சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

திருப்பூர் இலக்கிய விருதுகள் நிகழ்வு உரை : ஹைக்கூ கவிதைகள் ;: கவின் வெற்று நிறங்கள் வேண்டாம்/ பூக்கள் போட்ட குடை கொடுங்கள் மழைக்கு காட்டுவேன் என்று எழுதியபடி ஒரு புயலைத் தாண்டி வந்திருக்கிறேன். ஹைக்கூ என்பது ஒரு காட்சியை விவரிப்பது மூலம் தான் உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது.. காட்சிப்பூர்வமானது என்றும் அவசிய தேவையான வார்த்தைகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் மிக முக்கியமாக அது எளிமையானதொரு பகிர்வு என்ற கவனமும் தேவை... எளிமையான பகிர் என்பதால் தன் நிலை மற்றும் காலத்தில் ” பொதுநிலையில் சுட்டுவது “ அதிகம் இருத்தல் வேண்டும். அவை மீறப்படும் இடங்களின் சிறப்புத் தேவைகளை உணருதல் வேண்டும். இயன்றவரை வரை உணர்வை விளக்கும் சொல்லை பயன்படுத்தாது விடுதல் ஹைகூ வரலாறு, முன்னோடிகள் வந்து சேர்ந்திருக்கிற இடம் எல்லாவற்றையும் தாண்டி இனி இப்போது ஹைக்கூவில் செய்ய வேண்டியவை இவை என்று சொல்லலாம் 1ஹைக்கூ பார்த்தல் - நேரடி அனுபவம் மட்டுமே எழுதுக கவிதை 2. கவிதை ஹைக்கூ சென்ரியூக்கான வேறுபாடுகளை உணர்தல் வேண்டும் 3. ஹைக்கூவின்பல்வேறு நிலைகளை உணர்தல் வேண்டும். அரசியல், அழகியல், தனித்துவம், உள்ளார்தல் 4. இதுவரை வந்த நல்ல ஹைக்கூக்களை அடையாளப்படுத்த வேண்டும் 5. ஹைகூ நூல்களை சிறிய பொருட் செலவில் அதிகம் சென்றடைய வைத்தல் 6. ஒருங்கிணைப்புகள், ஹைக்கு வாசிப்பு, பகிர்வரங்கங்கள் நிகழ்த்தலாம் 7..பயனாக ஹைகூவின் தன்மையை வாழ்வில் எடுத்துக் கொள்ளுதல் ( சான்றாக: It is a learning process from the nature and intuitive happenings which are spontaneous and unplanned ) 8. தேடி செல்வதொன்றில்லாமல் மேற்கொள்ளப்படும் ஹைக்கூ பயணங்கள் ( சான்றாக ஜப்பானிய ஹைக்கு முன்னோடி பாஷோ இப்படி பயணித்திருக்கிறார் ) 9. வழமையான ஹைக்கூ முன்மாதிரிகளில் இருந்து விடுபடல் ( coiming out from cliché haiku ) 10. ஹைக்கூ எழுதுவதை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ( where to stop writing haiku also an art, it will evolve , it will happen (குழு செயல்பாடுகள் போன்ற நடைமுறை சிக்கலில் இருந்து எவ்வாறு தனித்துவத்தோடு இருப்பது போன்றவை தனி )