல'
என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா..."
என்று பாதிரியார் ராகத்துடன் பாட, தொடர்ந்து பாடல் குழுவினர்,
"அல்லேலூயா... அல்லேலூயா... அல்லேலூயா.. அல்லேலூயா..."
பாடி முடித்தனர்.அலைகளின் இரைச்சல் போல் ஓய்ந்தது.,
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,அவர் அணிந்திருந்தவெள்ளை அங்கியின் மீது போட்டிருக்கும் சிவப்பு அங்கியை சரிசெய்தார்.சிலர் அப்போது தான் தேவாலயத்திற்கு
வந்து கொண்டிருந்தார்கள்.
பாதிரியாரின் கண்கள் அந்த ஐந்து பேரைத் தேடின
"பிலோ,நற்செய்தி வாசகம் வந்திருச்சு,
இப்ப சர்ச்சுக்குள்ளெ போன ஃபாதர் ஒரு மாதிரியா பார்ப்பார்.
அப்புறம் பிரசங்கத்துல நம்மளெ மேற்கோள் காட்டி பேச ஆரம்பிச்சிருவார்.அவர் அதிலெ கில்லாடி "
"அதுக்குன்னு வெளியவே நின்னிட்டு இருக்க முடியுமா? வாக்கா உள்ளே போலாம்"
பிலோவும்,லிசாவும் தங்கள் சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக்கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தார்கள்.
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,பைபிளை
திறந்தார். மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள்.சடவுடன் சில் முதியோர்கள் எழுந்தார்கள்.
"பிதா,சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால..."
அனைவரும் நெற்றியில் சிலுவை அடையாளத்தை போட்டுக்கொண்டு, "ஆமென்" என்றார்கள்
"புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து,வாசகம்.
அதிகாரம் 15. இறைவசனங்கள் 18 முதல் 21 முடிய...
"அக்காலத்தில் இயேசு தன் சீடரை நோக்கி கூறியது:
உலகு உங்களை வெறுகிறது என்றால், அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்று தெரிந்துக்
கொள்ளுங்கள்.நீங்கள் உலகை சார்ந்தவர்களாக இருந்திருந்தால்,தனக்கு சொந்தமானவர்கள் என்னும் முறையில் உங்களுக்கு அன்பு செலுத்தி இருக்கும்.
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்.
நீங்கள் உலகை சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.பணியாளர் தலைவரை விட பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்கு கூறியதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.என்னை அவர்கள் துன்புறுத்துவார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.என் வார்த்தையை கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைபிடிப்பார்கள்! என் பெயரின்பொருட்டு
உங்களை இப்படியெல்லாம்நடத்துவார்கள்.
ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துக்
கொள்ளவில்லை.'
இது வாழ்வு தரும் ஆண்டவரின் நற்செய்தி."
மக்கள் அனைவரும், "ஆண்டவரை உமக்கு மகிமை." என்றார்கள்
அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். இருக்கை இல்லாதவர்கள் சம்மணம் போட்டு,தரையில் விரித்து இருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்தார்கள். பாதிரியார் தொண்டையை கனைத்துச் சரிசெய்துவிட்டு, பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
"கிருஸ்துவின் அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவசனத்தில் புனித யோவான் என்ன சொல்கிறார்,நீங்கள் இந்த உலகை சார்ந்தவர்கள் அல்ல.
காரணம் நீங்கள் இயேசு கிருஸ்துவால் தேர்ந்துக்
கொள்ளப்பட்டவர்கள். அவருடைய பிள்ளைகள்.
ஆனால் இந்த மறை உண்மையை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.இதை தான் ஒரு ஜென் ஞானி
சொல்கிறார்,
' மனிதன் தன் சொந்த நிழலில் நின்றுக்
கொண்டே, ஏன் இருட்டாக இருக்கிறது' என்று கவலை கொள்கிறான்.' என்றார்.
"மேலும்,இயேசு கிருஸ்து
மக்களுக்கு அன்பை போதிக்கிறார்.நீ உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்' என்கிறார்.
இதைதான் ஒரு ஜென் தத்துவம், 'எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ, அப்போதல்லாம் அன்பாய் இருங்கள்.
எப்போதும் அன்பாய் இருப்பது சாத்தியமே' என்கிறது."
உடனே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் எழுந்தனர் ,அவர்கள் எழுந்ததில் அவசரம் இருந்தது.
"ஃபாதர் நீங்க என்ன எப்பவும் பிரசங்கத்துல ஜென் தத்துவங்களை சொல்றீங்க?"
"கிருஸ்துவமும், பௌத்தமும் கலந்ததே ஜென் என்று உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இதை சொன்னேன்"
"ஃபாதர் இது சர்ச், சர்வமத ஆன்மீக மேடையில்லை.
அதனால கிருஸ்வத்தை மட்டும் சொல்லுங்க.
இல்லெ எடத்தெ காலி பண்ணுங்க"
சத்தம் வலுத்தது. குரலில் ரகளை செய்யத் தொடங்கினார்கள்.
உடனே அருகே அருகில் அமர்ந்திருந்த மற்றவர்கள்,அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.குரல்களும் கைகளும் சமாதானப்படுத்த உயர்ந்தன.
"தம்பி,பூசெ முடியட்டும். அப்புறம் ஃபாதர் ரூம்ல
வெச்சு இதெ பேசிக்கலாம்"
இளைஞர்கள் அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தேவாலயத்திலிருந்து விரைசலாக வெளியே வந்தார்கள்.
அவர் எதிர்பார்த்த ஐந்து பேரும் இன்று வரவில்லை என்பது சிறு வருத்தமாக இருந்தது.
0
மக்கள் கூட்டமாக தேவாலியத்திலிருந்து வெளியே வந்தார்கள். சலசலப்புடன் கூட்டம் கலைந்தது.ஃபாதர் லாரன்ஸ் சர்ச் உள்ளறைக்கு சென்று அங்கியின் மேல் தரித்திருந்த சிவப்புடையை கழற்றி வைத்தார்.உதவியாளர் அன்று எடுத்த உண்டியலை எடுத்துக்கொண்டு ஃபாதர் ரூமுக்கு போனார்.ஃபாதர் அவருக்கு பின்னாலயே போனார்.சர்ச்சுக்கு வெளியில்,
இளைஞர்கள் கூட்டமாக நின்று கமிட்டி உறுப்பினர்களிடம் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் சற்று கூடிக்கொண்டிருந்தது.அவர் காதுகளில் விழும் அளவில் சத்தம் இருந்தது.
"இங்கெ பாருங்க நீங்க சொன்னதால தான் நாங்க பேசாம இருந்தோம்.இல்லெ பாதி பூசெயிலயே ஃபாதரெ வெளியெ துரத்தி இருப்போம்."
"இங்கெ பாரு தாமஸ்.எல்லா விசயத்திலயும்,
எடுத்தேன்,கவுத்தேன்னு பேசக்கூடாது."
"அவர் நம்ம சர்ச்சுல நின்னுட்டு,நம்ம மதத்தெ விட சிறந்தது பௌத்தமுன்னு சொல்லுவார்.அதுக்கு நாம தலையாட்டுனுமா?"
"அவர் சொல்றெ விசயத்துல இருக்குறெ நல்லதெ நாம எடுத்துக்கலாம். மத்ததை விட்டுடலாம்"
"மத்ததெ விட்டுடலாமா? இல்லெ மதத்தெ விட்டுடலாமா?
இங்கெ பாருண்ணெ இந்த சப்பக்கட்டு எல்லாம் வேண்டாம்.
இப்ப ஃபாதர் ரூமுக்கு போறோம்.இதெ பத்தி பேசுறோம்."
"ஆண்ட்டோ இப்ப தான் பூசெ முடிஞ்சு போயிருக்கார்.
கொஞ்சம் ஓய்வெடுப்பார்.இந்த நேரத்துல நாம போய் பிரச்சனை பண்ணுறது நல்லா இருக்காது.நாம எல்லாம் இப்ப வீட்டுக்கு போலாம்,மதிய சாப்பாடு முடிச்சிட்டு, சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு நாங்க கமிட்டி மெம்பர் வந்து ஃபாதர்கிட்டெ இதப்பத்தி பேசுறோம். அவர் ஒத்து வராட்டி,
இதபத்தி பிஷப் ஹவுஸ்ல புகார் பண்ணலாம்.அவங்க முடிவு பண்ணி,நம்ம சர்ச்க்கு புது ஃபாதரெ அனுப்புவாங்க.அதவிட்டுட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணுனா, நாளைக்கு நம்ம மதத்தை பத்தி அடுத்தவங்க கேவலமாக பேசுறெ நெனமைக்கு வந்துரும்"
"இங்கெ பாருங்க.
சார்லஸ் அண்ணன் சொல்றதுதான் சரி,நம்ம மதத்தை நாமளே கேவலப்படுத்தக்கூடாதுஅதனால சாயங்காலம் வரெ பொறுமையா இருங்க."
கமிட்டி மெம்பர் பேச்சை தட்டமுடியாமல்,
இளைஞர்கள் எல்லாம் சர்ச் வளாகத்திலிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள்.எறும்புகளின் வரிசையாய் சென்றார்கள்.
"இந்த பயலுகளெ சமாதானம் பண்ணுறதுக்குள்ளெ உயிரே போயிடுச்சு. சாயங்காலம் ஃபாதர்கிட்ட பேசி நாம ஒரு முடிவு எடுக்காட்டி,பயலுக பெரிய பிரச்சனை பண்ணீடுவானுங்க.
நம்மளெயும் விடமாட்டானுங்க"
"சரி சாயங்காலம் அஞ்சுமணிக்கு சுதா பேக்கரியில எல்லோரும் கூடுங்க.நல்ல ஸ்டாங்கா ஒரு டீ சாப்பிடுறோம்.அப்புறம் நேரா ஃபாதர் ரூமுக்கு போறோம்.பேசுறோம்."
"சரிண்ணே,அப்ப நாம கிளம்பலாமா?"
அனைவரும் தேவாலய வளாகத்திலிருந்து கலைந்து சென்றுக்
கொண்டிருந்தார்கள்.இதுவரை இங்கு நடந்தவற்றை எல்லாம் ஃபாதரின் உதவியாளர் பார்த்துவிட்டு,நேராக ஃபாதரிடம் போகிறார்.
"என்ன நிக்கோலஸ் கூட்டம் முடிஞ்சதா?"
"கூட்டம் முடிஞ்சது. முதல்லயே அந்த பயலுக போயிட்டாங்க. நம்ம கமிட்டி மெம்பர் மட்டும் தான் இவ்ளோ நேரம் பேசீட்டு இருந்தாங்க."
"என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?"
: அது தெரியலெ ஃபாதர்.நான் இங்கெ நம்ம தோட்டத்தில இருந்து தான் பார்த்தேன்.அதனால அவங்க பேசுன சில வார்த்தைகள் தான் கேட்டுச்சு.பிஷப் ஹவுஸ்,நாங்க பேசுறோம், கண்டீஷன்
அஞ்சுமணிக்கு மேலெ...இப்படிதான் கேட்டுச்சு."
"அவ்ளோதான் விசயம்.இதுபுரியலையா?"
"உங்களுக்கு புரிஞ்சதுங்களா? எனக்கு எதுவும் புரியலெ"
பொய்யாய் சில வார்த்தைகள் வந்து விழுந்தன.
"நிக்கோலஸ்,நம்ம கமிட்டி மெம்பர்ஸ் எல்லாம் சாயங்காலம்
அஞ்சு மணிக்கு மேலெ என்ன சந்திச்சு பேசப் போறாங்க.அவங்க கண்டீஷனுக்கு நான் ஒத்துக்காட்டி,அவங்க பிஷப் ஹவுஸ்ல என்ன பத்தி புகார் கொடுக்க போறாங்க.இவ்ளோ தான் விசயம்"
"ஃபாதர் எப்படி ஃபாதர்"
ஃபாதர் பதில் சொல்லாமல் சிரித்தார்.அவரின் வெண்மைப்பற்கள் பளிச்சிட்டன. முன்பே வெள்ளை ஆடையில் அவர் பளிச்சென்றிருந்தார்.
நிக்கோலஸ் தலையை சொரிந்தபடி நின்றார்.ஏகமாய் தாடியை வளர்த்துக் கொண்டார் சமீபத்தில்
"என்ன நிக்கோலஸ் என்ன வேணும் சொல்லு?"
"ஃபாதர்.. மாப்ளெ வந்திருக்காரு.இன்னைக்கு ஞாயிற்று கிழமை"
"உனக்கு ஒயின் பாட்டில் வேணும்.அதுதானே?"
நிக்கோலஸ் மௌனமாக சிரித்தார். அவனின் பற்களும் வெண்மையாகப் பளிச்சிட்டன.
"உள்ளெ போய் ஒண்ணு எடுத்துக்கோ"
உடனே,நிக்கோலஸ் உள்ளறைக்கு சென்று திருப்பலிக்கு பயன்படுத்தும் ஒயின் பாட்டிலில் ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி,பிறந்த குழந்தையை பாதுகாத்துக்கொண்டு வருவது போல கொண்டு வந்தார்.
ஃபாதரிடம் சொல்லிவிட்டு,வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்து மூடிவிட்டு,வண்டியை
அங்கிருந்து கிளப்பினார்.
வண்டி சத்தம் ஏதோ மயக்கத்திலிருக்கிற மாதிரி இருந்தது.
0
சமையல் அறையின் வாசம் எங்குமாய் பரவியிருந்தது,
"என்ன எலுசம்மா, சர்ச்சில நடந்த கூத்தெ பாத்தியா?"
"ஆமாக்கா,ஃபாதர் பிரசங்கம் வச்சிட்டு இருந்தாரு.திடீர்னு ஒருத்தர் எழுந்திரிச்சு, நிறுத்துங்கிறார்.ஃபாதர் அப்படி தப்பா எதுவும் சொல்லல. நல்ல விசயங்களெ தான் சொன்னார்."
"ஃபாதர் சொன்ன விசயத்துல இவனுங்களுக்கு பிரச்சனை இல்லை."
"அப்புறம் ஏன் இப்படி பண்ணுறாங்க"
திருவிழா சமயத்துல கலெக்ஷன் பண்ணுறெ பணத்துல கொஞ்சம் இவனுங்க சுருட்டிடுறாங்க.அதெ கண்டுபிடிச்ச ஃபாதர் இவனுங்களெ திட்டீட்டார். திட்டீட்டார்ன்னா கொஞ்ச அதிகமாவே திட்டீட்டார்.அன்னையில இருந்து இவனுங்க இந்த ஃபாதரை எப்ப இந்த சர்ச்சில இருந்து துரத்தலாமுன்னு காத்திட்டு இருந்தானுங்க.இப்ப ஃபாதரும் இப்படி பண்ணெ,இதெ இவனுங்க ஃபாதர் பங்கு மக்களெ மதமாற்றம் பண்ண பாக்குறார்ன்னு ரூட்டெ போடுறானுங்க. பவுத்தம், ஜென்ன்னு குழப்பறாங்க.. இதுதான் விசயம்."
” ஏக்கா நீ தான் இங்கெயெ இருக்குறெ? அப்புறம் வெளியில நடக்குறெ விசயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"
"அடிக்கடி என்னெ பாக்க அந்தோணியம்மாள்ன்னு ஒருத்தி வராளே? அவ எதுக்கு வர,என்ன பாக்கவெ? வெளியில நடக்குற சங்கதியெ எல்லாம் எங்கிட்ட சொல்லீட்டு சாப்பிட்டுட்டு போவா?"
"அப்ப அதுதான் உங்க உளவுத்துறையா?"
"அப்படியும் வெச்சுக்கலாம்.சரி வறுக்குறெ மீனெ ஃபிரிஜ்ல இருந்து வெளியில எடுத்து வை."
எலுசம்மா ஃபிரிஜ்ஜெ திறந்து மீனை எடுத்து வெளியில் வைத்தாள். அது மிளகாய்க் காரலுடன் சிவப்பாக இருந்தது. பிறகு வெங்காயத்தை வெட்டத் தொடங்கினாள்.சமையலறையில் அப்போதைக்கு வெங்காயம் வெட்டுப்பட்டது.அது சின்னக் குவியலாகிக் கொண்டிருந்தது.
0
வெளியே வெட்டுபட்டவையாக பல விசயங்கள் இருந்தன.
கிறிஸ்துவின் போதனைகள், ஜென், பவுத்தம். இவையெல்லாம் மீறி உள்ளூர் பகைமை, பொறாமை.வசூல் பிரச்சினை என்றபடி ..
அப்போதைக்கு வெட்டுபடலிருந்து தப்பிக்க சிலருக்கு ஒயின் பாட்டிலும் உதவியது.
0
புதன், 3 டிசம்பர், 2025
1
கனவு, டாப் லைட் நூலகம் ஏற்பாடு செய்திருந்த கவிதை முகாம் :30/11/25
இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
1.சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்த “ சுற்றுச்சூழல் பிரார்த்தன”
போப் ஆண்டவர் எழுதிய கால நிலை மாற்றம் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு அது.
2. தூரிகை சின்னராஜ் எழுதிய “ இயற்கைக்கு செயற்கையாக சிரிக்கத் தெரியாது “ பிரபல ஓவியர்கள் பற்றியக் கட்டுரை
இரண்டும் திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியீடு
பல்லடம் எஸ் எல் முருகேசு இயக்கிய “ தண்ணி டம்ளர் “ குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது
இது குடிக்கு எதிரானக் குரலை முன்வைத்தது.இவர் முன்பே முப்பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவர். சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட பள்ளி மறு திறப்பு , இரக்கம் உள்ளிட்டவை அவை.
0
கவிதை வாசிப்பு.. கல்லூரி மாணவி சிந்து நதி
கவிக்கோ ஆவணப் படம் திரையிடல்.
பல்லடம் புத்தகக் கண்காட்சி முத்திரை வெளியீடு
இவற்றுடன்
கவிதை முகாம் தொடங்கியது
ஐந்து குறும்படங்களால் களை கட்டியது
கவிதை முகாம் குறும்பட முகாம் ஆகிப் போனது
0
அமளி துமளி
2009ல் வெளிவந்த தாண்டவகோன் குறும்படம் திரையிடப்பட்டது.
அவரின் குடும்ப உறுப்பினர்கள் நடிகர்கள்
துள்ளல் மிகுந்த ஆரவாரமான படம்
எங்கோ சென்றிருக்க வேண்டியவர்
கொஞ்சம் பிசகி விட்டது
இனி மான் வேகம் தான்
0
முகாமின் துவக்கமாக கவிக்கோ அப்துல்ரகுமான் பற்றிய ஒரு மணி நேர ஆவணப்படம் திரையிடப்பட்டது.
Oபொதுவாக ஆவணப்படம் என்பது உண்மைத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்படுவதால் அதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது, சுருங்கச் சொன்னால் பார்வையாளர்களை அமைதியாக ஒரு மணி நேரம் உட்காரவைப்பது கடினம்.
ஆனால் விதிவிலக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் 51 நிமிடம் ஒடியதே தெரியாத அளவிற்கு நிறைய தகவல்களுடன் சுவராசியமாக சென்றது.
எண்பதுகளில் பலரும் எழுத்தாளர்கள் சுஜாதா,சாண்டியல்யன் ஆகியோரது கதைகளில் கிறங்கிக் கிடந்த காலகட்டத்தில், கவிதை மூலமாக பலரையும் தன்வசப்படுத்தியவர் கவிக்கோ.
அவரது எழுத்துக்களை வாசித்து அதன் மூலம் அவரை நேசித்தவர்கள் பலர் அவரைப்பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் அரங்கில் குழுமியிருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை ஆவணப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பூர்த்தி செய்திருந்தார்,கொஞ்சம் புகைப்படங்களும் அதை விடக் கொஞ்சமான வீடியோக்களையும் மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.கீட்டத்தட்ட 35 பேரை பேட்டி எடுத்து அதனை அழகாக எடிட் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில வினாடிகளே கடந்து செல்லும் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் அலட்சியம் காட்டாமல் மிக நுணுக்கமாக அந்த காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், தெளிவாக, வித்தியாசமான பிரேம்களாக ரசிக்கும்படி வைத்திருந்தார்.ஆவணப்படத்தின் நிறைவில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்,கவிஞர் ஜெயபாஸ்கரன் 'தாய்மொழி நாள்' என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார், ஆவணப்படம் குறித்து பேசும் போது நம்மிடம் அதிகம் போனால் நுாறு ஆளுமைகள் இருப்பர், அவர்களைப் பற்றி பேச, எழுத ஆவணப்படம் எடுக்க இயலாமல் போவது வருத்தம் தருகிறது, அந்த வருத்தத்தை துடைக்கும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வந்திருப்பதாக குறிப்பிட்டார்,சிவகுமார் தலைமை தாங்கினார் அஜயன் பாலா வாழ்த்துரை வழங்கினார்.இயக்குனர் பிருந்தா சாரதி ஏற்புரை நிகழ்த்தினார் அவரது ஏற்புரையில் கவிக்கோ ஆவணப்படம் இரண்டாம் பகுதியும் வெளிவருகிறது என்றார்.
மற்றும் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுடன் இணைந்து, தமிழ்க் கவிதை உலகில் முக்கியமான பங்களிப்பை செய்தவர். அவரது படைப்புகள் மூலம் தமிழ்க் கவிதை வடிவத்தை செழுமையாக்கினார். தமிழில் ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால்வீதி' மூலம், உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக கவிதையை வெளிப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்காக 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், 2017 ஜூன் 2 அன்று காலமானார். அவரது நினைவாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறந்த கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தேவையான வைப்பு நிதிக்காக தனது வீட்டையே விற்கச் சொன்னார் ,சினிமாவிற்கு பாட்டெழுத பலமான அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார் என்பது உள்ளீட்ட பல தகவல்கள் மூலம் கவிக்கோ மீதான மரியாதையை அதிகப்படுத்தும் அந்த ஆவணப்படம் அடுத்த முறை எங்காவது திரையிட்டால் அவசியம் பாருங்கள்..dinamalar
ட
மாலையில் நடைபெற்ற படிப்போம் பகிர்வோம் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அறிமுகம் செய்து பலர் பேசினர்.
நூலகர் இந்துமதி .. தூரிகை சின்ன ராஜ்.சிரிராம் ஆகியோரின் ஒருங்கிணைப்பு.
[ ] പ്രകൃതി പാഠങ്ങളിലേക്ക്
അവതാരിക
[ ] ഡോ സി ഗണേഷ്
പ്രകൃതി പാഠങ്ങളിലേക്ക് കുഞ്ഞുങ്ങളെ നയിക്കുന്ന ചെറിയ നോവലാണ് ചൂട്. പരിസ്ഥിതി സ്നേഹിയായ ശോഭ പ്രേംകുമാറിനാണ് ഈ പുസ്തകം സമർപ്പിച്ചിരിക്കുന്നത്. അധ്യാപികയും ചിത്രകാരിയും ബാലാവകാശ പ്രവർത്തകയും മനഃശാസ്ത്രജ്ഞിയുമായ ശോഭ പ്രേംകുമാറിന് ഈ പുസ്തകം സമർപ്പിക്കുന്നതിലൂടെ രചയിതാവായ സുപ്രഭാരതി മണിയൻ വലിയൊരു സന്ദേശം നൽകുന്നു. പ്രകൃതി സ്നേഹത്തിന്റെ മഹത് പൈതൃകം അടുത്ത തലമുറയിലേക്ക് കൈമാറേണ്ടതുണ്ട് എന്ന സന്ദേശമാണത്. കുട്ടികൾക്കായി രചിക്കപ്പെട്ടിരിക്കുന്ന ഈ നോവൽ വായിക്കുന്ന ഏതൊരു കുട്ടിയും കാലാവസ്ഥാ വ്യതിയാനത്തെക്കുറിച്ചും നമ്മുടെ പരിസ്ഥിതിയിൽ ഉണ്ടാകുന്ന മാറ്റങ്ങളെക്കുറിച്ചും കൂടുതൽ ചിന്തിക്കും. ഇത് അവരുടെ പരിസ്ഥിതി സ്നേഹത്തെ മാത്രമല്ല മാനവിക സ്നേഹത്തെയും മൗലികവും പുതുമയുള്ളതുമാക്കും.
"ഭൂമി നമ്മുടെ അമ്മ നമ്മുടെ അമ്മയെ ബഹുമാനിക്കുക പരിസരത്തെ നമ്മൾ സംരക്ഷിക്കും" ഇങ്ങനെ ഒരു വാചകത്തോടെയാണ് ഈ ലഘു നോവൽ ആരംഭിക്കുന്നത്. കടൽക്കര എന്ന ഗ്രാമത്തിലെ ഒരു ചെറിയ വിദ്യാലയമാണ് രംഗം. അവിടെ പഠിക്കുന്ന പ്രവീണിന്റെ കാഴ്ചപ്പാടിലൂടെയാണ് കഥ വികസിക്കുന്നത്. തുടക്കത്തിൽ ചൊൽപ്പൊരുളിന്റെ അർത്ഥ വ്യാപ്തിയെക്കുറിച്ച് പറയുന്നുണ്ട്. കഥ മുന്നോട്ട് പോകുമ്പോൾ കടൽക്കര എന്ന ഗ്രാമത്തിലെ വിദ്യാലയം നേരിടുന്ന വലിയ പ്രതിസന്ധി ബോധ്യപ്പെടുന്നു. പ്രകൃതി ചൂഷണം കൊണ്ട് അന്തരീക്ഷ താപനില വർദ്ധിക്കുകയും കടൽ ക്ഷോ ഭിക്കുകയും വിദ്യാലയത്തിന്റെ നിലനിൽപ്പ് വരെ അപകടത്തിൽ ആവുകയും ചെയ്യുന്നു. പ്രവീൺ എന്ന വിദ്യാർത്ഥി സയൻസ് അധ്യാപകനായി പഠിച്ച അതേ സ്കൂളിൽ എത്തുന്നതോടെ അതിജീവനത്തിനായുള്ള ശ്രമങ്ങൾ ആരംഭിക്കുന്നു. ഈ വിഷയമാണ് അതീവ വായനായോഗ്യമായ നോവലിലൂടെ എഴുത്തുകാരൻ അവതരിപ്പിക്കുന്നത്. ഓരോ അധ്യായത്തിലും സംക്ഷിപ്തമായി നൽകുന്ന പ്രകൃതി പാഠങ്ങളും നിരീക്ഷണങ്ങളും വായനയെ ഒരു പുതിയ തലത്തിൽ എത്തിക്കുന്നു. കുട്ടികൾ ഒരുപോലെ ആസ്വദിച്ച് വായിക്കാവുന്ന നോവലാണ് ചൂട്.
തമിഴ് ഭാഷയിൽ നൂറിലധികം കൃതികൾ എഴുതിയ സുപ്രഭാരതി മണിയന്റെ ഈ കൃതി സ്വാഭാവികമായ മലയാളത്തിലേക്ക് തർജ്ജമ ചെയ്ത ഷാഫി ചെറുമാവിലായി വലിയ അഭിനന്ദനങ്ങൾ അർഹിക്കുന്നു. ഈ പുസ്തകം കൊച്ചു കൂട്ടുകാരുടെ മുമ്പിലും മുതിർന്നവരുടെ മുമ്പിലും സ്നേഹപൂർവ്വം അവതരിപ്പിച്ചുകൊള്ളുന്നു.
ഡോ. സി ഗണേഷ്
പരീക്ഷാ കൺട്രോളർ
തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാള സർവകലാശാല
തിരൂർ മലപ്പുറം കേരളം.
வெளிவர உள்ள புதிய நாவலில் ஒரு பகுதி :
டாலர் பவுண்ட் ரூப்பியா.. நாவல்
சுப்ரபாரதிமணியன்
0
எண்ட் ஆப் லைப்.. .
எண்ட் ஆப் லைப் லிவிங் லைஃப். .ஸ்டில் ஐ அம் கீபிங்.. வாக்கிங்............
அந்த
முதியவர் பெரிய வர்ணமயமான கேக்கின் மீது பல மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அவற்றை பார்த்த படியே பேசிக்கொண்டிருந்தார்
” எனக்கு ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருக்கிறது ஹெல்ப் உண்டு வாழ்க்கை வாழ்க்கை இன்னும் போர் அடிக்கவில்லை என்னுடைய பொறுப்புகள் எல்லாம் முடிந்து விட்டன வாழ்வதற்காக .எனக்கு பாரங்கள் எதுவுமில்லை. நான் சூப்பர் மேன் அல்ல சாதாரண மனிதன் தான் வாழ்க்கை நதி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது நான் ஓய்வு
பெறுவதற்கு காரணம் மரணத்தை நோக்கி செல்வதற்கு.
அல்ல மரணத்தை எதிர் கொள்ளல்மனதில் இருக்கிறது
..எதுவும் .. அறுபது வயது ஆகிவிட்டால்
தற்கொலைக்கு போய்விடலாம் என்று பல மேற்கத்தியத்
தத்துவங்கள் சொல்கின்றன. நமது சாமியார்களும் வாழ்வே மாயம் என்று தான் சொல்கிறார்கள் .அப்படித்தான் மரணத்தை
எதிர்கொள்கிறார்கள் .என்னுடைய ஆப்ஷன்ஸ்
இல்லாமல் போகிற போது
அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
அதை ஒருவர் இடை மறித்தார்.
”இப்படி எல்லாம் பேசாதீர்கள். நான் கேன்சர் பேசன்ட் நானே வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறேன்.
எனக்கு இப்படியான ஓய்வு
நானும் இன்னும் கேக் சாப்பிடுகிறேன்
மெழுகுவர்த்திகளை அணைத்து கொள்கிறேன்
இதில் உங்களுக்கு என்ன சிக்கல் “
“ எனக்கு எதுவும் இல்லை நான் தொழுது கொண்டு இருக்கிறேன் ஏதோ நான் ஓய்வு பெற்றதால் முடங்கி விடக்கூடாது என்று பலரும் முணு முணுக்கிறார்கள் அது நல்லதல்ல
“ இவ்வுலகை விட்டு நீங்கும் போது,
கூறப் போகும்,
எனது பிரிவுரை
இதுவாக இருக்கும்:
பூமியில் நான் கண்டது உன்னத மானது!
தாமரைப் பூவில் மறைந்துள்ள
தேமதுவைச் சுவைத்தேன்!
விரிந்து அது ஒளிக் கடலாய்ப்
பரவியது எனக்கோர் வெகுமதி!
பிரிவுரை யாகட்டும் அதுவே!
முடிவில்லாத
வடிவங்கள் கொண்ட,
பந்தய அரங்கில்
முடிந்தது என் விளையாட்டு!
வடிவ மற்ற ஆதிமூலனின்
மகத்தான தோற்றத்தைக்
கண்டேன்!
எவருக்கும் எட்டாத அவனது
தொடுகையால்
என் உடல் பூராவும்,
எனது உறுப்புகள் எல்லாமும்,
பூரித்துப்
பொன்னூஞ்சல் ஆடின!
அதுவே என் பிரிவுரை ஆகுக!
ஆயுள் முடியட்டும்,
நீங்கும் வேளை
எனக்கு
நெருங்கி விட்டால்! “
தாகூர் கவிதை இது. என் வாழக்கை அனுபவம் கூட எந்த எழுத்தாளனின்
எழுத்தும் யாரோஒருவனின் அனுபவம் தானே ”
கேன்சர் முதியவர் கவிதையைச் சொல்லியபடி அவர் உட்கார்ந்திருந்த
நாற்காலியில் ஏதோ வலியால் அவதிப்படுபவர் போல் சாய்ந்தார். சிலர்
அவரின் நாற்காலி அருகில் நெருங்கினர். அவர் புன்னகையை உதிர்த்தார்.
ஆங்கிலத்தில் அந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்தது .பிரான்சிஸ் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்து உட்கார்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் . விடுதியின் அறைக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற குளிர் பிரதேசங்களில் பேன் பயன்படுத்தப் படுவதில்லை .இந்த சூழலில் ஜன்னலை திறக்கலாம் என்று மெல்ல ஜன்னல் பக்கம் போய் அவற்றை விடுவித்து பார்த்தார் .ஆனால் எல்லாம் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன திறக்க முடியாதபடி ஏதோ செய்து இருக்கிறார்கள்.
அறைக்குள் உட்கார முடியாது என்று தோன்றியது வரவேற்பறைக்கு தொலைபேசி செய்து தகவல் சொன்னபோது ஒருவர் வந்து திரும்பத் திரும்ப ஏசி மேல்
மூடியை நீக்கி பார்த்தார் அது வேலை செய்யவில்லை
“ எலித் தொல்லையாக இருக்கும் ஏதாவது
மின்சார ஒயரை கடித்து விட்டுப் போயிருக்கும் பார்க்க
வேண்டும் ”
”பார்க்க வேண்டுமா நான்.. இரவில் எப்படி தூங்குவது ஏதாவது
பேன் .தர தயார் செய்ய முடியுமா”
”பேன் நாங்கள் பயன்படுத்துவது இல்லை ”
”அப்புறம் பனையோலை விசிறி “
”சார் கிண்டல் வேண்டாம் முயற்சி செய்கிறோம். தூங்குவதற்குள் இதை
சரிசெய்ய பார்க்கிறோம் .அறை சாவி வேண்டாம் எங்களிடம் மாஸ்டர் கீ இருக்கிறது நீங்கள் வெளியே போவதாக இருந்தால் போய்விட்டு வாருங்கள்
அப்படித்தான் இரண்டாவது மாடியில் வந்து நின்றபோது அந்த பிருந்தாவின் ஹால் கண்ணில் பட்டது. நுழைந்து பார்க்கலாம் என்று நினைத்தான் பிரான்சிஸ் .இதுபோன்ற பல இடங்களில் சர்வசாதாரணமாக பிரான்சிஸ் நுழைந்திருக்கிறார் அழைப்பில்லாமல் இருந்தால்கூட போய் உட்கார்ந்து கொள்வது சாப்பாடு கிடைத்தால் போய் சாப்பிடுவது என்பதெல்லாம் அவனுக்கு சாதாரணமாகி
விட்டது யாராவது கேட்டால் ஏதாவது பதில் சொல்லலாம்
. இப்படி சொரணை கெட்டு போய் விட்டாயே என்று
கூட சில சமயங்களில் கேட்டுக் கொள்வான் எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு சரிவுகள் எவ்வளவு காயங்கள் இதையெல்லாம்
தாண்டி தான் இங்கு வந்திருக்கிறோம். இவர்கள் கேட்கிற நீ யாரென்ற
சாதாரணமான கேள்விக்கு சாதாரணமாகவே பதில் சொல்ல முடியும்
என்பது தான் அவனின் சமாதானமாக இருந்திருக்கிறது
இங்கு வரும்போது அப்படித்தான் அவருக்கு லேசான காயம்
ஏற்பட்டுவிட்டது. ஊரிலிருந்து ஹீரோ ஹோண்டாவின் இங்கே வந்து
விடலாம் என்றுதான் புறப்பட்டான்
மேட்டுப்பாளையம் குன்னூர் அன்னூர் என்பதை எல்லாம் கடந்து மெல்ல
வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான் குமரன்குன்று சென்றான் அங்கிருக்கிற முருகன் கோவிலின் உச்சியைப் நின்று வேடிக்கை பார்த்தான். திருப்பூருக்கு நீர் வருகிற பெரிய நீர்த் தொட்டி தொட்டிகள் எல்லாம் சவுரி பாளையத்தில் பார்த்தான் .மேட்டுப்பாளையத்தில்
வந்து ஊட்டி பேருந்து பக்கம் சென்ற போது
பெரிய வரிசை இருந்தது .
ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஒரு நண்பரை பார்க்கப்
போனான் அவர் ஊரில் இல்லை அங்கிருந்த
பெண்மணி வந்தால் என்ன சொல்வது என்றாள்
நானே தொடர்பு
கொள்கிறேன் என்று வந்துவிட்டான். கல்லாறு
பழப்பண்ணை பூங்கா பல வருடங்கள்
முன்னால் சென்றது வாகனத்தை
நிறுத்துவதற்கு வசதி இருப்பதாக தெரியவில்லை..பக்கத்தில்
இருந்த
அகத்தியர் மடத்திற்கு செல்லலாம் என்று நினைத்தான்
அங்கு தியாகராஜன் என்ற நண்பர் இருந்தார்., சமீபத்தில்தான்
செத்துப்போனார் அவர் ஒரு காலத்தில் பெரிய
பட்டிமன்ற பேச்சாளராக இருந்தார் பட்டிமன்றத்தில் பேசும்
அந்த இன்னொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு தனியாக வாழ்க்கை நடத்த
ஆரம்பித்தார்
பட்டிமன்றம் சலித்துப் போனது போல திடீரென்று
சாமியார் ஆகிவிட்டார். கல்லாறு பழப்பண்ணையில் எதிரில் ஓர் இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரின் ஓர் ஆசிரமம் இருந்தது .அந்த ஆசிரமத்தில் சென்று ஒரு நாள்
தங்கியிருந்தார் .பக்கத்தில் இருக்கிற ஆற்றில் சென்று குளித்தான்
மலை ரயில் செல்லும் பாதையில் ரொம்ப நேரம் நடந்தான்
ஒரு நாள் இரவு வந்து தங்கி இருந்தான்
தியாகராஜனின் வாழ்க்கை முழுவதும் மாறிப் போயிருந்தது
கொஞ்சம் யோகா கொஞ்சம் மந்திரம் சொல்வது கொஞ்சம் பூஜை என்று
தொடர்ந்து கொண்டிருந்தார் . அப்பெண்மணி அவர்
கூடத்தான் இருந்தார். தியாகராஜனின் குடும்பம் திருப்பூரில் தனியாக
இருந்தது அவர் மனைவி பனியன் கம்பெனிக்குப் போய் இரண்டு பெண்
பிள்ளைகளை வாழவைத்துக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு
கேள்விப்பட்ட போது அந்த ஆசிரமத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டது
தெரிந்தது. அங்கு போனபோது அதன் பரப்பளவு அவனை
ஆச்சரியப்படுத்தியது
பெரிய விக்கிகரமாய் அம்மன் ;விக்கிரகம்.. மகாலட்சுமி இருந்தாள்
அவரை சந்திப்பதற்காக பலர் வரிசையில் இருந்தார்கள். பூஜை
புனஸ்காரம் என்று சுற்றிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தன பூஜை
புனஸ்காரங்கள் ஹோமம் என்று அந்த பகுதியே
திணறிக் கொண்டிருந்தது. இந்தநிலையில் தியாகராஜனை போய்
பார்ப்பது
நல்லதா என்று தோன்றவில்லை
தியாகு சாமிகள் பிசியாக இருக்கிறார் என்று திரும்பத்திரும்ப
சொல்லப்பட்டது
இந்த முறை அவர் காலமாகி விட்டார் என்பதை அவன் அங்கு போய்
இருந்தபோதுதான் அறிந்து கொண்டான்
இப்போ ஆசிரமம் யார் பொறுப்பில
அதாம்மா இருக்காங்களே.. மாதாஜி மாதாஜி ஓட கருணையுள்ள ஆசிரமம்
நல்லா நடக்குது ஏழை குழந்தைகளுக்கு படிப்பு.. .படிப்பு உதவி அப்படின்னு
போயிட்டு இருக்கு
குன்னூரில் சிம்ஸ் பார்க்கப்போனால் மெல்ல வெளியில் அலைந்து
கடந்து
வரும் போது மிகவும் களைப்படைந்து விட்டான்
ஆனால் வீட்டில் சும்மா
உட்கார்ந்து கொண்டிருப்பதை விட இப்படி பயணப்படுவது சிறந்தது என்று
தான் அவனுக்கு தோன்றியது.அதுதான் அப்பயணம்
ஆனால் விரைவில் தனக்கு பின்னால் லாரி தொடர அவனுடைய பயணம்
சிரமமாக
இருந்தது .ஒரு லாரி ஒன்று இரும்புச் சாமான்களை சுமந்து கொண்டு
வந்தது அவன் வழி விட்டு கையை காண்பித்தாலும் அது பின்னாலேயே
நகர்ந்து கொண்டிருந்தது .சிறு குறுகலான பாதைகளில் அவனை
சங்கடப்படுத்தியது
என்ன நோக்கத்திற்காக அவன் பின் தொடர்கிறான் என்று கூட சந்தேகம்
வந்தது ஒரு வளைவில் அப்படித்தான் அவன் தடுமாறி கீழே விழுந்து
விட்டான் அந்த லாரி பின்னால் இருந்தது .அவன் விழுந்ததை ஒரு நிமிடம்
நின்று பார்த்துவிட்டு அதிலிருந்து அவர்களின் சிரிப்புடன் கடந்து சென்றது
தன்னை கீழே தள்ளிவிட்டுக் காட்டுவதற்காகத்தான் அவன் எந்த மாயம்
செய்திருக்கிறார் .என் காயம் சிராய்ப்பு அவருக்கு சிறு சந்தோசத்தை
தந்திருக்கிறது என்று அவன் நினைத்தான்
நல்லவேளை சிரமமில்லாமல் அவன் சூரிய விடுதிக்கு வந்து விட்டான்
இரண்டு நாட்களாக அவரின் ஹீரோ ஹோண்டா வாகனம்
பத்திரமாக
இருக்கிறதா என்று அந்த விடுதியின் பின்புறம் பகுதியை சென்று பார்த்து
விட்டான் அது பத்திரமாக தான் இருந்தது. தானும் பத்திரமாக தான்
இருப்பதாக அவனுக்குத் தோன்றியது“
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
Mannudam November issue
இறப்பிற்குப் பின் மனிதன்
( சூழலைப் பாதுகாக்க......)சுப்ரபாரதிமணியன்
என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தியானம் என்பதாகும். அது தாமரை இதழில் வந்தது.
தனிமையில் முதுமையில் கஷ்டப்படும் ஒருவரை பற்றி.. தன்னுடைய சாவும் தான் அடக்கம் செய்யப்படுவதும் கௌரவமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார். பலருக்கும் சொல்வார். கல்யாண முதல் சாவு வரை காரியங்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுவார் .என் சாவுக்கு பின்னால் த்ன்னுடைய உடல் எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை பற்றி அதில் எழுதுவார். தன்னுடைய சாவுக்கு பின்னால் தன்னுடைய உடல் கேவலப்பட்டு போய்விடக்கூடாது முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதற்காக பணம் சேர்த்து வைத்து தகவல் சொல்லுவார்.. இப்படி பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது
இப்போதெல்லாம் எல்லா ஊர்களிலும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் சில நிறுவனங்கள் வந்திருக்கின்றன. தாராள மனப்பான்மையுடன் அவர்கள் செயல்படுகின்றன.. மத வேறுபாடு இல்லாமல் ஜாதி வேறுபாடு இல்லாமல் இறந்த மனிதர்களின் பிணங்களை சரியாக அடக்கம் செய்ய அவை உதவுகின்றன இதை பெரிய சேவை என்று தான் சொல்லலாம்.
ஏனென்றால் யாரும் கவனிக்கப்படாமல் கிடக்கும் பிணங்கள். அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள். பரவும் அபாயம் இதிலிருந்து உடல்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை செய்யும் நிறுவனங்களைப் பாராட்ட வேண்டும்.
இப்போதெல்லாம் புதை குழிகளில் புதைக்க சரியான ஆள் கிடைப்பதில்லை. பழைய அரசாங்க கல்லறைகள் மூடப்படுகின்றன அல்லது அவை மின் மயான்ங்களாக மாற்றப்படுகின்றன.. கல்லறைகளில் புதைக்க ஆள் கிடைப்பதில்லை அல்லது நிறைய பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.. அதை மீறி மென்மையான தீர்ப்பு கொண்டு மின் மயானத்திற்கு கொண்டு சென்று உடலை சாம்பல் ஆக்கி விடக்கூடாது புதைக்கத்தான் வேண்டும் என்று விரும்புகிற பழைய தலைமுறை இப்போதும் இருக்கிறார்கள்.
என்னுடைய சகோதரர் ஒருவர் அப்படித்தான் தன் இறுதி ஆசையாக தான் மின் மயானத்தில் எரிக்கப்படக்கூடாது புதைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் அவரின் ஆசையை நிறைவேற்ற நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. நகரின் மத்தியில் இருந்த அரசாங்க்க் கல்லறைக்கு போய் ஆட்களை பிடிப்பது சிரமமாக இருந்தது, பிறகு அதன்பின் வந்த சடங்களுக்கும் அங்கு செல்வது அங்கு இருக்கிற ஆட்களை பயன்படுத்துவது என்பதில் பல சிரமங்கள் இருந்தன, அது எல்லாம் ஒரு சிறுகதையாக்க் கூட எழுதலாம்,
திருப்பூரில் நான்கு மின் மயானங்கள் வந்துவிட்டன முதலில் வந்த ஒரு அரிமா சங்கத்தின் மின்மயானத் துவக்க விழாவில் வைரமுத்து வந்து மரணம் பற்றி ஒரு கவிதை பாடினார். அது பற்றிப் பேசினார் அது கல்வெட்டில் இடம்பெறு வகையில் முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்ட.து. அந்த காணொளி பல லட்சம் மக்களை கவர்ந்திருக்கிறது. மரணம் பற்றிய வைரமுத்துவின் கவிதையும்..
.. இப்போது திருப்பூரில் நான்கு மின்மயானங்கள் வந்துவிட்டன. ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசிய ஒரு முக்கியமானவர் அவர் அதைச் சார்ந்திருக்கிறார். மின்மயானம் நான்கு உலைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றில் இரண்டிற்கு பிணங்கள் வருவதில்லை அதை கவனிக்க முடியுமா கேட்டுக் கொண்டார். முன் வரிசையில் இருந்த நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.. அது அவருக்கு எரிச்சல் ஊட்டியது பல லட்சம் பணம் முதலீடு செய்து மின்மயானங்களை போட்டு இருக்கிறோம் ஆனால் அவை பயன்பாட்டுக்கு இல்லாமல் சும்மா கிடக்கின்றன அதனால் தான் என்னுடைய வேண்டுகோளை வைத்தேன். சிரிக்கிறீர்கள் இது சிரிப்பதற்கான விஷயங்களை என்று சொன்னார்... அவருடைய கவலை அவருக்கு
. கொரோனா காலத்தில் இந்த மின்மயானங்கள் எப்படி பயன்பட்டது என்பது நமக்கு தெரியும் அப்போது அந்த பிணங்களின் மதிப்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும். பிணங்கள் என்றால் அருவருப்பு தான் .ஆனால் கொரோனா காலத்து பிணங்கள் இன்னும் அருவருப்பையும் பக்கத்தில் நெருங்க முடியாத படி செய்துவிட்டன.
மின் மயானம் சென்று. திரும்புகிறவர்கள் அவசியம் சாம்பலைக் கேட்கிறார்கள் வீட்டு சடங்குகளுக்கும் பின்னால் அதை நதிகளில் கரைக்கவும் தேவையாக இருக்கின்றது. பல நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக அந்த சாம்பல் இருக்கிறது .ஆனால் அப்படி பிணங்களின் சாம்பலை நதிகளை கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பற்றியும் பல விஷயங்கள் உள்ளன. எப்படி இருந்தாலும் பிணங்களை அடக்கம் செய்வதற்கான கல்லறைத் தோட்டங்கள் குறைந்து விட்டன பல பழைய கல்லறை தோட்டங்களை இடித்து விட்டு அங்கேயே மீண்டும் மீண்டும் படங்களை புதைக்கிறார்கள். இதெல்லாம் தேவையா என்று பெரும்பான்மையோர் மின் மயானத்திற்கு சென்று விடுகிறார்கள் ஆனால் பிணங்களை எரிப்பதில் மற்றும் புதைப்பதில் உள்ள சுற்றுச்சூழல் சிக்கல்கள் நம்மை சிரமப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
. இப்போது இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிணங்களை அடக்கம் செய்யும் முறை பற்றி கேட்டு கீற்று இணையதளத்தில் வந்த செய்தி ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவிலும் இதுபோன்று பிணங்களை அடக்கம் செய்யும் முறைகள் வந்தால் ஆறுதலாக இருக்கும். வெட்டியான்களைத் தேடி போக வேண்டாம். ஒரு கைப்பிடி சாம்பல் வேண்டும் என்று சில ஊழியரிடம் கெஞ்ச வேண்டாம். சாவுச் சடங்குகள் இன்னும் கொஞ்சம் சுலபமாகி விடும் பிணங்களை மண்ணிலிருந்து போக்குவதற்கு.
இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை ஒரு மாற்று வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.
ஒரு காரக்கரைசல் மூலம் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட, 160 டிகிரி வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி இறந்த உடலை ஒரு பையில் வைத்து கரைக்கும் செயல்முறை இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளது. இது பைக்குள் எரியூட்டுதல் முறை என்று அழைக்கப்படுகிறது. சடலங்களை அகற்றுவதற்கான திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள், கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2022ல் காலமான தென்னாப்பிரிக்காவின் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டூட்டூ அவர்கள் தான் இறந்த பிறகு தன் உடல், சூழலிற்கு நட்புடைய விதத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கேற்ப, அவரது இறுதிச்சடங்கின்போது இந்த முறை உலகில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.
என்றாலும் சடங்கின் முடிவில் உருவாகும் நீர்க்கரைசல் கழிவுநீருடன் கலக்க பாதுகாப்பானதா என்பதை அறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படும் சில இடங்களில் மட்டுமே இந்த முறை இப்போது நடைமுறையில் உள்ளது. இம்முறையில் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் கார்பன் கால்தடத்தை விட 50% குறைவு. முடிவில் இறந்தவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன.
சாதாரண முறையில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சாம்பலைப் போல இதிலும் அடக்கம் முடிந்தபின் மிச்சமிருக்கும் எலும்புகள் பொடியாக்கப்பட்டு கிடைக்கும் சாம்பல் இறந்தவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்படுகிறது. இது இறந்த உடலிற்கும், சூழலிற்கும் உகந்தது என்று சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. வட கிழக்கு இங்கிலாந்தில் ஜூலியன் அட்கின்சன் என்ற முன்னாள் காஃபின் தயாரிப்பாளரால் இதற்கு உரிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இம்முறையை இறுதிச் சடங்குகளுக்கான கோ-ஆப் என்ற நிறுவனம் செயல்படுத்துகிறது. அப்பகுதியில் இருக்கும் நார்த்தம்ப்ரியன் நீர் மேலாண்மை அமைப்பு இந்த முறையின் முடிவில் உருவாகும் நீரை கழிவுநீருடன் கலக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு தொழிற்சாலைகளில் வணிகரீதியில் உருவாகும் கழிவுநீரை அகற்றுவதற்காக கொடுக்கப்படுவது போன்ற அனுமதியே இதற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் உருவாகும் கழிவுநீர் சாதாரண கழிவுநீரின் சுத்திகரிப்பை பாதிக்கவில்லை.. பலர் மரணத்திற்குப் பிறகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்புகின்றனர். இப்போது நடைமுறையில் பின்பற்றப்படும் எரியூட்டல் முறையில் ஒருவரின் உடல் எரிக்கப்படும்போது 245 கிலோகிராம் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் வருடாந்திர அளவு இங்கிலாந்தில் ஆண்டிற்கு 115,150 டன். இது 65,000 வீடுகளுக்கு வழங்கத் தேவையான மின்னாற்றலிற்கு சமமான அளவு என்று சி டி எஸ் என்ற எரியூட்டல் தொடர்பான நிறுவனம் கூறுகிறது. சாதாரண முறையில் நடைபெறுவது போலவே இந்த முறையிலும் தொடக்கத்தில் சடங்குகள் சவப்பெட்டியில் வைத்து நடத்தப்படுகின்றன.
ஆனால் நீர் வழி அடக்கத்தில் சடலம் ஒரு கம்பளிப் போர்வையால் மூடப்பட்டு சோள ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கக்கூடிய ஒரு பையில் வைக்கப்படுகிறது. இது பிறகு 95% நீர் மற்றும் 5% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நிரம்பிய அறையில் வைக்கப்பட்டு 160 டிகிரிக்கு சூடுபடுத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் கழித்து எலும்புகள் தவிர மற்ற பாகங்கள் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் கிடைக்கும் கரைசலின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
"சடலங்களை ஆரோக்கியம், நடைமுறை சாத்தியம், மனிதாபிமான முறையில் அகற்ற உதவும் முறைகளைக் கண்டறிய பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இதில் இந்த முறை குறிப்பிடத்தக்கது” என்று டரம் பல்கலைக்கழக இறையியல் மற்றும் மதம் தொடர்பான துறைகளின் பேராசிரியர் டக்லஸ் டேவிஸ் கூறுகிறார்.
1960களில் உடலை அடக்கம் செய்யும் முறை பிரபலமாக இருந்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாறியது. எரியூட்டல் முறை பலராலும் விரும்பப்பட்டது. நீர் வழி அடக்கம் நடைபெறும் இடத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிய ரஸல் டி டேவிஸின் “ஆண்டுகள் கணக்கில்” என்ற 2019 பி பி சி குறுந்தொடருக்குப் பின் இந்த முறை மேலும் புகழ் பெறத் தொடங்கியது. மரணமடைந்த பிறகு இந்த முறையில் இறந்தவரின் உடலுக்கு சம்பவிக்கும் நிகழ்வுகளை இறுதிவரைக் காண முடியும். உடல் தசைகளும் மற்ற பகுதிகளும் ஒன்றும் இல்லாமல் கரைவதை பையில் நடக்கும் இந்த உடல் அடக்கம் காட்டுகிறது.
வாழ்ந்து முடிந்த பின்னரும் மனிதன் சூழலைப் பாதுகாக்க எவ்வாறு உதவலாம் என்பதை இந்த முறை உணர்த்துகிறது.
0
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும்.
0
கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளில் இவ்வாண்டில் சிறப்பு விருது சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அம்பை, லோகமாதேவி, க. ரத்னம் உள்ளிட்டோர் இவ்வாண்டில் விருது பெறுகிறார்கள். பத்து லட்சம் ரூபாய் விருதுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.வாழ்த்துக்கள்.
-நற்பவி வாசகர் வட்டம், பாண்டியன் நகர், திருப்பூர்
0
தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும்.
தமிழின் வளம் தமிழர் நலம் என்னும் நோக்கோடு கோயம்புத்தூரைச் சார்ந்த கல்வியாளர் மருத்துவர் பழனி நல்லசாமி கோயம்புத்தூரில் 2013ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ஆம் நாள் தொடங்கிய தமிழ்த் தொண்டு நிறுவனம் இதுவாகும்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கமாக,
• இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சந்திப்புகளை நடத்துதல்
• தமிழ் நூல் வெளியீடு
• சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவருக்கு ஆண்டு தோறும் விருது வழங்குதல்[1][2]
27/12 /25 காலை இந்த விருது விழா நடைபெறுகிறது. சிற்பி 90 விழாவின் ஒரு பகுதியாகவும் இதில் இடம் பெருகிறது. தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)