சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 26 ஜூலை, 2019

Green Politics, a book of short verses
Don’t axe down the air, please
Amid the incautious destruction of nature in the modern era, where rivers, ponds and lakes have turned out as dump yards, green activists and voluntary organizations, time and again, emphasize the importance of protecting nature for posterity. And Tamil writers too, on their part, play a key role in the mission by bringing to light the indiscriminate acts of environmental degradation in their short stories, novels and verses.
It takes a thousand years                                                                                                                           
For a tree to turn into stone       
For firewood, it takes minutes 
Thus reads a poem in Green Politics, a book of short verses on environmental issues authored by noted Tamil writer Subrabharathimanian from Tirupur. The book, which contains around 134 short verses, has been translated into English by RM Shanmugam, an Indian English writer. The book was launched recently in the monthly meeting of OSAI, a popular environmental organization of the city.

“Plants and animals along with numerous bio species have chosen to live together, sharing their respective spaces on earth. They develop a chain of network which is essential for their living to keep the biosphere intact. The discourse on this, the need to protect this balance and enhancing the ideas to manage it are known as green talk or green dialogue “says Subrabharathimanian in his preface to the book.
Subrabharathimanian, an author of a number of short stories and novels, is a recipient of the Katha award from the president of India in 1994 and Tamil Nadu government’s Best Tamil Book award in 1998 for his novel Saayathirai (The Coloured curtain), which spoke  the plight of Tirupur’s environment that was caught in the clutches of dyeing units.

Besides authoring a number of books as Sayathirai, Puththuman, Komanam and Rekai, Subrabharathimanian has penned two books of poems – The Last Symphony and Green Politics. Though the novelist hardly prefers to writing poetry, his short verses in his latest book Green Politics are written with a punch urging for the protection of nature.

A poem in the book emphasizes how the indiscriminate axing down of trees would pave way for the extinction of all creatures on earth. Dictionaries define the word ‘suffocation’ as death caused by not having enough oxygen. But the poet in Subrabharathimanian discovers the dying of air due to suffocation! The irony lies in the verse. 

Into the fan air blows                                                                                                                        
 Into the trees air blows                                                                                                                     
Along the shore air blows                                                                                                                          
In felling trees air suffocates
 City-based poet, printer and publisher Venil Krishnamurthy released the book, Muthamizh Virumbi, convener of the literary organization Nerunchi Ilakkiya Iyakkam, received its first copy. Avainayagan, president OSAI and K.Kalidasanm secretary spoke in the function.


B.Meenakshi Sundaram

திருப்பூர் -100 ரூ 100
 கே.சுப்பராயன்(பாரளுமன்ற உறுப்பினர் திருப்பூர் )  அவர்களின் முன்னுரையுடன் . வெளியீடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்.
கனவு 34 ம் ஆண்டில் …... ஜீன2019  இதழ்   வெளிவந்துள்ளது.
 மணிமாலா மதியழகன், ராமன் முள்ளிப்பள்ளம் சிறுகதைகள், ஆர்,பாலகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள். தேவரசிகன், சாமக்கோடாங்கி ரவி, தமிழமுது,ப.சுடலைமணி, துருவன் பாலா கவிதைகள் விலை ரூ 20.. ..
 8/2635 Pandian nagar, Tirupur 641 602 / 94861 01003


எஸ். ஏ.காதரின் நூல்கள்
- குருவிக்காரன் –சிறுகதைத் தொகுப்பு
- குயிலா –நாவல்
- குருவிக்கூடு –நாவல் .......பிரதிகளுக்கு ..8610172809

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
  மாதக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மாலை 5 மணி முதல் ... இலக்கிய உரைகள், நூல்கள் வெளியீடு, நூல்கள் அறிமுகம், கவிதைகள்  வாசிப்பு , பாடல்கள் , கருத்துரைகள்... மில் தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் . வருக
*
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் மாத செய்தி மடலுக்கு படைப்புகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப prnatarajan1253@gmail.com
ரேகை - சுப்ரபாரதிமணியனின் நாவல்- ஆயிஷா இரா நடராசன்
 இன்றும் புதினங்கள்  நெடுங்கதைகள் சிறுகதைகள் என கதைகளை பிரிக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் குமுதினி 300  பக்கம் என்றாலும் உலகம் அதை நாவல் என்று அழைப்பது இல்லை. ஆங்கில நாவலாசிரியர் ஹென்றி ஹட்சன் உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் எதுவும் நாவல் கிடையாது என்கிறார் .ஆனால் இது பழைய கருத்து இந்த வாட்ஸப் யுகத்தில் வாசிப்பு ஒரே மூச்சில் முடிப்பது மட்டுமல்ல நறுக்கு தெறித்தார் போல் உண்மையை வெளியிடுவது. வாசிக்கும் மனங்களை பாதிப்பது என மாறிவிட்டது .
சுப்ரபாரதிமணியனின் எழுத்து நெஞ்சை தொடும் சுடும் என்ற வகைப்பாட்டை சேர்ந்தது  ரேகை :திருப்பூர் நாவல்  ரத்தமும் சதையும் கலந்த மற்றொரு படைப்பு .
ஜாதகம் சோதிடம் பார்க்கும் பரம்பரை குடும்பத்தில் சிதையோடு தொடங்கும் கதை நவீன நாடகக்காரர் சுப்பையா முதல் விலைமகள் பரமேஸ்வரி கடும் உழைப்பாளியான அமலம், . கிறிஸ்துவ போதகர் , கள்ளநோட்டு கோபால் என விரியும் யதார்த்த உலகம் புதிய திருப்பூரை டாலர்  நகரமாக நம்முன் விரிய வைக்கிறது.  கலை இரவில் வரும் தங்கர்பச்சானும் பாலாஜி சக்திவேலும் கூட பாரதி வேசம் சுப்பையாவை பாராட்டுகிறார்கள். ஆனால் அவருடைய குறும்பட டைரக்ஷன் கனவு பலிப்பதே இல்லை .எம்பில் பிராஜெக்ட் செய்யும் ரத்தினவேல் உட்பட நாம் அனைவரும் நாவலோடு  எளிதில்   இறுதியில் ஐக்கியமாகி  விடுகிறோம்.
  கேம்  கூலி முறை  பற்றியும்  அதன்  ஒழிப்பு பற்றியும்  விவரிக்கும்போது  பீகார்  நேபாள  கூலிகள் குறித்த  தனிப்பதிவு இந்த நாவலில் உள்ளது  அழுத்தமான  ரேகை இது ( ரூபாய் 125  பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர்  பக்கம் 142). –



ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் : பேரா. இராமபாண்டி
நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும்   அடுத்த நிலையிலான சிந்தனையையும்  எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.
சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறதுஅதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல்  போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்படுவதும், சமூக விடயங்களை நாடகப்படைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது.
கணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வேலையாலும் தொடர்வது புதிய சமூக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பையா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேருவது கூட அவ்வகையில் சிறு வெளிச்சம் தான்.
இழிவாக கருதப்படும் சோதிடம் பார்க்கும் சாதி . ஆனால் பண  மதிப்பால் உயர்வதும் காட்டப்படுவது இன்னொரு கோணம்..அமலா என்ற் பூக்காரி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக்கல்வியில் ஈடுபடுவது ஆங்கிலமோகம் பற்றியதை சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிரான செயல்களில்  ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளைக்கொண்டாடுவதும் சிறந்த சித்தரிப்புகள். .
   முதல் அத்யாயத்தில் மர நாற்காலியும் பிளாஸ்டிக் நாற்காலியுமான தீச்சம்பவமே அதிர்ச்சி தரகூடியது. சாதி சார்ந்த வன்முறையைச் சொல்லிப்போகிறது.இயற்கை விவசாயம், தமிழ்க்கல்வி சார்ந்த கதாபாத்திரங்கள் சொல்லும் செய்திகள் அபாரமானவை. அவை சமூகத்தில் வாழும் மனிதர்களின் முன் மாதிரிகளைக்கொண்டே அவற்றை அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு புதினம் சமூகம் சார்ந்த நிறைய அனுபவங்களை, மனிதர்களை உள்ளடக்க முடியும் என்ற ஆச்சர்யத்தையும் இந்த ரேகை தருகிறது.

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ( பேரா. இராமபாண்டி, மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக்க் கல்லூரி, சங்கரன் கோவில்  627754(  ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்   70104 84465 ) )



திருப்பூர் பி ராமசாமி நூற்றாண்டு
சுதந்திரப்போராட்ட தியாகியும், திருப்பூரின்் பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவருமான தோழர் பி ராமசாமி நூற்றாண்டு இது. அது பற்றிய ஒரு புலனம் whats up group ஆரம்பிக்கப்பட்டுளது
அது தியாகி P. ராமசாமி நூற்றாண்டு .

அதில் இணைய விரும்புகிறவர்கள் தோழர் பி ஆர். நடாஜன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் ்94434 27156. அவரின் தியாகத்தை புதிய தலைமுறைக்குத் தெரிவிக்கும் விதத்தில் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ்மொழி தொன்மையானது . செம்மொழி நிலையைப் பெற்றது. ஆனால் தமிழ்ச்சூழலில் அதைப் போற்றிப் பாதுகாக்க கல்வி நிலையில்  சரியான ஏற்பாடுகள் இல்லை. தமிழ் எழுத்தாளனும்,  படைப்புகளும் விளம்பரங்கள் மூலமே முன்னிலைப்படுத்தப்படுகிறான் “ என்று எழுத்தாளர் நாமக்கல் நாதன் 14/7/19 ஞாயிறு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * ஜீலை     மாதக்கூட்டம் ...14/7/19 ஞாயிறு பனியன்  தொழிலாளர் சங்கம், பழைய புஷ்பா திரையரங்கு, எவரெஸ்ட் ஓட்டல்  எதிரில், பெருமாநல்லூர் சாலை,திருப்பூரில் நடைபெற்றது
தலைமை :தோழர்  சண்முகம்
( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
சிறப்புரை : தேசிய கல்விக்கொள்கை 2019 பற்றி..
தோழர்  பி ஆர். நடராஜன் 
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
*   நூல்கள் வெளியீடு :
* சுப்ரபாரதிமணியனின் “  வேட்டையாடிகள் –பறவைகளின் உலகம் “  (கட்டுரைகள் தொகுப்பு- என்சிபிஎச் வெளியீடு  )  எம்கே எம் குழும  ஹோட்டல் அதிபர் பாலசுப்ரமணியம் வெளியிட பள்ளி ஆசிரியர் ஆரோக்ய சாமி பெற்றுக்கொண்டார்
*   பிற கீழ்க்கண்ட நூல்கள் வெளியீடும் நடந்தது
* நாமக்கல் நாதன் கவிதைகள்
* வழக்கறிஞர் எம் . கண்ணனின் “ சிலம்பம் ஓர் அற்புதக்கலை “
திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகத்தின் நான்கு நூல்கள்
* சோசலிசப் பொருளாதாரம் –ஸ்டாலின் தமிழில் : சுந்தர சோழன்
* குறுநதிக்கரையில் –நாவல் ( மு.சி. கந்தையா )
* துர்கா மாதா – நாவல் –ஜீவா
* கடல்மரங்கள் –வெள்ளியோடனின் மலையாளச்சிறுகதைகள் தமிழில்
* குறும்படம் வெளியீடு :
திருப்பூர்  தீபனின் “  புத்தகப் பயணம்

*கீழ்க்கண்டோர்  படைப்புகள்  அறிமுகம் .செய்தனர் :  *
* திருப்பூர் குணா, , யோகி செந்தில் ,சுரேஷ்குமார் , துருவன் பாலா 
பாராட்டுகள் :
*  பித்தன்  நடராஜன் அவர்களின் திருக்குறள் ஓவியங்கள்  தொகுப்பு மற்றும் அவரின் கல்விப் பணிக்கு .
* திருக்குறள் செல்வி ஓவியா  “  திருக்குறள் ஒப்புவிப்பு . மற்றும் தசாவதானம் திறமை வெளிப்படல்  நிகழ்வுக்கு
* இதழ் அறிமுகம்: நிலவெளி இலக்கிய மாத இதழ் 
மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன .எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488
புகைப்படம் இணைப்பு * சுப்ரபாரதிமணியனின் “  வேட்டையாடிகள் –பறவைகளின் உலகம் “  (கட்டுரைகள் தொகுப்பு- என்சிபிஎச் வெளியீடு  )  எம்கே எம் குழும  ஹோட்டல் அதிபர் பாலசுப்ரமணியம் வெளியிட பள்ளி ஆசிரியர் ஆரோக்ய சாமி பெற்றுக்கொண்டார் . படத்தில் பி ஆர் நடராஜன், ஹோட்டல் அதிபர் பாலசுப்ரமணியம் ,  பள்ளி ஆசிரியர் ஆரோக்ய சாமி சுப்ரபாரதிமணியன்  .



திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 24ம் சந்திப்பு
திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 34ம் சந்திப்பு  புதன்  மாலை வாழ்க வளமுடன் மையம், செரீப்காலனியில் நடைபெற்றது, நேசனல் சில்கஸ், நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர் அருணாசலம் தலைமை தாங்கினார்..
தொல்பொருள் ஆய்வாளரும் ஓலைச்சுவடி காப்பாளருமான சுந்தர கணேசன் சிற்ப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார் :
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு என்பது பழைய இலக்கியங்களையும் வரலாற்றுச்செல்வங்களையும் பாதுகாக்கும்  முறை இன்றைக்கு அவசியமாகி விட்டது. கொங்குப் பகுதிகளில் உள்ள அவ்வகை ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும்.சுவடிகள் பாதுகாப்பில் பழங்காலப் பாதுகாப்பு முறை, தற்காலப் பாதுகாப்பு முறை ஆகிய இரண்டு வகைகளில், தற்கால பாதுகாப்பு முறை எளிமையானதாக இருக்கின்றது.  ஆனால் பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியது சுவடிகளை விரைவில் அழியும் நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது. ஆனால் பழங்காலப்பாதுகாப்புமுறை சற்று கடினமானதாக இருப்பினும் சுவடிகளை நீண்ட நாட்கள் பாதுகாப்பதுடன் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனவே  சுவடிகளை அழியாமல் பாதுகாக்கப் பயன் படும் பழங்காலப் பாதுகாப்பு முறையே சிறந்த பாதுகாப்புமுறையாகும்.- என்றார் .

  தமிழறிஞர் நீறணி பவள்க்குன்றன் உசிலை வனநாதர் சதகம்  நூல் பற்றிப் பேசினார். ரவி சோ நாடகங்களில் எள்ளல் தன்மை பற்றிப் பேசினார் , லக்‌ஷ்மணன் . ரெத்னம், சுப்ரபாரதிமணீயன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர்.