சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 மார்ச், 2013

வளர்பிறை அனுபவங்கள்
                         சுப்ரபாரதிமணியன்

கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கிறது..
     இத்தொகுப்பில் கவிதைகளில், கவிஞன் பற்றி நிறையவே எழுதியுள்ளார்.கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி என்கிறார்.எப்படியாகினும் கடத்தி விட வேண்டும் என்கிற ஆசையைச் சொல்கிறார். துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பென்று. துப்பாக்கிக்குள் ரவை நிரப்பியதைப் போலாகிறது.அழவைத்து விட்ட நிறைவும் வந்து விடுகிறது. நவகவிஞனின் தினப்படி வாழ்க்கையின் அவலத்தை “  மகாகவி கவிதை எழுதுகிறான்என்று குறிப்பிட்டு அவனின் எதிர்வினையையும் சொல்கிறார். கதிர்பாரதியின் கனவுகளை கொள்முதல் செய்து கொண்டு போன வாசகனின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கச் செய்கிறார். இவரின் பாழடைந்த வீட்டை கடந்து செல்பவனின் அனுபத்தை  வாசகன் கவிஞனை கடந்து செல்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் அவன் என்ன செய்து விட முடியும் என்பதில் ஆவல் கவிதையில் கூடக் குறிப்பிடுகிறார்.வாழ்க்கையே கொலைக்களமாகி வருவதைச்  சொல்லும் அனுபவங்கள் உண்டு.  வாழ்க்கையில் கவிதைக்கு இடமில்லாமல் போய் விடுகிற துயரத்தையும் மேலிட்டு எடுத்துக் காட்டுகிறார்.யாருடைய அனுபவங்களோ, வார்த்தைகளோ கூட  தனக்குள் வரித்துக் கொண்டதாகி பின் கவிதை வரிகளாகின்றன்.
   நீள் கவிதைகளில் மகாகவி கவிதை ஒருவகை நிகழ் முரண் என்றால் குளத்தில் அலைகின்றகவிதைகள்  அகத்தூண்டுதலாய் விரிகிறது.உள்ளுணர்வுடன் தொடரும் கவிதை மனம் சுற்றுச் சூழலையும் நிகழ் காலத்தையும் சரியாகவே கணித்து நகர்கிறது. உருக்கமான காதல் புலம்பலோ பெண்ணிடம் கெஞ்சுவதோ கூட சாவை ஒத்த துயரத்தின் உச்சபட்சானுபவமாக எழுதுகிறார்
( மோகினியிடம் இருக்கு மூன்று அரளிப்பூக்கள் )
குழந்தைகள், ஆண்கள் , பெண்கள், மிருகங்கள், சாத்தானும் கடவுளும் கவிதைகளில் அலைக்கழிந்து  அதிகாரத்திற்கு எதிரான குரலாகவும், அன்பினால் வார்த்தைகள் குழைந்ததாகவும் மாறுகிறது.மரண வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கதிர்பாரதியின் யானை கும்கிகள்தான். ஆனால் ஆசீர்வாதம் வாங்கும், ஆசீர்வாதம் தருபவை.பொம்மையை உருவாக்கி விட்டு  புன்னகையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள்,  மகன்களும் மகன்களின் நிமித்தமும் தரும் அனுபவங்கள் ,போன்றவற்றில் உட்சபட்சமான விளையாட்டைத் தொட்டு விடுகிறார்.மகனால் நனைகிறது அப்பாவின் பால்யம் “ குழந்தைகளின் குறும்புகளும், நடவடிக்கைகளும் கதிர்பாரதியின் மனிதிற்குள் உட்கார்ந்து கொண்டு வாசிப்பாளனை குழந்தை மனம் கொண்டவனாக்கி விடுகிறது. வாசக் அனுபவங்களையும் நேர்மையானதாக்குகிறது. நேர்மையான அனுபவத்திற்கு கவிதை மொழி அதன் சாத்தியங்களை எல்லையற்றதாக்கிக் கொண்டே போவதற்கு இயல்பான வார்த்தைப் பிரயோகங்களும் நிகண்டிலிருந்து வார்த்தைகளை தேடி எடுக்காததும் சவுகரியப்படுத்துகிறது. உண்மையின் பக்கம் எப்போதும் நின்று கொண்டேயிருக்கிறார்.கட்டற்ற காதலை உடம்பின் ஏதோ ஒரு பாகமாக்கி நிலை நிறுத்தி விடுகிறார்.  மச்சங்கள் வழியே மீளும் காதலோ வாழ்வோ  ஜீவத்துடிப்புடன்  விரிந்து கொண்டே இருக்கிறது. புகைப்பட கலைஞனை கொன்று விட்டு கடவுளாக்கிக் கொள்கிற சமூகம், ஹிட்லர் சமாதனத்தூதுவராகிறார். இவற்றை அங்கீகரிக்கிற சமூகம் பிரிவை துரத்துகிறது. நிலம் பற்றிய சிந்தனைகளும், அக்கறையும் கனவுகளாய் அவரைத்துரத்திக் கொண்டே இருக்கிறது.அதனால் உப்புச் செடிகள் இரண்டை வளர்கிறார் கண்களில், நிலத்திற்கு ஆனந்தி என்று பெயர் சூட்டி ஆனந்திக்கிறார்.பசப்புகளும், பாசாங்குகளும் மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும் என்ற அக்கறை இன்னொரு பரிமாணமாய் விசுவரூபிக்கிறது. வழி தவறிய மனுஷ்ய குமாரனின் மறியை / பிதாவின் பெயரால் பலி கொடுத்து விட்டு / வீச்சமடிப்பது அதன் மாமிசம்தான் என்கிறோம்கிராமிய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் எத்தனங்கள் நிறையவே உண்டு.கடவுள் பற்றிய  குறிப்புகளில்  விலகுதல் பகுத்தறிவுப் பார்வைக்கும் கொண்டு செல்கிறது.நவீன நுகர்வு வாழ்க்கை தந்திருக்கும் பலி பற்றி இது போல் நிறையவே அக்கறையும், பயணப்படவும் முடிகிற இவரால்.  தனிமையை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது கூட ஊர் சுற்றுபவனைப்போல் எல்லாவற்றையும் தனக்குள் கொண்டு வந்து விடுகிறார். சமூகத்தின் எந்த அங்கத்திலிருந்தும் பிய்த்துக் கொண்டு போய் விடுகிறவராக இல்லை.
உலகமே காமுறுகிற வகையில் கவிதை எழுதும் எத்தனம் ஆச்சர்யமானது . துரோகம், வஞ்சகம், அதிகாரத்திற்கெதிரான குரல் என்று  சப்தமிடும்       ( மெல்லியகுரலில் தான் ) கதிர்பாரதியின் எதிர்வினை சிறுநீராய் முகத்திலும் , வாயிலும் தெறிக்கிறது.அன்றாட நிகழ்வுகளின் உள் ரகசியங்கள் விரித்து வைக்கப்படுகின்றன. கவிதை கேளிக்கையாகி  எண்ணற்ற படிமங்களை நிரப்புகிறது.கதிர்பாரதியின் கவிதை என்றைக்கும் புதிதாகவே இருக்கிறது. கவிதைக்குள் அவர் புதுமைமேதையாகவே இருக்க சாத்தியங்களை இத்தொகுப்பு உருவாக்குகிறது.இவரின் கவிதை மீதான் பலவீனங்கள் சுலபமாகச் சரிபவை.
“ ஒரு பிரியம் திரும்பப் பெறப்பட்டதும்
சிறகிலிருந்து உதிர்ந்து வீழ்கின்ற சிறகொன்றை
சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கு
இடையே சுழற்றியபடி
 மொட்டைமாடி நிசியொன்றில்
மல்லாந்து துயில் முயல்கிறான் அவன்.
அப்போது
அவள் பாதரட்சையின் எழிலெடுகும்
பிரயாசையில்
தொற்றுத் தோற்றுச் சரிகிறது
மூன்றாம் பிறை
கதிர்பாரதியின் கவிதை அனுபவம் நினைக்க நினைக்க வளர்பிறையாகவே மிளிர்பவை.( இது சம்பிரதாயமான வரிகளே என்றாலும்.)ஒரு பத்திரிக்கையாளனாக இருக்கும் மனோநிலை மீறி அதன் பிரபல்யம் பூசாமல், நீர்த்துப்போகும் தன்மையுடன் அவசரம் காட்டாமல்   அவர்  கவிதைகள் உயிப்புடன் தொடர்ந்து  இருப்பதற்கு திடமான அசாத்தியமான படைப்பு  மனம் வேண்டும்

( மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், கதிர்பாரதியின் கவிதைத் தொகுதி,ரூ 60, புது எழுத்து, காவேரிப்பட்டிணம்  )



வெள்ளி, 22 மார்ச், 2013

”கதை சொல்லி” நிகழ்ச்சியில் பரிசு

சுப்ரபாரதிமணியன் அவர்களால் ஆண்டுதோரும் ”கதைசொல்லி ” எனும் நிகழ்ச்சி பள்ளி மாணவ மாணவியருக்காக நடத்தப்படுகின்றது இதில் பல்வேறு பள்ளி மாணவ மாணவியரும் கலந்து கொள்கின்றனர்.

அப்படிக்கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த கதைகளுக்காக பரிசும் வழங்கப்படுகிண்றன(3 ரொக்கப்பரிசும் உண்டு) அவ்வாறு பெருமாநல்லூர் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளியின் பரிசு பெற்ற 6  மாணவர்களுக்கு இன்று எழுத்தாளர் திரு .சுப்ரபாரதிமணியன்  பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.  

புதன், 20 மார்ச், 2013



ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்

                                             சுப்ரபாரதிமணியன்

--------------------------------------------------------------------------------



வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கியத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும்  சாதாரண சமூகங்களின்  படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல்  சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கனவுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.
    சுப்பையா, சரவணனின் வீடு பற்றிய கனவுகள்,  ரேணுவின் இரண்டாம் திருமணமாவது சுமூகவாழ்க்கையாக  இருக்கவேண்டிய கனவுகள்,  சரவணன் பத்மாவின் சாதாரண லவுகிய வாழ்க்கைக் கனவுகளைப் பற்றி இந்நாவல் பேசுகிறது.குழந்தைகளின் உலகம் பற்றி அவரின் சிந்தனை தொடர்ந்து ஜெயந்தியின் படைப்புகளில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறன. அர்ச்சனாவின் இயல்பான உலகமும், நவீனின் உளவியல் ரீதியான முரண்பட்ட உலகமும்  எதிமறை அனுபவங்கள்  கொண்டவை. சரவணன் பத்மா,  ரவி ரேணு வின் உலகங்களும் மறு பதிப்பானவை.  சகமாணவன் ஸிஹாவ்வின் சேஸ்டைகளின் உலகமும், ரவியின் மனப்பிறழ்வு நடவடிக்கைகளால் அவனது மகன் நவீனின் எதிர் விளைவுகளும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.குழந்தைகளின் உலகம்  போலவே முதியவர்களின் உலகத்தையும் நுணுக்கமாகக் காட்டுகிறார்.பருத்த உடம்பு கொண்ட அமாட்டின் நடத்தைகள், லீவிங்கீன் மரணம் அதுவும் கொலையில், சுப்பையாவின் சக்கர நாற்காலி வாழ்க்கை என்பதாய் விரிந்து கொண்டே இருக்கிறது. வயதானவர்களின் உலகமும் இந்த இளைய தலைமுறையினருடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கோவிலுக்குள் வாக்க்கிங் போவதும், பழனி திருவண்ணாமலை என்று  புனித யாத்திரை போவதும் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் இந்த வித்தியாச உலகத்தைக் காட்ட இவை உப்யோகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் நகரின் வளர்ச்சியோடே இவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.முருகன் கோவில் கட்டப்படுதல், விரிவாக்கத்தில் சிதைபடுகிற இடங்கள், வெள்ள காலம், செம்பவாங் சாலை வளர்ச்சி என்று தொடர்கிறது.எலந்த மரம் பாலசுப்ரமணியர் பின்னர் புனித மரம் பாலசுப்ரமணியன் என்று பெயர் மாறி வெள்ளைக்காரனின் பெருந்தன்மையும் காட்டப்படுகிறது.

காலம் மெல்லிய நதியாய் நாவல் முழுவது ஒடிக்கொண்டிருகிறது. இந்திராகாந்தி சுடப்பட்ட பள்ளி காலம்.., யிசின் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விசேசம், முருகனைத்துரத்திவிட்டு   தண்டவாளம் போடும் ஆர்ச்ச்ர்ட் எமார் டிக்க்காலம், தூன்மேரா தில் வேலியா படம் திரையிடல் காலம் என்று நுணுக்கமானக் குறிப்புகளால் நாவலின் காலம் கதையில் கால் பதியாத மனிதனின் ஓட்டம் போல் ஓடிக்கொண்டேயிருக்கிறது.இவை பற்றியக் குறிப்புகள்  நாவலினை காலம்  சார்ந்து நகர்த்திக் கொண்டே இருப்பது முக்கிய அம்சம்.
.
ரவியின் நடத்தையில் இருக்கும் மனப்பிறழ்வு அம்சங்கள் குடும்பத்தை திடுக்கிடச் செய்கின்றன. அதற்கான காரணங்கள் சரியாக முன் வைக்கப்பட்டிருகிறது.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் என்று மாறி மாறி தமிழ்க்குடும்பங்களின் வாழ்க்கை பத்மா, ரேணுகா குடுமபங்கள் மட்டுமின்றி கவிதா, ரேவதி, தர்ஷினி, மீனா குடுமபங்களின் வாழ்க்கை முறையாலும் நீள்கிறது.எல்லா மனிதனும் தான் அணைத்துக் கொள்ள நீளும் இடங்களிலெல்லாம் அகப்படுபவர்களைச் சேர்த்துக் கொள்வது போல் இந்த கதாபாத்திரங்கள் வந்து சேர்கின்றன.இந்திய வாழ்க்கை சென்னை என்று மட்டுமில்லாமல் பூனா, பம்பாய், தில்லி என்று காட்டப்பட்டிருக்கிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு கலாச்சார நிலைகளையும், மொழி சார்ந்த நிகழ்வுகளையும் முறையாக எடுத்தியம்ப இந்த்  விரிவாக்கம் உதவுகிறது. ஆனால் அரசியல் ரீதியான முனைப்புகளோ அரசியல்நிகழ்வுச் சிதறல்களோ இல்லாமல் இருப்பது தமிழ் சமூகம் அரசியலை புறம் தள்ளி விட்டு வாழ்வைக் கட்டமைப்பது வருத்தமே தருகிறது
      இதில் வரும் சீன மனிதர்களும் வாழ்க்கையும் ஜெயந்தியின் சீனப் படைப்புகளின் மீதான அக்கறையும் சீன மொழிபெயர்ப்புப் பணிகளையும் நினைவூட்டுகிறது..சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள், சீனக்கோவிலக்ள், சீனர்கள் குணநலன்கள் என்று  சில முக்க்கியப் பதிவுகளையும் இந்நாவலில் கட்டமைத்திருக்கிறார்.
                                               ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சயம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றை கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல  பாலியல் உவ்வே சமாச்சாரங்களை  மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து  வரும்   அவரின் மொழிபெயர்ப்பு  உட்பட   நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார்அவரின் வாழும் புத்தர்  “  என்ற  சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது            “  நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வணங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத்தலைபடுகிறான்தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனினை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயினஅவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.

அபத்த உலகம் தான். அபத்த நிகழ்வுகள்தான்.    இந்த அபத்த்த் தன்மை நவீன் மிகு வேக வாழ்க்கையில் விரவி விட்டது. “ போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரபுகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்டதில் ஒவ்வொரு தனி மனிதனும் தனியொரு  திணையாகித் திரிவதை உணர்ந்து “ அதை இலக்கியப் படிவமாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். மனப்பிரிகை, குவியம் போன்ற  முந்தின நாவல்களில் கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வடிவச் சிதைவு,  பாகங்களின் நிரப்புதலில் டைரிக்குறிப்புகள், குறுஞ்செய்திக்குறிப்புகள், கடிதங்கள் பாணி இதிலில்லாமல்      நேர்கோட்டுப்பாணி கதை கூறலில் இந்திய சமூகம், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியினரின்  வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் சுவையாகக் கட்டமைகப்பட்டிருக்கிறது. இந்நாவலில்  

  ( ரூ 175, சந்தியா பதிப்பகம், சென்னை )


தமிழ்மகனுக்கு இன்னுமொரு விருது


    நீலகிரி மலையைச்  சார்ந்த மலைச்சொல் என்ற இலக்கிய  அமைப்பு  இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய  நாவலான “ வனசாட்சிக்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.  எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர்.  ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும்..
   தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை  முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட  ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து  வேரோடு பிய்த்துக் கொண்டு  இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார்  என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.


இலஙகை  மலையகத்தமிழர்களின் வாழ்க்கையூடே வெவ்வேறு தளங்களில்  அதிகாரங்கள் குவியும் வாய்ப்பு ஏற்படும் போது  மனித வேதனையின் விளைவு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை இந்நாவல் காட்டுகிறது. .             இந்த நாவலின் மூன்று பாகங்களாக அமைத்திருக்கிறார்.200 ஆண்டுகளுக்கு முன்  வேலூர் மாவட்டத் தமிழர்கள் சிலர் இலங்கைக்கு  தேயிலைத் தோட்டப்பணிக்காக  செல்லுவது. முதல் பாகமாகியிருக்கிறது. இரண்டாம் பாகம் சிறிமாவோபண்டாரநாயகா சாஸ்திரி ஒப்பந்த்தின்படி மலையக வாழ் தமிழர்கள் சிலர் தமிழகம் திரும்புவது  என்று அமைந்துள்ளது. மூன்றாம் பாகம் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு கல்லூரி ஆசிரியர் ஒருவர் தன் அத்தையைத் தேடிஇலங்கைக்குச் செல்வது, திரும்புவது என்றமைந்திருக்கிறது.  வன்னியுத்தம் பற்றிய  பதிவாகவும் இப்பகுதி  அமைந்துள்ளது. 
இவ்வாண்டு சர்வதேச தேனீர் ஆண்டு . சமீப ஆண்டுகளில் வெளியான  எரியும் பனிக்காடு மொழிபெயர்ப்பு நாவல் முதல் அன்வர் பாலசிங்கத்தின்  செந்நீர் நாவல் வரை இவ்வாண்டை நினைவு கூறுகின்றன.   இந்நாவலும்  கூட...அதிகாரத்தினை கேள்விக்குறியதாக்கி, கட்டுடைக்கிறது இதன் மையம். இதை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

                 - சுப்ரபாரதிமணியன்




புத்தகம் பேசுது : பசுமை இலக்கியம் :
=================================================================================================
புத்தகம்  பேசுது  மாத  இதழ்  சென்ற மாதம் ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அது பற்றீ:
பசுமை இலக்கியம் பற்றிய இதழில் சில எழுத்தாளர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. திருப்பூர் சுப்ரபாரதி மணியனின்  “ சாயத்திரை  நாவலில்    நொய்யல் நதி ஒரு கதாபாத்திரம் போலவே அதன் உருவகம், தொன்மக்கதைகள், அதன் கரையில் முன்புன்  பின்பும் மக்களின் வாழ்க்கை என்ற சித்திரம் பின்நவீனத்துவ வடிவில் அமைக்கப்பட்டு, சாயம் திருப்பூர் மக்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்திருப்பதை கோடிடுவதில் அது சுற்றுச்சூழல் நாவல் என்றே அறியப்பட்டு ஆங்கிலம், கன்னடம், வங்காளம், மலையாளம், ஹிந்தி,  என் பல்வேறு மொழிகளீல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அவரின் எழுத்துச் செயல்பாட்டிலும், சுற்றுசுழல் நோக்க செயல்பாடுகளிலும் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்..30க்கும் மேற்பட்ட சுற்றுசூழல் கட்டுரைகள் எழுதியுள்ளார், அதில் ஒரு பகுதி “ தண்ணீர் யுத்தம் ‘ நூல் எனலாம். அவரின் சென்றாண்டு வந்த        நீர்த்துளி  நாவலில்  சாயப்பட்டறைகள் மூடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பின்புலத்தில் நிகழும் பொருளாதார சமூக சிக்கல்களை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன் வைத்தே பேசப்படுகிறது. நீர்த்துளி “ நாவல் இப்படி ஒரு விவசாயின் பார்வையோடு  முடிகிறது: “ இனி ஒரு சொட்டு சாயம் கூட நொய்யலில் விழக்கூடாது
சென்றாண்டு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு நாள் சிறப்புரையில் தியோடர் பாஸ்கரன்  பேசும் போது ஒரு புராணக்கதை, சா.கந்தசாமியின் சாயாவனம் நாவல், மா.கிருஸ்ணன் கட்டுரைகள், தேவதச்சனின் சில கவிதைகள் என்று சுற்றுச்சூழல் படைப்புகள் என்று பேசினார். நல்லவேளை உங்கள் இதழ் அதற்கு பிராயச்சித்தம் செயவது போல் சிலரை அடையாளம் காட்டியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சாயாவனம் சுற்றுச்சூழல் நாவல் ஆகிற போது சமகாலப்பிரச்சினையைப் பேசும் சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை”,   ஜெயமோகனின்       “ காடு “  ஆகிய நாவல்கள் சுற்றுச்சூழல் நாவல்கள் ஆகாதா.. கோவையைச் சார்ந்த சி.ஆர். ரவீந்திரனின்         “ மணியபேராநாவலில்  இயற்கைக்கு எதிரான மனிதர்களின் நுழைவும் ஆக்கிரமிப்பும் , ஆட்டனத்தின்
“ வனம்நாவலின் அம்சங்களையும் இந்த நேரத்தில் யோசிக்கலாம். கோவை ஓசை அமைப்பின்  செயல்பாடுகளும், காளிதாஸ்., அவைநாயகத்தின் படைப்புகளும் ஓசையின்  சிறு வெளியீடுகளும் கவனத்திற்குறியவை. திருப்பூர் மக்கள் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி அக்கறை கொள்ளும் ஒரு முக்கிய அமைப்பு.அது வெளியிட்டிருக்கும்  படைப்புகள் பட்டியலையும் கவனத்தில் கொள்ளலாம்.அதன் செயல்பாட்டில்  நொய்யல்  சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு, இழந்த வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சிகள் என்பவை இந்த இலக்கியப்  படைப்புகளின் நிதர்சன செயல்பாடுகள் என்பது மிகவும் முக்கியம்  இது போல் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட பிற படைப்புகளையும் பிற வாசகர்கள் கோடிட்டுக் காட்டலாம். அந்தந்த எழுத்தாளர்களுக்கு நியாயம் செய்வதாக அது இருக்கும். ஒருதலைபட்சமான இலக்கிய அரசியலைத் தவிர்க்க உதவும். அதற்கு

=  சாமக்கோடாங்கி ரவி   திருப்பூர்,(  வழக்கறிஞர் சி.ரவி, 94 எம்ஜி புதூர் 3 வது வீதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  எதிரில், திருப்பூர் 641 604)


ஞாயிறு, 10 மார்ச், 2013


------------------------------------------------------------------------
கோவை ஞானி என்ற போராளி


                                                   


            சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்.  பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்thதலும் அது சார்ந்த் உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான  அணுகுமுறைகளும் தொடர  பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து  பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்

   அதிகாரத்திற்கெதிரான குரலை எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார்..பொதுவுடமை  கட்சிக்காரர்கள் அவரை திரிபுவாதி என்று முத்திரை குத்தி  புறந்தள்ளியபோதெல்லாம் அவர்களுக்கு எதிரான குரலை எழுப்பிக் கொண்டே இருந்தார்.அவர்களின் தேர்தல் பாதையை கடுமையாக விமர்சித்தார்.கல்வித்துறை சார்ந்த விமர்சனங்களுக்கும் குறை வைக்கவில்லை.
    மார்க்சியம் வழியான தமிழ் தேசியத்திற்கு வந்தடைந்தார். தமிழ் தேசியம் இன்னும் வளர்தெடுக்க வேண்டிய அம்சங்களை தொடர்ந்து சிந்தனைக்குற்படுத்தினார்.        
                  மாற்று கலாச்சார விசயங்களைத் தொடர்ந்து முன் நிறுத்துபவராக இருந்து கொண்டே இருக்கிறார்.விளிம்பு நிலை மக்களின் அரசியல் விடுதலை அவர் பேச்சிலும் சிந்தனையிலும் இருந்திருக்கிறது. சுமார் 40 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி புரிந்தாலும் ஆங்கிலக் கல்வியின் அதிகாரம் சார்ந்தவற்றையும், ஆங்கிலக் கல்வியின் வன்முறையையும் தொட்ர்ந்து வெளிப்படுத்தி வந்தார். தமிழ்ப்பள்ளிகள் மீதான கரிசனை அவரை தமிழ்ப்பள்ளியாளர்களுடன் இயங்க வைத்தது. . வெகுஜன் கலாச்சார நுகர்வு அம்சங்களை முன்னிருத்தும் பகாசூர படைப்புகள் மத்தியில்   சிற்றிதல்களின் அவசியம் சார்ந்து புதிய தலைமுறை, நிகழ், பரிமாணம், தமிழ் நேயம் என்று தொடர்ந்து அவரின் செயல் பாடுகள் இருந்தன.சிறுபத்திரிகையாளர்களோடு இணக்கமான அணுகுமுறையில் தொடர்ந்து பொது அடிப்படை கருத்துக்கள் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார்.   பெண்கள் மீதான பார்வையோ, சிறுபான்மையினர் மீதான கரிசனமோ அவரை விடுதலைக்கு முன் நிறுத்துகிறது.

    கலை என்ற போராற்றல் மனிதனின் ஜீவ சக்தியாக இருப்பதை தொடர்ந்து எடுத்து சொல்லிக் கொண்டிருப்பவர்.படைப்பு சார்ந்து இயங்கும் மனம் அது சார்ந்த ஆன்மீக விடுதலை நோக்கி தொடர்ந்து தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருப்பவர்.இந்தப் பாதையில் அவர் மார்க்சியப் பார்வையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார்.கலை சார்ந்த உண்மைகள் மார்க்சியர் அல்லாதவரிடமிருந்து வரும் போதும் அதை போற்றியிருக்கிறார். கலை அனுபவம் தரும் ஆனந்தம்  என்றைக்கும் அவரை பரவசப்படுத்தியிருக்கிறது.  இது குறையாகவும் சில சமயம் மேலோங்கியிருக்கிறது.அவர் தொடர்ந்து கலாச்சாரப் போராளியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் செயப்பாடுகளில் ஈடுபட்டிருப்பது புதிய தலைமுறையினருக்கு ஆதர்சமாக விளங்க வைக்கிறது.
( கோவை இலக்கியச் சந்திப்பு அமைப்பின் சார்பில் கோவை ஞானியின் படைப்புலகம் பற்றிய ஒரு நாள்  கருத்தரங்கில்  இடம் பெற்ற சுப்ரபாரதிமணியனின் உரையின் ஒரு பகுதி இது.தமிழவன், சு. வேணுகோபால், ஆதி, இரண்யன், அரங்கமல்லிகா, செந்தமிழ்த்தமிழ்த்தேனி,வே.சுகுமாரன், புனிதவதி, எஸ்.என்.நாகராஜன், செ.சு.பழனிச்சாமி,  செங்கோடன், துரைமடங்கன், இளஞ்சேரல், இளவேனில், பொதிகைச்சித்தர், பாவண்ணன்,அறிவன், அஜயன்பாலா.ஜவஹர், செல்வி உட்பட பலர் உரையாற்றினர். க.பஞ்சாங்கம், பூரணச்சந்திரன், பிலிப் சுதாகர்  போன்றோரின் கட்டுரைகள்  வாசிக்கப்பட்டன்.)
    




             திருப்பூர் அரிமா விருதுகள் 2013
                                     *    ரூ 25,000 பரிசு

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்


ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருதுஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 :

முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 601 * 9443559215 * )

செய்தி: சாமக்கோடாங்கி ரவி  * samakkodaonkey ravi@gmail.com