சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

எழுத்தாளர் தேவி பாரதி: ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை... அமரர் நண்பர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் நண்பர்கள் உடன் இணைந்து ஆரம்பித்த மருத்துவமனை. அங்கு தான் எழுத்தாளர் தேவி பாரதி சிகிச்சை பெற்று வந்தார். வருகிறார். அவரை மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகளான சிவானந்தம் போன்றவர்களும் பத்திரிக்கையாளர் ஜீவா தங்கவேல் போன்றவர்களும் அக்கறை எடுத்துக்கொண்டு அங்கே அனுமதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நண்பர் ஓவியர் சுந்தரம் அவர்களுடன் சென்றபோது அவர் அடையாளம் கண்டு பேசும் நிலையில் இருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இரண்டாவது மாடியில் இருந்த அவர் அறையில் அவரை பார்த்தவுடன் தூக்கத்தில் இருந்தவர் சட்டென விழித்து புன்னகைத்தார். தலை கருப்பு கேசம் அடர்ந்திருந்தது.முகத்தில் நாலைந்து நாள் தாடிதான். மூக்கில் குழாய்கள். அவர் வாயிலிருந்து வெளியேறிய கோழை படுக்கையை நனைத்து அசுத்துதக்கியிருப்பதைக் காட்டி அதை துடைக்க முடியாமல் இருப்பதை சொன்னார். பக்க வாதத்தால் கைகால்கள் செயலிழந்திருப்பதாகச் சொன்னார். அவரின் தலை அருகில் இருந்த்த் துண்டை எடுத்து ஓவியர் சுந்தர் அவர்கள் அதைத் துடைத்து அவருக்கு ஆறுதல். தந்தார் நன்றாக இருப்பதாக சொன்னார் நாங்கள் வேறு எதுவும் கேட்காத போது அவர் சரளமாக பேச ஆரம்பித்தார் 9 வயதில் பள்ளியில் படிக்கிற போது எழுத ஆரம்பித்தேன் அப்போதே நான் எழுத்தாளர் ஆகிவிட்டேன் என்று நினைத்தேன் ஜெயகாந்தன் அவர்கள் அப்போது பிரபலமான எழுத்தாளர் என்பதால் அவருக்கு கடிதம் எழுதினேன். நான் எழுத்தாளன் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக படிப்பதற்காக சில புத்தகங்களை எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கடிதம் எழுதினேன். அவர் பதில் அனுப்பவில்லை பின்னால் ஈரோட்டுக்கு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன்.மதுவும் மாமிசம் ஆகவும் இருந்தார். எனக்கு அது சிரமப்படுத்தியது. குப்பையாக இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் அவர் எழுத்துக்கள் அப்படி இல்லை அவரும் அப்படி இல்லை என்று பின்னால் நான் உணர்ந்து கொண்டேன். அவர் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தேன் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி காலகட்டத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் சென்று சந்தித்தேன் அடுத்த முறை மைதிலி உடன் சென்று சந்தித்தேன். நான் சந்தித்த சில நிமிடங்களில் அவர் மறைந்து விட்டார் அவருக்கு அஞ்சலி செலுத்திய முதல் நபராக இருந்தேன் என்று நினைக்கிறேன் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் எனக்கு பிடித்தது புளிய மரத்தின் கதை தான்.. ஜே ஜே சில குறிப்புகள் நாவல் விளையாட்டுதான் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இன்னொரு சிறந்த நாவல். அவர் படைப்பை எவ்வளவு நுணுக்கமாக எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அவருக்கு பெரிய விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பது என்னைப் போன்று உள்ளவர்களுக்கு வருத்தம் ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை என்னுடைய படைப்புகளுக்கு ஆதாரமாக, அட்சாரமாக ஈரோட்டைச் சார்ந்த நண்பர் மதுசூதரன் இருந்தார். தீபம் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார். அவர்தான் என்னை ஊக்குவித்து எழுத சொன்னார். நான் மார்க்சிய தத்துவம் சார்ந்த இயக்கங்களில் இருந்தேன் ஆனால் அங்கிருந்தவர்களில் பலபேர் இலக்கிய வாசிப்பு என்பதை தேவையில்லாததாகக் கொண்டிருந்தார்கள் ஆனால் தத்துவார்த்த விஷயங்களை வரமாக கொண்டிருந்தார்கள் அதெல்லாம் எனக்கு உரமாக இருந்தது நான் எழுதிய நாவல்களில் நொய்யல் எனக்கு பிடித்த நாவல் என் வாழ்க்கை அனுபவங்கள் பலதும் அதில் வந்திருக்கின்றன. நீர் வழிபடூம் நாவல் அதிகம் பேசப்பட்டாலும் அதைவிட நொய்யல்தான் அதிகமாக பேசப்பட வேண்டும் என நினைத்தேன் நான் இப்போது எழுதி வரும் ஆதியாகமம் என்ற நாவல் கூட முக்கியமான நாவல். வண்ணநிலவனின் கதைகளில் ஆதியாகமமஎன்ற வார்த்தை அதிகம் தென்படும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .அந்த தலைப்பிலேயே புதிய நாவலை எழுத ஆரம்பித்தேன். எழுத்தாளனுக்கு மரணம் இல்லை அவர் எழுத்துக்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும்