சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 27 செப்டம்பர், 2012
ஓ...மலேசியா
கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள்.தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது.
நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம்.
சுதந்திரதினத்தை தேசிய தினமாகக் கொண்டாடும் வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர். இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார்.
பத்துமலை முருகனுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பத்து என்றால் கல். கல் மலை. பத்து மலையைச் சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருந்தது ஒரு காலத்தில் .1991ல் கும்பவிசேகம் கண்ட பின் மிக உயர சிலையில் முருகன் பத்துமலை முகப்பில் சிரிக்கிறார்.
13 வது பொது தேர்தல் எப்போதும் வந்துவிடலாம் என்ற தேர்தல் காய்ச்சலில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அய்ந்து வருடங்கள் எந்த அரசும் முழுமையடைவதில்லை.இந்த முறை ஆளும் கட்சியின் அரசுக்கு மூன்றரை ஆண்டுகளே கடந்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அரைமாத போனஸ் என்று இந்த திடீரென பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பது தேர்தல் கவர்ச்சிக்குதானாம். (எல்லா பெரிய புள்ளிகளின் பெயர்களுக்கு முன்னால் ட்த்தோ இருக்கிறது. நம்மூர் பத்மஸ்ரீ போல என்கிறார்கள்.) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இந்தியர்கள்., மலாய்க்காரர்கள் ஆதரவு குறைந்திருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.சீனர்களின் ஆதரவு தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. ஆனால் அவரின் அரசிற்கான மதிப்பு அப்படி இல்லை என்கின்றன ஆய்வுகள்.இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் .
இந்த தேர்தலில் இந்திய சமூகத்தினரின் எதிர்பார்ப்புகள் இப்படியாக உள்ளன:
1.அரசின் ” ஒரே மலேசியா” கொள்கையின் கீழ் இந்தியர்களுக்கு அரசுத்துறைகளில் தாராளமாக வேலை வாய்ப்பு வேண்டும்.
2. அரசின் உதவிகளும் இந்திய சமூகத்திற்கான நலத்திட்டங்களும் முறையாக சென்றடையாமல் நிறைய இடைத்தரகர்கள் இருப்பதை நீக்க வேண்டும்.
3.இந்திய சமுதாயத்திற்கானப் பொருளாதாரப் பங்குகளை ஏற்படுத்த வேண்டும்.
4.குடியுரிமை இல்லாமல் சிவப்பு அடையாள அட்டையாலும் பிறப்புப் பத்திரம் இல்லாமலும் அகதிகள் போல் இருக்கும் நிலை மாற வேண்டும்.
5.தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.(குடிக்கக் கூழும் படிக்க தமிழும் சந்தோசம் தரும் என்று வாழும் தமிழ் தலைமுறையில் புதியவர்களுக்கு தமிழ்க் கல்வி சற்றே கசந்து வருகிறது).
குறைவாகவே சிலைகள் தென்படுகின்றன. பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியா சென்ற பெரியாரின் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். மலேசியா முஸ்லீம் நாடு. கடவுள் மறுப்பிற்கு அதன் சட்டவடிவமைப்பில் இடமில்லை. கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பலமிழந்திருக்கும் மலேசியா தி.க. தலைமறைவு இயக்கம் போல்தான் செயல்படுகிறதாம்.
மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.கடந்த 5 ஆண்டுகளாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் போட்டி நடத்தி 1,75,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்குகிறது. கூடவே தமிழகம் வந்து செல்ல விமான டிக்கட்.இவ்வாண்டும் அப்போட்டியின் முன்னோடியாகவே இந்தப் பட்டறைநடத்தியது. சென்றாண்டு சிறுகதைப் பட்டறையை நடத்தியவர் எஸ்.இராமகிருஸ்ணன். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு இது பொன் விழா. இவ்வாண்டு நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகள் என்று மொத்தம் 2,50,000 ரூபாய் பரிசு பம்பர் மலேசியா எழுத்தாளர்களுக்குக் காத்திருக்கிறது.
( = சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602. 9486101003 )
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
வெள்ளம்
வியாழன், 20 செப்டம்பர், 2012
எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
வியாழன், 6 செப்டம்பர், 2012
“இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்”
உதிரி மனிதர்களின் உலகமும், சூழல் கேடற்ற நகரக் கனவும்”
பிரபஞ்சன்
பிரபஞ்சன்
திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார். உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான கதாபாத்திரங்கள் , விளிம்பு நிலை மக்களை இந்த நாவலில் நிறைத்திருக்கிறார்.இடம்பெயர்ந்து வந்து வேலைக்காக அந்த நகரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களின் வாழ்க்கையைச் கூர்ந்து பார்த்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு மணமாகாத ஆணும், மணமாகி கணவனின் கொடுமையால் தனித்து வாழும் பெண்ணும் சேர்ந்து வாழ விரும்பும் வாழ்க்கை பற்றி இந்த நாவல் பேசுகிறது. அவர்கள் உடல் உறவு சார்ந்து லாட்ஜிகளைத் தேடிப்போகிறார்கள். அதில்தான் எவ்வளவு சிக்கல்கள்.எவ்வளவு போலீஸ் தொந்தரவுகள்.இந்த போலிஸ்காரர்களைப் போல் சாதாரண மக்களுக்குத் தொல்லை தருகிறவர்கள் யாருமில்லை. பிறகு ஒரு வாடகை வீடெடுத்து வாழத்துவங்கும்போது அவர்களை இந்தச் சமூகம் பார்க்கும் போலீஸ்காரப் பார்வை.., சுற்றுசூழல் பிரச்சினையால் சாயப்பட்டறைகள் மூடப்படுதல், அதனால் வரும் பொருளாதரப்பிரச்சினைகள், விவாகரத்து பெற முடியாமல் அப்பெண் தன்னை மனச்சிதைவுக்கு ஆட்படுத்திக் கொள்வது என்பது பற்றி கலை அனுபவங்களுடன் நுணுக்கமாகப் பேசுகிறார். லிங்கம் என்ற ஆண் பிரதானமாக இருந்தாலும் நுணுக்கமான உதிரி உதிரியான கதாபாத்திரங்கள். விளிம்பு நிலை மனிதர்களால் நிறைக்கப்படும் சமூகத்தை முன் வைக்கிறார். இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது. நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாயக்கழிவுகளெல்லாம் இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.அந்த நகர மனிதர்களும் நொய்யலின் சாயக் கழிவு இல்லாமல் போவது போல் நல்ல சுத்தமான மனிதர்களாக வேண்டும் என்ற ஆசையின் படிமமாக அதைக் கட்டமைத்துக் கொள்ளலாம். தமிழ் படைப்புலகில் தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் தீவிரமாக இயங்கி வருவதன் அடையாளம் இந்நாவல்.
————————————————–
”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்
( உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியிடு
ரூ 160)
————————————————–
One Comment for
“இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சாயப்ப்ட்டறை பற்றி அவர் அதிகமாகப் பேசவில்லை. அது ஒரு பெரும்பாலும் அசையாத் திரையாக பின்னால் இருக்கிறது. ஆனால் அதில் ஏற்படும் சினனஞ்சிறு அசைவுகளும் இந்த நாயக – நாயகியைப் பாதிக்கின்றன. இவர்கள் வாழ்க்கை துன்ப மயமானது. ஆனால் அதற்குள் அவர்கள் காணும் சின்னச்சின்ன சுகங்களை சுப்ர மிக அழகாக உருவாக்கி வாசகர்களையும் கிளுகிளுக்க வைக்கிறார். காமக்காட்சிகள் அனைத்தும் அத்தனை இலேசாக விரசம் தொனிக்காமல் கடந்து போகின்றன. இயலாமையில் ஆரம்பித்து இயலாமையில் இவர்கள் பிரியும் சோகம் மனதில் தங்கி நிற்கும்.
நாவல் கலையில் ஒரு புதிய பரிமாணம் என்று கொள்ளத்தக்க படைப்பு.
நாவலை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு பிரபஞ்சனுக்கு நன்றி.
ரெ.கா.