சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
சுப்ர பாரதி மணியன்
சுப்பிரமணிய பாரதியின் குட்டிக் கதைகள்
நான் சேவல் சண்டை பற்றி பல கதைகளை எழுதி இருக்கிறேன் அப்பா தொகுப்பிலும் வேறு கதை தொப்புகளிலும் அந்தக் கதைகள் உள்ளன. ஆடுகளம் படத்தில் சேவல் சண்டைகள் இலக்கியத்தில் வருகிற இடங்களைக் குறிப்பிட்டு பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்பதையும் போடுகிறார்கள் என்று சொன்னார்கள். என்னுடைய சேவல் சண்டை கதைகளை பற்றி அதில் குறிப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
பாரதி வேடிக்கை கதைகள் என்று பலவற்றை எழுதியிருக்கிறார் குட்டிக் கதைகள் எழுதி இருக்கிறார் அவற்றிலெல்லாம் நகைச்சுவை மிளிரும்.
பாரதியாரின் சின்ன சங்கரன் கதை 33 பக்க நீண்ட கதை அப்படித்தான் அவர் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஐரோப்பிய சாயல் சிறுகதைகளில் வரும் வடிவத்தை பின்பற்றியவர் அல்ல. அதே சமயம் சிறுகதைகள் மற்றும் படைப்புகளில் ஏதாவது செய்தி சொல்ல வேண்டும். சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கருதியவர். அவர் எழுதிய படைப்புகளில் உடன்கட்டை ஏறுவது குறித்த எதிர்ப்பும் பொட்டுக்கட்டு வழக்கத்தை எதிர்த்தும் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கத்தை எதிர்த்தும் பலவற்றை எழுதியிருக்கிறார். கலப்பு மணம் பற்றி ஆதரித்து எழுதியிருக்கிறார். மதவழக்கம், பழமையான சட்டங்களை பற்றி கண்டித்து இருக்கிறார். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் கூட தீண்டாமை சார்ந்த எதிர்ப்பு குரல் இருக்கும் இவை எல்லாம் பாரதியை நவீன சிறுகதை சார்ந்த ஒரு எழுத்தாளராக காட்டும்
இதனுடைய தொடர்ச்சி சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார் . 11 பக்கம் கொண்டது. அது தமிழில் முதல் சிறுகதை என்று சிலர் சொல்கிறார்கள் . ஷெல்லிதாசன் என்ற புனைப் பெயரில் எழுதியிருந்தார், “ ஆறில் ஒரு பங்கு “ கதையும் அப்படி சிறப்புகள் கொண்டது ஆறில் ஒன்று ஒரு பங்கு 1910 இல் பாண்டிச்சேரியில் இருந்து பாரதியார் அவர்களால் வெளியிடப்பட்டது
கதாபாத்திரம் கதை சொல்லும் யுத்தியும் கதை மையத்திலிருந்து கதையை வெளியேற்றும் புத்தியும் இன்றைக்கு பல எழுத்தாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதை கடைபிடித்தவர் ஆரம்பத்திலேயே பாரதியார் அவர்கள். அவர்களுடைய வேடிக்கை கதைகள் அல்லது குட்டி கதைகள் எனக்குப் பிடிக்கும். இவற்றில் எனக்கு அந்த பழக்கடைக்காரனை ரொம்பவும் ஞாபகம் இருக்கிறது
அவன் கால் யானைக்கால் போல இருக்கும் .அந்த வியாதி உள்ளது. அந்தப் பக்கம் வரும் பள்ளி மாணவர்கள் அவனுடைய கடையில் இருந்து பழங்களை திருட முயற்சித்தால் என் காலால் அடிபடுவீர்கள் என்று விரட்டுவான். ஒரு பையன் அப்படித்தான் ஒரு பழத்தை எடுத்து விட்டான் காலால் உதைக்கிறான். யானைக்கால் என்பதால் மெது மெது என்று இருப்பதாக அந்தப் பையன் மற்ற பையன்களிடம் சொல்லிச் சிரிக்கிறான் . திரும்பத் திரும்பச்சொல்லி சிரிக்கிறான். இது எலும்பில்லாத கால் அடியே படாது, வலிக்காது என்று அவன் சொல்கிறான் இந்த கதை சின்ன வயதிலிருந்து எனக்கு ஞாபகம் வந்தது.. காரணம் இதேபோல யானைக்கால் வியாதி கொண்ட ஒரு பெண்மணி நான் படித்த திருப்பூர் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில் முன்பு தேன் மிட்டாய்கள். நெல்லிக்காய் வைத்தபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் .அவள் தன் காலை காட்டித்தான் மற்றவர்களையும் மிரட்டி கடையை நடத்திக் கொண்டிருந்தாள்.
சேவல் கட்டு பற்றிய குறிப்பு வருகிற சின்ன சங்கரன் கதைக்கு மறுபடியும் செல்லலாம். அதில் ராமசாமி கவுண்டர் நபர் மிக முக்கியமான வருகிறார். அவர் பொழுதுபோக்குகளில் ஒன்று சேவல் சண்டை வேடிக்கை பார்ப்பது. அவர் சார்ந்த அரண்மனை கோழிகள் அந்த சண்டையில் தோற்று தான் போகும். புதிதாக அரண்மனை கோழி என்று எதையாவது கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் .பிறகு அவையெல்லாம் சேவல் சண்டையில் பிரயோஜனம் இல்லாமல் போகும். ராமசாமி கவுண்டரின் உணவு பழக்க வழக்கங்களை பற்றி எல்லாம் அந்த கதையில் நிறைய சொல்லப்படும். 32 கவளம் சாப்பிட வேண்டும் என்று குறிப்பு அதில் இருக்கும். அவ்வளவு சாதம் அவ்வளவு சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை அவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அந்த கதையில் வலியுறுத்தி இருப்பார். .அதேபோல ராமசாமி கவுண்டர் சேவல் சண்டையில் தோற்றுப் போன கோச்சைக்கறியைச் சாப்பிட்டாரா என்ற குறிப்பு காணவில்லை பாரதியாருடைய கதையில் இடம்பெறும் இந்த சேவல் சண்டை என்னுடைய சில கதைகளின் சேவல் சண்டை மையத்திற்கு அருகில் வந்திருப்பதால் அந்த கதை எனக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறது. பாரதியார் எழுதிய வேடிக்கை கதைகள், குட்டி கதைகள் இவற்றை சுலபமாக யாரும் படித்து தங்களுக்கான கதைகளாக எடுத்துக் கொள்ளலாம்
ReplyForward
Add reaction