சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

SUBRABARATHIMANAIAN’S 3 Novels –based on Hyderabad. The celebrated Tamil writer Subrabarathimanian was living in Hyderabad for about eight long years1984-92 . He penned three novels during his stay in Hyderabad. All these three works have now been made into an anthology and ready for sale. His first novel ‘’Matrum silar ‘’ (Few more ones) is a fiction on those migrants settled in Hyderabad, journeyed from the village Chinnalapatti, Madurai. The story was about a Hindi teacher who had lost her job in Tamilnadu and deprived of the best source of survival whilst the non-Hindi agitation was vigilant. It was also about the conflicts of the Tamils living in Hyderabad as there was a widespread unrest due to the Telengana struggle. It has been listed in the Tamil classics series and popular publishers like Marudha, Narmadha and Discovery have all brought out this work earlier. Nakaram 90 (the city 90) was another work that deals with the then inner political turmoil within the congress party, which had witnessed changes in the posting of the chief minister in the same rule. It was also about a time that provided grounds for religious intolerance and bigotry ,resulted into much unrest. This work was given the best novelette Air India–Kumudam award, with a trip to UK and European countries in the 90s. Chudu manal(hot sand)was another novel that depicted the violence unleashed on the Tamils living in Hyderabad ,whenever the water sharing issue between the states arise and politically debated. This novel is a stark criticism of the national question in sharing natural resources. This work has found its rendering in Malayalam and English versions with 16 editions in Tamil. These works stand as archetypes of migrated livings and helpless citizens in a non-native setting. The lives of the Tamils from the year 1960 to 95 have been recorded here in all his works with an ambiance and deals with the estrangement of the Tamils in national, political situations. He has taken a leaf out of the books of Asokamithran ,the Tamil writer who tried to bring out the predicaments of a non-native in another linguistic state (Hyderabad)through his short fictions and in his novel 18 –Atchayak kodu (18 th latitude). ( This volume has now been published by Kavya Publications –Chennai –price Rs 480/.—From The Hindu Tamil . Nalkappian ) Awards and recognitions: Published 110 books including 25 novels He has won the Katha award for best short fiction –personally received it from the president. Government of Tamil nadu’s best novelist award and many such awards.And translation award for 2023 with cash Rs 2 lakh Best novel award from Ezhuthu trust 2020 –awarded with a cash prize of Rs 100,000/ Bookish Award from the Sharjah international Book Fair 2021 S R M Tamil Perayam—Puthumaip Pithan best novel award 2024 –Rs 1,00,000 cash prize. Of late, his novel “Siluvai ‘—a mega novel with 1000 pages has been published in this year and widely acclaimed for its historical account. SUBRABHARATHIMANIAN/ R P Subramanian சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199 --------------------------------------------------------------------------------------------------------------------------------FB kanavu subrabharathimanian tirupur Subrabharathimanian palaniasamy ------------------------------------------------------------------------------------------------------------------------------ Mail: subrabharathi@gmail.com rpsubrabharathimanian@gmail.com
0 அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம் / சுப்ரபாதிமணியன் திருப்பூரின் இலக்கிய முகம் சுப்ரபாதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டை தாண்டி விரிந்தவை என்ற போதும் ஒரு செயல்பாட்டாளராக திருப்பூர் அவரது எழுத்து இயக்கமும் மேற்கொண்டது . அவசர காலகட்டத்தை பற்றிய சுதந்திர வீதியில் என்ற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத கனவு சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாக புலிவால் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கிய சூழலில் நவகால அரசியல் குறித்து தொடர்ந்து உரையாடி வருவோர். கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன் குமார் தொகுத்துள்ளார். ஒளிவட்டங்களை தவிர்க்கும் சுப்ரபாதி மணியன் தனது கருத்துக்களை இயல்பாக பகிர்ந்து கொண்டு உள்ளார். சமூக பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம் என்ற நோக்கில் இருந்து திருப்பூரின் வளர்ச்சியைஅவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய் மொழி கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்பணவோடும் இங்குவது தான் எழுத்தாளின் வெற்றி. இலக்கியத்துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் நூலை முன் வைத்து .சே இளவேனில் ( புலிவாலை பிடித்த கதைகள் சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் தொகுப்பு நூல் தொகுப்பு பொன் குமார்.Tamil hindu review அந்த நூலை முன்வைத்து தமிழ் இந்து இதழில் எழுதி இருப்பது 0
ஹைதராபாத் நாவல்கள் சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் 1984-92 வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது. அவரின் முதல் நாவல் “ மற்றும் சிலர் “ மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த, திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன. “ நகரம் 90 “ என்ற நாவல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரிவுகள் செய்த குழப்பங்கள் அதன் மூலமாக அடிக்கடி முதலமைச்சர் மாறிக்கொண்டிருந்த சூழல்.. அப்படியான சூழலில் மத கலவரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை மாற்றிய மோசமான ஒரு காலம் இருந்தது., மதக்கலவரம் மூலமாக முதலமைச்சர் பதவியை கைப்பற்றி சாதாரண மக்களை பதவிக்காக பலி கொண்ட அரசியல் கலவரச் சூழலை பற்றிய நாவல் இது .. குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுப்ரபாரதிமணியன் செல்லும் வாய்ப்பை தந்த நாவல். “ சுடுமணல் “ மூன்றாவது நாவல். தேசியம் என்பது மாயம் என்பதை நிரூபிக்கும் வகையில் தண்ணீர் பிரச்சனை வருகிற போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் வேறு மாநிலச்சுழலில் அந்நியமாக்கப்படுவதும் பற்றிய அனுபவங்களை ஹைதராபாத் பின்னணியில் எழுதியிருந்தார்., இந்த நாவல் பதினாறு பதிப்புகள் வெளியாகி இருப்பதும் மலையாளம்,, ஆங்கிலத்தில் மொழியாகி இருப்பதும் சிறப்பாகும். இந்த மூன்று நாவல்கள் மூலமாக சுமார் 1960-95 ஆண்டுகால ஹைதராபாத் தமிழர்களின் வாழ்க்கையை இந்த நாவல்களில் சுப்ரபாரதிமணியன் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. வேற்று மாநிலச் சூழலில் தமிழர்களின் அந்நியமாதல் சூழலை விவரித்துள்ளது. அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளும் 18 ஆவது அட்சக்கோடு போன்ற நாவல்களும் ஹைதராபாத் தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்தவை.. அவற்றை சுப்ரபாரதிமணியனின் இந்த நாவல்களின் முன்னோடியாகக் கொள்ளலாம் ( ரூபாய் 480 காவ்யா பதிப்பகம் வெளியீடு சென்னை ) -பெரம்பலூர் காப்பியன் Tamil Hindu Daily 0 சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது. இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH . சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்ஹ்டன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
திருப்பூர் சிறுகதைகள்/ சுப்ரபாரதிமணீயன் தொகுப்பாசிரியர் பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322 ) தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது. பெருமை கொள்ளத் தக்கது. இந்த்திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை .. 0 அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது. 0 இத்தொகுப்பில் உள்ள பெண் வலிமையானவள் என்ற கதை எழுதி இருக்கிறார் தீபன். பத்திரிகையாளர் புகைப்பட கலைஞர் கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார். வழக்கமாக அவருடைய கதைகளில் விளிம்பு நிலை மக்களும் தாழ்த்தப்பட்ட சாதி சார்ந்த மக்களும் இருப்பார்கள். இக்கதையிலும் பெண்களின் வாழ்க்கை பல்வேறு மடங்கு வறுமையும் பாலியல் சீண்டலும் சமூக சூழ்நிலையால் புறக்கணிக்கப்பட்டதும் என்று இருப்பதை பல சம்பவங்கள் மூலமாக காட்டுகிறார். அது அவரின் தனித்துவத்திற்கு இந்த ஒரு கதை.சான்று 0 ரத்தினமூர்த்தி அவர்களின் அப்பாவின் நிழல் கதை திருப்பூர் சூழலில் மையமாகக் கொண்டிருக்கிறது. திருப்பூரின் வேலை சூழலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்மையும் பற்றியும் பேசுகிறது ஆனாலும் எனக்காக இந்த வாசல் எப்போதும் திறந்து இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறார். அவரின் ஒரு சிறுகதை தொகுப்பு இந்த தலைப்பில் உயிர் மெய் பதிப்பகத்தை கூட வெளியிட்டு இருக்கிறார்கள் உடல் நலக்குறைவு என்ற காலகட்டத்தில் இருந்து விலகி இப்போது தேறிவரும் ரத்தினமூர்த்தி அவர்களுக்கு இந்த தொகுப்பில் இந்த கதை இடம்பெற்று இருப்பதும் அதுவும் நீண்ட ஒரு கதை இடம்பெற்று ஒரு போதும் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கும். அவருக்கு ஆறுதலாக இனிமேல் எல்லாம் நடக்கும் வரை எழுதுவார். ) 0 குழந்தைவேல் அவர்களின் படைப்புகள் தொடர்ந்து கவனத்தில் கொண்டவை என்பது முக்கியம் இவர் சமீபமான சில ஆண்டுகளாக சுயநினைவு இல்லாமல் வாழ்ந்து வருகிறார், 80 வயதிற்கு மேல் இருக்கும். ஆனாலும் அவருடைய நாவல்களில் வருகிற வால்பாறை மின் தொழிலாளர் பற்றிய பிரச்சனைகளும் அவர்களை சிறுவர்கள் என் மதிப்பதும் , பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் நம்பிக்கை தருவது. 0 ) இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கோதை மணியன், வெண் புரவி, குணசுந்தரி என்ற எழுத்தாளர்கள் பெயர்கள் கேள்வி படாத இருக்கிறது இதைப் பற்றி தொகுப்பாளர் பொன் குமார் அவர்கள் தகவல் தந்து உதவலாம். 0 கிணற்றில் குதித்தவர்கள் என்ற என் ஸ்ரீராம் கதை குறிப்பிடத்தக்க கதை. கொங்கு பகுதி சார்ந்த நிலவியலை மிக அழகாக வழக்கமாக அவர் கதைகளில் கொண்டு வந்து விடுபவர் இந்த கதையில் வரும் கிணறு ஒரு படமமாகவே மனதில் பதிந்து விடுகிறது அவரின் முத்திரையை அழுத்தமாக பதிந்திருக்கும் ஒரு கதை 0 இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் வீடு சுகந்திசுப்பிரமணியன் கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கதை வெளிவந்த சமயத்தில் அசோகமித்திரன் அவர்கள் இந்த கதை பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். வெகுவாகப் பாராட்டினார். பெண்ணின் இருப்பும் பாதுகாப்பின்மையும் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பெண்ணுக்கு வீடு என்பது ஒரு பாதுகாப்பான இடம் வாடகை வீடு என்பது தவிர்த்து சொந்த வீடு கனவு ஒரு பெண்ணுக்கு இருப்பதை இந்த கதை சொல்கிறது, 0 இராசிந்தன் சிறுகதை சிறப்பானது திருப்பூரில் ஒரு மழை பெய்த நாளில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பலர் மதுபான கடையின் சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு அந்த தொழிலாளர்கள் குடும்பங்களைப்பற்றியும் துயர சம்பவத்தையும் சிந்தன் அவர்கள் இந்த கதை விவரித்து இருக்கிறார். இந்தத் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை .. 0 சுப்ரபாரதிமணீயன், திருப்பூர் கிருஷண், கே என் செந்தில் உட்பட 28 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 0 திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பாசிரியர் பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322/ வேரல் புக்ஸ் சென்னை வெளியீடு 0 எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.. ஒரு பிரபலமான.. அதிகம் பணத்தை கொண்டு வந்து சேர்த்த ஒரு சிறுகதையை தேடிப்பிடித்து ... அந்த எழுத்தாளரையும் ஏஜெண்டையும் தேடிப்பிடித்து .. அனுமதி வாங்கி அனுமதிக்காகப் பணத்தைக் கட்டி அதை தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறார். அந்தி மழை அதை வெளியிட்டு இருக்கிறது முத்துலிங்கம் அவர்களுடைய அபூர்வமான பணியில் இந்த பணியும் சேர்கிறது வாழ்த்துக்கள் ஐயா .சுப்ரபாத்திமணியன் வெளியீடு திருப்பூர் சிறுகதைகள் நூல் அறிமுகம்
Pen : சென்ற ஆண்டின் ஆஸ்கர் விருது பெற்ற குறும்படங்களில் இது ஒன்று. இன்றைய இளைஞர்கள் மத்தியில் தற்கொலை உணர்வு அதிகமாய் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள்.. பல மன அழுத்தங்கள் காரணமாக அவர்கள் இந்த நிலைக்கு செல்கிறார்கள். தங்களை இந்த நிலையிலிருந்து தங்களை மாறுபடுத்தி தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல ஊடகங்கள் உள்ளன. கலை இலக்கியம், ஓவியம் என்ற பல விஷயங்களை மனதில் கொள்ளலாம். . இந்த படத்தில் வருகிற சிறுவன் பத்தாவது கிரேட் படிக்கிறவனாக இருக்கிறான். அவன் ஆரம்பக் காட்சியில் ஒரு பெட்டிக்கடையில் ஒரு பழுப்பு நிற பேனா ஒன்றை வாங்குகிறான் அதை வைத்துக்கொண்டு அவன் ஓவியங்கள் வரைகிறான் கணக்கு பாடங்களை எழுதுகிறான். இது தொடர்ந்து காட்டப்படுகிறது. . அவன் ஆற்றங்கரை ஓரமாக, தனி இடங்களில் உட்கார்ந்து பாடத்தை தவிர ஓவியங்களும் வரைகிறான். அவன் முன்பே இரண்டு முறை தேர்வில் தோல்வியடைந்தவன் ஆகவே அவனைப் பார்க்கிற மற்றவர்களும் அவன் இந்த முறை தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள் அவருக்கு கொஞ்சம் பயமாய் விடுகிறது. மூன்றாவது முறையும் தான் தோல்வியடைந்தால் என்ன ஆகும் என்ற ஒரு பயம்... இந்த பயம் அவனை உலுக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் பேனா அவனுக்கு துணையாக இருக்கிறது. அதன் மூலமாக ஓவியங்களும் வெளிப்பாட்டு முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் அவன் தோல்வியுற்று வருவான் என்று நம்பி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். தற்கொலையில் இருந்து தப்பிக்க பக்கத்தில் இருக்கிறவர்கள் உதவுகிறார்கள் . இதனுடைய அடுத்த நிலையாக படம் ஓராண்டு கழித்துச் செல்கிறது படம். அவன் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்து விட்டான். இப்போது ஓர் ஓவிய கண்காட்சியில் அவன் ஓவியங்களெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன பலர் வந்து போகிறார்கள். சிலர் ஓவியங்களை விலைக்குக் கேட்கிறார்கள் சில விற்று விட்டதாகச் சொல்கிறான். தற்கொலை முயற்சி மீறி, தன் படிப்பை மீறி அவன் தனக்கு பிடித்த அந்த ஓவியக்கலையில் வெற்றி பெறுவதை இந்த படம் சொல்கிறது நதிக்கரை, பூக்கள், பேனா புத்தகத்திலிருந்து நழுவுதல், கைவிடாதே உன் முயற்சியை என்ற குரல்கள் .. சங்கடப்படுத்துகின்றன. அம்மாவிற்கு அவன் எழுதும் கடிதம்இன்னும் சங்கடப்படுத்துவது. அம்மா என்னை மன்னித்து விடு என்ற உருக்கம். அவன் தற்கொலை முயற்சியின் போது சிதறிக்கிடக்கும் பலஓவியங்கள். அதைப் பின்தொடர்ந்து சென்று அவனை அடையும் முதியவள். அவனைக்காப்பாற்றல். அவன் நினைவில் தகிக்கும் எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ் போல்.. சாதனையாளர்கள் விஜய் தண்டூல்கர் போல்.. அதேபோல இந்த படத்தின் காட்சிகளில் மற்றும் இறுதியில் வருகிற குறிப்புகள் மூலமாக இந்தக் கால இளைஞர்கள் தற்கொலை எண்ணங்களுக்கு சென்று கொண்டிருக்கிற செய்திகளையும் சொல்கிறார்கள். கலை இலக்கியம் சார்ந்த ஈடுபாடு தற்கொலையிலிருந்து மீட்டெடுப்பதை இந்த படம் சொன்னது.
இணைய ஆற்றுப்படை / முனைவர் மு. இளங்கோவன் நூல் அறிமுகம் சுப்ரபாரதிமணியன் கற்றான் ஒருவன் அது கற்க விரும்புவானை ஆற்றுப்படுத்துதல் இணைய ஆற்றுப்படையாம். அந்த வகையில் .இணையம் சார்ந்த தொழில்நுட்ப செய்திகளையும் வரலாறுகளையும் தமிழில் பதிவு செய்துள்ளது இந்த நூல். ஆற்றுப்படை என்பது பல்வேறு வகைகளில் அர்த்தம் சொல்லப்படுவது பொருள் பெற்ற ஒருவர் பொருள் பெற செல்வோர் பெயரில் அமைப்பதாக ஆற்றுப்படை கேள்விப்பட்டிருக்கிறோம்.. முருகனை ஆற்றுப்படுத்தாமல் முருகனிடத்து ஆற்றப்படுத்துவதாக அமைந்திருப்பதும் உண்டு.. ஞானியர் ஆற்றுப்படை என்பது ஞானி யாரை ஆற்றுப்படுத்தாமல் ஞானியாரிடம் ஆற்றுப்படுத்துதல் என்ற கருத்திலும் பாடி உள்ளார்கள். . அப்படித்தான் இணைய ஆற்றல் என்பது இங்கே முடிவாக உள்ளது. இணையத்தின் சிறப்புகளை சொல்லி அதனை கற்றும் அறிந்தும் பயன்பெற பல வகைகள் சொல்லப்பட்டுள்ளன.. தமிழகத்தின் நிலம் சார்ந்த விசயங்கள், அதன் சிறப்புகள், வளம், பெருமை யாவும் நினைவு கூறப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தமிழ் இணையத் தொழில்நுட்பத்தை தமிழில் வழங்க வேண்டும் என்று உழைத்த பெருமக்கள் பற்றிய குறிப்புகள் நிகழ்காலத் தன்மையுடன் வைக்கப்படுகின்றன. சரியான கவுரவம் அவர்களுக்கு. . முன்பே ஆற்றுப்படை நூல்கள் சிலவற்றை எழுதி பயிற்சியை ஆழமாக்கிக் கொண்டவர் முனைவர் மு. இளங்கோவன். உலகப் போக்குகளை உள்வாங்கிக் கொள்ள தமிழ் அறிஞர்கள் தாய்மொழியான தமிழிலும் உலகப் போக்குகளை நிலை பெறச் செய்யும் முயற்சியில் முனைந்தனர். அது பல சாதனைகளை செய்துள்ளது. கணினி, இணையம் இல்லாத உலகம் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. அந்த உலகத்தில், இணையத் துறையின் செயல்பாடுகளை பற்றி இந்த நூல் சொல்கிறது. இந்த ஆற்றுப்படையை 563 பாடல் அடிகளில் அமைந்திருக்கிறார் தொழில்நுட்ப வரலாறு மரபு வடிவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் இணையத்துக்கு பங்களித்தோர் என்ற விவரங்களில் முனைவர் அனந்தகிருஷ்ணன், நா கோவிந்தசாமி முதற்கொண்டு காலடி நாகராஜன், தகவல் உழவன் வரைக்கும் சிறப்பானப் பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியக் அறிமுகக் குறிப்புகளை இந்த இந்த ஆற்றுப்படை அமைத்திருக்கிறது. தமிழில் இணைய முயற்சிகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒரு வகையை இது சிறப்பாக சுட்டி காட்டி இருக்கிறது. இந்த 563 அகற்பா வரிகளின் அனுபவங்களை, சொல்லாட்சியை அகற்பா பற்றி தெரிந்தவர்கள் முழுமையாக நன்கு ரசித்து உணரலாம். மற்றவர்களுக்கும் கணினி, இணையம் சார்ந்த விபரங்களுக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்குகிறது. ( பக்கங்கள் 48, விலை ரூ 100, வயல் வெளி பதிப்பகம், இடைக்கட்டு, அரியலுர் 612901 - 944420 29053 ) ( முன்னுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது, வேறு கருத்துக்கள் இடம் பெறவில்லை )
தாமுவின் சற்றே நீளமானக் குறுங்கதைகள் மலையாளத்தில் இப்போதெல்லாம் குறுங்கதைகள் நிறைய வருகின்றன. குறுங்கதைத் தொகுப்புகள் நிறைய வருகின்றன என்று நண்பர் வலச சுகுமார் அவர்கள் சமீபத்தில் தெரிவித்தார் அவரின் குறுங்கைகளும் சில தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த தாமு அவர்களின் கதைகளை குறுக்கதைகள் என்று சொல்ல முடியாது ஒரு பக்க கதைகள் தான். ஆனால் இந்த கதைகளில் இருக்க கூடிய சமூக விமர்சனம் ஆழமானது. வழக்கமாக ஒரு பக்கம் கதைகள் அல்ல இவை. விமர்சனம் கதைகளில் வரும் சிறப்பம்சங்களும் இதில் உண்டு. ஆனால் அதை மீறி கிண்டலும் கேலியும் சமூக விமர்சனமும் முக்கியமாக இருக்கிறது. கவிதையை தாஜ்பால் என்ற பெயரில் எழுதுகிற இவர் கதைகளை தாமு என்ற பெயரில் எழுதுகிறார். ஒரு நண்பர் கூட இது என்னமோ இந்து பெயராக இருக்கிறது என்றார் தா. முகமது என்பதை தான் அவர் தாமு என்று போடுகிறார் அவரின் கேலியும் கிண்டலும் நகைச்சுவையும் முக்கியமானவை என்று படுகிறது. சில இடங்களில் வாய் விட்டுச் சிரித்தேன்... சுப்ரபாதி மணியன்
இலக்கிய ஒளிக்கீற்றின் தெளிவைப் பரவலாக்கும் முயற்சிகள் ’வதைபடுதலும், குழம்பிக் கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும், மறுபடியும் தொடங்குதலும், மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்குள்ளாதலும், வாழ்வின் இன்றியமையா பண்புகள். மன நிம்மதி என்பது ஆன்மாவின் இழி நிலைப் பண்பு’’ – லேவ் தல்ஸ்தோய் 0 .ஆன்மாவின் அலைவுறுதலை இலக்கியம் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரதிபலிப்பு மனித அனுபவங்களிலிருந்தே வாய்க்கிறது.. அந்த அனுபவங்கள் நமக்கு வாய்ப்பவை. நம்மை வந்து சேர்பவை. இந்த அனுபவங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் எங்கே இருக்கின்றன என்று அடையாளம் காட்டுபவை திருமதி பவள சங்கரி அவர்களின் படைப்பு ஆய்வுகளும் தொகுப்பு முயற்சிகளும். அதை இந்த நூலில் ஒரு கதை மூலமாக இப்படி அவர் விளக்குகிறார். 0 ஒரு முறை ஒரு சிறுமியும்‌ ௮வள்‌ தந்தையும்‌ கடல்‌ கரையில்‌ உலாவிக்‌ கொண்டிருந்தனர்‌. அழகான சிப்பியொன்றை அச்சிறுமி கண்டு, ஆவலுடன்‌ எடுத்துத்‌ தன்‌ காதருகில்‌ வைத்துக்கொண்டாள்‌. அப்போது அவள்‌ அதுவரை கேட்டிராத ஒரு வேறுபட்ட ஒலி அந்தச் சிப்பியிலிருந்து வருவதை உணர்ந்து வியப்‌புற்றாள்‌. அவள்‌ முகத்தில்‌ பரவசமும்‌ மகிழ்ச்சியும்‌ நடம்புரிந்தன. சின்னஞ்சிறு அந்தச் சிப்பியின்‌ ஒலிகள்‌ வியக்க வைத்தன. அந்த ஒலிகள்‌ மென்மையாய்‌ இனிமையாய்‌ இருந்தன. மற்றொரு நூதன உலகிலிருந்து அவை வருகின்றன என்று நினைத்தாள் அவள்‌. அந்தச் சிப்பி தான்‌ வாழ்ந்து‌ வந்த கடல்‌, உலகிலுள்ள மூடு மந்திரங்களை நினைவிற்‌குக்‌ கொண்டுவந்து மீண்டும்‌ அவற்றை மெல்ல மிழற்றுவதுபோல்‌ தோன்றியது. அவற்றின்‌ மாய இன்னிசையிலே அச்சிறுமி பிணைப்புடன் மகிழ்ச்சியுற்றுக்‌ கேட்டு, தந்தையுடன்‌ செல்வதையும்‌ மறந்து விட்டாள்‌. முன்னே சென்று கொண்டிருந்த தந்‌தை திரும்பி வந்து தன்‌ மக‌ளின் செயலைக் கண்டவர், சிப்பியினின்று வரும்‌ ஒலியின்‌ ரகசியத்தை விளக்கத் தொடங்‌கி அதில்‌ அவ்வாறு ஒலி கேட்பது புதுமையன்று என்றார்‌. காதிற்கு எட்டாத பல மெல்லொலிகளைச்‌ சிப்பி தனது வெண்மையான வரிகளிலே அகப்படுத்தி, பளபளக்கும்‌ உட்குழிவுகளிலே கணக்கற்ற எதிரொலிகளின்‌ உள்‌ அரவத்தை நிறைத்து வைத்திருக்கிறது எனக்‌ கூறினார்‌. சிப்பியின்‌ வழியாக வந்த ஒலிகள்‌ ஒரு நூதன உலகில்‌ தோன்றி வருவன அல்ல; இந்தப்‌ பழைய உலகில்‌ உள்ளவையே. ஆனால்‌ அவற்றின்‌ நிரம்‌பிய இசையினிமையை ஒருவரும்‌ கவனித்துக்‌ கேட்டதில்லை. இவ்வாறு கேளாதன கேட்ட காரணத்தாலேயே, சிறுமி வியந்து ௮தில்‌ ஈடுபட்டாள்‌. இவளது அனுபவம்‌ ஒருவகை; இவளது தந்‌தையின்‌ அனுபவம்‌ வேறு வகை. இவைபோன்ற இரண்டு அனுபவங்கள்‌ இலக்கியக்‌ கல்வி நிகழும்பொழுது நமக்கு ஏற்படுன்றன. சுவை நுகர்ச்சியைப்‌ போலவே தலைசிறந்தது இலக்கியத்தைப் பகுத்து உணர்ந்து அதனை விளக்கும்‌ முறையை அறிதல்‌. ஒவ்வோர்‌ இலக்கியத்தின் அடிப்படையிலும்‌ ௮தன்‌ இயல்பு அறிதலின் போது அதன் ஆசிரியன்‌ புலப்படுகிறான். இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இது உரை நடை வடிவிலோ கவிதை வடிவிலோ அமையலாம். நம்முடைய வாழ்க்கையை நிலைபேறுடையதாக்கி உறுதிப்படுத்துவது இலக்கியம். இன்று மொழியும், இலக்கியமும் மாறி வருகின்ற நிலையில் ஒரு பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியங்கள் பற்றிய வாசிப்பு அவசியம். எனவே இலக்கியம் மட்டுமே இந்த உலகில் அழகு, அறிவு, ஆற்றல் அனைத்தையும் தெளிவாக்குகிறது 0 இந்தத் தெளிவாக்கலை படிகத்தின் வழியே செல்லும் ஒளிகீற்றின் தன்மை போல் விளக்குகிறார். பவளசங்கரி அவர்கள். 0 இந்த ஆண்டின் தமிழக அரசின் இரு விருதுகள் : அம்மா விருது, சிறந்த நூலுக்கான விருது என அவரை அடையாளம் காட்டிய வெளிப்பாடுகள் போல் இந்த நூலில் அவர் அடையாளம் காட்டும் படைப்புகள் இலக்கிய ஒளிக்கீற்றின் தெளிவைப் பரவலாக்கும். வாழ்த்துக்கள்.. அன்புடன், சுப்ரபாராதிமணியன்
திருப்பூர் தமிழ் சங்கம் 1 தமிழக செய்தி துறை அமைச்சர் ரூபாய் இரண்டு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் பள்ளிக்குழந்தைகளுக்கு திருக்குறள் முற்றோதல் திட்டத்திற்கு ஒரே நாளில் வழங்குவதாகச் இந்த தொகையை சொன்னார். பள்ளி குழந்தைகள் திருக்குறள் ஓதுதல் சம்பந்தமான வழங்கப்படுகிற தொகை பெரியது . இந்த்த் தொகையை கேட்டு பத்திரிகை சன்மானம், ராயல்டி போன்றவை கிடைக்காத நவீன எழுத்தாளர் ஒருவர் மயக்கம் போட்டார். அவர் மயக்கம் போட்டது இந்த தொகை காரணமாவா அல்லது ஏசி அரங்க அறையாக இருந்தாலும் மிகவும் கடுமையான மக்கள் நெரிசல் நெருக்கடியில் இருந்ததா என்று தெரியவில்லை . அவரை அந்த அரங்கத்தை விட்டு வெளியேற்றிய பின்னால் அவர் ஆசுவாசம் பெற்று விட்டார். ஆனால் அவர் வாய் ராயல்டி.. ராயல்டி என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. திருப்பூர் தமிழ் சங்கம் 2 திருப்பூர் தமிழ் சங்கம் நேற்று நடத்திய விழாவுக்கு சாதாரண பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கான வாகன வசதி இல்லாமல் சிரமமாக இருந்தது. ரொம்ப தூரம். தமிழ்நாடு முழுக்க இருந்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்து சிரமப்பட்டனர். அவர்கள் பெற்ற 15,000 ரூபாய் காசோலையும் சான்றிதழும் ஆசுவாசம் தந்தன. அந்த அரங்கம் மருத்துவர் முருகானநாதன் பெயரில் இருந்தது. அவர் திருப்பூர் தமிழ் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்து கொண்டிருக்கிறார். திருப்பூர் தமிழ் சங்கத்திற்கு தனியாக கட்ட்டம் என்று உள்ளூரில் எதுவும் இல்லை. சின்ன சின்ன ஊர்களில் தமிழ்ச்சங்கங்கள் என்று தனியாக கட்டடங்களும் அரங்குகளும் இருக்கின்றன ஆனால் திருப்பூர் தமிழ் சங்கத்திற்கு அப்படி கட்டடம் எதுவும் இல்லை. கோடீஸ்வரர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட திருப்பூர் தமிழ்ச்சங்கம் தனியாக கட்டடம் எழுப்ப முயற்சி எடுக்கலாம். இதை பல முறை அவர்களிடம் முணுமுணுத்திருக்கிறேன் அப்படி தமிழ்சங்கக் கட்டடம் அரங்கம் எழுப்புவது அவர்களுக்கு சாதாரண விஷயம். ஜூஜூபி காரியம்.. அதை செய்யலாம்.. பிற இலக்கிய அமைப்புகள் திருப்பூரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்கள். அதற்கு கூட உதவியாக இருக்கும் திருப்பூர் தமிழ் சங்கம் 3 திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது பட்டியல் சார்ந்த அதிருப்தியைத் தெரிவித்து இருந்தீர்கள். நீங்கள் அதை ஏன் நிராகரித்து வாங்காமல் விட்டிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள் 6 மாதம் முன்னாள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்க ஒன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடந்த போது திருப்பூர் எழுத்தாளர்கள் மனதில் உள்ள குறையை அவரிடம் - திருப்பூர் தமிழ்ச்சங்க தலைவர் மருத்துவர் முருகநாதன் அவர்களிடம் சொன்னேன் திருப்பூர் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் திருப்பூர் தமிழ் சங்கம் தரவில்லை என்பது அந்த மனக்குறை .( எனக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஒரு முறை முன்பே திருப்பூர் இலக்கிய விருதை வழங்கி இருந்தது நாவலாசிரியர் மறைந்த தோப்பில் முகமது மீரான் தலைமையிலான தேர்வு குழு ஒரு ஆண்டு திருப்பூரில் இலக்கிய விருதுகள் புத்தகங்களை தேர்வு செய்த போது எனக்கு திருப்பூர் இலக்கிய விருது கொடுத்தார்கள் ) இந்த குறை அவர்கள் சொன்னபோது விழா நடத்தி திருப்பூர் எழுத்தாளர்களை திருப்தி செய்து விடலாம் என்றார். திருப்பூர் எழுத்தாளர்களின் படைப்பு பற்றிய கருத்தரங்கமும் அவர்கள் படைப்புகள் பற்றிய அனுபவப் பகிர்வு சார்ந்த ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியாக இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டேன் அவர்கள் ஒரு பட்டியல் கேட்க நானும் தொலைபேசி எண்கள் உடன் பட்டியல் கொடுத்தேன். ஏப்ரல் மாதம் அந்த நிகழ்ச்சி ஏற்பாடானது ஆனால் சட்டுனு வந்த தேர்தல் தேதி காரணமாக நிகழ்ச்சி ஒத்துழைக்க பட்டது. அதை இப்போதுதான் நடந்திருக்கிறது ஆகவே உள்ளூர் எழுத்தாளர்களோ வெளியூர் எழுத்தாளர்களோ அவர்களுக்கு சிறிய அங்கீகாரம் கிடைக்கும் இந்த நிகழ்ச்சிகள் என்பதால் நான் அதை புறக்கணிக்க நினைக்கவில்லை 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் எழுத்தாளர் திலகவதி அவர்களும் திருப்பூர் தமிழ்ச்சங்கத தலைவரைச் சந்தித்து திருப்பூர் தமிழ் சங்கம் எழுத்தாளர்களை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு புத்தகங்களுக்கு பரிசளிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னோம். பலத்த யோசனைக்கு பிறகு அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னால் நடந்த திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகளில் தரமான படைப்பாளிகளும் தேர்ந்த நடுவர்களும் இருந்து சிறப்பு சேர்த்தார்கள். கலந்த சில ஆண்டுகளாக அப்படி தேர்வு பெறுகிற நூல்கள் குறிப்பிடத்தக்கதா இல்லை என்று நான் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல அவர்கள் கோபித்துக் கொண்டார்கள். அவர்களை கோபம் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் நல்ல சூழலுக்கான அங்கீகாரம் என்பது குறைந்து கொண்டிருக்கிறது என்பது வருத்தம் தான். 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த இந்த பழைய விஷயம்., பிறகு ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த புதிய உள்ளூர் விஷயம் நடக்கட்டும் என்று ஒரு ஆறுதல் தான்.. அதனால் தான் இதை நிராகரிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. 150 மாணவ மாணவிகள் வரிசையாகப் போய் விருது பெற்ற பின்னால் அந்த வரிசையின் தொடர்ச்சியாக எழுத்தாளர்களும் நின்று விருது பெற்றது எழுத்தாளர்களுக்கு பெருமை தருவதாக இல்லை . உங்கள் நூலகத்தின் ஓரவஞ்சனை உங்கள் நூலகம் செப்டம்பர் இதழ் நேற்று நூலகத்தில் கண்டேன் பல ஆண்டுகளாக எனக்கு பிரதிகள் வந்து கொண்டிருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பிரதிகள் வருவதில்லை ஆயிரக்கணக்கான பிரதிகளை இலவசமாக அனுப்புகிறார்கள் பிறருக்குத் தருகிறார்கள். அதுவும் புத்தக கண்காட்சி அரங்குகளில் அவை வீணாகி பலர் கையில் எடுத்துச் செல்வதை சாதாரணமாக கண்டிருக்கிறேன். அவையெல்லாம் வியாபார நோக்குடன் தரப்படுகிறது என்று நியாகம் சொல்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்களுக்கு பிரதி தருவதில் லாப நஷ்ட கணக்கு வந்துவிடுகிறது. இதை ஞாபகப்படுத்தி சில மின்னஞ்சல் அனுப்புகிறேன். பதில் இல்லை. கறாராக இருந்தார்கள். கறார்.. இப்போது விஷயம் அதுவல்ல... சென்ற மாதம் நடந்த எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் விருது விழா பற்றியது . விருது பெற்ற நூல்கள் பற்றி அந்தந்த பதிப்பகம் சார்ந்த இதழ்களில் சிறப்பு கட்டுரைகளும் செய்திகளும் வெளியிட்டு இருக்கிறார்கள் உதாரணத்திற்கு பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம் பேசுகிறது இதழில் வீரபாண்டியனின் பரிசு பெற்ற நூலைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையும் புகைப்படங்களும் செய்தியும் வந்திருக்கின்றது. இதே போல தமிழ் பேராயும் விருது பெற்ற பிற நூல்களைப் பற்றி சம்பந்தப்பட்ட அவர்களின் இதழ்களில் புகழ்ந்தும் விவரம் தெரிவிக்கும் நோக்கிலும் வியாபார நோக்கிலும் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ் பேராயும் விருது பெற்ற என் சி பி எச் வெளியிட்ட சுப்ரபாரதிமணியன் எழுதிய சிலுவை நாவல் பற்றி எந்த குறிப்பும் இந்த இதழில் இல்லை. முன் ஜாக்கிரதையாக நானே அந்த விழா பற்றிய குறிப்புகளையும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தேன்.எச் சி பி எச் பதிப்பகத்திற்கும் தனியாக பரிசுத்தொகை இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும் தோழர் ரத்தின சபாபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால் இந்த இதழில் அது பற்றிய எந்தவித செய்தியும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உங்கள் பார்வையில் இருந்து விடுபட்டாலும் ஞாபகப்படுத்தலாம் என்று நான் அந்த செய்தியையும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தேன். நிராகரித்து விட்டார்கள். உங்கள் நூலகம் ஆசிரியர் குழுவினர் இந்த நிராகரிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் படைப்புகளுக்கு உங்கள் நூலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அனுப்பிய ஐந்து கட்டுரைகள் எதுவுமே பிரசுரமாகவில்லை. அந்த ஐந்து கட்டுரைகளுமே என் சி பி எச் யின் புதிய வெளியீடுகள் பற்றியவை. ஞாபகப்படுத்தி திரும்பத் திரும்ப அவற்றை அனுப்பினாலும் அவை பிரசுரமாகவில்லை கடுமையான விதிமுறைகள் போல் இருக்கிறது. அப்புறம் சமீபத்தில் பேட்டியில் வருகின்றன என்று ஒரு வாசகியை என்னுடைய பேட்டி ஒன்றை எடுத்து அனுப்பியிருந்தார் .அதை போடவில்லை அது பின்னால் பேசும் புதிய சக்தி இதழில் வந்துவிட்டது. அதனால் அதை போட வேண்டாம் என்று நான் கடிதம் எழுதி வடித்து விட்டேன். ஒரு முக்கியமான விருது பற்றிய செய்தியை என் சி பி எச் புத்தகம் விருது பெற்ற செய்தியை சின்ன குறிப்பாக போட ஆசிரியர் குழு விரும்பவில்லை. ஆனால் சீனு ராமசாமியின் கவிதை தொகுப்பு பற்றிய பலபக்கங்கள் கொண்ட கட்டுரையை மீண்டும் பிரசுரம் செய்திருக்கிறார்கள் இந்த இதழில் . அது வேறொரு பத்திரிகையில் வந்தது என்பது இலக்கியவாசகர்களுக்கு நன்கு தெரியும். அப்படியெல்லாம் பக்கங்கள் வீணாகி உள்ளன ஆனால் என் சி பி எச் நூலுக்கு விருது சிறு துணுக்கு செய்தியை போட மனம் வருவதில்லை இந்த போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரோடு புத்தக கண்காட்சியில் புத்தக வெளியீட்டில் இடம் பெற்ற குறிப்பும் புகைப்படமும் இந்த இதழில் வந்துள்ளது. அதில் நான் போட்டிருக்கிற கலர் கலரான சட்டை பற்றி பல தோழர்கள் விசாரித்து தெரிந்து கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். அந்த புகைப்படத்தில் நான் இருக்கிற பகுதியை கூட வெட்டி இருப்பார்கள். பக்கத்தில் கோவை மேலாளர் ரங்கராஜ் இருப்பதால் அதை தவிர்த்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். கோவை மேலாளர் ரங்கராஜன் எப்போதும் இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிற போது நெற்றியில் திருநீறும் வெள்ளை சட்டையுமாக போஸ் கொடுப்பார். ஈரோட்டில் வேலை அலைச்சலில் வியர்வை வழிந்து திருநீறு அழிந்து விட்டது.. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் கூட இந்த திருநீரும் வெள்ளை சட்டையும் கண்டிப்பாக இருந்து கொண்டிருக்கும். அவரின் பக்கத்தில் இருந்ததால் அதை வெட்டாமல் விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர் நெற்றியில் வெள்ளை திருநீறு அழுத்தமாகப் போடுவார். வெள்ளை சட்டை போடுவார். அமாவாசை, பௌர்ணமி பிரதோஷத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்புவார் ,நான் ஒரு முறை கடுமையாக இந்த பிரதோஷ, அமாவாசை வாழ்த்து செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரிடம் பேசினேன். அதன் பின்னால் பிரதோஷ, அமாவாசை வாழ்த்துக்கள் நின்றுவிட்டது மற்றவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அப்புறம் அவன் நெற்றியில் அழுத்தமான திருநீர் இருக்கும் அதை நான் விமர்சித்திருக்கிறேன். அவரின் வாழ்விடம் காரமடை. என் வீட்டு தெய்வம் குலதெய்வம் பெருமாள் தான். காரமடை பெருமாள் நாமத்தை அவர் போட்டால் கூட அவருடைய நெற்றிக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.நான் என் வீட்டினர் போடும் சனிக்கிழமை நாமம், பூணூல் இவற்றைப் போடுவதில்லை. கோவிலுக்குச் செல்வதில்லை. ரங்கராஜ் அவர்களுக்கு நாமம் இன்னும் பொருந்தும். இதெல்லாம் பண்ண வேண்டியிருக்கு தோழர் என்பார். அவரின் நியாயமான உழைப்பு நெகிழ வைப்பது அதேபோல அவர் இது போன்ற கலர் சட்டைகளை நான் போடக்கூடாது என்று ஈரோடு புத்தகச் சந்தையில் தடை விதித்தார். உங்கள் வயதிர்குத் தகுந்த மாதிரி வெள்ளை சட்டை போடுங்கள் என்றார். . நான் அப்படித்தான் இந்த வெள்ளை மினிஸ்டர் ஒயிட் சட்டைகளுக்கு எதிராக இப்படி கலர் சட்டை போடுவேன் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன். தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் போட்ட வெள்ளை சட்டைகள் பல கிழிந்து நசிந்து இருந்தன. அவர் வேலை அலைச்சலில் அதை கவனிக்காமல் விட்டிருப்பார். அவருக்கு கூட இந்த கலர் கலரானஅழகான சட்டைகள் நான்கைந்து அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன் திருப்பூர் மாவட்டம் ஆரம்பித்து நாள், , மாதங்கள், வருடங்கள் ஓடிவிட்டன. திருப்பூரில் என் சி பி எச் ஷோரூம் விரைவில் சற்று தாமதமாக தான் தொடங்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் வணக்கம் சுப்ர பாரதி மணியன்
“ என்றும் காந்தியம் “ சுப்ரபாரதிமணியன் இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம், தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது.. வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும் விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன. . கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின் அனுபவங்களை, அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களும் மெல்ல மெல்ல அழிந்து விட்டன.. பெரும் நகரங்களையும் நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வைப் பற்றி இன்று நாம் அதிகமாக எழுதுகிறோம்.. மனித சிந்தனை கொண்டுள்ள நினைவாற்றல் தன்மை அளப்பரியது. இந்த நினைவாற்றல் தன்மையை மனதில் கொண்டு பலர் நினைவுகளை திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். ஆனால் மனித வாழ்வியல் சார்ந்து கைபேசி கொள்ளும் வீட்டு சூழலுக்கும் தனி வாழ்ச்க்கையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இந்த முடக்கப்பட்ட தன்மையைக் கூட கவிதையில் சிறப்பாக கொண்டு வருகிறார்கள். உழைப்பாளி தன்னுடைய பெரும்பாலும் நகர வாழ்க்கையோ கிராம் வாழ்க்கையோ தான் இருந்த இடம் இழந்ததின் வேதனையையும் இயங்க வேண்டிய இயக்கத்தையும் கொண்டு செல்கிறார் .அப்படித்தான் பலருக்கு காந்தியும் சார்ந்த இயக்கம் பற்றிய கனவு இருக்கிறது. அதை கவிதை மொழியில் கொண்டு வருகிறார்கள். மண்ணும் நிலமும் அரசியலும் இதற்குள் எல்லாம் வந்திருக்கிறது. இந்த கலவைதான் ஒரு அற்புதமான கவிதை உலகத்தை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது காந்தியம் என்பது அவருடைய வாழ்வு தொலைநோக்கு பார்வை போன்றவற்றை குறிக்கிற சொல்லாக அமைந்திருக்கிறது. வன்முறை அற்ற உலகம் என்பது அவருடைய கனவாகக் கூட இருக்கிறது. அவருடைய பங்களிப்பு சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பற்றி திரும்பத் திரும்ப அலசப்படுகிறது காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு என்ன அர்த்தம் தருகின்றன அவை எதிர்காலத்தில் வழிகாட்டுதலுக்கு எப்படி உதவுகின்றன என்பதை பற்றி எல்லாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள் காந்தியும் அரசியல் மற்றும் சமூகம் அல்லாத தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை அனுபவங்களும் கூடுகிறது இங்கு கவிதிஅயில் . காந்தியம் என்று எதுவும் இல்லை அதை நான் விட்டுச் செல்லவில்லை அப்படி ஒரு கொள்கையோ கோட்பாடு இல்லை. என் வாழ்க்கையில் உண்மையான அனுபவங்களை சொல்ல முயற்சித்தேன் அவை பழமையானது என்று காந்தியடிகள் கூட சொல்கிறார். இந்த பழமை வாய்ந்த காந்தி சார்ந்த தத்துவ விஷயங்கள் இன்றைக்கு எப்படி பயன்படுகின்றன அவை எப்படி தேவை என்பதை பற்றிய பல சர்ச்சைகள் உள்ளன. அந்த சர்ச்சுகளை நாம் இந்த கவிதைகள் மூலம் தேடிப் பார்க்கலாம் தமிழ் கவிதை பற்றியும் காந்தியும் பற்றியும் சில அபிப்ராயங்களை மனதில் கொண்டுவர இந்த தொகுப்பு உதவும். அதேபோல இந்த கவிதைகளை நீங்கள் படிக்கிற போது கவிதை பற்றியும் காந்தியம் பற்றியும் பல்வேறு அபிப்ராயங்களும் உருவாகும். அவற்றை நீங்களும் யோசிக்கவும் தொகுப்புரை செய்யவும் இது ஒரு வாய்ப்பு வாழ்த்துக்கள் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்